AI Teacher: இந்தியாவில் முதல் முறையாக கேரள பள்ளியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட ஆசிரியை
மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக சாட் ஜிபிடியின் வெற்றி தான் ஏஐ கருவிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றே செல்லலாம்.
ஏ.ஐ. கருவிகள் நிச்சயம் மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், எதிர்காலத்தில் மக்களின் வேலைகளை கூட பறிக்கலாம். இந்த நிலையில் தான், இந்தியாவில் முதல் முறையாக ஏஐ தொழில்நுட்பத்தில் பள்ளி ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ’ஐரிஸ்’ (IRIS) என்று பெயரிடப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கே.டி.சி.டி உயர்நிலைப் பள்ளியில் ரோபோ வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பெண் ஆசிரியை பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு, சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது. இது சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சிறப்பம்சங்கள்:
அந்த வீடியோவில், வகுப்பறைக்குள் நுழைந்த ஆசிரியை (ஏ.ஐ.) மாணவர்களுடன் கைகொடுத்து உண்மையான ஆசிரியை போன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட பெண் ஆசிரியை பள்ளியின் கடுவாயில் தங்கல் அறக்கட்டளை,மேக்கர்லாப்ஸ் எடுடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கி உள்ளது.
Kerala School Launches India’s First AI Teacher Iris pic.twitter.com/oeP3x2t5QA
— meavinashr (ಅವಿನಾಶ್ ಆರ್ ಭೀಮಸಂದ್ರ) (@meavinashr) March 6, 2024
ஐரிஸ் எனும் ஆசிரியை, மாணவர்களின் பாடங்களை சொல்லிக் கொடுத்து, அவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் திறன் கொண்டது. மாணவர்களிடம் உரையாடலையும் மேற்கொள்ளும். இது மூன்று மொழிகளில் பேசும் திறன் கொண்டது. தனித்துவமான கற்றல் திறன் இந்த ஐரிஸ் ரோபோவிடம் உள்ளது. இது மாணவர்களிடம் நட்பாக பழகும்.
இதுகுறித்து நிறுவனம் கூறுகையில், “பயனுள்ள பாடங்களை மாணவர்களுக்கு ஐரிஸ் (ஏ.ஐ. ஆசிரியை) கற்றுக் கொடுக்கும். ஐரிஸ் மூலம் மாணவர்கள் தனித்துவமான கற்றல் ஆற்றலை பெறுவார்கள். ஒவ்வொரு மாணவர்களின் தேவைகள் மற்றும் கற்றல் ஆற்றலுக்கு ஏற்ப ஐரிஸ் செயல்படும்.
இது மூன்று மொழிகளில் மாணவர்களுடம் உரையாடும் தன்மை கொண்டது” என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு வேலைகளை இழக்கும் சூழல் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க
PM Modi: “புதிய ஜம்மு காஷ்மீர்” ஸ்ரீநகர் பொதுக்கூட்டத்தில் மனம் திறந்து பேசிய பிரதமர் மோடி!
மேலும் காண