நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம், உணவு கலப்படங்கள் பற்றிய விஷயங்களைப் பேசும் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது.
இத்திரைப்படத்தின் கதையைக் கேட்டபோது அது தன்னை எந்த அளவிற்கு பாதித்தது என்பது குறித்து காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர், “இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். பல நாள்கள் எனக்குத் தூக்கமில்லாத இரவுகளாகவே அமைந்தன. எனக்குள் ஒருவித பயம் தொற்றிக்கொண்டது.
‘அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்த உண்மைக் கதையை மக்களிடம் எப்படிக் கொண்டு சேர்க்கப் போகிறோம்? தனிப்பட்ட முறையில் நம் குடும்பத்தையும் நம் வாழ்க்கையையும் இதிலிருந்து எப்படிக் காப்பாற்றப் போகிறோம்?
இந்த மாதிரியான கலப்படங்களை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?’ என்று என் மனம் தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருந்தது.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பது குறித்து எனக்கு முன்பே முழுமையாகத் தெரியாது.
உணவு கலப்படம் பற்றி அரைகுறையாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் அது குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை படித்து, பார்த்துத் தெரிந்துகொண்டேன்” எனக் கூறியிருக்கிறார்.
























