IT Raid on DMK: திமுக முன்னாள் சபாநாயகர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை; தொண்டர்கள் கூடியதால் பரபரப்பு


<p>முன்னாள் சபாநாயகரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்</p>
<p>தமிழ்நாட்டின் முன்னாள் சபாநாயகரும் திமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>பாளையங்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருவதால், அப்பகுதியில் திமுக கட்சியினர் அதிக அளவில் குவிந்துள்ளனர். மேலும் அதிகமான காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்</p>
<p>முன்னாள் சட்ட பேரவை தலைவருமான ஆவுடையப்பன் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp; தேர்தல் நேரத்தில் நடைபெறும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.</p>

Source link