பகவான் ரமண மகரிஷியே தனக்கு கடவுள் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா

"கடவுள் இருக்கிறாரா இல்லையா. நம்பலாமா நம்பக் கூடாதா"என்கிற கேள்வி எழாத ஒரு மனிதன் கூட இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. இந்த புகழ்பெற்ற கேள்விக்கு உலகத்தில் பல மேதைகள் பல விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் உலகநாயகன் கமல்ஹாசனின் விளக்கம் உடனே நினைவுக்கு வரலாம். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று கேட்டால். "இருந்தால் நல்லா இருக்கும். இவருதான் கடவுள் அப்டினு கண்ணு முன்னாடி காட்டுங்க நான் நம்புறேன்" என்பது தான் கடவுள் பற்றி கமல்ஹாசனின் பார்வை.

கமல்ஹாசனின் பதிலுக்கு சவால்விடக் கூடிய ஒருவர் என்றால் அது இளையராஜாவாக தான் இருக்க முடியும். அப்படி மேடை ஒன்றில் கமல்ஹாசனின் கருத்துக்கு இளையராஜா எதிர் கருத்து தெரிவித்த தருணத்தை நினைகூறலாம்.

கமலுக்கு பதில் சொன்ன இளையராஜா

நிகழ்ச்சி ஒன்றில் யுவன் ஷங்கர் ராஜா தனது தந்தை இளையராஜாவிடம் கடவுளை நீங்கள் நேரில் பார்த்தால் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று கேள்வி கேட்கிறார். இதற்கு பதில் அளித்த இளையராஜா " கடவுள நான் எப்போ பாக்கல. கடவுள் கிட்ட கேட்க எனக்கு எந்த கேள்வியும் கிடையாது. எனக்கு ரொம்ப கஷ்டத்த கொடுத்தா நான் கஷ்டப்படுறத பார்த்து நீ சந்தோஷமா இருக்கியா எனக்கு அது போதும் அப்டினு எடுத்துப்பேன். நமக்குள்ள இல்லாத கடவுளா வெளிய இருக்க போறாரு. நம்ம மன்சுதான் கடவுள். அத நம்மால பாக்க முடியாது. கடவுள் என்ன எதிரிட்டு காணக் கூடிய விஷயமாவா இருப்பாரு.

நமக்கு அறிவு இருக்குனு தெரியுது ஆனா அறிவு என்ன கண்ணால பார்க்கக் கூடிய பொருளா? அறிவையே கண்ணால பார்க்க முடியாதப்போ அறிவால உணர்ந்துகொள்ளக் கூடிய கடவுள் நமக்கு கண் முன் தோன்ற வேண்டும் என்று கேட்பது கமல்ஹாசன் கேட்பது போல் இருக்கிறது. என்ன மேடையில வச்சுகிட்டு இவரை கடவுள் என்று சொல்லுங்கள் நான் கடவுளை நம்புகிறேன் என்று கமல் சொல்கிறார்.

அப்போ கடவுள கண்ணால காட்டுனா மட்டும்தான் நம்புவியா? அப்போ இவ்ளோ உருவம் இருக்கே அதுல ஒன்ன கடவுள்னு சொல்லிட்டு போயேன். உனக்கு அறிவு இருக்கானு கேட்டா என்ன சொல்லுவ. அறிவு இருக்குனு எந்த அறிவ வச்சு சொல்ற. நம்மளுடைய சொந்த அறிவையே எதிரிட்டு பார்க்க முடியாத போது கடவுள் என்பது எதிரிட்டு பார்க்கக் கூடிய ஒரு விஷயம் இல்லை. அறிவே கடவுள். அன்பே கடவுள். கடவுளுக்கு ஒரு வேலை கற்பிக்கிறது தப்பு.

ரமண மகரிஷிதான் எனக்கு கடவுள்

எனக்கு கடவுள் என்றால் அது பகவான் ரமண மகரிஷிதான். நமக்காக மண்ணாக போகக் கூடிய இந்த மனித சரீரம் கொண்டு பிறந்தவர் அவர். ஆறு முறை அவருக்கு அருவை சிகிச்சை பண்ணிருக்காங்க அவர் முகத்துல ஒரு சின்ன அசைவுகூட இல்ல. பதினாறு வயசுல தவத்துல உட்காரும்போது அவர் உடம்புல கரையான் புற்று முளைச்சது. அவர் தன்னோட உடம்புலயே இல்ல. நமக்கு மெய் ஞானத்தை உணர்த்துவதற்கான பொய்யான ஒரு மனித உடலில் வந்து போன கடவுள் அவர். நான் ஒவ்வொரு நாளும் அவரை பார்க்கிறேன். அவர் எனக்குள்ள தான் இருக்காரு. இங்க இருக்க ஒவ்வொருத்தர் உள்ள அவர் இருக்கார். ஒவ்வொரு மனிதனும் முழுமையானவன் என்று சொன்னவர் அவர் ஒருவர்தான். எனக்கு என்ன வேணுமோ கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். யுவன் , கார்த்திக் , பவதா உங்க மூனு பேரையும் எனக்கு கொடுத்திருக்கிறார். " என்று இளையராஜா பேசினார்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
dark matter onion tordex link
bookmaker live betting Stop by my page; best crypto sportsbooks (Preston)
Компания [url=https://i-tec.ru/]ай-тек[/url] российский интегратор мультимедиарешений для бизнеса, органов власти и образования. Ай-тек влияет на ряд аспектов, включая коммерцию и повседневное…
black ops market link tordex url
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

“தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என நாங்கள் பேசக் கூடாதா?” – கேட்கிறார் அமைச்சர் விக்னேஷ் | TN Minister Vignesh Questions: “Why Can’t Tamil Nadu Produce a Prime Minister? | ACTPnews.com

“கவிஞர்கள் ஒரு வரியை இரண்டு முறை ஆழமாக சொல்வது என்பது வழக்கம்”- கே.என்.நேருவுக்கு விஸ்வநாதன் பதில்! | minister Viswanathan explain about k.n nehru statement | ACTPnews.com

Iran: "மொஜ்தபா காமேனி இறந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை; ஆனால்.." – ட்ரம்ப் சொல்வது என்ன? | ACTPnews.com

‘தவிர்த்துகொள்ள வேண்டும்.!’- மதிமுக குறித்து பேசிய செங்கோட்டையன்; துரை வைகோ ரியாக்ஷன் என்ன?|Sengottaiyan spoke about MDMK; what was Durai Vaiko’s reaction? | ACTPnews.com

பரந்தூர் : வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான விவாதம்! தமிழகத்துக்கு லாபமா, நஷ்டமா? | ACTPnews.com

drughub market url black ops market