PM MODI: புதிய அரசுக்கான 100 நாள் திட்டத்தில் மக்கள் நேரடியாக பயன் பெறக்கூடிய, பல நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மோடியின் 100 நாட்களுக்கான திட்டங்கள்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பிறகு அமையும், புதிய அரசாங்கத்திற்கான 100 நாள் திட்டத்தை தயாரிக்குமாறு அமைச்சகங்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருந்தார். அதன்படியான பட்டியலில் மக்கள் நேரடியாக பயன்பெறக் கூடிய பல நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதாரணமாக, இந்திய ரயில்வேயானது, பயணிகளின் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணத்தை 24 மணி நேரத்தில் திரும்ப செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போதைய சூழலில் இதற்கு மூன்று நாட்கள் ஆகிறது, டிக்கெட் மற்றும் ரயில் டிராக்கிங் போன்ற சேவைகளை வழங்கும் ஒரு “சூப்பர் செயலியை” அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புல்லட் ரயில் திட்டம்:
முதல் 100 நாட்களில் பிரதமர் ரயில் யாத்ரி பீமா யோஜனா, பயணிகளுக்கான காப்பீட்டுத் திட்டம் மற்றும் 40,900 கிமீ நீளம் கொண்ட மூன்று பொருளாதார வழித்தடங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் பெற ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது, இதற்கு ரூ.11 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுலா ரயில் இணைப்பு திட்டம் முடிவடைந்தவுடன் ஜம்முவிலிருந்து காஷ்மீர் வரை ரயில்களை இயக்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில்களின் ஸ்லீப்பர் எடிஷன்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் புல்லட் ரயில் திட்டத்தை விரைவுபடுத்துதல் ஆகியவற்றிலும் ரயில்வேயின் கவனம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்திட்டத்தின்படி, அகமதாபாத்-மும்பை இடையேயான 508 கிமீ புல்லட் ரயில் பாதையில், சுமார் 320 கிமீ தூரம் ஏப்ரல் 2029-க்குள் செயல்படத் தொடங்கும்.
நாட்டின் பிரதான நிலப்பகுதியை ராமேஸ்வரத்துடன் இணைக்கும் இந்தியாவின் முதல் செங்குத்து-தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலமும் செயல்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1913 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தற்போதுள்ள ரயில் பாலம் வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 1913ஆம் ஆண்டு கட்டப்பட்ட தற்போதுள்ள ரயில் பாலம் பாதுகாப்பு காரணங்களால், கடந்த, 2022 டிசம்பரில், மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வீட்டு கடனுக்கு மானியம்:
வீட்டுவசதி அமைச்சகம் முன்மொழிந்த திட்டங்களில், திறன் மேம்பாடு மற்றும் சுயஉதவி குழுக்கள் மூலம் ஏழைகளுக்கு கடன் வழங்குவதில் கவனம் செலுத்தும் ‘நகர்ப்புற வாழ்வாதார பணி’யின் இரண்டாம் கட்டத்தை தொடங்குவதும் இடம்பெற்றுள்ளது. பல மாத விவாதத்திற்குப் பிறகு, நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டுக் கடனுக்கான வட்டி மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது, அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் தங்கள் திட்டங்களை இறுதி செய்துள்ளன, அமைச்சரவை செயலாளர் அவற்றை ஆய்வு செய்து வருகிறார். இறுதி செய்யப்படும் திட்டங்கள், புதிய அரசாங்கத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் காண