GT vs SRH LIVE Score: முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய குஜராத்; ரன்கள் சேர்க்க தடுமாறும் ஹைதராபாத்!

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மார்ச் 31ம் தேதியான இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டியானது பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் 2024ல் இரு அணிகளும் மோதும் மூன்றாவது போட்டி இதுவாகும்.

குஜராத் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மறுபுறம், ஹைதராபாத் இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்று, நிகர ரன் டேட் அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளது.

கடந்த மார்ச் 24ம் தேதி நடந்த போட்டியின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேசமயம் மார்ச் 26 அன்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில் குஜராத் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் (சிஎஸ்கே) தோல்வியடைந்தது.

ஹைதராபாத் தனது இரண்டாவது ஆட்டத்தில் மார்ச் 27 அன்று மும்பை இந்தியன்ஸ் அணியையும் தோற்கடித்தது. இருப்பினும், முன்னதாக மார்ச் 23 அன்று, குஜராத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

ஐபிஎல் 2022 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அறிமுகமானதிலிருந்து (சாம்பியனான) குஜராத் மற்றும் ஹைதராபாத் இதுவரை 3 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளன. இதில் 2ல் குஜராத் டைட்டன்ஸ் அணியும், 1ல் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஹைதராபாத்-க்கு எதிராக குஜராத்தின் அதிகபட்ச ஸ்கோர் 199 ஆகவும், குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ஹைதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 195 ஆகவும் உள்ளது.

அகமதாபாத் பிட்ச் எப்படி இருக்கும்..?

இந்த சீசனில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஒரே ஒரு போட்டி மட்டும் நடந்துள்ளது. இரண்டாவது பேட்டிங் செய்த மும்பை அணியால் 169 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியவில்லை. இருப்பினும், ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான பார்மில் உள்ளதால் இன்றைய போட்டியில் அதிக ஸ்கோரிங் மேட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை, இன்னும் சிறப்பாக பேட்டிங்கை ஆடவில்லை. இந்த போட்டியில் மீட்டெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

சுப்மன் கில் – அகமதாபாத் பந்தம்:

சும்பன் கில் அகமதாபாத்தில் விளையாடிய 13 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் 63.6 சராசரியில் 700 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு குறிப்பிட்ட ஸ்டேடியத்தில் குறைந்தது 500 ரன்களை எடுத்த பேட்ஸ்மேன்களில் இது நான்காவது சிறந்த சராசரியாகும்.

ஆனால், கடந்த இரண்டு போட்டிகளில் கேப்டன் சுப்மன் கில் சிறப்பாக எதையும் செய்யவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் 31 மற்றும் 8 ரன்கள் முறையே இத்தகைய ரன்கள் எடுத்தார். சுதர்ஷன் மற்றும் விஜய் சங்கர் மெதுவாக பேட்டிங் செய்கிறார்கள். மிடில் ஆர்டரில் டேவில் மில்லரும் ரன் அடிக்க திணறுகிறார்.

அதிரடி காட்டும் கிளாசன்:

ஹென்ரிச் கிளாசன் இந்த சீசனில் இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி 15 சிக்சர்களை அடித்துள்ளார். 2024ல், டி20யில் கிளாசன் 53 சிக்சர்களை அடித்துள்ளார். எனவே இந்த போட்டியிலும் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

குஜராத் டைட்டன்ஸ் ( ஜிடி ): விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா உமர்சாய், ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், ஆர்.சாய் கிஷோர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) : மயங்க் அகர்வால், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கட்.

Source link