GOAT Vijay: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் விஜய்யின் கை விரல் துண்டாகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
லியோ படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் இந்த படத்தில் நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது. மைக் மோகன், பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தொடர்ந்து வெங்கட் பிரபுவின் படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.
விஜய்யின் 68-வது படமாக உருவாகி வரும் கோட் படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலை ஏற்படுத்திய நிலையில், விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு காரணமாக கோட் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை வெங்கட் பிரபு தொடங்கியுள்ளார். இதற்கிடையே புதுச்சேரியில் கோட் படப்பிடிப்பில் விஜய் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்தக்கட்ட ஷூட்டிங் வேகமாக நடந்து வரும் நிலையில், கோட் படப்பிடிப்பில் விஜய்யின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. அதாவது கோட் படத்தில் விஜய்யின் கைவிரல் துண்டாகும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் பிராஸ்தெடிக் டெக்னாலஜியை இயக்குநர் வெங்கட் பிரபு பயன்படுத்தியுள்ளார். இந்த டெக்னாலஜியை கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் -2 படத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Vijay Stunt Double Posted GOAT Shooting Spot❤🔥🫵Vijay Character Role Going To Lose A Finger In A Fight ( Probably War ) Sequence & Used Prosthetics Technology Which Previously Used On Indian 2😋💥 pic.twitter.com/35V7jn2KKc
— heyopinions (@heyopinions) February 11, 2024
புதிய டெக்னாலஜியை பயன்படுத்தி வரும் விஜய்யின் கை விரல் துண்டான போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் கோட் திரைப்படம் அவரது பிறந்த நாள் ஸ்பெஷலாக ஜூன் மாதம் ரிலீசாகும் என கூறப்படுகிறது. அதேநேரம், விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளதால் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து விஜய் அடுத்ததாக நடிக்கும் தளபதி69 படம் அவரது கடைசி படம் என்பதால் அதை யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Published at : 11 Feb 2024 05:00 PM (IST)
மேலும் காண