மீன்பிடி தடைக்காலம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் தொடங்குகியது. மன்னார் வளைகுடா கடலில் இந்த காலக்கட்டம் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலகட்டமாகும். இந்த நேரத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் மீன்வளம் குறைந்து விடும் என்பதால் 2 மாத காலத்துக்கு மீன் பிடிக்க தடைவிதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

19 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள வசவன்குப்பம், கைப்பாணி குப்பம், எக்கியார்குப்பம், அனுமந்தை குப்பம் உள்ளிட்ட 19 மீனவ கிராமம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மேலும் மீன்பிடித் தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல், துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்படும். இந்த தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்களது மீன் வலைகள், விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவர். நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோரப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்வர்.

மீன் விலை உயர்வு

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் விசை படகுகள் கடலுக்கு செல்லாது என்ற காரணத்தால் மீன் வரத்து படிப்படியாக குறையும். அதேபோல் ஆழ்கடலில் கிடைக்கும் மீன்கள் கிடைக்காது. இதனால் மீன் விலை உயரும். மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மீன் கொண்டு வரப்படும். பொதுவாக வஞ்சிரம், வவ்வால், காலா, பன்னை, டூனா, டைகர் இறால், புளூ கிராப், மட் கிராப், லாப்ஸ்டர், கனவா, திருக்கை ஆகிய மீன் வகைகள் ஆழ்கடலில் கிடைக்கும் மீன்கள் ஆகும். இவை அனைத்தும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும்.

மீன்பிடி தடை காலத்தில் அதிகபட்சமாக வஞ்சிரம் ரூபாய் 2000 வரை விற்பனை செய்யப்படும். வெள்ளை வவ்வால் ரூபாய் 1000 முதல் ரூபாய் 1500 வரை விற்பனை செய்யப்படும். சங்கரா – ரூபாய் 500 – 600, இறால் – ரூபாய் 500 என விற்பனை செய்யப்படும். மீன் பிடி தடைக்காலத்தில் ஒரு சில மீன்கள் மட்டுமே கிடைக்கும்.

Source link

Latest News

View All

1. Если ситуация требует круглосуточного наблюдения, лабораторной диагностики, постоянного контроля показателей или использования сложного оборудования, врач предложит клинику. Такое решение связано…

2. Самостоятельный отказ от спиртного кажется простым решением, однако при зависимости резкая отмена способна усиливать тревогу, бессонницу, вегетативные реакции и судорожную…

3. Состояние пациента отслеживается на каждом этапе, от первичной консультации до дальнейших рекомендаций. Получить больше информации – [url=https://5vyvod-iz-zapoya-balashikha77.ru/]vyvod-iz-zapoya-balashiha[/url]

4. Заявку можно оставить в любое время, специалист быстро сориентирует по дальнейшим действиям. Получить больше информации – [url=https://kapelnitsa-na-domu-v-moskwe4.ru/]медсестра капельницы на дому…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed