EPS: ரோட்டுல காட்டி என்ன பயன்? பார்லிமெண்ட்ல காட்ட வேண்டியதுதானே?

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகள் திமுக அரசு எதுவும் செய்யவில்லை என்றும் செங்கலை காட்டி என்ன பயன் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
திருச்சியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் மக்களவை தேர்தல் 2024 வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும்  40 வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.  இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர்,  40 தொகுதிகளிலும் நமது கூட்டணி பெற வேண்டும் எனவும், அதற்கு கட்சினர் தீவிரமாக பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.
”தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக இடையேதான போட்டி, 3 ஆண்டுகளாக  என்ன செய்தீர்கள்; ஒன்றும் செய்யவில்லை. செங்கலை ரோட்டுல காட்டி என்ன பயன்? பார்லிமெண்ட்ல காட்ட வேண்டியதுதானே” எனவும் இபிஎஸ் பேசினார்.
நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரிகளில் 9 இடங்கள் தான் கிடைத்தன. எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கவில்லை. என் மனதில் தோன்றியது. மூத்த அதிகாரிகளை கலந்தாலோசித்து, 7.5% ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன்

Source link