Chance of rain next three hours in Tamil nadu at tenkasi coimbatore kanyakumari and thirunelveli | TN Weather: அடுத்த 3 மணி நேரம்! தமிழ்நாட்டில் பெய்யப்போகுது மழை


அடுத்த 3 மணி நேரம்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
இன்று (ஏப்ரல் 4)தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக  மாவட்டங்கள்,   புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 5  முதல் 7-ஆம் தேதி வரை:  தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
08.04.2024 முதல் 10.04.2024 வரை: கடலோர        மாவட்டங்கள்         மற்றும்        அதனை     ஒட்டிய         மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு
இன்று(ஏப்ரல்4) முதல் வரும் 8ஆம் தேதி வரை தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும்,  புதுவையிலும்  அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில்  2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக  இருக்கக்கூடும். 
அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச  வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களில் ஒருசில  இடங்களில் 39°  – 41° செல்சியஸ், உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°  – 39° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34°  – 37° செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்: அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும்  இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண

Source link