Category: விளையாட்டு
all sports like cricket tennis badminton football soccer baseball kabadi
-

சூர்யவன்ஷியுடன் மோதிய விவகாரம்.. இலங்கை வீரர் மீது கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை.. | actpnews.com
Last Updated:Jun 16, 2026 9:43 PM IST வீரர்கள் தங்களது கவனத்தை விளையாட்டில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. சூர்யவன்ஷியுடன் இலங்கை வீரர்கள் மோதலில் ஈடுபட்ட காட்சி இலங்கையின் தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணியின் 15 வயதான இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi), இலங்கை ‘ஏ’ அணி வீரர்களுடன் மைதானத்தில் நேரடியாக மோதலில் ஈடுபட்டது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும்…
-

வெறும் 62 இன்னிங்ஸ்களில் 3000 ரன்கள்… கோலியை பின்னுக்கு தள்ளி வரலாறு படைத்த கேப்டன் சுப்மன் கில்! | actpnews.com
Last Updated:Jun 15, 2026 7:45 PM IST தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஹாஷிம் அம்லா 57 இன்னிங்ஸ்களுடன் உலக அளவில் முதலிடத்தில் நீடிக்கிறார். சுப்மன் கில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிவேகமாக 3000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் இந்திய அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 84 ரன்கள் குவித்து இறுதிவரை…
-

முத்தரப்பு ‘ஏ’தொடர் 2026: சமனில் முடிந்த ஆட்டம்! சூப்பர் ஓவரில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை ‘ஏ’அணி! | actpnews.com
Last Updated:Jun 15, 2026 9:59 PM IST இந்தத் தோல்வியின் மூலம் இந்திய ‘ஏ’அணி அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது மேட்ச் முடிந்தபோது இலங்கை அணி வீரர்களுக்கும், சூர்யவன்ஷிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது. இலங்கையின் தம்புள்ளை மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு ‘ஏ’ கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில், இந்தியா ‘ஏ’மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகள் மோதின. இந்த ஆட்டம் சமனில் (Tie) முடிவடைந்து, பின்னர்…
-

IND vs AFG | கேப்டன் ஷுப்மன் கில் செய்த ஒரு பெரிய தவறு… விலை கொடுத்த இந்திய அணி! | actpnews.com
எனினும், 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதால், ஆப்கானிஸ்தான் அணி 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியின் அறிமுக வீரர்களான குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணியில், சிறப்பாக விளையாடிய கேப்டன், 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டார். இஷான் கிஷன் 34 ரன்களும், கடைசி நேரத்தில் கே.எல்.ராகுல் அதிரடியாக 39 ரன்களும் சேர்த்ததால், 23-வது ஓவரிலேயே இந்திய அணி 7 விக்கெட்…
-

FIFA உலகக் கோப்பை 2026: ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்! இந்தியாவில் நேரலையில் பார்ப்பது எப்படி? | actpnews.com
Last Updated:Jun 14, 2026 5:21 PM IST இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் 2026 உலகக் கோப்பையின் அனைத்து 104 போட்டிகளையும் தங்களின் மொபைல் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் நேரலையாகக் கண்டுகளிக்கலாம். நெதர்லாந்து, ஜெர்மனி அணிகள் உலகக் கோப்பை 2026 கால்பந்தாட்ட தொடரின் நான்காம் நாள் ஆட்டங்கள் குரூப் ‘இ’ மற்றும் குரூப் ‘எஃப்’ பிரிவுகளில் உள்ள அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான மோதல்களுடன் தொடங்குகின்றன. இந்த நாளின் முதல் ஆட்டத்தில், நான்கு முறை உலக சாம்பியனான…
-

பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய மகளிரணி: உலகக்கோப்பை மேட்ச்சில் 64 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி! | actpnews.com
Last Updated:Jun 14, 2026 10:48 PM IST ஆல் ரவுண்டர் தீப்தி சர்மாவின் சுழற்பந்துவீச்சு தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்திய அணி ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் விறுவிறுப்பான 6-வது லீக் போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6…
-

“உண்மையான வாழ்க்கை இனிமேல்தான் ஆரம்பம் நண்பா!” – கேன் வில்லியம்சனின் ஓய்வுக்கு கோலி உருக்கமான வாழ்த்து! | actpnews.com
Last Updated:Jun 12, 2026 9:04 PM IST ஒட்டுமொத்தமாக 378 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன், 19,346 ரன்களைக் குவித்துள்ளார் விராட் கோலி – கேன் வில்லியம்சன் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவரது நெருங்கிய நண்பரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி, வில்லியம்சனுக்கு நெகிழ்ச்சியான மற்றும் உணர்வுப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் விராட் கோலியும், கேன் வில்லியம்சனும் மைதானத்தில் கடுமையான…
-

’10 வயதில் சதம்’ – அண்ணன் வைபவ் வழியில் மிரட்ட வரும் அடுத்த சூறாவளி ஆசீர்வாத் சூர்யவன்ஷி! | actpnews.com
அண்ணன் வைபவ் எப்படி பந்துவீச்சாளர்களை இரக்கமின்றி ஆக்ரோஷமாக எதிர்கொள்வாரோ, அதே பாணியைத்தான் தம்பி ஆசீர்வாத்தும் கையில் எடுத்துள்ளார். இருவருக்குமே களத்தில் தற்காப்பு ஆட்டத்தை விட, முதல் பந்திலிருந்தே அதிரடியாக மட்டையைச் சுழற்றி ஆதிக்கம் செலுத்துவதுதான் மிகவும் பிடிக்கும். அண்ணனின் ஆட்டத்தை நேரில் பார்த்து வளர்ந்ததால், அதே போன்றதொரு வெறியோடு சிறு வயதிலேயே தீவிர கிரிக்கெட் பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் ஆசீர்வாத். ஆசீர்வாத்தின் இந்த முதல் சதத்தின் புகைப்படங்கள், ஸ்கோர்கார்டை அவரது மூத்த சகோதரர் உஜ்வால் சமூக…
-

ஃபிஃபா உலகக் கோப்பை…. செக் குடியரசு அணியை வீழ்த்தி தென் கொரியா த்ரில் வெற்றி! | actpnews.com
Last Updated:Jun 12, 2026 9:53 PM IST FIFA WC | மெக்சிகோவின் குவாதலஜராவில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஏ பிரிவு ஆட்டத்தில் தென் கொரியா, செக் குடியரசு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. News18 FIFA கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் செக் குடியரசு அணியை வீழ்த்தி தென் கொரியா த்ரில் வெற்றி பெற்றது. கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில்…
-

‘நியூசிலாந்திற்காக விளையாடிய ஒவ்வொரு கணமும் பொன்னானது..!’- ஓய்வை அறிவித்த கேன் வில்லியம்சன் | actpnews.com
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஓய்வு குறித்து பேசியிருக்கும் கேன் வில்லியம்சன், ” சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறேன் என்ற இந்த முடிவை எடுப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒவ்வொரு கணமும் பொன்னானது. கேன் வில்லியம்சன் இத்தனை வருடங்களாக எனக்கு பக்கபலமாக இருந்த என் குடும்பத்தினர், சக வீரர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள எனது…
-

“தென்னாப்பிரிக்க அணியில் இப்படிப்பட்ட ஓர் இளம் வீரர் இல்லை.!” – சூர்யவன்ஷியை புகழ்ந்த டேல் ஸ்டேயின் | actpnews.com
தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டேயின் இந்திய இளம் வீரர் சூர்யவன்ஷியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயது இளம் வீரரான சூர்யவன்ஷி, தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். வைபவ் சூர்யவன்ஷி இந்த சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதங்கள் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார். ஐபிஎல்லில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய…
-

துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா மரணம்… அறுவை சிகிச்சை நடந்த நிலையில் சோகம்! | actpnews.com
Last Updated:Jun 12, 2026 9:58 PM IST Jaspal Rana Death | 1994 முதல் 2006 வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 9 தங்கம் உள்பட 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர். News18 துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த ஜஸ்பால் ராணா காலமானார். அவருக்கு வயது 49. 1994 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஜஸ்பால்…
-

`எண்களுக்குள் 2026 உலகக்கோப்பை’ – 1248 வீரர்கள், புதிய அணிகள்! தலைசுற்ற வைக்கும் புள்ளிவிவரங்கள்! | actpnews.com
கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவான ஃபிஃபா உலகக்கோப்பை, இந்த முறை வரலாறு காணாத பிரமாண்டத்துடன் அரங்கேற உள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக்கோப்பை,இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இதுவரை இல்லாத வகையில் 48 அணிகள், 104 போட்டிகள், 1248 வீரர்கள் என புள்ளிவிவரங்கள் அனைத்தும் இந்தத் தொடர் எவ்வளவு பெரியது என்பதைப் பறைசாற்றுகின்றன. பல புதிய அணிகளின் அறிமுகம், உடையப்போகும் சாதனைகள் என இந்த உலகக்கோப்பை ஒரு புள்ளிவிவரப்…
-

சாம்பியன் அணிக்கு ரூ. 477 கோடி.. உலகக் கோப்பை கால்பந்து பரிசுத் தொகை பட்டியல்! | actpnews.com
Last Updated:Jun 10, 2026 7:21 PM IST அனைத்து லீக் போட்டிகளிலும் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறும் ஒரு அணி கூட குறைந்தபட்சம் 10.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.100.2 கோடி) தொகையை உறுதியாகப் பெற்றுச் செல்ல முடியும் உலகக்கோப்பை கால்பந்தாட்டம் கால்பந்து வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2022 கத்தார் உலகக் கோப்பையுடன் ஒப்பிடும்போது, இந்த முறை பரிசுக்கான…
-

கடைசி இடத்தைப் பிடித்தால் கூட ரூ. 87 கோடியா? கிரிக்கெட் பட்ஜெட்டை தூக்கி சாப்பிட்ட உலகக்கோப்பை கால்பந்தாட்ட பரிசுத்தொகை! | actpnews.com
Last Updated:Jun 11, 2026 5:35 PM IST ஃபிஃபா 2026 உலகக் கோப்பையின் மொத்தப் பரிசுப் பணத்தைக் கொண்டு, சுமார் 65 டி20 உலகக் கோப்பைத் தொடர்களை நடத்தி முடித்துவிடலாம். கால்பந்து vs கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) ஜூன் 11 முதல் தொடங்கவுள்ள நிலையில், இந்த முறை அது முன்னெப்போதையும் விட மிகப் பிரம்மாண்டமாக அமையவுள்ளது. இம்முறை வரலாற்றிலேயே முதல் முறையாக…
-

FIFA: சர்ச்சை கோல்… சரித்திர கோல்! ஒரே போட்டியில் கடவுளும் சாத்தானுமாக மாறிய மரடோனா! | actpnews.com
கால்பந்து உலகில் சில போட்டிகள் வெறும் ஆட்டமாக முடிந்துவிடுவதில்லை; அவை சரித்திரத்தின் பக்கங்களில் நிரந்தரமாக இடம்பெற்றுவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு போட்டிதான் 1986-ம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதியில் அர்ஜென்டினாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்றது. அந்தப் போட்டியில், டியகோ அர்மாண்டோ மரடோனா என்ற ஒற்றை மனிதர், கால்பந்தின் கடவுளாகவும், அதே நேரத்தில் அதன் சாத்தானாகவும் அவதாரம் எடுத்தார். சர்ச்சைக்குரிய ஒரு கோலும், சரித்திரம் போற்றும் ஒரு கோலும் ஒரே ஆட்டத்தில் அவரிடமிருந்து வெளிப்பட்டது. போட்டி என்பதைத் தாண்டிய…
-

“எல்லா அழுத்தங்களிலும் RCB ஆதரவு தந்திருக்கிறது; இதுதான் என் வீடு” – விராட் கோலி நெகிழ்ச்சி | actpnews.com
“ஈசாலா கப் நம்தே’ என்ற வாசகத்தோடு கடந்த 17 வருடங்களாக ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த சீசனில் தனது முதல் கோப்பையை முத்தமிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த முடிந்த ஐபிஎல் தொடரிலும் கோப்பையைத் தக்கவைத்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது. பல வருடங்களாக விமர்சனங்களை மட்டுமே சந்தித்து வந்த ஒரு அணி, பேக்-டு-பேக் கோப்பைகளை வென்று சாதித்து பலரது…
-

விசா இருந்தும் அமெரிக்காவில் அனுமதி மறுப்பு! – உலகக் கோப்பை வாய்ப்பை இழந்த பிரபல சோமாலிய நடுவர் | actpnews.com
பாதுகாப்புப் பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாகவே அவர் அனுமதிக்கப்படவில்லை என்று அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. சோமாலியா உள்ளிட்ட சில நாடுகள் மீது தற்போதைய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஃபிஃபா, ” போட்டியை நடத்தும் நாட்டின் (Host Country) குடிவரவு மற்றும் விசா நடைமுறைகளில் பிஃபா தலையிட முடியாது. தற்போதைய சூழ்நிலையில் ஓமர்…
-

இந்தியாவின் `ஆல்ரவுண்ட்’ ஆட்டம்! இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் சரணடைந்த ஆப்கானிஸ்தான்! | actpnews.com
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தனது முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்திய இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணியின் பிரம்மாண்டமான முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைத் தொடர்ந்து, இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதாரின் மாயாஜால சுழலும், வாஷிங்டன் சுந்தரின் துல்லியமான பந்துவீச்சும் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையைச் சிதைத்தன. IND v AFG | கில், ராகுல் முதல் இன்னிங்ஸில் 412…
-

`வேகத்தை யோசிக்கவில்லை, லென்த் மட்டுமே குறி!’ – பௌலிங் சீக்ரெட்டை உடைத்த வாஷிங்டன் சுந்தர்! | actpnews.com
பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அசத்தி, தனது ஆல்-ரவுண்டர் திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கியக் போட்டியில், தனது சிறப்பான ஆட்டத்திற்கான ரகசியம் என்ன என்பதைப் பற்றி அவர் பேசியுள்ளார். வேகத்தைக் காட்டிலும், சரியான ரிதம் மற்றும் லென்த்தில் கவனம் செலுத்தியதே தனது வெற்றிக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ரிதம்தான் முக்கியம், வேகம் அல்ல! போட்டிக்குப் பிறகு தனது பந்துவீச்சு குறித்துப் பேசிய சுந்தர்,…
-

Manav Suthar: `ஸ்லோ விக்கெட்… சிம்பிள் பிளான்!’ – பந்துவீச்சு ரகசியம் பகிரும் `அறிமுக’ ஆட்ட நாயகன் | actpnews.com
அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது… தனது முதல் போட்டியிலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதர். டெஸ்ட் கிரிக்கெட் சுலபமானதா என்ற கேள்விக்கு, “இல்லை சார், நிச்சயமாக அப்படி இல்லை” என யதார்த்தமாகப் பதிலளித்த அவர், தனது பந்துவீச்சின் வெற்றி ரகசியத்தையும், அந்த மறக்க முடியாத தருணங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். கனவு நனவான தருணம்! இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான தருணம் எப்படிப்பட்ட உணர்வைத் தந்தது? எனும் கேள்விக்கு, “அது…
-

செஸ் உலகின் இளம் ராஜா! – புதிய அத்தியாயத்தை எழுதும் பிரக்ஞானந்தா! | actpnews.com
கார்ல்சனின் கோட்டையில் சரித்திரம்! உலக செஸ்ஸின் மறுக்கமுடியாத சக்கரவர்த்தி, நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தில் கொடிகட்டிப் பறப்பவர். அவரை வீழ்த்துவதே பலருக்கு வாழ்நாள் கனவு. ஆனால் பிரக்ஞானந்தா அந்தக் கனவை நனவாக்கினார்; அதுவும் ஒருமுறை அல்ல, இருமுறை! அதுவும் கார்ல்சனின் சொந்த மண்ணான நார்வேயில் நடந்த “நார்வே செஸ் 2026′ தொடரில் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக்காட்டினார். ஒரே தொடரில், கிளாசிக்கல் ஆட்டத்தில் கார்ல்சனை இருமுறை தோற்கடித்த முதல் இந்தியர்…
-

இந்திய அணிக்கு தேர்வானார் சூர்யவன்ஷி! – இங்கிலாந்து, அயர்லாந்து தொடரில் இருந்து புதிய கேப்டன்! | actpnews.com
இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது. அதில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றிருக்கிறார். கேப்டகான ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் இடம்பெற்ற மற்ற வீரர்களின் பட்டியல் கீழே… இந்திய அணி இந்திய அணி மேலும் வரும் செப்டம்பர் மாதம் ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுகள் போட்டிக்கும் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. Source link
-

INDvAFG: சதமடித்து மிரட்டிய கில், ராகுல்; சாய், பண்ட் அரைசதம்! – முதல் நாளில் இந்தியா ஆதிக்கம் | actpnews.com
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி பேட்ஸ்மேன்களின் அபார ஆதிக்கத்தால் வலுவான நிலையில் உள்ளது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோரின் நேர்த்தியான சதங்களாலும், கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட் விளாசிய அதிரடி அரைசதத்தாலும், இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் குவித்துள்ளது. முல்லன்பூரில் இன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய…
-

பிரக்ஞானந்தா: ‘இது புதிய மாசம், நீ நல்லா விளையாடுவ’ – அம்மாவின் வார்த்தை… ஆட்டத்தை மாற்றிய தருணம்! | actpnews.com
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. ஒரு கட்டத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தவர், அதன்பின் யாரும் எதிர்பாராத வகையில் மீண்டு வந்து கோப்பையைக் கைப்பற்றியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால், தனது தாயின் நம்பிக்கை வார்த்தைகள் இருந்ததாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் பிரக்ஞானந்தா. சறுக்கலில் தொடங்கிய பயணம்! பிரக்ஞானந்தா நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற இந்தத் தொடரின் தொடக்கம் பிரக்ஞானந்தாவுக்கு அவ்வளவு…
-

ஆர்சிபி உடனான தோல்வி குறித்த கேள்வி.. ப்ரஸ் மீட்டில் டென்ஷனான குஜராத் அணியின் கிளென் பிலிப்ஸ்.. | actpnews.com
Last Updated:May 27, 2026 5:56 PM IST வெள்ளியன்று நடைபெறும் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் அல்லது ஐதராபாத் அணியுடன் குஜராத் அணி மோதுகிறது கிளென் பிலிப்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபையர் 1 போட்டியில் ஆர்சிபி அணியிடம் குஜராத் அணி படுதோல்வியடைந்தது. இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது குஜராத் அணியின் கிளென் பிலிப்ஸ் டென்ஷனாக பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று தரம்சாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் ஆர்சிபி அணி முதலில்…
-

54 ஓவர்களில் 776 ரன்கள், 72 சிக்ஸர்கள்… வைபவ் சூர்யவன்ஷியின் ‘Unbelievable’ ஐபிஎல் 2026 டேட்டா! | Vaibhav Sooryavanshi | actpnews.com
அனைத்து பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரி வழங்கிய நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மொஹ்சின் கான் மட்டுமே சூர்யவன்ஷிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். இந்த சீசனில் சூர்யவன்ஷிக்கு எதிராக ஒரு ‘மெய்டன் ஓவர்’ வீசியதோடு, அந்த ஓவரின் கடைசி பந்தில் அவரை அவுட்டும் செய்தார். சூர்யவன்ஷிக்கு எதிராக 12 பந்துகள் வீசி, வெறும் 2 ரன்கள் மட்டுமே தந்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, 16 ஸ்டிரைக் ரேட்டில் அவரை கட்டுப்படுத்திய ஒரே பந்துவீச்சாளர் மொஹ்சின் கான் தான். இவரைத்…
-

நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்: சச்சின், காலிஸ், முரளிதரனுக்கு ‘கிரிக்இன்போ’ உயரிய விருது! | actpnews.com
Last Updated:May 31, 2026 4:15 PM IST இந்த நூற்றாண்டின் சிறந்த 25 சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 3ஆம் இடத்தையும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 5ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். சச்சின், அனில் கும்ப்ளே, டிவில்லியர்ஸ் மும்பையில் நடைபெற்ற கிரிக்இன்போ விருதுகள் (Cricinfo Honours) விழாவில், 21ஆம் நூற்றாண்டின் (2000-2025) மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ், இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் ஆஸ்திரேலியாவின்…
-

RCB – குஜராத் அணிகள் மோதும் ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி.. மழையால் ஆட்டம் ரத்தானால் அடுத்து என்ன நடக்கும்? | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 31, 2026 6:09 PM IST லீக் சுற்றில் இதே அகமதாபாத் மைதானத்தில் ஆர்சிபியை வீழ்த்திய அனுபவம் குஜராத் அணிக்கு சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஐபிஎல் இறுதிப் போட்டி ஐபிஎல் இறுதிப் போட்டி மழையால் ரத்தானால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 இறுதிப்போட்டிக்கு…
-

ஆப்கன் ODI கிரிக்கெட் தொடர்… விராட் கோலி விலகல்? – என்ன காரணம்? | Sports News (விளையாட்டு செய்திகள்)
Last Updated:Jun 05, 2026 7:41 AM IST ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விராட் கோலி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. News18 ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக விராட் கோலி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 31ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விராட் கோலி அதிரடியாக விளையாடினார். அந்தப் போட்டியில்…
-

மைதானத்திற்குள் நுழைந்த ஷேக், ரத்து செய்யப்பட்ட கோல் | Sheikh Fahad 1982 World Cup France vs Kuwait Controversy
கால்பந்து போட்டிகளில் நடுவரின் முடிவை மாற்றுவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால், ஒரு நாட்டின் இளவரசரே மைதானத்திற்குள் இறங்கி வாக்குவாதம் செய்தால் என்னவாகும்? அப்படியொரு நம்பமுடியாத சம்பவம் 1982-ம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த உலகக் கோப்பையில் அரங்கேறியது. குழப்பத்தை ஏற்படுத்திய விசில் சத்தம்! அது பிரான்ஸ் மற்றும் குவைத் அணிகளுக்கு இடையேயான ஒரு முக்கியமான லீக் போட்டி. ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ஏற்கனவே 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. அப்போது, பிரான்ஸ்…
-

1974 உலகக்கோப்பையின் விநோத நொடி: பிரேசில் ஃப்ரீகிக்கை உதைத்த ஜாயிர் வீரர்! | zaire mwepu ilunga 1974 world cup free kick
உலகக்கோப்பை கால்பந்து வரலாறு விசித்திரமான தருணங்கள் பலவற்றைக் கண்டிருக்கிறது. ஆனால், சில சம்பவங்கள் வெறும் விசித்திரமாக மட்டுமல்லாமல், அதன் பின்னால் ஒரு பெரிய கதையையும் சுமந்து நிற்கும். அப்படியான ஒரு நிகழ்வுதான் 1974-ம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் நடந்த உலகக்கோப்பையில், பிரேசில் மற்றும் ஜாயிர் (Zaire) அணிகளுக்கு இடையேயான போட்டியில் அரங்கேறியது. திடுக்கிட வைத்த அந்தத் தருணம்! போட்டி பரபரப்பாகச் சென்றுகொண்டிருந்தது. ஜாயிர் அணி ஏற்கனவே 2-0 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்தது. அப்போது பிரேசில் அணிக்கு…
-

Team India | ஆப்கன் டெஸ்ட் போட்டி… இந்திய அணியில் செய்யப்பட்ட ஒரு மாற்றம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
Last Updated:Jun 03, 2026 1:17 PM IST Team India | இந்திய அணி, ஆப்கானிஸ்தானுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளது. முல்லன்பூரில் வரும் 6ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களம் காணவுள்ளது. News18 ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் காணவுள்ள இந்திய அணி வீரர்கள், பஞ்சாப் மாநிலம் மொஹாலியைச் சென்றடைந்தனர். ஐபிஎல் போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் வழக்கமான சர்வதேசப் போட்டிகளுக்குத் திரும்பியுள்ள இந்திய அணி,…
-

கத்தார் ஜெர்சியில் களம்காணும் நம் மண்ணின் மைந்தன்! | Tahsin Mohammed Jamshid Qatar Football World Cup
கண்ணூரிலிருந்து கத்தார் வரை… தஹ்சினின் குடும்ப வேர்கள் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளன. தோஹாவில் பிறந்து வளர்ந்த இவரது தந்தை ஜம்ஷித், கண்ணூர் மாவட்டத்தின் தலசேரி்யைச் சேர்ந்தவர். தாய் ஷைமா, வளப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர். 1996-ல் கத்தாருக்குக் குடிபெயர்ந்த இந்த குடும்பத்தில் பிறந்த தஹ்சின், அந்நாட்டின் கால்பந்து கலாச்சாரத்திலேயே வளர்ந்தார். கோழிக்கோடு பல்கலைக்கழகத்திற்காக கால்பந்து விளையாடிய திறமையான வீரரான அவரது தந்தை, மகனின் பயணத்திற்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்துள்ளார். கத்தாரின் குடியுரிமை பெற்ற தஹ்சின், அந்நாட்டின் பல…
-

IPL 2026 Final : பவுலிங்கில் மிரட்டிய ஆர்சிபி.. இறுதிப் போட்டியில் 155 ரன்கள் சேர்த்தது குஜராத் டைட்டன்ஸ்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 31, 2026 9:37 PM IST குஜராத் அணியில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஜாஸ் பட்லர் அவுட் ஆன காட்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ள குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 156 ரன்கள் …
-

Vaibhav Sooryavanshi | பள்ளியில் படிக்கும் வயதில்… ஆராய்ச்சி பாடமாய் மாறிய கிரிக்கெட் உலகின் ‘அதிசயப் புயல்’ வைபவ் சூர்யவன்ஷி…! | Sports News (விளையாட்டு செய்திகள்)
Last Updated:Jun 03, 2026 7:44 AM IST 15 வயதில் உலகையே வியக்கவைக்கும் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை குறித்த ஆராய்ச்சித் திட்டத்தை இந்தூர் ஐஐஎம் முன்னெடுத்துள்ளது. News18 15 வயதில் உலகையே வியக்கவைக்கும் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை குறித்த ஆராய்ச்சித் திட்டத்தை இந்தூர் ஐஐஎம் முன்னெடுத்துள்ளது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி, 72 சிக்ஸர் விளாசி ஒரு சீசனின் அதிக…
-

உலகக் கோப்பையின் மர்மப் பக்கங்கள்: திருட்டு, மீட்பு, சேதம்! | FIFA World Cup Trophy Mysterious History Theft
இரண்டாம் உலகப் போர், உலகையே உலுக்கிக் கொண்டிருந்த காலம். அப்போது FIFA-வின் துணைத் தலைவராக இருந்த இத்தாலியைச் சேர்ந்த ஒட்டோரினோ பராசி, ஒரு துணிச்சலான காரியத்தைச் செய்தார். ரோம் நகரில் உள்ள ஒரு வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை, ஆக்கிரமிப்புப் படைகளின் கைகளில், குறிப்பாக ஹிட்லரின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ரகசியமாக வெளியே எடுத்தார். பின்னர், அதை ஒரு சாதாரண ஷூ பாக்ஸில் வைத்து, தனது கட்டிலுக்கு அடியில் போர் முடியும்…
-

Vaibhav Sooryavanshi : கெயில், சாய் சுதர்சன் சாதனைகள் காலி! ஐபிஎல் 2026 தொடரில் ஆரஞ்ச் கேப்பை தட்டிப்பறித்த இளம் புயல்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 31, 2026 10:33 PM IST நடப்பு ஐபிஎல் தொடரில் 237.31 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவித்துள்ள வைபவ், ஒட்டுமொத்தமாக 72 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை (Orange Cap) வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இத்தொடரில் 16 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 776…
-

1950 உலகக் கோப்பையை இந்தியா தவறவிட்டதன் சொல்லப்படாத கதை! | 1950 FIFA World Cup Indian football mystery
இந்திய கால்பந்து வரலாறு, தவறவிடப்பட்ட வாய்ப்புகளாலும், நிறைவேறாத கனவுகளாலும் நிரம்பியது. அதில், 1950-ல் நடந்த ஒரு சம்பவம், இன்றுவரை ஒரு தீராத வலியாக, “என்ன நடந்திருக்கும்?’ என்ற கேள்வியாக நிலைத்து நிற்கிறது. பிரேசிலில் நடந்த FIFA உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றும், இந்தியா அந்தப் போட்டியில் பங்கேற்காமல் பின்வாங்கியது. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிமுகமாக இருந்திருக்க வேண்டியது, இந்திய கால்பந்தின் மிகப்பெரிய மர்மக் கதையாக மாறியது. ஒருவேளை, 1950-ல் பிரேசிலில் இந்தியா பங்கேற்று, ஒரு நல்ல ஆட்டத்தை…
-

வெறும் பேட்டிங் அணி அல்ல, சாம்பியன் படை! ஆர்சிபியை செதுக்கிய பயிற்சியாளர் ஆண்டி பிளவர் – யார் இவர்?
ஐபிஎல் தொடர்களில் எத்தனையோ ஜாம்பவான் பயிற்சியாளர்கள் வந்திருந்தாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய பெருமை அதன் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவரையே சேரும். தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பைகளை வென்று, ஆர்சிபி அணியை ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாற்றியதில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது. ஆண்டி பிளவர் 2023 ஆகஸ்ட் மாதத்தில் ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். Rcb அவர் உள்ளே வந்த உடனே, ஆர்சிபி-யின் பழைய சிந்தனை முறையை முழுமையாக மாற்றியமைத்தார்.…
-

தோல்வி குறித்து குஜராத் கேப்டன் கில் பேசியவை | Gujarat Captain Gill Speech
ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி. தோல்விக்கு பிறகு பேசிய குஜராத் கேப்டன் கில், “180–190 ரன்கள் எடுத்திருந்தால் போட்டி இன்னும் சவாலாக இருந்திருக்கும். ஆரம்பத்தில் மைதானம் சற்று மெதுவாக இருந்தது,முதல் சில ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியது.நாங்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியின் நடுவில் வேகத்தை இழந்தோம். இருந்தாலும் 150–160 ரன்கள் எடுத்தாலும் ஆரம்பத்தில் சில விக்கெட்டுகள் எடுத்தால் போட்டிக்குள் இருக்க முடியும்…
-

GT vs RCB: ‘நான் கனவிலும் இதை நினைக்கவில்லை, இந்த கோப்பை.!’ -ரஜத் பட்டிதர் நெகிழ்ச்சி |Rajat patidar post match speech after GT vs RCB final
இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய ரஜத் பட்டிதர்,” இந்த வெற்றி மிகவும் அற்புதம் வாய்ந்தது. நாங்கள் இந்த மைதானத்திற்கு வந்தபோதே கடந்த ஆண்டின் பல நினைவுகள் மனக்கண்ணில் வந்து போயின. இப்போது என் மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை, அவ்வளவு நன்றாக உணர்கிறேன். எங்களிடம் மிகத் தெளிவான திட்டமிடல் இருந்தது. ஆர்சிபி அணியின் கேப்டனாகி, கோப்பையை உயர்த்துவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இது என் தலையெழுத்தில் எழுதப்பட்ட ஒன்று என்றுதான் நினைக்கிறேன், இதற்கு நான்…
-

IPL 2026 : குஜராத்தை அணியை தொடர்ந்து 2ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது ஆர்சிபி.. ரசிகர்கள் உற்சாகம்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 31, 2026 11:52 PM IST 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணியில் கோலி 75 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி நடப்பு சாம்பியனான ஆர்சிபி தொடர்ந்து 2 ஆவது முறையாக கோப்பையை வென்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 155…
-

Vaibhav Sooryavanshi : சிறுவனுக்கு எதிராக ‘பாடி-லைன்’ பந்துவீச்சா? – குஜராத் அணி மீது இர்பான் பதான் கடும் விமர்சனம் | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 30, 2026 2:34 PM IST இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த 5 சீசன்களில் 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2026 (IPL 2026) கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்றுப் போட்டியில் (Qualifier 2) குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகள் நேற்று மோதின. இதில் குஜராத் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்…
-

‘அது அவர் கருத்து, எங்கள் நோக்கமல்ல!’ – சங்கக்காரா | Kumar Sangakkara refutes Riyan Parag comment IPL
கேப்டன் கருத்தும், பயிற்சியாளரின் மறுப்பும்! போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரியான் பராக், “எங்கள் அணியில் இளம் வீரர்கள் மற்றும் அனுபவமற்றவர்கள் அதிகம் இருப்பதால், நாங்கள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சங்கக்காராவிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிலை அளித்தார். “இல்லை, ராஜஸ்தான் அணி அப்படிப்பட்ட நோக்கத்துடன் உருவாக்கப்படவில்லை. ஒருவேளை முன்பிருந்திருக்கலாம். ஆனால், 2022-ல் நாங்கள் ஒரு தெளிவான முடிவை எடுத்தோம். போட்டிகளை…
-

'சொந்த மைதானத்தில் ஆர்.சி.பியை எதிர்கொள்வதில் மகிழ்ச்சி!' – இறுதிப்போட்டி குறித்து கில்
ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக குஜராத் அணி இறுதி போட்டியை எட்டியுள்ளது. நாளை (மே31)அகமதாபாத் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது. நேற்று நடந்த குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 214 ரன்கள் எடுத்தது. இதனை விரட்டி களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் இந்த ஸ்கோரை 19வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றனர். இதன் மூலம் தனது மூன்றாவது பைனலில் கால் பதித்துள்ளது குஜராத்…
-

Vaibhav Sooryavanshi : எலிமினேட்டர் மேட்ச்சில் 12 சிக்சர்.. கிறிஸ் கெய்ல் ரிக்கார்டை எளிதாக முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி… | Sports News (விளையாட்டு செய்திகள்)
Last Updated:May 27, 2026 8:32 PM IST வேகப்பந்து மற்றும் ஸ்லோயர் பந்துகள் என எதற்கும் அஞ்சாமல் மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிக்ஸர் மழை பொழிந்தார். வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான எலிமினேட்டர் போட்டியில், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் கிறிஸ் கெய்லின் நீண்டகால…
-

IPL 2026 : சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்.. ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 29, 2026 11:46 PM IST ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களைத் திணறடித்த கேப்டன் ஷுப்மன் கில், மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்ஸர், பவுண்டரிகளாகப் பறக்கவிட்டார். குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான 2-வது குவாலிபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கேப்டன் ஷுப்மன் கில்லின் அதிரடி சதம் அணியின் இந்த இமாலய வெற்றிக்கு வழிவகுத்தது. முல்லன்பூரில்…
-

LSG: கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரிஷப்; லக்னோ அணி வெளியிட்ட அறிவிப்பு என்ன? | Rishabh Pant steps down as LSG captain
லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி இருக்கிறார். இதனை அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்தத் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி மொத்தம் 14 போட்டிகளில் விளையாடியது. இதில் 4 போட்டிகளில் மட்டுமே பெற்ற அந்த அணி, 10 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் தொடரை விட்டு வெளியேறியது. ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை. இதனால்…
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports









A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…