உலகக்கோப்பை கால்பந்தாட்டம்

Last Updated:

அனைத்து லீக் போட்டிகளிலும் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறும் ஒரு அணி கூட குறைந்தபட்சம் 10.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.100.2 கோடி) தொகையை உறுதியாகப் பெற்றுச் செல்ல முடியும்

உலகக்கோப்பை கால்பந்தாட்டம்
உலகக்கோப்பை கால்பந்தாட்டம்

கால்பந்து வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2022 கத்தார் உலகக் கோப்பையுடன் ஒப்பிடும்போது, இந்த முறை பரிசுக்கான நிதி ஒதுக்கீடு சுமார் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பங்கேற்கும் நாடுகள் மற்றும் வெற்றி பெறும் அணிகளுக்குக் கிடைக்கவுள்ள பிரம்மாண்டத் தொகையின் விவரங்கள் வெளியாகியுள்ளன

உலகக் கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வெல்லும் நாட்டின் கால்பந்து கூட்டமைப்பிற்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 477.5 கோடி) பரிசாக வழங்கப்படும். இது தவிர வீரர்களுக்கான கூடுதல் போனஸ்கள் மற்றும் விளம்பர வருவாய்கள் தனித்தனி ஆகும்.

இதேபோல், இரண்டாவது இடத்தைப் பிடித்து ரன்னர்-அப் ஆகும் அணிக்கு 33 மில்லியன் டாலரும் (சுமார் ரூ. 315.1 கோடி), மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 29 மில்லியன் டாலரும் (சுமார் ரூ. 276.9 கோடி) வழங்கப்படவுள்ளது.

நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 27 மில்லியன் டாலர் (சுமார் ரூ.257.8 கோடி) கிடைக்கும். இதன் மூலம், இறுதி வார இறுதியில் விளையாடப்போகும் நான்கு அணிகளுக்கும் இடையே மிகக் கடுமையான நிதி சார்ந்த மோதலும் அரங்கேறப் போகிறது.

அரையிறுதிக்குத் தகுதி பெறாமல், காலிறுதி (Quarterfinals) சுற்றோடு வெளியேறும் 5 முதல் 8 வரையிலான இடங்களைப் பிடிக்கும் நான்கு அணிகளுக்கு தலா 19 மில்லியன் டாலர் (சுமார் ரூ.181.4 கோடி) பரிசுத் தொகையாகக் கிடைக்கும். அதேபோல், அதற்கு முந்தைய சுற்றான ‘ரவுண்ட் ஆஃப் 16’ (Round of 16) நாக்-அவுட் போட்டிகளில் தோற்று வெளியேறும் அணிகளுக்கு தலா 15 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 143.2 கோடி) வீதம் வழங்கப்படும்.

இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 48 அணிகள் பங்கேற்கும் புதிய விதிமுறையின்படி, ‘ரவுண்ட் ஆஃப் 32’ (Round of 32) சுற்றில் தோல்வியடையும் 17 முதல் 32 வரையிலான இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 11 மில்லியன் டாலர் (சுமார் ரூ.105 கோடி) பரிசுத் தொகை போய் சேரும். தொடரின் ஆரம்ப கட்டமான குரூப் சுற்றோடு (33 முதல் 48 வரையிலான இடங்கள்) வெளியேறும் அணிகள் ஒவ்வொன்றுக்கும் தலா 9 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 85.9 கோடி) நிதி கிடைக்கும்.

இதுமட்டுமன்றி, உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற்றுள்ள 48 அணிகளுக்கும் அவற்றின் தயாரிப்புச் செலவுகளுக்காக (Preparation fee) தலா 1.5 மில்லியன் டாலரை (சுமார் ரூ 14.3 கோடி) ஃபிஃபா கூடுதலாக வழங்குகிறது. இதன் மூலம், தொடரின் அனைத்து லீக் போட்டிகளிலும் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறும் ஒரு அணி கூட குறைந்தபட்சம் 10.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.100.2 கோடி) தொகையை உறுதியாகப் பெற்றுச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed