atlee demands share over movie box office as remuneration for allu arjun movie | Atlee – Allu Arjun: கலக்க வரும் அட்லீ


படத்தின் மொத்த வசூல் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தனக்கு சம்பளமாக வழங்க அட்லீ கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அட்லீ – அல்லு அர்ஜூன் கூட்டணி
ஜவான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார் அட்லீ. ஏற்கனவே ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இருந்து தனக்கு அழைப்பு வந்திருப்பதாகவும் அதற்கான கதையை தான் எழுதி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார் . இதனிடையில் அவர் டோலிவுட் ஸ்டார் அல்லு அர்ஜூனை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த தகவல் சினிமா வட்டாரங்களால் கிட்டதட்ட உறுதிபடுத்தப் பட்டுள்ளன. 
சன் பிக்ச்சர்ஸ் மற்றும் கீதா  ஆர்ட்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜூன்  நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அட்லீயின் ஜவான் படத்திற்கு இசையமைத்த அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். வரும் ஏப்ரல் 8 ஆம் தேடி நடிகர் அல்லு அர்ஜூன் தனது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறார் . அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படம் குறித்தான அறிவுப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அட்லீயின் சம்பளம்

#AAA: #AlluArjun – #Atlee – #Anirudh Announcement expected on Apr 8th as AlluArjun birthday special 🎉There is the buzz that #Trisha is doing female lead, but it’s not confirmed yet !!Sunpictures to backroll the project, co-produced by GeethaArts🤝Pre production are… pic.twitter.com/ei1ytG2N4i
— AmuthaBharathi (@CinemaWithAB) April 1, 2024

ஜவான் படத்திற்குப் பின் இயக்குநர் அட்லீயின் மார்கெட் பலமடங்கு உயர்துள்ளது. பாலிவுட் முதல் டோலிவுட் வரை அவரது படங்களில் நடிப்பதற்காக நடிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஜவான் படத்தைத் தொடர்ந்து அட்லீ தனது சம்பளத்தை 60 கோடியாக உயர்த்தியாக தகவல் வெளியானது. தற்போது அவர் இயக்க இருக்கும் அல்லு அர்ஜூன் படத்திற்கு புதிய கண்டிஷன் ஒன்றை அவர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தனது சம்பளம் தவிர்த்து படம் வெற்றி அடைந்து பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை அவர் ஷேராக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
புஷ்பா 2
அல்லு அர்ஜூன் தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 படத்தில் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில்  நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஆக்ஸ்ட் மாதம் இந்தப் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது
 

மேலும் காண

Source link