ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பாக்கியம் வீட்டுக்கு வர கனிக்கு சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடக்கத் தொடங்கிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது சடங்கு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் செய்து கனியை கூட்டி வந்து பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்க செல்ல, வைகுண்டத்தின் காலில் விழுந்து அவள் ஆசீர்வாதம் வாங்க செல்கிறாள். அப்போது வைகுண்டம் “இந்த வீட்டோட தெய்வம் சண்முகம் தான், அவன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கு” என சொல்ல கனி அண்ணனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள்.

கனி நம்மை விட்டு பிரிஞ்சிடப் போறா என்ற வேதனையுடன் சண்முகம் இருக்க, அதைப் பார்த்து வைகுண்டம் பரணி பீல் பண்ணுகின்றனர். “அண்ணனை விட்டு போயிட மாட்டல?” என்று சண்முகம் மனசுடைந்து கேட்க, கனி “உன்னை விட்டு எப்பவும் பிரிய மாட்டேன், உன் கூடவே இருக்கணும் என்பதற்காக கல்யாணம் கூட பண்ணிக்க மாட்டேன்” என்று சொல்ல, சண்முகம் கனியை கட்டியணைத்து கண் கலங்குகிறான்.

வீட்டுக்கு வந்த மீனாட்சி சண்முகம் வீட்டில் கதவைத் தட்ட கனி கதவைத் திறக்கிறாள். மகளை பார்க்கும் மீனாட்சி திகைத்து நிற்க, கனி “யார் நீங்க? என்ன வேண்டும்?” என்று கேட்க, தண்ணி கேட்க வந்ததாக சொல்ல, கனியும் தண்ணீர் கொண்டு போய் கொடுக்கிறாள். வீட்டில் ஏற்பாடுகள் தடபடலாக இருக்க, மீனாட்சி என்ன விஷயம் என்று கேட்க, கனி பெரிய மனுஷியாகி விட்டு விஷயத்தை சொல்லி “பெரியவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ” என சொல்ல, மீனாட்சி காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள் கனி.

அதன் பிறகு பாக்கியத்தைப் பார்த்து “இது உங்க பொண்ணா?” என்று மீனாட்சி கேட்க, “இல்ல என் அண்ணன் பொண்ணு” என பாக்கியம் பதில் சொல்கிறாள். “இவங்க அம்மா இல்லையா” என்று கேட்க, அவங்க அம்மா இப்போ வீட்ல இல்ல என்று சொன்னதும் கனி தான் தன்னுடைய மகள் என்பதை உறுதி செய்து கொள்கிறாள்.

அதன் பிறகு ஸ்டேஷனுக்கு வந்த மீனாட்சி “அது என் பொண்ணு தான். போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்” என்று சொல்ல, சௌந்தரபாண்டி “அதெல்லாம் வேண்டாம், சண்முகம் இல்லாத நேரமா பார்த்து சொல்றேன், வீடு புகுந்து கனியை தூக்கிட்டு போயிடுங்க” என்று ஐடியா கொடுக்க, அவர்களும் சம்மதம் தெரிவிக்கின்றனர். சௌந்தரபாண்டி மைண்ட் வாய்ஸில் “பிரசிடெண்ட் பதவியில் மட்டுமல்லாமல் உனக்கு தர்ம கத்தா ஆகணுமா? அதுக்கு வைக்கிறேன் ஆப்பு” என பேசிக்கொள்கிறார்.

பிறகு சௌந்தரபாண்டி கொடுத்த ஐடியா படி சண்முகம் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் ரவுடிகள் நுழைகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

Source link

Latest News

View All

1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed