”AI போட்டோவை வைத்து போலி புகார்”- என் மீதான நடவடிக்கையை ஏற்க முடியாது கருப்பு முருகானந்தம்!- bjp party karuppu muruganantham deletion


இந்த விவகாரம் பா.ஜ.க-வினர் மட்டுமின்றி டெல்டாவில் அனைத்து அரசியல் கட்சியினர் மத்தியிலும் பேசு பொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில் கருப்பு முருகானந்தம் தனதி எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தொடங்கிய எனது இந்த நெடிய பயணம், பாரதிய ஜனதா கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதப் புகாருமின்றித் தூய்மையான முறையில் அர்ப்பணிப்புடன் தொடர்ந்த ஒன்றாகும்.

கருப்பு முருகானந்தம்

கருப்பு முருகானந்தம்

இத்தகைய சூழலில், முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மூலமாக எவ்வித முறையான விசாரணையும் நடத்தப்படாமல், என்னை உடனடியாகப் பொறுப்பிலிருந்து விடுவித்தது மிகுந்த கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக தேசியப் பொதுச் செயலாளர் சந்தோஷ் ஜி, மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஜி ஆகியோரிடத்தில் நான் ஏற்கெனவே பேசியுள்ளேன், ஒழுங்கு நடவடிக்கைக் குழு முழுமையாக விசாரித்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Я уже привыкла к этому кошмару. Он похудел, осунулся, перестал разговаривать. Стала искать в интернете хоть какую-то помощь. Позвонила, объяснила…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports