ஃபகத் ஃபாசில் படத்தின் வழி மலையாள சினிமாவில் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார் எஸ்.ஜே சூர்யா.
எஸ்.ஜே.சூர்யா
தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர் எஸ்.ஜே.சூர்யா. எப்படியான கதாபாத்திரம் என்றாலும் அதை தனது நடிப்பால் தனித்துவமாக மாற்றக்கூடியவர். கடந்த ஆண்டு அவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வழக்கமான நடிப்பைவிட ஒரு படி மேலே சென்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் மட்டும் இல்லாமல் தற்போது பிற திரைத்துறையினரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் எஸ்.ஜே சூர்யா. தமிழில் ரசிகர்களை மகிழ்வித்த அவர் தற்போது மலையாளத்தில் அடி எடுத்து வைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஃபகத் ஃபாசிலுடன் இணையும் எஸ்.ஜே சூர்யா
#FahadhFaasil & #SjSuriyah to act in the Same Film..😲🔥#SJSuriyah to make his Malayalam Debut in a #FahadhFaasil Starrer Directed by #VipinDas (Jaya Jaya Jaya Jaya Hey) pic.twitter.com/kVEkI0vf42
— Laxmi Kanth (@iammoviebuff007) April 6, 2024
மலையாளத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு பாசில் ஜோசப் மற்றும் தர்ஷனா நடிப்பில் ‘ஜெய ஜெய ஜெய ஹெய ஹே’ படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை விபின் தாஸ் இயக்கியிருந்தார். தற்போது விபின் தாஸ் தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளைத் தொடங்கயுள்ளார். இபடத்தில் மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்த ஃபகத் ஃபாசில் நடிக்க இருக்கிறார். ஃபகத் ஃபாசிலுடன் இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் ரசிகர்களால் எஸ்.ஜே சூர்யா நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படுபவர். அதே போல் மலையாளத்தில் நடிப்பு அரக்கன் என்று ஃபகத் ஃபாசிலை சொல்லலாம். இந்த இரு நடிகர்களையும் ஒரே திரையில் பார்ப்பது என்பதே ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.ஜே சூர்யா நடித்துள்ள படங்கள்
எஸ்.ஜே சூர்யா தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ராயன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் மே மாதம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இந்த இரண்டு படங்கள் தவிர்த்து அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் சியான் 62 படத்திலும் நடித்து வருகிறார் எஸ்.ஜே சூர்யா.
ஃபகத் ஃபாசில் நடித்துள்ள ஆவேஷம்
அதே நேரம் நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள ஆவேஷம் படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரோமான்ச்சம் படத்தை இயக்கி கவனமீர்த்த ஜித்து மாதவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் படிக்க : Indian 2 Release Date: 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் இந்தியன் தாத்தா! கமல்ஹாசனின் இந்தியன் 2 ரிலீஸ் எப்போது?
மேலும் காண