விழுப்புரம்: கடந்த 10 ஆண்டுகால மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர்க்கூட கட்டவில்லை என்றும் ராமருக்கு கோயில் கட்டி கும்பிட்டால் மக்களுக்கு மூன்று வேலையும் சோறு கிடைக்குமா என திண்டிவனத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதிமுகம் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விமர்சனம் செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, சில்வர் பாத்திரங்கள், புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம்:

மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் உள்ள அரசுக்கு தேர்தல் வரும் போது தான் மக்களின் நினைவு வரும். 600 ரூபாய் விற்ற கேஸ் தற்போது 1200 ரூபாயாக உயர்ந்துளளது. தேர்தல் வருகிறது என்றவுடன் 200 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடைகளைப் போல விலை ஏற்றி தற்போது குறைக்கப்படுகிறது. பத்தாண்டு கால மத்திய ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வேலை வாய்ப்பு, புதிய திட்டங்கள் எதுவும் வரவில்லை. மதுரைக்கு வழங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் சுற்றுச்சுவர்க்கூட கட்டவில்லை. இன்றைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செல்கிறார், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை தருவோம் என்று. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையே 12 லட்சம் தான்.

தமிழ்நாட்டில் இரண்டு கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது அப்படியென்றால் அண்ணாமலை செல்வது போல இரண்டு கோடியே 24 லட்சம் பேருக்கு அரசு வேலை தர வேண்டும். வடிவேல் நகைச்சுவை காட்சிகள் வரும், கடலிலேயே இல்லையாம் என்பது போல 2 கோடி பேருக்கு அரசு வேலை எங்குள்ளது என்றும் இது ஒரு பித்தலாட்ட வேலை. கோயில் கட்டி ராமரை கும்பிட்டால் மூன்று வேலை சோறு கிடைத்துவிடுமா என கேள்வி எழுப்பிய சிவி.சண்முகம். இன்றைக்கு பாஜக மத உணர்வுகளை தூண்டி மக்களை பிளவுபடுத்த பார்க்கிறது.

இன்றைக்கு மத்தியில் உள்ள அரசும், மாநில அரசும் மக்களின் உண்மையான பிரச்சனைகளை மறைத்து இன்றைக்கு வாக்குகளை பெறுவதற்கு நாடகமாடிக்கொண்டிருக்கிறது. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த ஐந்து ஆண்டுகளில் புயல், வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளின் போதும் கூட தொகுதி பக்கம் வரவில்லை. கூட்டணியில் இருப்பதால் பட்டியலின மக்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு கூட குரல் கொடுக்க விசிக தயங்குகிறது என சிவி.சண்முகம் விமர்சனம் செய்தார்.

Source link

Latest News

View All

1. Хочешь заказать еду? кейтеринг доставка еды москва фуршеты, банкеты, корпоративы, свадьбы и частные праздники. Меню составляется с учетом количества гостей,…

2. Хочешь заказать еду? кейтеринг в москве цены фуршеты, банкеты, корпоративы, свадьбы и частные праздники. Меню составляется с учетом количества гостей,…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed