சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal)தொடரில் கடந்த வாரத்தில் நாச்சியப்பனின் குடும்பத்தார் பார்வதியை அவர்களின் குலதெய்வ கோயிலுக்கு வந்து தாலியை கழட்டிக் கொடுத்து அந்த குடும்பத்திற்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சத்தியம் செய்யச் சொல்லுமாறு சொல்கிறார்கள். பார்வதியும் ஜனனியுடன் கோயிலுக்கு வந்து தாலியை நாச்சியப்பனிடம் கழட்டிக் கொடுத்துவிட்டு, அவரை நாலு வார்த்தை கேட்டு அசிங்கப்படுத்துகிறார்.
ஜனனி அவர்கள் அனைவரையும் பார்த்து “ஒரு நாள் இந்தப் பொண்ணு எங்களோட சொந்த ரத்தம்னு சொல்லுவீங்க” என சவால் விட, நாச்சியப்பன் குடும்பத்தார் ஜனனியை அசிங்கப்படுத்தி அனுப்பி விடுகிறார்கள். வசுவுடன் வந்த ஜனனியின் தங்கை அவள் ஒருவரை காதலிப்பதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்க, பார்வதி அவளிடம் “இந்தக் காதல் எல்லாம் உனக்கு வேண்டாம். நல்லா படிச்சு வேலைக்கு போ. இந்த காதலால தான் என்னோட வாழ்க்கையே போயிடுச்சு” என சொல்லி வருத்தப்படுகிறார். ஆனால் ஜனனியின் தங்கையோ காதல் மீது உறுதியாக இருக்கிறாள். பார்வதி அனைத்து முடிவையும் ஜனனியிடம் கொடுக்கிறார்.
கரிகாலன் தர்ஷினி ஜூடோ பயிற்சி மேற்கொள்வதைப் பற்றி குணசேகரனிடம் போட்டு கொடுக்க, அவரோ கோச்சுக்கு போன் செய்து அவரை கண்டபடி திட்டி விடுகிறார். இனிமேல் தர்ஷினி ஜூடோ பயிற்சிக்கு வரமாட்டாள் என்பதை சொல்லிவிடுகிறார்.
இதனால் மிகுந்த மனவருத்தத்துடன் பள்ளிக்குச் சென்ற தர்ஷினி, கோச்சிடம் எவ்வளவு கெஞ்சியும் அவர் தர்ஷினிக்கு இனி பயிற்சி கொடுக்க முடியாது என மறுத்துவிடுகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் தர்ஷினி நடந்து வந்து கொண்டு இருக்கும் போது ஏதோ ஒரு கும்பல் வந்து தர்ஷினியை காரில் கடத்தி சென்று விடுகிறது.
ஈஸ்வரி தர்ஷினிக்கு போன் செய்து பார்க்க யாரோ ஒருவர் போனை எடுத்துப் பேச, ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். கீழே கிடந்த போனை எடுத்து அவர் பேசியதாகச் சொல்ல, ஈஸ்வரிக்கு மேலும் அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த இடத்திற்கு ஈஸ்வரி, ஜனனி மற்றும் சக்தி செல்ல, அங்கே தர்ஷினியின் ஸ்கூல் பேக் கிடப்பதைப் பார்த்து கதறி அழுகிறாள் ஈஸ்வரி. அவளை ஜனனியும் சக்தியும் சேர்ந்து சமாதானம் செய்கிறார்கள். தர்ஷினி காணாமல் போன விஷயத்தை ரேணுகா குணசேகரனிடம் சொல்ல, அவரும் அதிர்ச்சி அடைகிறார். பின்னர் ஆளுக்கு ஒரு பக்கம் போய் தர்ஷினியை தேடுகிறார்கள்.
மறுபக்கம் மெய்யப்பன் குடும்பத்தில், ஆத்தா நாலு பேரின் திருமணத்தையும் ஒரே மேடையில் வைத்து செய்து விடுவது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். அந்த நால்வர் யார் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
தர்ஷினியின் கடத்தலுக்கு காரணம் குணசேகரனாக இருக்குமோ அல்லது ஜான்சி ராணி கரிகாலனின் வேலையா என்பது ஒரே சஸ்பென்சாக இருக்கிறது. எனவே இந்த கடத்தல் ட்ராமாவுக்கு பின்னால் யார் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் எதிர்நீச்சல் தீவிர ரசிகர்கள்!

























Готель «ГЕРМЕС» https://hermes.zt.ua у Житомирі запрошує гостей міста на комфортне проживання. Вибирайте відповідний номер, уточнюйте вартість та умови бронювання. Зручний…