இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை அமிதாப் பச்சன். சமூக வலைத்தளங்கள் பிரபலமாவதற்கு முன்பிருந்தே கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடையின்றித் தினமும் நள்ளிரவில் தனது தனிப்பட்ட வலைப்பதிவில் (Blog) வாழ்க்கைத் தருணங்கள், தத்துவங்கள் மற்றும் தொழில் அனுபவங்களை எழுதிவருகிறார்.
அவரைப் பொறுத்தவரை இது அவரது ரசிகர்களுடனான (அவர்களை “Extended Family’ அல்லது ‘EF’ என்று அன்போடு அழைப்பார்) ஒரு நேரடி உரையாடல் பாலம்.

ஆனால், சமீபகாலமாக ஊடகங்கள் இவரது பதிவுகளிலிருந்து சில வரிகளை மட்டும் பிரித்து எடுத்து, அவற்றுக்குத் தவறான சூழலையும் உள்நோக்கங்களையும் கற்பித்துச் செய்திகளாக்குவது வாடிக்கையாகிவிட்டது.
குடும்ப விவகாரங்கள், ஓய்வு அறிவிப்பு அல்லது உடல்நலம் குறித்த உருவக வரிகளை, ஊடகங்கள் நேரடிப் பரபரப்புச் செய்திகளாகத் திரித்துவிடுகின்றன. இதற்குக் கடுமையான எதிர்வினையாக அவர் எழுதிய பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.























