நடிகர் சுஷாந்த் சிங் பெண் மேலாளர் திஷா சாவு: சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கையில் ஆதித்ய தாக்கரே பெயர் | Death of actor Sushant Singh's female manager Disha: Aaditya Thackeray's name appears in the CBI's FIR


அவர் தனது வாக்குமூலத்தில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே மற்றும் பலர் சதி செய்து இக்குற்றத்தை மூடி மறைப்பதில் முக்கியப் பங்காற்றினர் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கொலை, கூட்டு பாலியல் வன்கொடுமை, குற்றச் சதி, சாட்சியங்களை அழித்தல், தவறான தகவல்களை அளித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

முதல் தகவல் அறிக்கையில், ஆதித்ய தாக்கரேயின் தந்தையான உத்தவ் தாக்கரே மற்றும் பலர் சதி செய்து குற்றத்தை மூடிமறைப்பதில் முக்கியப் பங்காற்றினர். சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், வழக்குத் தாள்கள், கோப்புகள் மற்றும் பிற பொதுப் பதிவுகளை அழித்தது, ஆவணங்களை மூடி மறைத்தது, போலி ஆவணங்களைத் தயாரித்தல், குற்றவாளிகளைப் பாதுகாத்தல் போன்ற சம்பவங்கள் நடந்ததாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங்

மேலும் முதல் தகவல் அறிக்கையில், ஆதித்யா தாக்கரே, டினோ மோரியா, சூரஜ் பஞ்சோலி, நடிகை ரியா சக்ரவர்த்தி, தாமதமான பிரேதப் பரிசோதனையில் தொடர்புடைய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் விசாரணை தேவைப்படும் நபர்களின் பட்டியலில் இடம் பெற்று இருப்பதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.

முன்னதாக இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொடுக்கும்படி போலீஸாரிடம் சி.பி.ஐ கேட்டுக்கொண்டது.

பா.ஜ.க நீண்ட நாட்களாக இவ்வழக்கில் ஆதித்ய தாக்கரேயிக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டி வந்தது. தற்போது ஆதித்ய தாக்கரே பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்று இருக்கிறது. இதனால் எந்நேரமும் சி.பி.ஐ விசாரணைக்காக ஆதித்ய தாக்கரேயை அழைக்கலாம் என்றும், அதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Получите [url=https://studencheskie-raboty.online/]помощь студентам онлайн[/url] для успешного выполнения учебных заданий. С ее помощью учащийся может лучше понять материал и исправить недочеты.…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports