'48 லேப்ஸ்; 282.8 கி.மீ கவரேஜ்!' - ரேஸில் அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்? - உண்மை என்ன? |48 Laps; 282.8 Km Covered! – What Was Ajith Kumar’s Actual Position in the Silverstone Race?


Endurance’ ரேஸ் என்பது 24 மணி நேரம் வரைக்கும் தொடர்ந்து கார் ஓட்டும் வகையிலான ரேஸ். அதன் தொடக்கநிலைதான் இந்த Le Mans ரேஸ். இங்கே போட்டி 2 மணி நேரம் மட்டுமே நடக்கும். இரண்டு டிரைவரில் ஒரு டிரைவர் கட்டாயம் 45 நிமிடங்களுக்கு கார் ஓட்டியாக வேண்டும். அந்த வகையில்தான் ரோமனும் அஜித்தும் இணைந்து ரேஸில் கலந்துகொண்டனர். சில்வர் ஸ்டோன் சர்க்யூட்டில் ஒரு லேப்பின் தூரம் 5.8 கி.மீ. ரேஸில் கொடுக்கப்பட்ட 2 மணி நேரத்தில் 51 லேப்ஸ்களை நிறைவு செய்து ANS Motorsport என்கிற டீம் முதலிடம் பிடித்தது. அஜித்தின் Ajith Redant by Virage டீம் 48 லேப்ஸ்களை நிறைவு செய்து 38 வது இடத்தை பிடித்தது. எனில், அஜித்தின் அணி மூன்றாவது இடம் பிடித்தது என்கிற தகவல் எப்படி பரவியது?

இந்த ரேஸில் Team Virage என்கிற அணி மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது. அஜித்தின் அணியிலும் ‘Virage’ என்கிற பெயர் இடம்பெற்றிருப்பதால் அஜித்தின் அணிதான் மூன்றாவது இடம் பிடித்துவிட்டது என குழப்பமடைந்துவிட்டனர். உண்மையில் Virage என்பது ரேஸூக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை செய்து கொடுக்கும் நிறுவனமே. அந்த Virage இன் தொழில்நுட்ப உதவிகளை அஜித்தின் அணியும் பெற்றுவருகிறது. அதனால்தான் அஜித்தின் அணியின் பெயரில் by Virage எனக் கூறப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் Team Virage என்பது அந்த நிறுவனமே நேரடியாக களத்தில் இறக்கிய அணி. அது அஜித்தின் அணி அல்ல.

ஒட்டுமொத்தமாக அஜித்தின் கார் 48 லேப்ஸை நிறைவு செய்து 282.8 கி.மீ ஓடி 38 வது இடத்தை பிடித்திருக்கிறது. அஜித் ஓட்டிய LMP3 Pro/Am வகையில் மட்டும் 11 கார்கள் ரேஸில் ஓடியதல்லவா? இந்த 11 கார்களை மட்டும் எடுத்துக் கொண்டாலும், அஜித்தின் கார் 10 வது இடத்தையே பிடித்திருக்கிறது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed