“உன்னால் முடியாது” என்ற வார்த்தைகள் ஒரு குழந்தையின் கனவை முடக்கிவிடலாம். ஆனால், அந்த வார்த்தைகளையே தாண்டி இன்று உலக டென்னிஸின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் ஜெர்மனி வீரர் Alexander Zverev.
2026 US Open ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் Ben Shelton-ஐ 6-3, 7-6(2), 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் Zverev. இது அவருடைய முதல் US Open பட்டமும், இரண்டாவது Grand Slam பட்டமும் ஆகும்.
4 வயதில் வந்த Type 1 Diabetes!
Zverev-க்கு வெறும் 4 வயதிலேயே Type 1 diabetes இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது அவரது எதிர்காலம், குறிப்பாக விளையாட்டு வாழ்க்கை குறித்து பல சவால்கள் இருந்தன. ஆனால், அவரது தாய் Irina Zverev, முன்னாள் professional tennis வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது , பின்னாளில் தன் மகனின் கனவுகளுக்கு துணையாக நின்றார்.
நோய் தனது மகனின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடாது என்பதில் Irina உறுதியாக இருந்ததாக Zverev தெரிவித்துள்ளார்.
“என் அம்மாதான்….”
US Open வெற்றிக்குப் பிறகு பேசிய Zverev, தனது வெற்றிப் பயணத்தில் அம்மாவின் பங்கு குறித்து உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். அவரைத் தன்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான, வலிமையான மனிதர்களில் ஒருவராகக் குறிப்பிட்டார்.
அம்மாவின் நம்பிக்கையுடன் சேர்ந்து, தந்தை Alexander Zverev Sr மற்றும் சகோதரர் Mischa உள்ளிட்ட தனது அணியினருக்கும் Zverev நன்றி தெரிவித்தார்.























