அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்: தடுக்க முடியாமல் தத்தளிக்கும் அதிமுக பாஜக - Kumudam

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றிய நாள் முதலே அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. வேலுமணி, எடப்பாடி என இரு அணி உருவாகி, இதில் ஒரு அணி தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி இரு அணிகளும் இணைந்தன. ஆனாலும் அதிமுக  சிட்டிங் எம்எல்ஏக்கள் 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் தங்களை இணைத்து கொண்டனர். இதே போன்று தமிழகம் முழுவதும் லோக்கல் நிர்வாகிகள் அதிமுகவிற்கு ஆயிரகணக்கில் தாவிவிட்டனர்.

இந்நிலையில், இன்றைய தினம் அதிமுக மாஜி அமைச்சர்கள் 4 பேர், முன்னாள் எம்எல்ஏக்கள் 9 பேர் உள்பட பல நிர்வாகிகள் தவெகவில் தங்களை இணைத்து கொண்டனர். இன்னும் பல நிர்வாகிகள் தவெக தலைமைக்கு கடிதம் கொடுத்து காத்து கொண்டு இருக்கின்றனர். கிட்டதட்ட அதிமுக கூடாரம் காலியாகும் அளவிற்கு நிர்வாகிகள் அடுத்தடுத்து தவெகவில் சேர்ந்து வருகின்றனர். ஆனால் இதனை தடுக்காமல் எடப்பாடி கும்பகர்ண உறக்கத்தில் இருப்பதாக அதிமுக அடிமட்ட தொண்டர்கள் தங்களது குமுறலை தெரிவித்து வருகின்றனர்.

இதே போன்று பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கத்தை அண்ணாமலை தொடங்கியுள்ளது. இதுவரை 13 லட்சத்திற்கு அதிகமானோர் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி பாஜக மூத்த நிர்வாகிள் கரு.நாகராஜன், ஏஜி சம்பத், சுமதி வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் விலகி ‘வீ தி லீடர்’ இயக்கத்தில் இணைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பாஜக நிர்வாகிகள் பலரையும் அண்ணாமலை இயக்கத்தில் இணைய சொல்லி மூளை சலவை செய்து வருகின்றனர். இதனால் தமிழக பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. 

இந்த நிலையில் பாஜகவில் இருந்து ஒரு சிலர் அண்ணாமலையின் இயக்கத்துக்குச் சென்று இருக்கிறார்கள். அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ அங்கு சென்று இருக்கலாம். அவர்கள் மீண்டும் இந்தக் கட்சியில் இணைய வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். 

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed