News18

Last Updated:

Team India | இந்திய அணி, ஆப்கானிஸ்தானுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளது. முல்லன்பூரில் வரும் 6ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களம் காணவுள்ளது.

News18
News18

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் காணவுள்ள இந்திய அணி வீரர்கள், பஞ்சாப் மாநிலம் மொஹாலியைச் சென்றடைந்தனர்.

ஐபிஎல் போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் வழக்கமான சர்வதேசப் போட்டிகளுக்குத் திரும்பியுள்ள இந்திய அணி, ஆப்கானிஸ்தானுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளது. முல்லன்பூரில் வரும் 6ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களம் காணவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள், மொகாலியில் உள்ள முல்லன்பூர் மைதானத்தைச் சென்றடைந்தனர். நடப்பாண்டில் இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியாக இது அமைந்துள்ள நிலையில் வெற்றிபெறும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இதனிடையே, இந்திய அணிக்கான புதிய சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராக இந்திய அணி முன்னாள் வீரர் சாய்ராஜ் பகுதுலே (Sairaj Bahutule) நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, இந்திய அணியில் பயிற்சி பந்துவீச்சாளராக ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அக்யூப் நபி சேர்க்கப்பட்டுள்ளார். உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அவருக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

இதற்கிடையே, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கும் தொடரில் 5 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இதன்மூலம் 7 ஆண்டுகளுக்குப் பின் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. நவ.4ம் தேதி நியூசிலாந்து மண்ணில் இத்தொடர் நடைபெற உள்ளது. கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது இந்திய அணி. அத்தொடரை 3-2 என கைப்பற்றி இருந்தது ஆஸ்திரேலியா.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed