ஐபிஎல் 50ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை, 9 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீழ்த்தியது.
லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி எக்னா கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் 52ஆவது போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு, பவுளிங்களை தேர்வு செய்து, லக்னோவை பேட்டிங் செய்ய அழைத்தது.
முதல் இன்னிங்கசை தொடங்கிய லக்னோ, நிதானமாக ஆடி ரன்களை குவித்தது. ஓபனர் மிச்செல் மார்ஸ் 56 பந்துகளுக்கு 111 ரன்களை குவித்தார்.
மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 19ஓவரில் முடிக்கப்பட்டது. 19 ஓவர் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை எடுத்தது.
இதனால், டிஎல்எஸ் முறைப்படி 213 ரன்கள் இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சி கொடுத்தது. விராட் கோலி டக் அவுட் ஆன நிலையில், ஜேகப் பெத்தெல் 4 ரன்களுக்கு அவுட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.
இருந்தாலும், பட்டிதரின் அதிரடியான ஆட்டத்தால், ரன்கள் குவிய தொடங்கியது. 61 எடுத்த நிலையில் பட்டிதர் அவுட் ஆன நிலையில் மற்றவர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
19 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், டிஎல்எஸ் டார்கெட்டை எட்ட முடியாததால், 9 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்றது.
லன்னோ அணியில் 111 ரன்கள் குவித்த மிச்செல் மார்ஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.






















