மேற்கு வங்க மாநிலத்தில் 1977க்குப் பிறகு காங்கிரசால் தலைதூக்க முடியாத நிலை இருந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதைத் தொடர்ந்து திரினாமூல் காங்கிரசும் என மேற்குவங்கத்தை தொடர்ந்து ஆட்சி செய்தன.
இதனால், காங்கிரசால் துளிர் கூட விட முடியாத நிலை மேற்கு வங்கத்தில் நிலவியது. அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்கள் அனைத்தையும் திரினாமூல் காங்கிரஸ் கட்சியனர் அபகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
காங்கிரசார் எதுவுமே செய்ய முடியாத நிலையில், திரினாமூல் காங்கிரஸாரால் முடக்கி வைக்கப்பட்டதாக புகார்கள் இருந்தது.
இநநிலையில், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியை அகற்றி, பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
இதனால், அங்கு இருந்த காங்கிரஸ் கட்சியினர், தங்களது பழைய கட்சி அலுவலகத்தை மீட்டு, அதில் எழுதப்பட்டிருந்த திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னங்களை அழித்து மீட்டெடுத்துள்ளதாக வீடியோ வெளியாகியுள்ளது.
Greatest example of BJP restoring democracy in Bengal.
Congress workers in Karim Pur, Nadia have finally reclaimed their party office from years of TMC occupation.
Rahul Gandhi continues to support Mamata TMC, while on the ground, Congress workers were struggling under TMC… pic.twitter.com/EWDeuagWOE
— Lala (@FabulasGuy) May 5, 2026
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே, சுதந்திரமாக காங்கிரஸ் கட்சியினர் செயல்பட முடிவதால், தங்களுக்கு பாஜகவால் சுதந்திரம் கிடைத்தது என்றே கருத்து தெரிவித்து வருகின்றனர்.






















