பெட்ரோல் விலை ஏறப்போகிறது என்பது குறித்து காங்கிரஸ் கட்சி மீம்ஸ் வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

போரை ஆரம்பித்து வைத்த அமெரிக்காவிலும் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்த‍தை, முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதுபோலவே ஆசிய நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் எரிபொருள் பிரச்சினையால் விலை அதிகரித்துள்ளது.

இந்தியாவை சுற்றி உள்ள பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் இதே நிலைதான். ஆனால், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஏறவில்லை. தட்டுப்பாடும் இல்லை.

அதற்கு, 5 மாநில தேர்தல்தான் காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர். தொழிற்சாலைகளுக்கான எரிபொருள் விலை உயர்ந்துள்ளதோடு, தனியார் நிறுவனங்களின் பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்துள்ளது.

ஆனால், பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை பொதுமக்களுக்கான பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தவில்லை.

அதற்கு முக்கியமான காரணம், பொதுத்துறை நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்திக்காமல் இருக்க, மத்திய அரசு கலால் வரியை ரத்து செய்வதாக அறிவித்த‍துதான்.

ஆனால், இதை தேர்தலுக்காக செய்ப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், operation epic fury க்கு இன்னும் 24 மணிநேரம்தான் இருக்கிறது என்று, கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் மீம்ஸ் போடப்பட்டுள்ளது.

 

இதற்கு காரணம், 5 மாநிலங்களில் நடந்து வந்த தேர்தலில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் முழுமையாக தேர்தல் முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் முடிந்து ள்ள நிலையில், இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் 29ஆம் தேதி நடைபெற உள்ளது.

அந்த நாளை குறிப்பிட்டுதான், எரிபொருள் விலையேற்றத்திற்கு வெறும் 24 மணி நேரம் மட்டுமே உள்ளது என்று காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ளது. ஆனால், விலை ஏற்றும் எண்ணம் இல்லை என்று ஏற்கனவே மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

 


Leave a Reply

Latest News

View All

  1. Информация об обращении не передается третьим лицам, а детали лечения обсуждаются только с пациентом. Изучить вопрос подробнее – [url=https://1kapelnica-ot-zapoya-v-moskve77.ru/]kapelnica-ot-alkogolya-posle-zapoya[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed