முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்களை வழங்கி வாழ்த்தியதை, ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்த‍தாக பலரும், கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக அரசு, லேப்டாப் கொடுக்காமல் இருந்துவிட்டு, தற்போது தேர்தல் வருவதால் இலவச லேப்டாப் வழங்குவதாக பல்வேறு கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், விமர்சனங்களை பொருட்படுத்தாத‍ தமிழக அரசு, மாணவர்கள் பயன்பெறுவதற்காக, 10 லட்சம் தரமான லேப்டாப்களை வழங்க ஏற்பாடு செய்த‍து.

திட்டமிட்டபடி, தரமான லேப்டாப்கள் தயாரானதும், மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். அப்போது, மாணவர்களை பார்த்து, உலகம் உங்கள் கையில்னு மாணவர்கள் ஜெயிச்சு வாங்க… சூப்பர் ஸ்டேட் தமிழ்நாடுன்னு அடுத்தக்கட்டத்திற்கு உயர்த்த நாங்களும் ஜெயிச்சு வர‍்றோம், தமிழ்நாடு வெல்லட்டும் என்று கூறியிருந்தார்.

இதையே தனது எக்ஸ், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு கீழ், பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும், கடந்த 4 ஆண்டுகளாக லேப்டாப் தராமல் இருந்துவிட்டு, தற்போது தேர்தல் வருவதும் இலவசமாக லேப்டாப் வழங்குவதா? என பலரும் கேள்வி எழுப்பி கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அதிமுக கொடுத்த திட்டத்தை நிறுத்திவிட்டு ஏதோ புதிதாக கொடுப்பது போல் பீற்றிக் கொள்ளும்
இந்த விளம்பரம் எல்லாம் எதுக்கு? என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆரம்பத்தில் செய்ய வேண்டியதை அடுத்த தேர்தலுக்காக செய்தால் மக்கள் நம்புவதற்கு இது கருணாநிதி காலம் அல்ல என்று மற்றொருவர் விமர்சனம் செய்துள்ளார்.

விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், இப்போதாவது நல்ல திட்டங்களை செய்கிறீர்களே, அப்படியே நல்லத் திட்டங்களா செய்து ஆட்சியை முடியுங்கள் என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

திராவிட மாடல்னு சொல்லிவிட்டு விம்பர மாடல் செய்கிறீர்களே என்று ஒருவர் விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் என்னதான் நல்ல நல்ல திட்டங்களை தேடித்தேடி மக்களுக்கு வழங்கினாலும், தேர்தலுக்கு என்று விமர்சனம் செய்பவர்களுக்கு வேறு வேலையே இல்லை என்று பலரும் பதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

திமுக, ஸ்டாலின், லேப்டாப், மாணவர்கள், அதிமுக, dmk, admk, laptop, students, tamilnadu, election,


Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed