நெதர்லாந்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை மீட்க விமானங்களை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அனுப்பியுள்ளார்.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், கால்பந்து ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதில், இஸ்ரேலிய ரசிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மீட்டு இஸ்ரேலுக்கு கொண்டுவர, அந்நாட்டு பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக, 2 மீட்பு விமானங்களை ஆம்ஸ்டர்டாம் நோக்கி அனுப்பியுள்ளார்.
வன்முறையாளர்கள் மீது டட்சு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நெதன்யாகு, இஸ்ரேலிய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தங்களுடைய நாட்டினர் பாதிக்கப்பட்டனர் என்ற தகவல் அறிந்ததும், அவர்களுக்காக மீட்பு விமானங்களையும் அனுப்பி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளையும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு எடுத்திருப்பது பாராட்டக்கூடியதாக உள்ளது.

























giochi d’azzardo moderni My web site; regola Del blackjack