7 Am Headlines today 2024 22nd February headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு – பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது
பராமரிப்பு பணி காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பகல் நேர ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் 
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து – மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
பிப்ரவரி 23 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் -நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்பமனு விநியோகம் – அதிமுகவில் தொடங்கியது
தன்னைப் பற்றி சர்ச்சையான கருத்துகளை சொன்ன அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ மீது கருணாஸ் போலீசில் புகார்
மகளிர் நலனை மேம்படுத்தும் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024ஐ வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் 
இலங்கைக்கு 2 டன்  பீடி இலைகளை கடத்த முயன்றதாக 5 தமிழக மீனவர்கள் கைது 
போராட்டம் எதிரொலியாக கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்கள் யாரும் பங்கேற்கவில்லை – பங்குத்தந்தை தகவல் 
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை – மார்ச் 6 ஆம் தேதி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை 
திருச்செந்தூர் மாசித் திருவிழா – பச்சை சாத்தி கோலத்தில் அருள்பாலித்த முருகப்பெருமான் 
தென் தமிழகத்தில் இன்று இலேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மக்கள் நீதி மய்யம் 7 ஆம் ஆண்டு விழா – கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என தலைவர் கமல் பேச்சு 
நாடாளுமன்ற தேர்தலில் 5 மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டி – திருமாவளவன் தகவல் 

இந்தியா: 

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் – போலீசாருடன் நடந்த மோதலில் ஒருவர் உயிரிழப்பு
விவசாயி உயிரிழப்பு சம்பவம் இதயத்தை நொறுக்கி விட்டதாக ராகுல்காந்தி வேதனை 
கரும்புக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலை ரூ.340 ஆக உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு 
கர்நாடகாவில் சிகரெட் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து புதிய சட்டம் நிறைவேற்றம் 
நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைக்கும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
மார்ச் 3 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு 
நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்கள் ஒதுக்கீடு – அகிலேஷ் யாதவ் தகவல்
வயது முதிர்வு காரணமாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி பாலி நாரிமன் காலமானார்

உலகம்:

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப்பை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடிவு
எலான் மஸ்கிற்கு நோபல் பரிசு வழங்க நார்வே நாட்டு எம்.பி., கோரிக்கை 
லிபியாவில் இருந்து ஐரோப்பா சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு 

விளையாட்டு: 

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 15வது இடத்துக்கு ஜெய்வால் முன்னேற்றம் 
இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி 
ப்ரோ கபடி லீக் தொடரில் உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அணி வெற்றி 
மகளிர் பிரிமீயர் லீக் தொடர் – தொடக்கவிழாவில் நடிகர் ஷாருக்கான் பங்கேற்பார் என அறிவிப்பு 

Published at : 22 Feb 2024 07:02 AM (IST)

மேலும் காண

Source link