இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற ‘காந்தாரா’ திரைப்படத்தின் முன்பகுதியாக (Prequel) வெளியான ‘காந்தாரா சாப்டர் 1’ (Kantara Chapter 1) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி கரமாக ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு, இப்படத்தின் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“பொறுப்பும் பாக்கியமும் கலந்த பயணம்” – ரிஷப் ஷெட்டி நெகிழ்ச்சி

இப்படத்தின் வெற்றிக் பயணத்தைக் குறித்து ரிஷப் ஷெட்டி பகிர்ந்துள்ளதாவது:
“மக்களின் அளப்பரிய அன்பைப் பெற்ற ஒரு கதையின் முன்பகுதியை மீண்டும் உருவாக்கி, அதன் வேர்களை நோக்கி இன்னும் ஆழமாகச் சென்று, இந்த மண்ணின் ஆன்மாவைத் திரையில் கொண்டு வருவது எனக்கு மிகப்பெரிய பொறுப்பாகவும், அதே நேரத்தில் பெருமையாகவும் இருந்தது. திரையரங்குகளில் ரசிகர்கள் கொடுத்த கைதட்டலும், அமைதியும், அன்பும் என்றென்றும் என் நினைவில் நிலைத்து நிற்கும்.”
மேலும், இந்த பிரம்மாண்டமான படைப்பு உருவாகத் தன் முதுகெலும்பாக நின்று உழைத்த தயாரிப்புக் குழுவினர், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவிற்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வசூலிலும் சாதனை!

மண்ணின் பாரம்பரியம் மற்றும் கதகளி, பூத கோலா போன்ற கலாச்சாரக் கூறுகளை மையமாகக் கொண்டு உருவான ‘காந்தாரா சாப்டர் 1’, பாக்ஸ் ஆபீஸிலும் உலகளவில் ₹850 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது.
“ஐந்து ஆண்டுகள்… இரண்டு கதைகள்… ஒரே கனவு… மறக்க முடியாத பயணம்” என்று குறிப்பிட்டுள்ள ரிஷப் ஷெட்டி, ரசிகர்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்குத் தன் வாழ்நாள் முழுதும் கடமைப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed