Month: February 2024

• Cinema Headlines Today February 1st Tamil Cinema news today Monkey Man Trailer TEST Movie Heart Beat Series
Cinema Headlines Today February 1st Tamil Cinema news today Monkey Man Trailer TEST Movie Heart Beat Series

Monkey Man Trailer: ஹாலிவுட் பக்கம் திரும்பிய பொன்னியின் செல்வன் நடிகை: கலக்கும் மங்கி மேன் ட்ரெய்லர்!
“பொன்னியின் செல்வன்” படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷோபிதா துலிபாலா. கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ராமன் ராகவ் 2.0 என்ற படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான இவர், அடுத்தடுத்து இந்தியில் சில படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயரத் தொடங்கினார். தமிழில் முதல் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த ஷோபிதா, பிரபலமாகத் தொடங்கினார். இந்தி, தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கில் ஒரு படத்திலும், மூதோன் என்ற மலையாள படத்திலும் நடித்து தென்னிந்திய திரைத்துறைகளிலும் நடிக்க தொடங்கினார். மேலும் படிக்க

Pa Ranjith: “நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் படம் என்றாலே சென்சார் போர்டு நெருக்கடி தருகிறார்கள்” – பா.ரஞ்சித் ஆதங்கம்!
ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடித்த ப்ளூ ஸ்டார் படம் கடந்த 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த நிலையில் படத்தின் வெற்றி விழாவை படக்குழு கொண்டாடியது. அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற படத்தின் தயாரிப்பாளரான பா. ரஞ்சித் சென்சார் போர்டு குறித்து பேசியுள்ளார். மேலும் படிக்க
TEST Movie: ஷூட்டிங்கை முடித்த நயன், மாதவன், சித்தார்த்: சம்மருக்கு வெளிவரும் டெஸ்ட் திரைப்படம்!
தமிழ் சினிமாவில் மிகவும் குறைவான திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் ஹிட் கொடுத்த கதைக்களம் என்றால் அது கிரிக்கெட். கிரிக்கெட்டை மையக்கதையாக வைத்து வெளியான படங்கள் அனைத்தும் இங்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று அசத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் ஒரு அரசியல் கருத்தினை பேசும் படமாக இருந்தாலும், படத்தின் முக்கிய அங்கமாக இருப்பது கிரிக்கெட். இப்படியான நிலையில் கிரிக்கெட்டினை மையமாகக் கொண்ட அடுத்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
Heart Beat Series: இது ஹார்ட் பீட் பாட்டு! டாக்டர்களைப் பற்றிய “ஹார்ட் பீட்” சீரிஸின் பாடல் வெளியீடு!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது. சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், ‘ஹார்ட் பீட்’ சீரிஸின் சாரத்தையும், அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும் படிக்க
Music Composer Bharani: இப்படி காப்பி அடிக்கிறாங்க: அனிருத்துக்கு டஃப் கொடுக்க முடியும்: இசையமைப்பாளர் பரணி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு  இரண்டாவதாக கூட்டணி சேர்ந்து நடித்த திரைப்படம் ‘லியோ’. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமானோர் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பகுதி குறித்து சமீபத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பேசுபொருளாக மாறி இணையத்தில் வைரலானது. படத்தின் இரண்டாம் பாகம் மட்டும் சர்ச்சையை ஏற்படுத்தவில்லை, படத்தின் பாடல்கள் கூட திருடப்பட்டது தான் என பரபரப்புக் குற்றச்சாட்டை இசையமைப்பாளர் பரணி முன்வைத்துள்ளது பெரிய அளவில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

மேலும் காண

Source link

• பிப்ரவரி 19-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்!
பிப்ரவரி 19-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்!

பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. வரும் 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

மேலும் காண

Source link

• ICC Test Rankings: டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள்.. இந்திய வீரர்களுக்கு இடமில்லை! ரசிகர்கள் அதிர்ச்சி!
ICC Test Rankings:  டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள்.. இந்திய வீரர்களுக்கு இடமில்லை! ரசிகர்கள் அதிர்ச்சி!

டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள்:

ஐசிசி வெளியிட்ட டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி, 5- டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி முடிந்துள்ளது. அதில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல், ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட இடம்பெற வில்லை:

இந்நிலையில் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐசிசி வெளியிட்டுள்ள பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட இடம்பெற வில்லை. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதன்படி, டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் 864 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். அதேபோல், இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் 832 புள்ளிகள் மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மீத் 818 புள்ளிகளுடன் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை தக்கவைத்துள்ளனர். கடந்த முறை 5 வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தைப் பெற்றுள்ளார்.

அவர் எடுத்திருக்கும் புள்ளி 786 ஆகும். இதில் முக்கியமாக கடந்த முறை 10-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அசாம் 5 இடங்கள் முன்னேறி 768 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் டாப்- 5 வீரர்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.  அதேநேரம், இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான விராட் கோலி 7-வது இடத்தில் இருந்து 767 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் ரோகித் சர்மா 11 வது இடத்தில் இருந்து 12 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மற்றொரு இந்திய அணி வீரரான ரிஷப் பண்ட் 13 வது இடத்தில் இருக்கிறார்.

மேலும் படிக்க: Tamil Thalaivas vs Jaipur Pink Panthers: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்! முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தேர்வு!

மேலும் படிக்க: Praggnanandhaa: பட்ஜெட் உரையில் பிரக்ஞானந்தாவை புகழ்ந்த நிர்மலா சீதாராமன்!

Source link

• சாதி மதமற்றவர் சான்றிதழ்.. இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு? உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது இதுதான்!
சாதி மதமற்றவர் சான்றிதழ்.. இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு? உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது இதுதான்!

சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது என்றும் அவர்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சாதி மத மற்றவர் என்ற சான்றிதழ் வழங்க கோரி திருப்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்ததாகவும்,அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், எனவே சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் , சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க மாவட்ட தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், பட்டியலில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வழங்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளதாக  தெரிவிக்கப்பட்டது.

வழக்கை  விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் சாதி மத மற்றவர் என்று சான்றிதழ் கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் பாராட்டக்குரியது என தெரிவித்தார். அதேவேளையில் இதுபோல் வழங்கினால் சில பிரச்சினைகள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய சான்றிதழை வழங்குவது, சொத்து வாரிசுரிமை மற்றும் கல்வி,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான தனிப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்துவதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அவர்களுக்கு உத்தரவிட முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க

Defence Budget 2024: பாதுகாப்பு துறையை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல புதிய திட்டம்.. மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!

Budget 2024: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டிற்கு இந்திய தொழில் கூட்டமைப்பினர் வரவேற்பு

Budget 2024: அப்படி போடு! அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் ஜாக்பாட்! – அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!

Source link

• விழுப்புரம் நீதிமன்றத்தில் 1 மணி நேரமாக நீதிபதியிடம் தன் தரப்பு வாதங்களை முன் வைத்த ராஜேஷ்தாஸ்
விழுப்புரம் நீதிமன்றத்தில் 1 மணி நேரமாக நீதிபதியிடம் தன் தரப்பு வாதங்களை முன் வைத்த ராஜேஷ்தாஸ்

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிராஜேஷ் தாஸ் 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்த விசாரணையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை ஒரு மணி நேரம் அவரே முன்வைத்து வாதாடினார்.

முன்னாள் டி.ஜி.பி.

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது  பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது பெண் எஸ்பியிடம் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.

பாலியல் வழக்கு:

இந்த புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.

இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்ததால் இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியது. அதுபோல் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசு தரப்பின் வாதம் கடந்த வாரம் முடிவடைந்தது.

கடந்து வந்த பாதை:

அதுபோல் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ் பி  தரப்பு வழக்கறிஞர்கள்  வாதங்கள் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வழக்கறிஞர்களும் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பு வழகறிஞர் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்கள் கொண்ட வாதுரையாக நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக கடந்த 12 ஆம் தேதி தாக்கல் செய்தனர். அதன் பிறகு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் வழக்கறிஞர் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி தரப்பில் வழக்கறிஞர் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடமாக மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து வந்த இவ்வழக்கில் தீர்ப்பு வெளியானது.

வழக்கின் தீர்ப்பு விவரம் :

இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்தது. இவ்வழக்கில் 61 பக்கங்கள் வாதுரையை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பினை நீதிபதி புஷ்பராணி இன்று வழங்கினார். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு (354 A, 341 506 4(F) women harassment ) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டதால்  3 ஆண்டுகள் சிறை ஆண்டு சிறை  தண்டனையும் 20 ஆயிரத்து 500 ருபாய் அபராதம் பெண் எஸ்பியை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு முன்னாள் எஸ் பி கண்னனுக்கு 500 ரூபாய் அபராதம் மட்டும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேல்முறையிடு வழக்கு

சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசும், அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் எஸ்பி கண்ணனும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். மேல்முறையீட்டு வழக்கில் வாதாட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வந்த நிலையில் பலமுறை வாதாட கால அவகாசம் அளித்தும் தொடர்ந்து வாதாட மறுத்து வந்ததால் இன்றே கடைசி வாய்ப்பு என கூறி நீதிபதி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று ராஜேஷ் தாஸ் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  ஆஜராகினார். அப்போது
பலமுறை கால அவகாசம் அளித்தும் தொடர்ந்து வாதாட மறுத்து உங்களின் வழக்கறிஞர்கள் ஏன் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிடம் நீதிபதி பூர்ணிமா கேள்வி எழுப்பினார்.

நானே வாதாடுகிறேன்

இதனை தொடர்ந்து என் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் நானே வாதாடுகிறேன் என முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிபதி ராஜேஷ் தாசை வாதாட அனுமதித்தார். அதனை தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஒரு மணி தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். அப்போது ராஜேஷ் தாஸ் தான் ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் தன் மீது வேண்டுமென்றே இவ்வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும் இவ்வழக்கில் 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளதே உண்மைக்கு புரம்பானது என்றும்

இவ்வழக்கிற்கு முக்கியமானது பரனூர் சுங்கச்சாவடி சிசிடிவி காட்சிகள் இதில் இல்லை என்றும்  30 வருடங்களுக்கு மேலாக காவல் துறையில் எந்த புகார்களுக்கும் ஆளாக பணியாற்றிய நிலையில்  வேண்டுமென்றே பொய் புகார் அளிக்கபட்டுள்ளதாக அடுகடுக்கான வாதங்களை ராஹேஷ் தாஸ் நீதிபதி முன்னிலையில் முன் வைத்தார். அவரது வாதங்களை கேட்ட நீதிபதி இவ்வழக்கில் நாளை முதல் 7  நாட்களுக்கு ராஜேஷ் தாசே உடல் நலனை கருத்தில் கொண்டு நண்பகல் வேலையில் அவரே வாதாட நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

Source link

• Minister Gingee Masthan says I appreciate AIADMK Edappadi Palaniswami opposition to CAA – TNN | எடப்பாடி பழனிசாமி சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தற்கு நான் பாராட்டுகிறேன்
Minister Gingee Masthan says I appreciate AIADMK Edappadi Palaniswami opposition to CAA – TNN | எடப்பாடி பழனிசாமி சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தற்கு நான் பாராட்டுகிறேன்

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் முன்னாள் தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு அமைச்சர் மஸ்தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு சார்பில், இன்று காலை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், கூடுதல் ஆட்சியர் சுருதன் ஜெய் நாராயணன், சார் ஆட்சியர் தில்யான் ஷி நிகம், திமுக மாவட்ட அவைத் தலைவர் சேகர், மாவட்ட பொருளாளர் ரமணன், மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தயாளன், துணைத் தலைவர் பழனி மற்றும் ரெட்டி நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமைச்சர்  செஞ்சி மஸ்தான் தெரிவிக்கையில்,
விழுப்புரம் மாவட்டத்தில், சென்னை மாகாணம் முன்னாள் முதலமைச்சர் திரு.ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் அவர்களின் 130-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திண்டிவனம் வட்டம், ஓமந்தூர் கிராமத்தில் 1895ஆம் ஆண்டு பிறந்த திரு.ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் அவர்கள் சட்டம் பயின்று இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக 1947 முதல் 1949 வரை பதவி வகித்தார்.
விவசாயிகள் மற்றும் ஏழை, எளியோர் முன்னேற்றத்திற்காக சிந்தித்து உழைப்பு, நேர்மை, கண்டிப்பு கட்டுப்பாடு, விவசாயத்தில் ஆர்வம், சிக்கனம், சன்மார்க்கம், நீதி தவறாமை ஆகிய குறிக்கோளுடன் ஆட்சி நடத்தியவர் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என கருதியவர். எதையும் வெளிப்படையாகப் பேசும் துணிச்சல் மிக்கவர், சிறந்த எழுத்தாளர், சமூக சேவகர், நேர்மையும் துணிச்சலும் மிக்க கறைபடாத அரசியல்வாதியாகப் போற்றப்படும் இவர் 1970-ம் ஆண்டில் தனது 75-வது வயதில் காலமானார். தமிழக அரசு இவரது நினைவாக சொந்த ஊரான ஓமந்தூரில் மணிமண்டபம் அமைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு அன்னாரது நினைவாக தபால் தலையும் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம், ஓமந்தூரில் சென்னை மாகாணம் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் அவர்களின் 130-வது பிறந்தநாளையொட்டி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார். தொடந்து பேசிய அவர், “அதிமுக எடப்பாடி பழனிசாமி சிஏஏ சட்டத்திற்கு அன்றைக்கு ஆதரவு அளித்தார், தற்போதாவது மக்களின் நலனை கருத்தில் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தற்கு நான் பாராட்டுகிறேன்” என கூறினார்.

மேலும் காண

Source link

• Defence Budget 2024 Highlights Key Announcements Nirmala Sitharaman says new scheme will be launched to strengthen deep tech
Defence Budget 2024 Highlights Key Announcements Nirmala Sitharaman says new scheme will be launched to strengthen deep tech

நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாக தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது பிரதமர் மோடி தலைமையிலான அரசு. தேர்தல் ஆண்டு என்பதால் முழு பட்ஜெட்டுக்கு பதில் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல புதிய திட்டம்:
எதிர்பார்த்தபடியே, பெரிய அறிவிப்புகளும் புதிய திட்டங்கள் எதுவும் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ஆனால், பாதுகாப்புத் துறையை பொறுத்தவரையில், புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன்படி, பாதுகாப்பு துறைக்கு உயர் தொழில்நுட்பத்தை வலுப்படுத்த புதிய திட்டம் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் இதுகுறித்து அவர் பேசுகையில், “2024-25 நிதியாண்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.5.94 லட்சம் கோடியிலிருந்து ரூ.6.21 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.5 சதவீதம் அதிகமாகும்.
உள்கட்டமை வசதிகளை மேம்படுத்தும் விதமாக பாதுகாப்புப் படைகளின் நவீனமயமாக்கலுக்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு ரூ.1.62 லட்சம் கோடியாக இருந்த ஒதுக்கீடு, 2024-25ஆம் ஆண்டில் ரூ.1.72 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 1,000 புதிய விமானங்களை வாங்க இந்திய விமான நிறுவனங்கள் ஆர்டர் செய்துள்ளன” என்றார்.
பாதுகாப்பு துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
புவிசார் அரசியல் காரணமாக உலகளவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், பட்ஜெட்டில் மற்ற துறைகளை காட்டிலும் பாதுகாப்புத்துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வியூக ரீதியான தொழில்நுட்பத்தில் தற்சார்புடன் இயங்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டான 2023-24இல் பாதுகாப்புத் துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.5.25 லட்சம் கோடியிலிருந்து 13 சதவீதம் அதிகமாகும். கடந்த 2022-23 நிதியாண்டில் ஆயுதங்களை நவீனமயமாக்கவும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும் 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் 6 சதவிகிதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டது. அதாவது, 1.62 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2020 நிதியாண்டை ஒப்பிடுகையில் 57 சதவிகிதம் அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இது ஒரு ஊக்கமளிக்கும் பட்ஜெட். 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை எட்டுவோம் என்பதில் நாங்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்.
இதையும் படிக்க: Budget 2024 LIVE: மாநிலங்களுக்கு ரூ.1.3 லட்சம் கோடி வட்டியில்லா கடன் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை

மேலும் காண

Source link

• எதிர்நீச்சல் முதல் கயல் வரை: ஜனவரி மாதத்தில் தலைகீழாக மாறிப்போன சன் டிவி சீரியல் கேரக்டர்கள்!
எதிர்நீச்சல் முதல் கயல் வரை: ஜனவரி மாதத்தில் தலைகீழாக மாறிப்போன சன் டிவி சீரியல் கேரக்டர்கள்!

அன்று முதல் இன்று வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதுடன் டி.ஆர்.பி ரேட்டிங் ரீதியிலும் முன்னணி இடத்தையே தக்க வைத்து வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் மிகவும் பிரபலமான சில தொடர்களில் அதிரடியாக பல ட்விஸ்ட்கள் கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்துள்ளது. மிகவும் கலகலகலப்பாக இருந்த இந்தக் கதாபாத்திரங்களின் நிலை தலைகீழாக மாறி ஒரு விதமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் எந்தெந்த சன் டிவி தொடரில் எந்தெந்த கதாபாத்திரங்களின் நிலை மிக மோசமாக சேஞ் ஓவர் ஆகியுள்ளது என்பதன் சிறு தொகுப்பு :

எதிர்நீச்சல்  - சக்தி :

எதிர்நீச்சல் தொடரில் அதிக அளவிலான வசனங்கள் எதுவும் இல்லாமல் மிகவும் அமைதியான ஒரு கேரக்டரான ஜனனியின் கணவன் சக்தி சமீபத்தில் தான் வாய் திறந்து பேச ஆரம்பித்தது போல கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது. அண்ணன்களை துணிச்சலாக எதிர்ப்பது, நியாயத்திற்காக பேசுவது, பல முயற்சிகளை செய்வது என சமீபத்தில் இருந்து தான் அந்த கேரக்டருக்கு வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டது. அதற்குள் காணாமல் போன தர்ஷினியை தேடும் வேலையில்  ஈடுபட்ட போது விபத்து ஏற்பட்டு இப்போது மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

எதிர்நீச்சல் – தர்ஷினி :

ஜூடோ பயிற்சியில் டாப் பிளேயராக கலக்கிய தர்ஷினி, குணசேகரன் எடுத்த அதிரடியான முடிவால் மனதளவில் பாதிக்கப்பட்டாள். பயிற்சியாளரே இனி உனக்கு பயிற்சி கொடுக்க முடியாது என சொல்லிவிட மனம் நொந்துபோய் திரும்பிய தர்ஷினியை மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்றுவிட்டனர். அவளை யார் கடத்தி இருப்பார்கள் என்பது தெரியாமல் அவளை தேடி அவளின் அம்மாவும் உறவினர்களும் சுற்றி திரிகிறார்கள். துணிச்சலாக இருந்த பெண் இப்போது கடத்தல்காரர்களின் பிடியில் தவிக்கிறாள். அவளின் தற்காப்பு பயிற்சியை கூட அவளால் பயன்படுத்த முடியாத அவல நிலையில் இருக்கிறாள் தர்ஷினி.

கயல் – கயல் :

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமான தொடரான கயல் சீரியலில் ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு விதமான ட்விஸ்ட்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. மிகவும் துணிச்சலான பெண்ணாக கயல் இருக்க விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறாள். அவளை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என சில சதி வேலைகள் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.

ஆனந்த ராகம் – ஈஸ்வரி :

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியலில் கதையின் நாயகி ஈஸ்வரி மீது வீண் பழி ஒன்று விழுந்துள்ளது. புல்லட் குமாரை, ஈஸ்வரி தான் கொலை செய்ததாக சொல்லி போலீஸ் அவளை கைது செய்துள்ளது. இந்த சதி வேலையில் சிக்கிக்கொண்டு இருந்தாலும் மிகவும் தைரியமாகவே இருக்கிறாள் ஈஸ்வரி. மிகவும் பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி  வருகிறது ஆனந்த ராகம் சீரியல்.

அருவி – அருவி :

சன் டிவியில் ஒளிபரப்பாகும் அருவி சீரியலில், அருவியை கடத்தி வைத்து ஒருவன் மிரட்டுகிறான். அருவியை காப்பாற்ற புகழ் தன்னால் முடிந்த  முயற்சிகளை செய்து கொண்டு வருகிறான். 20 லட்சம் பணத்தை கொடுத்தால் அருவியை உயிருடன் விட்டுவிடுகிறோம் என கடத்தல்காரர்கள் மிரட்டுகிறார்கள். ஆனால் பணத்தை கொடுத்தாலும் அருவியை உயிருடன் விடுவார்களா என்பது சந்தேகம் தான். அருவியை நினைத்து சிவசங்கரி மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறாள்.

ஜனவரி மாதத்திலேயே இத்தனை சீரியல்களில் இத்தனை மாற்றங்களா? இது என்ன புது ட்ரெண்டா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Source link

• மரக்காணத்தில் பதற்றம்…குடிபோதையில் பாமக பிரமுகரின் கார் மோதியதில் 4 பேர் படுகாயம்
மரக்காணத்தில் பதற்றம்…குடிபோதையில் பாமக பிரமுகரின் கார் மோதியதில் 4 பேர் படுகாயம்

விழுப்புரம்: மரக்காணம் அருகே குடிபோதையில் பாமக பிரமுகரின் கார் மோதியதில் விசிக நிர்வாகிகள் 2 பேர் மற்றும் 2 கல்லூரி மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மரக்காணத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர்கள் அருண் வயது (27) கீர்த்தி வயது (27). இவர்கள் விசிக நிர்வாகிகள். மேலும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் கோகுல் வயது (20) அனீஸ் வயது (18) இந்த இரண்டு பேரும் கல்லூரி மாணவர்கள் ஆவர். இந்நிலையில் இந்த நான்கு பேரும் மாலை நடுக்குப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாமக பிரமுகர்களான மாரிமுத்து வயது (43) மற்றும் அவரது நண்பர்களான ஐயப்பன் வயது (44) சுகுமார் வயது (40) ஆகியோர் குடிபோதையில் ஒரு காரில் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற காரை ஐயப்பன் ஓட்டி சென்றுள்ளார். குடிபோதையில் சென்ற இவர்கள் நடந்து சென்ற நான்கு பேர் மீது கார் மோதி உள்ளது.

இதில் அந்த நான்கு பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் அருணின் கால்கள் முறிந்து உள்ளது. இச்சம்பவத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள்  படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். விபத்து ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் நிற்காமல் வேகமாக சென்று உள்ளது. இந்த காரை போலீசார் வழியில் மரித்து நிறுத்தி உள்ளனர். அப்போது காரில் இருந்து மாரிமுத்து சுகுமார் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். ஆனால் காரை ஓட்டிச் சென்ற ஐயப்பனை போலீசார் மடக்கிப் பிடித்து விட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் காரை ஓட்டிச் சென்ற ஐயப்பனை மரக்காண காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விசிக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மரக்காணம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தப்பி ஓடிய பாமக நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இச்சம்பவத்தால் மரக்காணம் நடு குப்பம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

Source link

• நிம்மதி.. 6 மாதங்களில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம்; தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உறுதி
நிம்மதி.. 6 மாதங்களில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம்; தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உறுதி

சென்னை புறநகரில் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்னும் 6 மாதங்களில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். மேலும் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டால், பேருந்து நிலையத்தை மக்கள் பயன்படுத்துவது எளிதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link

• Pakistan: நெருங்கும் பொது தேர்தல்.. பாகிஸ்தான் சுயேட்சை வேட்பாளர் சுட்டுக்கொலை..
Pakistan: நெருங்கும் பொது தேர்தல்.. பாகிஸ்தான் சுயேட்சை வேட்பாளர் சுட்டுக்கொலை..

பாகிஸ்தானில் இன்னும் ஒரு வார காலத்தில் அதாவது பிப்ரவரி 8 ஆம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜூர் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளரான ரெஹான் ஜெப் கான் என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சூட்டத்தில் உயிரிழந்தார்.

பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு ஆதரவளிப்பதாகக் கூறிய சுயேட்சை வேட்பாளர் ரெஹான் ஜெப் கான் மற்றும் நான்கு உதவியாளர்கள் பஜூர் மாவட்டத்தில் மர்ம நபர்களால் சுடப்பட்டனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுயேட்சை வேட்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உதவியாளர்கள் 4 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். ஆனால், அவரால் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியவில்லை. விலைவாசி உயர்வு,  கடும்  பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சந்தித்தது பாகிஸ்தான். நாடே நெருக்கடியான நிலையில் இருந்தபோது, இம்ரான் கான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்ப பெற்றன. இதனால், 2022 ஏப்ரலில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நில மோசடி, தோக்ஷகானா எனும் கருவூல ஊழல், அரசு ரகசியங்களை கசியவிட்டது, அரசு சொத்துகளை தவறாக பயன்படுத்தியது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் தோஷ்கானா வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டுகள் பொது பதவியில் இருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இம்ரான் கான் கட்சியை சேர்ந்தவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக தேர்தலில் களம் இறங்கியுள்ளனர். இருப்பினும் பலரும் இம்ரான் கான் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இம்ரான் கட்சி தலைவர் அதிஃப் கான் கூறுகையில், ரெஹான் ஜெப் கான் கட்சி உறுப்பினராக இருந்தாலும், அவர் கட்சி சார்பில் போட்டியிடவில்லை என தெரிவித்தார்.

நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் முக்கிய உதவியாளர்களின் கைது நடவடிக்கை உட்பட, இராணுவ ஆதரவு அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி சார்பில் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் அரசியலில் பல ஆண்டுகளாக அதிகாரத்தை வைத்திருந்த இராணுவம், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது.  பொது தேர்தல் நெருங்கும் நிலையில் வேட்பாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எல்லை பகுதியின் இருபுறத்திலும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் உள்ளனர். எனினும், தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை.

Source link

• Chief Minister Stalin has condemned the arrest of Hemant Soran also mentioned that it was a revenge move by the BJP government | TN CM MK Stalin: ’ஹேமந்த் சோரன் கைது.. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’
Chief Minister Stalin has condemned the arrest of Hemant Soran also mentioned that it was a revenge move by the BJP government | TN CM MK Stalin: ’ஹேமந்த் சோரன் கைது.. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’

ஹேமந்த சோரன் கைது நடவடிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Outrageous and shameful! The arrest of Hon’ble Jharkhand Chief Minister Thiru @HemantSorenJMM is a blatant display of political vendetta by Union BJP Govt. Using investigative agencies to harass a tribal leader is a new low. This act reeks of desperation and abuse of power.… pic.twitter.com/X6Mvk0WSXX
— M.K.Stalin (@mkstalin) February 1, 2024

இது தொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், ” ஹேமந்த் சோரன் கைது நடவடிக்கை மூலம் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பழங்குடியின தலைவரை விசாரணை அமைப்பு மூலம் துன்புறுத்துவது தரம்  தாழ்ந்த நட்வடிக்கையாகும். விரக்தியின் வெளிப்பாடாக அதிகார அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதை ஹேமந்த் சோரன் கைது நடவடிக்கை வெளிக்கட்டுகிறது. பாஜகவின் அநாகரிகமான யுக்திகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முடியாது. பாஜகவின் அரசியல் யுக்திகளுக்கு பணிந்து போகாமல் ஹேமந்த் சோரன் வலுவுடன் எதிர்த்து நிற்கிறார். அடக்குமுறை தாண்டி பாஜகவுக்கு எதிரான போரில் உறுதி காட்டும் சோரனின் நிலைப்பாடு பிறருக்கு ஊக்கம் தரக்கூடியது” என குறிப்பிட்டுள்ளார்.
ஹேமந்த் சோரன் கைது:
பண மோசடி வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 7 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு, கடந்த 20ஆம் தேதி ஹேமந்த் சோரனின் வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், ஹேமந்த் சோரனிடம் பல்வேறும் கேள்விகள் எழுப்பபப்ட்டன.
தொடர்ந்து, ஜனவரி 30ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்பட்டது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்-க்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனையை தொடர்ந்தனர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை நெருக்கடியை தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அமலாக்கத்துறை அவரை தனது காவலில் எடுத்தது. இதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ள சம்பாய் சோரன், முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். முன்னதாக நடைபெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் காண

Source link

• Chennai Metro Rail: ஜெட் வேகத்தில் உயரும் மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை! ஜனவரி மாதத்தில் இத்தனை பேர் பயணமா?
Chennai Metro Rail: ஜெட் வேகத்தில் உயரும் மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை! ஜனவரி மாதத்தில் இத்தனை பேர் பயணமா?

சென்னை மெட்ரோ ரயில்:

சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது.  அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது.

இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.  மேலும், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் பேர் பயணம்:

இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து  மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 5 லட்சத்து 28 ஆயிரத்து 914 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, "01.01.2024 முதல் 31.01.2024 வரை 84,63,384  பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.  அதிகபட்சமாக 12.01.2024 அன்று 3,64,521 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2024, ஜனவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 37,43,885 (Online QR 2,21,716; Static QR 2,09,136; Paytm 3,75,357; Whatsapp 3,04,232; PhonePe 97,266), பயண அட்டையை பயன்படுத்தி (Travel Card Ticketing System) 37,92,912, டோக்கன்களை பயன்படுத்தி 15,456 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 8,792 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 9,02,036 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ் அப் டிக்கெட், பேடிஎம் ஆப்,  போன்பே ஆப் போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்களுக்கும் 20% கட்டணத் தள்ளபடி வழங்குகிறது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

• Shruthi Hassan: பான் இந்தியா வார்த்தையை அப்போதே பயன்படுத்தியிருக்கேன்: ஸ்ருதி ஹாசன் பளிச்!
Shruthi Hassan: பான் இந்தியா வார்த்தையை அப்போதே பயன்படுத்தியிருக்கேன்: ஸ்ருதி ஹாசன் பளிச்!

சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களின் வருகைக்கு முன்பே தான் பான் இந்திய ஸ்டார் என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

ஸ்ருதி ஹாசன்

உலக நாயகனின் கமல்ஹாசன் மற்றும் சாரிகா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இந்தி மற்றும் தமிழ் என இருமொழிகளில் கமல் இயக்கிய ‘ஹே ராம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நடிப்பது மட்டுமில்லாமல் குழந்தையாக படங்களில் பாடியும் இருக்கிறார். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 7ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன், தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

சமீபத்தில் பிரபாஸ் நடித்து வெளியான சலார் படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். நடிப்பு ஒரு பக்கம், சொந்தமாக ஆல்பம் வெளியிடுவது, காதல் வாழ்க்கை என பிஸியாக இருந்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். கடந்த ஜவவரி 28ஆம் தேதி தனது 38ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார் ஸ்ருதி ஹாசன்.

பான் இந்தியா

சமீப காலங்களில் திரைப்படத் துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை பான் இந்தியா. ஒரு படம் அல்லது ஒரு நடிகர் மொழிகளைக் கடந்து இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெறுவதை பான் இந்தியா என்று குறிப்பிடுகிறார்கள். பாகுபலி படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் பான் இந்தியா ஸ்டாராக மாறினார். கே.ஜி.எஃப் படத்தின் மூலம் நடிகர் யாஷ், தற்போது நடிகர் விஜய் சேதுபதி பான் இந்தியா ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இனிவரும் காலங்களில் எல்லா படங்களும் பான் இந்தியப் படங்களாக அடையாளப் படுத்தப்படும்  எண்ணத்தில் தான் எடுக்கப்படும் என்கிற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஒரு பக்கம் நடிகர்களுக்கு இப்படியான அடையாளம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், சில நடிகர்கள் பான் இந்தியா என்கிற அடையாளத்தை மறுத்தும் வருகிறார்கள். ஒரு  நடிகர் அல்லது ஒரு சினிமா என்றாலே அது மொழிகளைக் கடந்து மக்களை சென்று சேரக் கூடியது தான். அப்படி இருக்கும் போது பான் இந்தியா என்று நடிகர்களையும் படங்களையும் தனியாக அடையாளப்படுத்துவது நடிகர்களின் எல்லைகளை சுருக்கவதே என்பது இவர்களின் வாதமாக இருக்கிறது. சமீப காலங்களில் நடிகர் விஜய் சேதுபதி தன்னை ஒரு பான் இந்திய நடிகர் என்று அடையாளப்படுத்துவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தொடர்ச்சியாக பேசி வருகிறார்.

அப்போவே இதை சொல்லியிருக்கேன்

இந்நிலையில், இது தொடர்பாக பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ருதி ஹாசனிடம் கேள்வி எழுப்பியபோது அவரது பதில் இதுவாக இருந்தது. “மற்ற நடிகர்களுடன் என்னை ஒப்பிடுவது எனக்குப் பிடிக்காது. நான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான போதே அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து தென் இந்திய மொழிகளில் நடித்து விட்டேன். மேலும் இந்தி படங்களிலும் நடித்துவிட்டேன். சமூக வலைதங்கள், ஓடிடி தளங்களின் வருகைக்கு முன்பே நான் எல்லா மொழிகளிலும் நடித்துவிட்டேன். என்னுடைய பழைய நேர்காணல்களை எடுத்து பார்த்தால் நான் அப்போது பான் இந்தியா என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருப்பதைப் பார்க்கலாம்.” என்று அவர் ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்

Source link

• Kanchipuram Kachabeswarar Temple Maha Kumbabhishekam more than 50000 devotees – TNN
Kanchipuram Kachabeswarar Temple Maha Kumbabhishekam more than 50000 devotees – TNN

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான, திருமால் ஆமை வடிவில் வந்து ஈஸ்வரனை வணங்கி பேறு பெற்ற, திருத்தலமான காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 2005 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று இன்று காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்கு உள்ளாக மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

சிறப்பு யாகங்கள்
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு 33 யாகம் சாலை அமைக்கப்பட்டு, 163 சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளம் முழங்க பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊர்வலமாக ராஜகோபுரம் மற்றும் சன்னதி கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

முக்கிய பிரமுகர்கள்
கும்பாபிஷேக விழாவில் சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன், ஆந்திர மாநில அமைச்சர்  நடிகை ரோஜா, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி  மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத கோபுர கலசங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து சுவாமியை வணங்கி வழிபட்டு சென்றனர். சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க முன்னுருக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்  ( kanchipuram kachabeswarar temple )
காஞ்சிபுரம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்  விளங்கி வருகிறது. இந்தக் கோயில் ” கச்சபேசம் ” எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலைப்பற்றி காஞ்சிபுரம் புராணத்தில்  தனி படலமாக   அமையப்பெற்று இருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது . கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழில் இயற்றப்பட்ட தண்டியலங்காரம் என்ற இலக்கண நூலில் பாடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்  தல புராணம்
அமிர்தம் எடுப்பதற்காக, பாற்கடலை  கடைந்த பொழுது  மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்திர மலை கடலில்,  மூழ்கிக் கொண்டிருந்தது.  இதனால் அமிர்தம் கிடைக்காமல்  பணி தடைபடும் அபாயம் இருந்தது.  இதனால் மகாவிஷ்ணு  ஆமை   அவதாரம் எடுத்தார். மந்திர மலையை தாங்கி பிடித்து பணி நிறைவடைய உதவி புரிந்தார். இதனால் திருமாலுக்கு செருக்கு   உண்டாகியதாக கூறப்படுகிறது. உலகம் அழியும் வகையில் இதனால் உலகம் அழியும் வகையில், கடலை கலக்கியதால் சிவபெருமான் கோபம் அடைந்துள்ளார். சிவபெருமான் ஆமை ஓட்டினை,  வென்டக மலையனிடையே மறைத்து   வைத்துள்ளார் அதன் பிறகு,  தனது தவறை  உணர்ந்து. இதனை அடுத்து  திருமால்  ஆமை வடிவத்தில்  சிவனை வழிபட்டுள்ளார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் காண

Source link

• Tamil Nadu latest headlines news 1st february2024 flash news details here | TN Headlines: பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம்; 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
Tamil Nadu latest headlines news 1st february2024 flash news details here | TN Headlines: பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம்; 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

Pattali Makkal Katchi : ’நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா?’ பாமக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு..!

2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலனிலும் தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி என்று பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் மத்திய அரசு மாநில உரிமைகளை பறிப்பதாக குறிப்பிட்டுள்ளதால், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை பாமக குறிப்பால் உணர்த்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.  எனவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை பாமக சந்திக்கப் போகிறதா இல்லை பாமக தலைமையில் புதிய கூட்டணியை அந்த கட்சி உருவாக்க போகிறதா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் படிக்க

Tamil Nadu Assembly : ’பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம்?’ தமிழக அரசு தயாரிக்கும் உரையை வாசிக்கும் ஆளுநர்..!

2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 12ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு விரைவில் வெளியிடவுள்ளார்.  ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் 7ஆம் தேதி தமிழகம் திரும்பவுள்ள நிலையில், அதற்கடுத்த வாரமான திங்கள்கிழமையன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

Latest Gold Silver Rate: பட்ஜெட் எதிரொலியா? கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு இவ்வளவா?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.47,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.5,880  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,800 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,350 ஆகவும் விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.77,800 க்கு விற்பனையாகிறது. மேலும் படிக்க

TN Rain Alert: தென்னிந்தியாவில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 3 நாட்களுக்கு மழை இருக்கு

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் படிக்க

Khelo India Youth Games 2023: இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட் டோர்) விளையாட்டு போட்டி கடந்த 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த பிரமாண்ட போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் கைப்பந்து, பேட்மிண்டன், சைக்கிளிங், தடகளம், கபடி, வில்வித்தை, நீச்சல், யோகாசனம், கூடைப்பந்து, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ் உள்பட 26 வகையான போட்டிகள் இடம்பெற்றன. மேலும் படிக்க

மேலும் காண

Source link

• List of former Chief Ministers who have been arrested in scam case in indian history | list of CM Arrested: ஹேமந்த் சோரன் மட்டுமா?
List of former Chief Ministers who have been arrested in scam case in indian history | list of CM Arrested: ஹேமந்த் சோரன் மட்டுமா?

list of CM Arrested: ஊழல் வழக்கில் இதுவரை கைதாகியுள்ள முன்னாள் முதலமைச்சர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஹேமந்த் சோரன் கைது:
ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருப்பது, தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, முதலமைச்சராக இருந்தபோதே கைது செய்யப்பட்ட முதல் நபரா என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகின்றனர். அதேநேரம் கைது நடவடிக்கைக்கு முன்னரே ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், ஊழல் வழக்கில் கைது நடவடிக்கையை எதிர்கொண்ட ஒரே முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மட்டுமா என்றால், அதற்கான பதிலும் இல்லை என்பதே. காரணம் ஜார்கண்டை சேர்ந்த மூன்று பேர் தொடங்கி, தமிழகத்தைச் சேர்ந்த ஜெயலலிதா வரை பல முன்னாள் முதலமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
லாலு பிரசாத் யாதவ்:
கால்நடைத் தீவனம் வாங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பொதுச் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்திய,  தீவன ஊழல் தொடர்பாக பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார்.  அவர் மீதான இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் 1990 களில் அம்பலமானது. வழக்கு விசாரணையின் முடிவில், 2013-ம் ஆண்டு லாலு பிரசாத் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது.
ஜெயலலிதா:
தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனது பதவிக் காலத்தில்,  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கு விசாரணையின் முடிவில்,  2014ம் ஆண்டு அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.  இதன் விளைவாக அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேல்முறையீடு செய்து விடுதலயாகி மீண்டும் முதலமைச்சரானார். ஆனால், கர்நாடக அரசு செய்த மேல்முறையிட்டில், ஜெயலலிதாவிற்கான தண்டனையை 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால், தீர்ப்புக்கு முன்பே ஜெயலலிதா காலமானார்.

சந்திரபாபு நாயுடு
கடந்த ஆண்டு ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். ஆந்திரப் பிரதேச மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.317 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். நீண்ட நாட்களுக்கான இழுபறிக்கு பிறகு, தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
ஓம் பிரகாஷ் சவுதாலா
1989 மற்றும் 2005 க்கு இடையில் பலமுறை ஹரியானா மாநில முதலமைச்சராக இருந்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. ஆசிரியர் பணி நியமன வழக்கில் 2013ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட ஓம் பிரகாஷ் சவுதாலாவிற்கு, பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், கடந்த 2022ம் ஆண்டு அவருக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
மது கோடா:
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரான மதுகோடா, அவரது பதவிக் காலத்தில் பணமோசடி செய்ததாகவும், வரம்பு மீறி சொத்து குவித்ததாகவும் 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 2006 – 2008 காலகட்டத்தில் UPA அரசாங்கத்துடன் கூட்டணியில் மதுகோடா முதலமைச்சராக பணியாற்றினார். அந்த சமயத்தில் நிலக்கரி மற்றும் சுரங்கத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஷிபு சோரன்:
டிசம்பர் 5, 2006 அன்று டெல்லி நீதிமன்றம் ஹேமந்த் சோரனின் தந்தை ஷிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 1994 இல் அவரது தனிச் செயலாளரான ஷஷி நாத் ஜா கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டது. இவர் மூன்று முறை அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

மேலும் காண

Source link

• PM MODI On Budget 2024: “4 பேருக்கு முக்கியத்துவ, இடைக்கால பட்ஜெட் புதுமையானது”
PM MODI On Budget 2024: “4 பேருக்கு முக்கியத்துவ, இடைக்கால பட்ஜெட் புதுமையானது”

2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தொடர்பாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவில், ”இந்த இடைக்கால பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கியது மற்றும் புதுமையானது. இது தொடர்ச்சியின் நம்பிக்கையைக் கொண்டுள்ளது. எதிர்கால பாரதத்திற்கான 4 தூண்களான இளைஞர்கள், மகளிர்,  ஏழை எளியோர் மற்றும் விவசாயிகளுக்கானது. இந்த பட்ஜெட், 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

#WATCH | PM Modi on interim Budget 2024This interim budget is inclusive and innovative. It has confidence of continuity. It will empower all 4 pillars of Viksit Bharat- Yuva, Garib, Mahila and Kisan. This Budget gives the guarantee of making India a developed nation by 2047.” pic.twitter.com/FtS7Azr1G4
— ANI (@ANI) February 1, 2024

இளைஞர்களை பிரதிபலிக்கும் பட்ஜெட்:
தொடர்ந்து, “இந்த பட்ஜெட் இளம் இந்தியாவின் இளம் வயதினரை பிரதிபலிக்கிறது. பட்ஜெட்டில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக, 1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில், நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில், மூலதனச் செலவீனமானது, வரலாறு காணாத அளவுக்கு ரூ.11 லட்சத்து 11 ஆயிரத்து 111 கோடியாக வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார வல்லுநர்களின் மொழிகளில் பேசினால், இது ‘ஸ்வீட் ஸ்பாட்’. இதன் மூலம், 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் நவீன உட்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதுடன், இளைஞர்களுக்கு எண்ணற்ற புதிய வேலை வாய்ப்புகள் தயாராகும்.

#WATCH | On Union Interim Budget 2024-25, PM Narendra Modi says, “In this budget, keeping fiscal deficit under control, capital expenditure has been given a historic high of Rs 11,11,111 Crore. If we speak the languages of the economists, in a manner this is ‘sweet spot’. With… pic.twitter.com/kU2mpUrm0i
— ANI (@ANI) February 1, 2024

இதையும் படிங்க: 300 யூனிட் மின்சாரம் இலவசம்! யாருக்கெல்லாம்! இதை கண்டிப்பாக செய்யணும்! – பட்ஜெட்டில் அறிவிப்பு
”2 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டப்படும்”
இந்த பட்ஜெட் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் வலியுறுத்துகிறது. மேலும் 2 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 கோடி தகுதியான பெண்களுக்கு ரூ.5 லட்சம் கடன் வழங்குவதற்கு இலக்கு வைத்துள்ளோம். இப்போது ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள். வருமான வரி விலக்கு திட்டம் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த 1 கோடி மக்களுக்கு நிவாரணம் அளிக்கும். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன” என பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link

• Music composer Bharani slams that today music directors are copying from english albums
Music composer Bharani slams that today music directors are copying from english albums

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு  இரண்டாவதாக கூட்டணி சேர்ந்து நடித்த திரைப்படம் ‘லியோ’. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமானோர் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பகுதி குறித்து சமீபத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பேசுபொருளாக மாறி இணையத்தில் வைரலானது. படத்தின் இரண்டாம் பாகம் மட்டும் சர்ச்சையை ஏற்படுத்தவில்லை, படத்தின் பாடல்கள் கூட திருடப்பட்டது தான் என பரபரப்புக் குற்றச்சாட்டை இசையமைப்பாளர் பரணி முன்வைத்துள்ளது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
தரமான திரைக்கதையைக் கொண்ட ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பது எப்படி ஒரு இயக்குநரின் கடமையோ, அதே போல ஒரு படத்தின் பாடல்களையும் சிறப்பாகக் கொடுப்பது ஒரு இசையமைப்பாளரின் கடமை. இன்றைய காலக்கட்டத்தில் படத்தின் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெரிய ஹீரோக்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் போதும் ஏதாவது ஒன்றை மிக்ஸ் செய்து ஒரு படமாக கொடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் சினிமா இப்போது ஓடிக்கொண்டு இருக்கிறது.
முந்தைய காலகட்டத்தில் இசைமைப்பாளர்கள் பாடலுக்கு டியூன் போடும்போது இயக்குநர்களும் அருகில் இருந்து கரெக்ஷன் எல்லாம் சொல்வார்கள். ஆனால் இன்று நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. பாடலின் டியூனை பைலாக அனுப்ப சொல்கிறார்கள். படத்துல ஒரு பாடல் ஹிட் அடித்தாலே போதுமானது என நினைக்கிறார்கள். இது தான் இன்றைய சினிமாவின் நிலை.  லியோ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இசையமைப்பாளர் பரணி அப்படத்தின் பாடல் காப்பி அடிக்கபட்டது என சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். லியோ படத்தில் இடம் பெற்ற ஆர்டினரி பெர்சன் பாடலின் டியூன், இசையமைப்பாளர் ஒட்னிக்கா, பீக்கி பளைண்டெர்ஸ் என்ற வெப் சீரிஸுக்கு இசையமைத்தது. இன்றைய இசையமைப்பாளர்கள் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஆல்பங்களில் இருந்து டியூனை காப்பி அடித்து இங்கே நம்பர் ஒன் இசையமைப்பாளர்களாக வலம் வருகிறார்கள்.

எனக்கு ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் போதும். மறுபடியும் நான் எனக்கான மார்க்கெட் ஏற்படுத்திவிடுவேன். அனிருத்துக்கே டஃப் கொடுக்கும் வகையில் என்னால் இன்றைய 2k கிட்ஸ்களின் பல்ஸ் அறிந்து அதற்கு ஏற்ற வகையில் இசையமைக்க முடியும் என சவால் விடுத்துள்ளார் இசையமைப்பாளர் பரணி.
நான் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து, துளித்துளியாய், திரும்ப திரும்ப பார்த்து பார்த்து, முதலாம் சந்திப்பில் உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் பரணி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண

Source link

• IPL 2024: shamar joseph set to play ipl 2024 rcb may cast him as replacement player latest tamil news
IPL 2024: shamar joseph set to play ipl 2024 rcb may cast him as replacement player latest tamil news

காபாவில் ஆஸ்திரேலியாவின் பெருமையை முறியடித்த வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப், இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசனில் எந்த அணிக்காக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது. இந்தநிலையில், காபாவில் ஷமர் ஜோசப்பின் ஆட்டத்தை பார்த்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இவரை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற பந்தயத்தில் இறங்கியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர்  டாம் கர்ரன் காயம் அடைந்துள்ளதால், 17வது சீசனில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், டாம் கர்ரனுக்கு பதிலாக ஷமர் ஜோசப்பை அணியில் எடுக்க ஆர்சிபி நிர்வாகம் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

A Young man in his 2nd test bowling at 145+kmph with impeccable line & length, taking 7 wickets & winning Test at Gaba for his country – Is this the beginning of a new WI team? #ShamarJosephpic.twitter.com/GnboIfwKFw
— Mihir Jha (@MihirkJha) January 29, 2024

2024 மினி ஏலத்திற்கு முன்பாக ஆர்சிபி பல முன்னணி பந்துவீச்சாளர்களை விடுவித்தது. அதன்படி, ஆர்சிபி அணியில் இருந்து ஹேசில்வுட், ஹசரங்கா மற்றும் ஹர்சல் படேல் போன்ற அனுபவமிக்க பந்துவீச்சாளர்களை விடுவித்தது. தொடர்ந்து 2024 மினி ஏலத்தில் அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், டாம் கர்ரன் மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டனர். ஆனால், சமீபத்தில் முடிவடைந்த பிபிஎல் சீசனில் டாம் கர்ரன் முழங்காலில் காயம் ஏற்பட்டு, அது தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால், மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் 17வது சீசனில் இவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
டாம் கர்ரனுக்கு பதிலாக ஷமர் ஜோசப்பா..?
டாம் கர்ரன் விளையாடுவதில் சந்தேகம் இருப்பதால், அவருக்கு பதிகால ஷமர் ஜோசப் ஒரு நல்ல தேர்வாக இருப்பார் என்று கூறப்படுகிறது. ஆர்சிபி அணி எப்போதும் பேட்டிங் வரிசையில் தரமாக இருக்கும். ஆனால், பந்துவீச்சை பொறுத்தவரை எப்போதும் சொதப்பல் அணியாகவெ பார்க்கப்படுகிறது. எவ்வளவு ரன்களை இந்த அணி அடிக்கிறதோ, அதே அளவுக்காக ரன்களை பீல்டிங்கில் விட்டுகொடுத்துவிடும். இதன் காரணமாகவே, ஆர்சிபி அணி இதுவரை நடந்த ஐபிஎல் 16 சீசனில் கோப்பையை வெல்லாததற்கு காரணம்.
இந்தநிலையில், ஷமர் ஜோசப் போன்ற 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீச கூடிய நபர் ஆர்சிபி அணிக்கு கிடைத்தால் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கும்.

Shamar Joseph,what a player,what a man,what a mentality! Got his toe injured while batting & it was such that he couldn’t continue to bat but w his resilience took 7 wickets & led his country to a memorable & historic win.#ShamarJoseph #AUSvsWIpic.twitter.com/o6fJISzozJ
— ishaan (@ixxcric) January 31, 2024

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஷமர் ஜோசப் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரின் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும், ஷமர் ஜோசப் பேட்டிங் மூலம் 57 ரன்களையும் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை பெற்றுகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண

Source link