அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தேவாலயம் ஒன்றில் காவிக்கொடி ஏற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

ரூ.1800 கோடி செலவில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் நேற்று திறக்கப்பட்டது. பிரதமர் மோடி பங்கேற்று அங்கு நிறுவப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். இதனிடையே நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் காவிக்கொடியுடன் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிடும் சிலர் தேவாலயம் ஒன்றின் மீது காவிக்கொடி ஏற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு தொடர்பான கொண்டாட்டங்கள் களைக்கட்டிய நிலையில், இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பியது. சம்பந்தப்பட்ட அந்த வீடியோ, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டம் ராணாபூரில் எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தப்தலை கிராமத்தில் அமையப் பெற்றுள்ள தேவாலயத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கொண்டாட்டத்தில் காவிக் கொடியுடன் வந்த சிலர், தேவாலயம் மீது ஏறியுள்ளனர். அங்கு நிறுவப்பட்டுள்ள சிலுவை மீது காவிக்கொடியை கட்டி ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டனர். அந்த சம்பவம் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது.

Hey Ram .. will this be the new normal of our country #justasking pic.twitter.com/Hd2i8YxcAb

— Prakash Raj (@prakashraaj) January 22, 2024

இதுகுறித்து அந்த தேவாலயத்தின் போதகராக உள்ள நர்பு அமலியார் என்பவர் தெரிவிக்கையில், ‘வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை முடிந்தபோது சிலர் ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் உள்ளே நுழைந்தனர். அந்த கூட்டத்தில் குறைந்தது 25 பேர் வரை இருந்தனர். அவர்களில் சிலர் தான் ஆலயம் மீது ஏறி காவிக்கொடியை கட்டினர். அவர்கள் அனைவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எனக்கு நன்றாகவே அந்த நபர்களை தெரியும். இப்படி செய்வது நல்லதல்ல என எவ்வளவோ சொன்னேன். மேலும் தேவாலயத்துக்கு வரும் மக்களை தொந்தரவு செய்யாதீர்கள் என சொன்னேன். ஆனால் அந்த நபர்கள் எதுவும் கேட்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுதொடர்பான ஜாபுவா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அகம் ஜெயின், ‘இந்த சம்பவத்தில் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். அது உண்மையில் தேவாலயம் கிடையாது. ஒரு தனிநபரின் வீடு என்பதால் வழக்கு எதுவும் பதியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

Month: January 2024

MP Church: சர்ச்சில் ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் காவிக்கொடி? எவ்வளவு சொல்லியும் கேட்கல: பாதிரியார் வேதனை

Russia: ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதி சந்தையில் பீரங்கி தாக்குதல் நடத்திய உக்ரைன்.. 28 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் மக்கள் கூடும் சந்தை மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதில் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்கிற ரீதியில் உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இருநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை நெருங்கியுள்ள ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் போரில் உக்ரைன் சற்று பின் தங்கியிருந்தாலும் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் உதவியுடன் தற்போது வரை தாக்குப்பிடித்து பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த போர் உலகளவில் பெரும் பொருளாதார இழப்புகளையும் சந்தித்து வருகிறது. போரை கைவிட சொல்லி உலக நாடுகள் வலியுறுத்தினாலும் ரஷ்யா செவிசாய்க்கவே இல்லை. இப்படியான நிலையில் உக்ரைனில் சில பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. அந்த இடத்தில் கடந்த இரு தினங்கள் முன்பு ஆளில்லாத விமானம் மூலம் ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகளில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிந்த நிலையில் அதன் பாதிப்பு பெரிதளவில் இல்லை என ரஷ்யா கூறியுள்ளது. ஆனாலும் உக்ரைனின் இந்த அதிரடி தாக்குதல் எதிர்பாராத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் ரஷ்யாவின் டோனெட்ஸ்க் நகரில் உள்ள மக்கள் கூடும் சந்தை மீது உக்ரைன் ராணுவம் சரிமாரியாக பீரங்கி தாக்குதல் நடத்தியது. இந்த எதிர்பாராத தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். ஆனால் இந்த தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததாகவும், 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஒருநாள் துக்கமும் அனுசரிக்கப்பட்டது. தாக்குதல் நடைபெற்ற சந்தை அருகே மக்கள் கூடி உயிரிழந்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதேசமயம் இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என உக்ரைன் மறுப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் ரஷ்யா தனது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: சீனாவில் அதிர்ச்சி! பள்ளி விடுதி கட்டடத்தில் நள்ளிரவில் திடீரென பரவிய தீ.. இதுவரை 13 பேர் உயிரிழப்பு..!

Superstar Rajinikanth Video Viral In Shri Ram Janmabhoomi Temple In Ayodhya | Rajinikanth: கேட்டும் கிடைக்காத இடம்.. டக்குன்னு மாறிய ரஜினியின் முகம்
அயோத்தி ராமர் கோயில் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிலையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. நண்பகல் 12.30 மணிக்கு ராமர் கோயிலில் உள்ள கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி நேற்று பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். உள்ளே நடந்த நிகழ்வில் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றனர்.
அதேசமயம் வெளியே சினிமா, விளையாட்டு, அரசியல், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ் சினிமாவில் இருந்து ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடனும், நடிகர் தனுஷ் தனது மகன்களுடனும் பங்கேற்றனர். முன்னதாக சுமார் 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி விமானத்தில் அயோத்தி சென்றார். அங்கு வருகை தந்திருந்த திரை பிரபலங்களும் அவரை சந்தித்தனர். அயோத்தி செல்வதற்கு முன் செய்தியாளர்களை சென்னை விமான நிலையத்தில் சந்தித்த ரஜினி, ‘500 ஆண்டு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. ராமர் கோயில் நிகழ்வில் கலந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது’ என கூறினார்.
#WATCH | Superstar Rajinikanth arrives at Shri Ram Janmabhoomi Temple in Ayodhya to attend the Pran Pratishtha ceremony pic.twitter.com/1ii6iCsdQ1
— ANI (@ANI) January 22, 2024பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிய ரஜினிகாந்த், “இந்த வரலாற்று தருணத்தில் நான் பங்கேற்றது எனது பாக்கியமாக கருதுகின்றேன். இனி ஒவ்வொரு ஆண்டும் நான் தவறாமல் இங்கு வருவேன்” என தெரிவித்தார். இதனிடையே ரஜினிகாந்த் அயோத்தி விழாவில் பிரபலங்கள் வரிசையில் தனியாக அமர்ந்திருந்தார். மனைவி லதாவுடன் சென்ற அவர் தனியாக இருந்தது பற்றி பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இணையத்தில் வைரலாக ஒரு வீடியோ பரவி வருகிறது.
அதில் தனக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு சென்ற ரஜினி, அங்கு இருந்த நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் இரண்டு இருக்கைகளாக தர முடியுமா என கேட்கிறார். ஆனால் திட்டமிட்டபடி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மாற்ற முடியாது என கைவிரிக்கப்படுகிறது. இதனால் சற்று அப்செட்டான ரஜினி அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பொறுமையுடன் ஆன்மீக நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றார் எனவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Unmukt Chand Said Since I’ve Retired From India My Next Goal Was Always To Play Against India | Unmukt Chand: இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதே இலக்கு
வருகின்ற 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதே தனது முக்கிய இலக்கு என்று இந்திய அணிக்காக 2012ம் ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் உன்முக்த் சந்த் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வுபெற்று தற்போது அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாடி வருகிறார் உன்முக்த் சந்த்.
கடந்த மூன்று ஆண்டுகளாக உன்முக்த் சந்த், ஆண்டுக்கு 10 மாதங்கள் அமெரிக்காவில் தங்கி அங்கு கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதன்மூலம் அவர் அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாட தகுதி பெற்றுள்ளார். சமீபத்தில் கிரிக்பண்ணிடம் பேசிய உன்முக்த் சந்த், இந்தியாவுக்கு எதிரான விளையாடுவதே எனது முக்கிய குறிக்கோள் என்று பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “ இந்திய கிரிக்கெட் அணியின் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து, இந்திய அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோளாக உள்ளது. இதை கெட்ட எண்ணத்திலோ, வேறு எந்த காரணத்திற்காகவே சொல்லவில்லை. இந்தியாதான் உலகின் சிறந்த அணி. அந்த அணியை எதிர்த்து விளையாடி எனது திறமையை வெளிக்காட்ட ஆசைப்படுகிறேன். ” என்று தெரிவித்தார்.
யார் இந்த உன்முக்த் சந்த்..?
இந்திய அணியின் முன்னாள் வீரர் உன்முக்த் சந்த் தலைமையில் 19 வயதுக்குட்பட்டோர் அணி கடந்த 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. அதன்பிறகு, உன்முக்த் சந்த் இந்திய அணியின் விராட் கோலிபோல் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
While Babar Azam is one of the top Pakistan batters now, Unmukt Chand set to make his debut for USA in 2024 T20 World Cup. #CricketTwitter pic.twitter.com/wjSjZQKhhO
— Himanshu Pareek (@Sports_Himanshu) January 22, 2024முதல் தர போட்டிகளில் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தபோதிலும், உன்முக்த் சந்த் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. அதன் பிறகு அவர் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்து அமெரிக்காவில் விளையாடி வந்தார். அங்கு அவரது தலைமையின் கீழ், சிலிக்கான் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி லீக் கிரிக்கெட்டை வென்றது. மேலும், அங்கு அவர் மூன்று பதிப்புகளில் விளையாடி 1500 ரன்களுக்கு மேல் குவித்தார்.
மார்ச் மாதம் அமெரிக்கா அணிக்கு விளையாட தகுதி பெறவுள்ள உன்முக்த் சந்த், ஜூனில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உன்முக்த் சந்த் வருகின்ற டி20 உலகக் கோப்பை அமெரிக்க அணிக்கு தேர்வு செய்யப்பட்டால், அவர் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவார்.
முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் அடங்கிய இந்தியா ‘ஏ’ அணியை உன்முக்த் சந்த் வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அணியில் ஸ்மித் படேல், ஹர்மீத் சிங்:
2012 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை உன்முக்த் சந்துடன் இணைந்து வென்ற விக்கெட் கீப்பர் ஸ்மித் படேல் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்மீத் சிங் ஆகியோர் ஏற்கனவே அமெரிக்காவுக்காக விளையாட தகுதி பெற்றுள்ளனர். படேல் இதற்கு முன்பு குஜராத், திரிபுரா மற்றும் பரோடா அணிகளுக்காக விளையாடினார். இவர் 2020 இல் அமெரிக்கா சென்றார்.
MOU Signed Between The TN Government’s Investment Promotion Agency ‘Guidance’ And The Technology Company ‘BIG TECH’ CM MK STALIN | TN Govt: தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான ‘Guidance’ மற்றும் ’BIG TECH’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் (Corning International Corporation) மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட்(Optiemus Infracom Limited) ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் ( Bharat Innovative Glass Technologies Private Limited – BIG TECH) நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில், ரூ.1003 கோடி முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், உலகத் தரம் வாய்ந்த மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் திட்டம் நிறுவுவதற்கு, தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான ‘Guidance’ மற்றும் ’BIG TECH’ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
Latest Gold Silver Rate Today 23 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,830 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,400 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.76.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.76,500 க்கு விற்பனையாகிறது.
கோயம்புத்தூர்
“தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,830 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது.
மதுரை
மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,830 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது.
திருச்சி
திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,830 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது.
வேலூர்
வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,830 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது.
நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)
மும்பை
மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,305 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,780 ஆகவும் விற்பனையாகிறது.
புது டெல்லி
புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,320 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,795 ஆகவும் விற்பனையாகிறது.
கொல்கத்தா
கொல்கத்தாவில் (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,305 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,780 ஆகவும் விற்பனையாகிறது.
ஐதராபாத்
ஐதராபாத் நகரில் (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,305 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,780 ஆகவும் விற்பனையாகிறது.
அகமதாபாத்
அகமதபாத் (Gold Rate in Ahmedabad) நகரில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,310 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,785 ஆகவும் விற்பனையாகிறது.
திருவனந்தபுரம்
திருவனந்தபுரத்தில் (Gold Rate Trivandrum) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,305 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,780 ஆகவும் விற்பனையாகிறது.
பெங்களூரு
பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,305 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,780 ஆகவும் விற்பனையாகிறது.
ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூரில் (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,320 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,795 ஆகவும் விற்பனையாகிறது.
புனே
புனே நகரில் (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,305 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5,780 ஆகவும் விற்பனையாகிறது.
Mettur Dam’s Water Inflow Has Reduced From 1,250 Cubic Feet To 961 Cubic Feet.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 556 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1,250 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 961 கன அடியாக குறைந்துள்ளது.
நீர்மட்டம்:
அணையின் நீர் மட்டம் 70.79 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.கர்நாடக அணைகள்:
கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 93.44 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 18.09 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 401 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3,815 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.26 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.34 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 242 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.
Ashok Selvam: | Ashok Selvam:
Actor Ashok Selvam: கீர்த்தி மூலம் தான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.
பா. ரஞ்சித் தயாரிப்பில் ‘ப்ளூ ஸ்டார்’ :
நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பா. ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியன் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இரட்டை ஹீரோ படமான இப்படத்தில் ஷாந்தனு மற்றொரு நாயகனாக நடித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், பிருத்விராஜன், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது.
இசை வெளியீட்டு விழாவில் அசோக் செல்வன்:
இந்நிலையில் ‘ப்ளூ ஸ்டார்’ இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தனர். அப்போது மேடையில் பேசிய அசோக் செல்வன், “ப்ளு ஸ்டார் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆனது.
வாய்ப்பு தேடி அலையும் காலத்தில் ஆறுதல் கூறி, நம்பிக்கை கொடுக்கமாட்டார்களா? என்று ஏக்கம் இருக்கும். அப்படி ஏங்கி கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும், ப்ளு ஸ்டார் படம், ஒரு ஆறுதல், நம்பிக்கையை கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது.
”ரொம்ப ஸ்பெஷல் ஆன படம்”
இந்த படத்தில் நடித்தவர்கள் எனது குடும்பத்தில் ஒருவராக இணைந்துவிட்டனர். ஏற்கனவே, இந்த படம் எனக்கு மனைவி, சகோதரர் என அனைத்து உறவையும் கொடுத்திருக்கிறது. முதலில் ரஞ்சித்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். சிலர் பேசுறதுக்கும், செய்கின்ற செயலுக்கும் சம்பந்தமே இருக்காது.
ஆனால், ரஞ்சித் என்ன பேசுறாரோ, அது போலவே நடப்பவர். அனைவரையும் சமமாக நடத்துவார். இந்த மாதிரியான மனிதர்களை நான் பார்த்ததில்லை. கீர்த்தி மூலமாக தான் எனக்கு இந்த படம் கிடைத்தது. ரொம்ப நன்றி. கீர்த்தி தான் இந்த படத்தில் முதலில் கமிட் ஆனார்.
கீர்த்தி மூலம் தான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நன்றி. லவ் யூ. எந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் நான் இவ்வளவு நேரம் பேசியதில்லை. இந்த படம் என்னை அவ்வளவு பேச வைத்திருக்கிறது” என்றார்.மேலும் படிக்க
Ayodhya Ram Mandir: ராமர் பிறந்த இடத்திலேயே கோவில்; பிரதமர் மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் – இளையராஜா
Amala Paul: கர்ப்பமாக இருக்கும் அமலா பாலை நீச்சல் குளத்தில் தூக்கிச் சுற்றிய கணவர் – ஹார்ட்டின் பறக்கவிடும் ரசிகர்கள்!
Mayor Priya: அதிகரிக்கும் கொசுத்தொல்லை! சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்! அதிகாரிகளுக்கு மேயர் பிரியா போட்ட உத்தரவு!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு, தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்தல் மற்றும் மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகள் வழங்குவது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ரிப்பன் கட்டிட வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளும் விதமாக கொசு ஒழிப்பு புகைப்பரப்பும் பணிகள், கொசுக் கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் உள்ளிட்ட கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என மேயர் பிரியா அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்துதல், மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகள் வழங்குதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் குறித்து மேயர் ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியில் 364 கைத் தெளிப்பான்கள், 70 பவர் ஸ்பிரேயர்கள், 210 பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள், கையினால் இயக்கும் 239 புகைப்பரப்பும் இயந்திரங்கள், 3 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்ட 64 புகைப்பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கொசுக்களை ஒழிக்கத் தேவையான அனைத்து மருந்துகளும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்திடவும் 3319 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாள்தோறும் காலை, மாலை இருவேளைகளிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான புகை மருந்து அடித்தல் மற்றும் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியினை பணியாளர்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள உபயோகமற்ற பொருட்களை அகற்றிடவும், கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் மூடி வைக்கவும், தண்ணீர் நிரப்பிய பூ ஜாடி மற்றும் கீழ்த்தட்டு குளிர்பதனப் பெட்டியின் கீழ்த்தட்டு, மணி பிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு, மொட்டை மாடிகளில் உள்ள மழைநீர் தேங்கும் பொருட்களை அகற்றி, சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்திட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு 7199 மாடுகளும், 2023ஆம் ஆண்டு 4237 மாடுகளும், இந்த ஆண்டில் இதுநாள்வரை 122 மாடுகளும் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான செய்தி குறிப்பில், “ பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவை பிடிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் நாய் இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கால்நடை மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நாய்க்கடி மூலம் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய வெறிநாய்க்கடி நோய் வராமல் தடுக்க அவைகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்படுகிறது.

இனக்கட்டுப்பாட்டு மையங்களில் 2022ஆம் ஆண்டு 16,705 இனக்கட்டுப்பாட்டு அனுவை சிகிச்சைகளும், 2023ஆம் ஆண்டு 14,553 அறுவை சிகிச்சைகளும் இந்த ஆண்டில் இதுநாள் வரை 797 நாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடமிருந்து வரும் தெருநாய்கள் தொடர்பான புகார்கள் மீது அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புர சமுதாய நல மையங்கள், சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில் மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணிக்கு உரிய நேரத்திற்கு வருகை தந்து மக்களுக்கு சிறப்பாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top News India Today Abp Nadu Morning Top India News January 23 2024 Know Full Details
டெல்லி வரை உணரப்பட்ட நில அதிர்வுகள்.. சீனாவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!சீனாவில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோயில் 7.2 ஆக இருந்துள்ளது. நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததால், அதன் அதிர்வு டெல்லி – என்சிஆர் வரை உணரப்பட்டது. நிலநடுக்கமானது நேபாளம் – சீனா எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து நிலநடுக்கத்திற்கான தேசிய மையம், இந்த நிலநடுக்கத்தின் மையம் தெற்கு சீனா சின்ஜியாங்கில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் படிக்க.,
ஞாயிறில் 90.. நேற்று மட்டும் 100.. அயோத்தி விமான நிலையத்திற்கு படையெடுத்த விமானங்கள்!இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தியில் குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தில் சுமார் 100 தனியார் விமானங்கள் வந்து இறங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 7,000க்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதில், நடிகையும் மதுரா எம்பியுமான ஹேமமாலினி, நடிகர்கள் ரஜினிகாந்த், பவன் கல்யாண், பாடகர் ஷங்கர் மகாதேவன், இயக்குநர்கள் மதுர் பண்டார்கர், சுபாஷ் காய், சீரஞ்சீவி, ராம்சரண், பிடி உஷா ஆகியோர் பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டனர். மேலும் படிக்க.,
சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் – பிப்ரவரி 1ல் பாமக பொதுக்குழு கூட்டம், கூட்டணி முடிவு வெளியாகுமா?பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சென்னையில் பிப்ரவரி 1-ஆம் தேதி பா.ம.க. சிறப்புப் பொதுக்குழு கூட்டம்! பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் -2024 வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள இராணி மெய்யம்மை அரங்கத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதி (வியாழக்கிழமை) காலை 11.00 மணிக்கு இப்பொதுக்குழு தொடங்கும். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையேற்பார். மேலும் படிக்க.,
நாடாளுமன்ற தேர்தலுக்கு என்ன செய்யலாம்? – மநீம நிர்வாகிகளுடன் கமல் இன்று அவசர ஆலோசனைமக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் கூட்ட முடிவில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று காலை 11:30 மணிக்கு தலைமை அலுவலகத்தில் (ஆழ்வார்பேட்டை) மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க.,
இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் – வெளிநாடு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுகள் என்ன?தமிழ்நாடு அரசின் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் காலை 11 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் படிக்க.,

7.2 Magnitude Earthquake Struck In Western China Near The Border With Kyrgyzstan – Watch Video
சீனாவில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோயில் 7.2 ஆக இருந்துள்ளது. நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததால், அதன் அதிர்வு டெல்லி – என்சிஆர் வரை உணரப்பட்டது. நிலநடுக்கமானது நேபாளம் – சீனா எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து நிலநடுக்கத்திற்கான தேசிய மையம், இந்த நிலநடுக்கத்தின் மையம் தெற்கு சீனா சின்ஜியாங்கில் கண்டறியப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் 7. 2 ஆக இருந்ததாகவும், அட்சரேகை 40.96 மற்றும் நீளம் 78.30, ஆழம் 80 கிமீ உருவாகியுள்ளது.
சீன நிலநடுக்கம்:
மேலும், சீனாவின் மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதியில் இன்று அதிகாலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹூவா தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி இந்த நிலநடுக்கம் அதிகாலை 2 மணிக்கு அக்சு மாகாணத்தில் உள்ள வுஷூ கவுண்டியில் உணரப்பட்டது. நிலநடுக்கத்திற்கு பிறகு பல முறை நில அதிர்வுகள் உணரப்பட்டது. இந்த நில அதிர்வுகளில் அதிகபட்சமாக 4.5 என்ற ரிக்டர் அளவுகோலில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கிர்கிஸ்தான் – சின்ஜியாங் எல்லையில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும், இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சின் ஜியாங் ரயில்வே துறை உடனடியாக 27 ரயில்களில் சேவையை நிறுத்தியது. மேலும், தியான் ஷான் மலைத்தொடரிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Residents of the city of Almaty, in Kazakhstan, walking through the streets after the strong #7.0 earthquake that devastated Kyrgyzstan, near the border with China. #earthquake #China #Kyrgyzstan #KyrgyzstanEarthquake #ChinaEarthquake #JUSTIN #BREAKING_NEWS pic.twitter.com/kxHAj3BK6B
— Chaudhary Parvez (@ChaudharyParvez) January 23, 2024
கடந்த நூற்றாண்டில் இப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் 1978 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும். ஒரு அதிகாலையில் வடக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆகும். அப்போதும் அண்டை நாடுகளான கிர்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தானிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது?
பூமிக்குள் ஏழு டெக்டோனிக் தட்டுகள் உள்ளன. இந்த தட்டுகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். அப்போது, இந்த தட்டுகள் ஒன்றோடு ஒன்று ஏறும் போது அல்லது அவற்றிலிருந்து விலகிச் செல்லும்போது, நிலம் நடுங்கத் தொடங்குகிறது. இதனையே பூகம்பம் அல்லது நிலநடுக்கம் என்று அழைக்கிறோம். நிலநடுக்கங்களை அளவிடுவதை ரிக்டர் அளவுகோல் என்று அழைக்கப்படுகிறது.
ரிக்டர் அளவுகோல் 1 முதல் 9 வரை இருக்கும். பூகம்பத்தின் தீவிரம் அதன் மையத்தில் இருந்து அளவிடப்படுகிறது, அதாவது மையப்பகுதி. அதாவது அந்த மையத்திலிருந்து வெளிவரும் ஆற்றல் இந்த அளவில் அளவிடப்படுகிறது. 1 என்றால் குறைந்த தீவிர ஆற்றல் கொண்டதாகவும், 9 என்றால் மிகவும் பயமுறுத்தும் அழிவுகரமான அலையாக பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு ரிக்டர் அளவுகோலில் தீவிரம் 7 ஆக இருந்தால், அதைச் சுற்றி 40 கிலோமீட்டர் சுற்றளவில் ஒரு வலுவான அதிர்ச்சி ஏற்படும்.
எவ்வளவு தீவிரமானது.. எவ்வளவு ஆபத்தானது?
நிலநடுக்கம் எவ்வளவு ஆபத்தானது? இது ரிக்டர் அளவுகோலில் அளவிடப்படுகிறது. நிலநடுக்கத்தில், ரிக்டர் அளவுகோலின் ஒவ்வொரு அளவும் முந்தைய அளவை விட 10 மடங்கு ஆபத்தானது.
0 முதல் 1.9 வரையிலான தீவிரம் கொண்ட நிலநடுக்கங்களை நில அதிர்வு வரைபடம் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.
2 முதல் 2.9 தீவிரம் கொண்ட நிலநடுக்கம் ஏற்படும் போது, லேசான அதிர்வு ஏற்படும்.
3 முதல் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் போது, ஒரு டிரக் கடந்து செல்வது போன்று தோன்றும்.
4 முதல் 4.9 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தில் ஜன்னல் உடைந்து விடும் அல்லது சுவர்களில் விரிசல் ஏற்படும்.
5 முதல் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால், வீட்டுகள் குலுங்கலாம்.
6 முதல் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் கட்டிடங்களின் அஸ்திவாரங்களில் விரிசல் ஏற்பட்டு, மேல் தளங்கள் சேதமடையலாம்.
7 முதல் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் போது கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன.
8 முதல் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால், கட்டிடங்கள் மற்றும் பெரிய பாலங்கள் இடிந்து விழும்.
9 அல்லது அதற்கு மேற்பட்ட தீவிரம் கொண்ட நிலநடுக்கம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்துகிறது. கடல் அருகில் இருந்தால் சுனாமி வரலாம்.
Rajinikanth In ayodhya : இந்தியில் பேசிய ரஜினி.. ”நான் மிகவும் அதிர்ஷ்டசாலி” | Ram Mandir | Modi

Rajinikanth In ayodhya : இந்தியில் பேசிய ரஜினி.. ”நான் மிகவும் அதிர்ஷ்டசாலி” | Ram Mandir | Modi

பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டி – அடிமைகளை வீழ்த்த வேண்டும்அமைச்சர் உதயநிதி..
சேலத்தில் நடைப்பெற்ற மாநாடு திமுகவுக்கான மாநாடு மட்டுமல்ல, இந்தியாவுக்கான மாநாடு என இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டிற்காக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்தும் இடத்திற்கும் பயணித்தோம் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் தள பதிவில், “ சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணியின் மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும். பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டி – அடிமைகளை வீழ்த்தி இந்தியக் கூட்டணியின் வெற்றியை நமது தலை
சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணியின் மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும். பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டி – அடிமைகளை வீழ்த்தி #INDIA கூட்டணியின் வெற்றியை நமது தலைவர் அவர்களின் கரங்களில் சேர்க்க அயராது… pic.twitter.com/iX4SOi6iQ4
— Udhay (@Udhaystalin) January 23, 2024
வரின் கரங்களில் சேர்க்க அயராது உழைப்போம்!” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியல் கட்சிகளின் மாநாடு என்றால் சிலர் திட்டமிட்டு மக்கள் மத்தியில் ஒருவித எதிர்மறை எண்ணத்தை கிளப்பி விடுகிறார்கள், அந்த எதிர்மறை எண்ணங்களை திமுக இளைஞரணி மாநாடு நேர்மறையாக மாற்றியுள்ளது என தெரிவித்துள்ளார்.
Ram Mandir Inauguration: ஞாயிறில் 90.. நேற்று மட்டும் 100.. அயோத்தி விமான நிலையத்திற்கு படையெடுத்த விமானங்கள்!

இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தியில் குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தில் சுமார் 100 தனியார் விமானங்கள் வந்து இறங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 7,000க்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதில், நடிகையும் மதுரா எம்பியுமான ஹேமமாலினி, நடிகர்கள் ரஜினிகாந்த், பவன் கல்யாண், பாடகர் ஷங்கர் மகாதேவன், இயக்குநர்கள் மதுர் பண்டார்கர், சுபாஷ் காய், சீரஞ்சீவி, ராம்சரண், பிடி உஷா ஆகியோர் பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அயோத்தியில் உள்ள பிரமாண்ட கோயிலில் 5 வயது குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு துறைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்று ஒருநாளில் மட்டும் அயோத்திக்கு செல்ல சுமார் 100 தனியார் விமானங்கள் வந்திருங்க முன்பதிவு செய்யப்பட்டதாக விமான ஆபரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் கேப்டன் ஆர்.கே.பாலி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இவற்றில் சுமார் 50 விமானங்கள் பிசினஸ் கிளாஸ் விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

50 பிசினஸ் கிளாஸ் விமானங்கள்:

இதுகுறித்து ஏர் ஆபரேட்டர் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவான நேற்று அயோத்தியில் உள்ள மகரிஷ் வால்மீகி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 100 விமானங்கள் இயக்கப்பட்டன. அதேபோல், ராமர் கோயிலின் விழாவில் கலந்து கொண்டபின் சிறப்பு விருந்தினர்கள் புறப்படுவதற்காக விமானங்களில் எண்ணிக்கை சுமார் 100 ஐ கடந்தது” என்று தெரிவித்தார்.

கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் கூட, கார்ப்பரேட் தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உட்பட பலர் அயோத்தியை வந்தடைந்தனர். அன்றைய நாளில் மட்டும் சுமார் 90 விமானங்கள் இயக்கப்பட்டன. அதில், மோகன் பகவத், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ரஜினி காந்த், தனுஷ், அனுபம் கேர், கைலாஷ் கெர், ஜூபின் நௌடியல், பிரசூன் ஜோஷி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் அனில் அம்பானி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காலை விமானங்களில் வந்திருந்தனர்.

இவர்களைத் தவிர ஹேமா மாலினி, கங்கனா ரணாவத், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மொராரி பாபு, அனில் கும்பளே, வெங்கடேஷ் பிரசாத், சாய்னா நேவால், பவன் கல்யாண், மதுர் பண்டார்கர், சுபாஷ் காய், ஷெபாலி ஷா மற்றும் சோனு நிகம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமையே அயோத்தியை அடைந்தனர்.

மேலும், அயோத்தியில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி கலந்து கொண்டனர். இது தவிர, அவரது மகன் ஆகாஷ் தனது மனைவி ஷ்லோகாவுடன், ஆனந்த் தனது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்ட், அம்பானியின் மகள் இஷா தனது கணவர் ஆனந்த் பிரமலுடன் அங்கு வந்திருந்தார். இவர்கள் அனைவரும் அவர்களுக்கு சொந்தமான தனி விமானம் மூலம் மும்பையில் இருந்து அயோத்தி விமான நிலையத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அம்பானி குடும்பத்தைத் தவிர, 506 பேரின் பெயர்கள் மாநில விருந்தினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Crime: 5 பேர் சுட்டுக்கொலை: இலங்கையில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்.. திடுக்கிடும் சம்பவம்

இலங்கையின் தெற்கு மாகாணத்தில் பட்டப்பகலில் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் தெற்கு மாகாணம் பெலியட்டா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று காலை ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின் தொடர்ந்து வந்த மற்றொரு ஜீப் முன்னே சென்ற வாகனத்தை வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

அதனை தொடர்ந்து, ஜீப்பில் இருந்த மர்ம நபர்கள், வழிமறித்த வாகனத்தில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் 5 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. அவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொருவரை உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் பரபரப்பான நெடுஞ்சாலையில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூலிப்படை கும்பலை சேர்ந்தவர்களே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கூலிப்படை கும்பல்களின் செயல்பாடுகளை தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கையை போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியதும், இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Today Movies In Tv Tamil January 23rd Television Schedule Dhool Sita Ramam Kalavani Oruvan Padikkathavan Shock
Tuesday Movies: ஜனவரி 23 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி
மதியம் 3.30 மணி: படிக்காதவன்
சன் லைஃப்
காலை 11.00 மணி: அவள் ஒரு தொடர்கதை மதியம் 3.00 மணி: கலை அரசி
கே டிவி
காலை 7.00 மணி: அடுத்தாத்து ஆல்பர்ட்காலை 10.00 மணி: சுந்தர புருஷன் மதியம் 1.00 மணி: புரியாத புதிர் மாலை 4.00 மணி: ஒருவன் மாலை 7.00 மணி: தூள் இரவு 10.30 மணி: ஷாக்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: சேவல் இரவு 11 மணி: குட்டி பிசாசு
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: உள்குத்து மதியம் 12 மணி: ஹாஸ்டல் மாலை 3 மணி: நாயே பேயே இரவு 9.00 மணி: ஹாஸ்டல்
ஜெயா டிவி
காலை 10 மணி: பொன்னான நேரம் மதியம் 1.30 மணி: மணி குயில் இரவு 10.00 மணி: மணி குயில்
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: நாடோடி மன்னன் இரவு 9.30 மணி: அரசாட்சி
ஜீ திரை
காலை 6.30 மணி: சமர் காலை 9.30 மணி: அசுரகுரு மதியம் 12 மணி: மன்னர் வகையறாமதியம் 3.30 மணி: சித்திரை செவ்வானம் மாலை 6 மணி: கிராக் இரவு 9.30 மணி: கிருமி
முரசு டிவி
காலை 6.00 மணி: நம்ம ஊரு பூவாத்தா மதியம் 3.00 மணி: களவாடிய பொழுதுகள் மாலை 6.00 மணி: கச்சேரி ஆரம்பம் இரவு 9.30 மணி: உயிரே
விஜய் சூப்பர்
காலை 6.00 மணி: வெள்ளை பூக்கள் காலை 8.30 மணி: கால கரிகாலன் காலை 11.00 மணி: பக்கா கமர்ஷியல் மதியம் 1.30 மணி: களவாணி மாலை 4.00 மணி: பிரம்மாஸ்திரா பார்ட் ஒன் ஷிவா மாலை 6.30 மணி: சீதா ராமம் மாலை 9.30 மணி: ராஜா விக்ரமாதித்தா
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: பாஞ்சாலங்குறிச்சி காலை 10.00 மணி: ஆயிசு நூறு மதியம் 1.00 மணி: வடிவங்கள் மாலை 4.00 மணி: ராஜ மரியாதைஇரவு 7.00 மணி: தர்மாஇரவு 10.30 மணி: ஈர விழி காவியங்கள்
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: பாசமுள்ள பாண்டியரே இரவு 7.30 மணி: ரோஸி
மெகா டிவி
காலை 9.30 மணி: அந்தமான் காதலி மதியம் 1.30 மணி: கல்யாண ராமன் இரவு 11 மணி: திசை மாறிய பறவைகள்காலை 5.30 மணி: காஞ்சிவரம் காலை 8.00 மணி: அமரகாவியம் காலை 11.00 மணி: ஆமா மதியம் 2.00 மணி: சிக்ஸர் மாலை 4.30 மணி: ஜென்டில்மேன் சத்யாஇரவு 7 மணி: நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும் இரவு 9 மணி: லூசிஃபர்
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: சிசு பாலன் மதியம் 1.30 மணி: தாயில்லாமல் நானில்லை
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: நூற்றுக்கு நூறுமாலை 7.30 மணி: ராஜா வீட்டு கன்னுக்குட்டி
மெகா 24 டிவி
காலை 10 மணி: வேட்டை புலி மதியம் 2 மணி: பார்த்திபன் கனவு மாலை 6 மணி: கன்னித் தீவு
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: நீயாகாலை 10 மணி: கருடா சௌக்கியமாமதியம் 1.30 மணி: நெஞ்சில் ஒரு முள் மாலை 4.30 மணி: தாய்க்கு ஒரு தாலாட்டு மாலை 7.30 மணி: தர்மத்தின் தலைவன் இரவு 10.30 மணி: கிளி பேச்சு கேட்க வாமேலும் படிக்க: Ayodhya Ram Mandir: ராமர் பிறந்த இடத்திலேயே கோவில்; பிரதமர் மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் – இளையராஜா

IND Vs ENG Virat Kohli Withdraws From First Two Tests Against England Citing Personal Reasons | Virat Kohli: அச்சச்சோ! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இருந்து விராட் கோலி விலகல்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு சிறிய ஓய்வுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் அணிக்கு திரும்பினார். தென்னாப்பிரிக்க தொடர், ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் தற்போது விராட் கோலி ஆடி முடித்துள்ளார்.
விராட் கோலி விலகல்:
இந்த நிலையில், இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இங்கிலாந்து அணி இதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் ஆடுகின்றனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, அவர் இந்திய கேப்டன் ரோகித்சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
🚨 NEWS 🚨Virat Kohli withdraws from first two Tests against England citing personal reasons.Details 🔽 #TeamIndia | #INDvENGhttps://t.co/q1YfOczwWJ
— BCCI (@BCCI) January 22, 2024என்ன காரணம்?
தனது தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக விராட் கோலி முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆடுவதில் இருந்து ஓய்வு கேட்டிருப்பதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. விராட் கோலி முதல் 2 டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஏனென்றால் இங்கிலாந்து போன்ற பலமிகுந்த அணியை எதிர்கொள்ள விராட் கோலி போன்ற ஒரு அனுபவமிக்க பேட்ஸ்மேன் இல்லாதது இந்திய அணியை பாதிக்கும். விராட் கோலி இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, 2016ம் ஆண்டு நடந்த உள்நாட்டு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி 5 டெஸ்ட் போட்டியில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் உள்பட 655 ரன்கள் குவித்து அந்த தொடரிலே அதிக ரன்கள் விளாசிய வீரராக திகழ்ந்தார். விராட் கோலி இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக 28 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதங்கள், 9 அரைசதங்கள் உள்பட 1991 ரன்களை எடுத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 235 ரன்கள் ஆகும். இதில் 3 முறை நாட் அவுட்டாக திகழ்ந்துள்ளார். விராட் கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 29 சதங்கள், 7 இரட்டை சதங்கள், 30 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 848 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs ENG: இந்திய மண்ணில் 12 ஆண்டுகால வறட்சியை முறியடிக்குமா இங்கிலாந்து..? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
மேலும் படிக்க: Cheteshwar Pujara: முதல் தர போட்டியில் 20,000 ரன்கள்.. கவாஸ்கர், சச்சின், டிராவிட்டின் சிறப்பு கிளப்பில் நுழைந்த புஜாரா!
Parliament Elections 2024 Are Heating Up: PMK General Committee Meeting On February 1, Alliance Result Will Be Announced | PMK Meeting: சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்
PMK Meeting: பாமக பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமக பொதுக்குழு கூட்டம்:
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சென்னையில் பிப்ரவரி 1-ஆம் தேதி பா.ம.க. சிறப்புப் பொதுக்குழு கூட்டம்! பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் -2024 வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள இராணி மெய்யம்மை அரங்கத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதி (வியாழக்கிழமை) காலை 11.00 மணிக்கு இப்பொதுக்குழு தொடங்கும். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையேற்பார். கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
நிர்வாகிகளுக்கு அழைப்பு:
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் களம்:
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய மற்று மாநில அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணியில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளுமே தேர்தல் பணிக்கான குழுக்களை அமைத்துள்ளன. மக்கள் நீதி மய்யமும் இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட உள்ளது. இந்நிலையில், பாமக பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 1ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி, தனித்து போட்டியிடலாமா அல்லது பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாமா? கூட்டணி அமைத்தால் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா? உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக உடன் பாமக கூட்டணி?
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் சேர்ந்த பாமக, 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலிலும் சேர்ந்தே களம் கண்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியே இருக்கிறது. அதோடு, தற்போதைய சூழலில் பாமக எந்த கூட்டணியிலும் இல்லை எனவும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் எனவும் கூறி இருந்தார். இதனிடையே, கடந்த சில மாதங்களாகவே திமுக மற்றும் பாமக இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ayodhya Ram Mandir: அதிகாலையிலேயே குவிந்த மக்கள் கூட்டம்
அயோத்தி ராமர் கோயில் நேற்று திறக்கப்பட்டதை அடுத்து, இன்று காலை 7 மணி முதல் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இதையோட்டி, நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். தொடர்ந்து பக்தர்கள் வருகைதர ஒருகட்டத்திற்கு மேல் கூட்டம் அதிகரித்து, ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு கோயில் உள்ளே நுழைய முயன்றனர். அங்கு இருந்த ஊழியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றும் அவர்களின் முயற்சி தோல்வியுற ஏராளமான பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு கோயில் வளாகத்திற்குள் நுழைந்தனர்.
#WATCH | Ayodhya, Uttar Pradesh: Heavy rush outside the Ram Temple as devotees throng the temple to offer prayers and have Darshan of Shri Ram Lalla on the first morning after the Pran Pratishtha ceremony pic.twitter.com/gQHInJ5FTz
— ANI (@ANI) January 23, 2024கூட்ட நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்து எழுந்து கோயிலுக்குள் சென்றதையும், பக்தர்கள் பலர் கைகளில் கொடிகளை ஏந்தியவாறு உள்ளே சென்றதையும் வெளியாகியுள்ள வீடியோவில் காணமுடிகிறது.
பொதுமக்கள் சுவாமி தரிசனம்:
1800 கோடி ரூபாய் செலவில் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயிலை, பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். முக்கிய பிரமுகர்கள் மட்டும் நேற்று பங்கேற்ற நிலையில், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், இன்று முதல் பொதுமக்கள் அயோத்தி குழந்தை ராமரை தரிசனம் செய்யலாம் என்றும் காலை 7 மணி முதல் காலை 11.30 மணி வரையும், மதியம் 2.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையும் அயோத்தி குழந்தை ராமரை தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜாகரன் / சிருங்கர் ஆரத்தி காலை 6.30 மணிக்கும், சந்தியா ஆரத்தி – இரவு 7:30 மணிக்கு நடைபெறும். இதற்கேற்ப உங்கள் தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
முன்பதிவு செய்வது எப்படி?
ஆரத்திக்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் மற்றும் நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். தரிசன செய்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு, கோயிலில் இருக்கு முகாம் அலுவலகத்தில் இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். சரியாக அடையாள அட்டைகளை சமர்பித்து டிக்கெட்டுகளை முகாமில் பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனில், https://srjbtkshetra.org/ என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், இதுவரை இந்த வசதி தொடங்கப்படவில்லை. ஒரிரு நாட்களில் இந்த இணையத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும், பொதுமக்கள் நன்கொடையும் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பே போன்ற அனைத்து யுபிஐ ஆப்ஸ் மூலமாக நன்கொடைகளை வழங்கலாம். பக்தர்கள் தங்களது நுழைவுச் சீட்டுகளின் இருக்கும் QR குறியீட்டை காண்பித்த பிறகு தான் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Yogibabu Instagram And Twitter Posts Viral
நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா பற்றி பேசப்பட்டு வரும் நிலையில் நடிகர் யோகிபாபு பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அயோத்தி ராமர் கோயில் நேற்று கோலாகலமாக திறக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த கோயிலின் கருவறையில் உள்ள குழந்தை ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். இந்த பூஜையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். அதேசமயம் விளையாட்டு, சினிமா உள்ளிட்ட பல்துறை சார்ந்த முக்கிய பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியாபட், ஹ்ருத்திக்ரோஷன், தனுஷ், கங்கனா ரணாவத், அனுபம் கெர், பாடகர் ஷங்கர் மகாதேவன், ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் அயோத்திக்கு வருகை தந்து ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், தங்கள் மனமகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் அழைப்பிதழ் கொடுத்தும் நிறைய பேர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் தோனி, விராட் கோலி, நடிகர் யோகிபாபு ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை.
இதற்கிடையில் நடிகர் யோகிபாபுவின் சமூக வலைத்தளப் பதிவுகள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த ஜனவரி 21 ஆம் தேதி பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நடிகர் யோகிபாபுவை நேரில் சென்று அழைத்ததாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரை போன்று யோகிபாபுவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அப்படி இருக்கையில் நேற்று இரவு அயோத்தி கோயிலில் வீற்றிருக்கும் குழந்தை ராமர் படத்தை பகிர்ந்து “ஜெய் ஸ்ரீராம்” என யோகிபாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
pic.twitter.com/g8AikO3J6N
— Yogi Babu (@iYogiBabu) January 22, 2024
பலரும் அவருக்கு பாராட்டுகளையும், கிண்டலான கருத்துகளையும் தெரிவித்தனர். இப்படி இருக்கையில் அடுத்த சில மணி நேரங்களில் யோகிபாபு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கடவுள் முருகனின் வேல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது. ஏற்கனவே தீவிர முருக பக்தரான யோகிபாபு தனது எக்ஸ் வலைத்தளத்தில் முருகனுடன் இருக்கும் படத்தை டி.பி. ஆகவும், முருகன் போட்டோவை கவர் பிக்சர் ஆகவும் வைத்திருப்பார். மேலும் அடிக்கடி ஒவ்வொர் ஊரிலும் உள்ள பிரசித்த பெற்ற முருகன் கோவிலுக்கும் செல்வதையும் வழக்கமாக வைத்திருப்பதையும் கொண்டுள்ளார்.
மீண்டும் அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
TN Fishermen: தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேரும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறப்படும் 6 பேரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீனவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 30 மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.

Thaipusam 2024 Shri Brahma Purishvarar Temple Perunagar Kanchipuram Thaipusam Day 6 Celebration – TNN
அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் பெருநகர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில் ( perunagar brahmapureeswarar temple) அமைந்துள்ளது. இக்கோவில் சுயம்புலிங்கமாக மூலவர் காட்சியளிக்கிறார். மூலவர் சன்னதி கஜபிரதிஷ்டை பச்சை கருங்கல்லால் கட்டப்பட்டது. இக்கோயிலில் ஈசான மூலையில் பச்சை கல்லிலான மகா பைரவர் வாகனமின்றி தனித்து காட்சியளிப்பது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இக்கோவில் காஞ்சி மாநகரின் தென் எல்லையாக கச்சியப்ப முனிவரால் போற்றப்படுகின்ற திருத்தலம் கோயிலில் பல்வேறு விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் ,பெருநகர் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசம் விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 15-ஆம் தேதி வெகு விமரிசையாக தைப்பூச விழா துவங்கியது. இதனை அடுத்து கொடியேற்றம் நடைபெற்றது. பகல் மற்றும் இரவு வேளையில் சுவாமி புறப்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆறாம் நாள் காலை திருக்கல்யாணம் ரிஷப வாகன சேவை மற்றும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தைப்பூச பெருவிழாவில் இரவு உற்சவங்கள் சிறப்பு இடத்தை பிடிக்கும். நேற்று இரவு திருக்கோவிலில் சுவாமி யானை வாகனத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவிற்கான ஏற்பாட்டை கிராம பெரியோர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.தைப்பூசம் எப்போது?
கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையாக தை மாதம் பிறந்தது. இதையடுத்து, தைப்பூச கொண்டாட்டத்திற்கு முருக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தைப்பூசமானது குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை வருகிறது. இதனால், இந்த தைப்பூசம் இன்னும் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. வரும் 25ம் தேதி காலை 9.14 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 26ம் தேதி காலை 11.07 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. இதனால், 25ம் தேதியே தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இது மட்டுமின்றி வரும் 24ம் தேதி இரவு 10.44 மணி முதல் தைப்பூச தினமான 25ம் தேதி இரவு 11.56 மணி வரை பௌர்ணமி திதி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
களைகட்டும் முருகன் கோயில்கள்:
தைப்பூச தினத்தில் முருகன் கோயில்கள் களைகட்டி காணப்படும். குறிப்பாக, அறுபடை வீடுகளான திரு ப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் குவிவார்கள். தைப்பூச தினத்தை முன்னிட்டு அறுபடை வீடுகள் மட்டுமின்றி அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகங்களும் நடைபெறும். அறுபடை வீடுகள் தலங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் விரதம்:
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களுக்கு பாத யாத்திரையாகவோ அல்லது வாகனங்களிலோ சென்று வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், காவடி எடுத்தும், வேல் குத்தியும் தங்களது விரதத்தை நிறைவேற்றுவார்கள். தைப்பூச திருநாளில் முருகப்பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி மற்றும் திருப்புகழ் ஆகிய பாடல்களை கோயில்களில் பக்தர்கள் பாராயணம் செய்வது வழக்கம் ஆகும்.தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற முருகன் கோயிலிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan Joining Hands With DMK In Parliamentary Election Emergency Meeting Of MNM Party Today | MNM Meeting: நாடாளுமன்ற தேர்தலுக்கு என்ன செய்யலாம்?
MNM Meeting: மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் கூட்ட முடிவில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் அவசரக் கூட்டம்:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று காலை 11:30 மணிக்கு தலைமை அலுவலகத்தில் (ஆழ்வார்பேட்டை) மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தில் நிர்வாகிகள் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று தமிழக நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை?
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில், மக்கள் நீதி மய்யத்தின் இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேர்தலை எதிர்கொள்வது எப்படி, தனித்து போட்டியிடலாமா அல்லது பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாமா? கூட்டணி அமைத்தால் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா? எதிர்காலம் என்ன? உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு கூட்டணியை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக உடன் கைகோர்க்கும் கமல்?
கடந்த 2018ம் ஆண்டு கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம், இதுவரை 2 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அக்கட்சி, 37 தொகுதிகளில் களம்கண்டு வெறும் 0.4 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. அதேநேரத்தில், 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 180 தொகுதிகளில் போட்டியிட்டு 2.62 சதவிகித வாக்குகளை பெற்றது. இந்நிலையில் தான் கடுமையாக விமர்சித்து வந்த திமுக உடன் கடந்த சில மாதங்களாக, கமல்ஹாசன் நட்பு பாராட்டி வருகிறார். சென்னை வெள்ளத்தின் போது எதிர்க்கட்சிகள் பலவும், திமுகவை கடுமையாக விமர்சித்த போதும் கூட கமல் அரசுக்கு ஆதரவான கருத்தையே தெரிவித்தார். இதனால், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் திமுக உடன் கூட்டணி, அமைத்து தேர்தலில் களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தங்களது பணிகள முடுக்கிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவையில் கமல் போட்டி?
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம், கமல் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். இந்நிலையில், மக்களவை தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைத்து, கோவை தொகுதியில் களமிறங்க கமல் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் இரண்டிலும் மக்கள் நீதி மய்யம் கோவையில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது. இத்தகைய சூழலில், அங்கு திமுக கூட்டணியுடன் களமிறங்கினால், நிச்சயம் வெற்றியை தனதாக்கலாம் என கமல் கணக்கிட்டு வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 AM Headlines: பிரமாண்டமாக நடந்து முடிந்த ராமர் கோயில் குடமுழுக்கு.. கூட்டணி குறித்து பேசிய கமல்.. இன்னும் பல..!

தமிழ்நாடு:

நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள், ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்

திமுக இளைஞரணி மாநாடு வெற்றியை கண்டு அரசியல் எதிரிகள் அலறல், பாஜகவினர் வதந்தி பரப்பும் வாட்ஸ் அப் யுனிவர்சிட்டிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் – ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்ரல் 1 முதல் புதிய கட்டுப்பாடு

அலங்காநல்லூர் அருகே பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் – முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுகவில் தொகுதிப்பங்கீடு, பிரசாரத்திற்கு தனித்தனி குழு – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழ்நாட்டில் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் விவகாரம்; எடப்பாடி தொடர்ந்த வழக்கு தள்ளிவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பணிகள் திட்டமிடல் தொடர்பாக நாளை முதல் திமுக தொகுதி வாரியான பொறுப்பாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளது.

அடிப்படை கூட தெரியாமல் பேசுகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் – அமைச்சர் சேகர் பாபு

இந்தியா:

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு – பிரதமர் மோடி முன்னிலையில் 121 வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழுங்க கோலாகலமாக நடந்தது

அசாமில் கோயிலுக்கு செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு – தொண்டர்களுடன் அமர்ந்து சாலையில் போராட்டம்

ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து வைத்தார்.

புதிய நோய் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தி தெரியாது போடா என்ற வாசகம் பதிந்த டி-ஷர்ட் அணிந்த தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு பாஜகவின் இந்த பதிவுக்கு உதயநிதி பதிலடி தந்துள்ளார்.

மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவது மிகவும் ஆபத்து: ராமர் கோயில் திறப்பு குறித்து நடிகர் கிஷோர் கருத்து

அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இனி ஆண்டுதோறும் அங்கு 5 கோடி சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம்:

ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்வு.

இலங்கையின் தெற்கு மாகாணத்தில் 5 பேர் சுட்டுக்கொலை.

பொது அறிவு கொண்ட சாதாரண நபர் அமெரிக்க அதிபராக வேண்டும் – எலன் மஸ்க்

சீனாவில் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 47 பேர்- மீட்புப்பணிகள் தீவிரம்

பாப் பாடலை கேட்டு ரசித்த சிறுவன் – 12 ஆண்டுகள் கடும் தண்டனை விதித்த வடகொரியா அரசு

விளையாட்டு:

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்.

கேலோ இந்தியா போட்டி: பதக்க பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம்.

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

பிரபல நடிகர் விக்ராந்தின் மகன் யஷ்வந்த் 14 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு அணிக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tamil Nadu Cabinet Meeting Gonna Held Today Ahead Of Cm Stalin Foreign Visit | Tamil Nadu Cabinet Meeting: இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்
Tamil Nadu Cabinet Meeting: தமிழ்நாடு அரசின் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்:
தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் காலை 11 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் எனவும், அதைதொடர்ந்து அரசு சார்பில் முக்கிய முடிவுக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மேற்கொள்ளப்பட பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த முதலீடுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, வரும் 28ம் தேதி முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தொடங்க உள்ள சூழலில், இன்றைய அம்மைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் தமிழ்நாட்டில் இல்லாத சூழலில் சட்ட-ஒழுங்கை பாதுகாப்பது, பிரச்னைகளை கையாள்வது போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. அதோடு, மக்கள் நலதிட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும்போது சில தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு சார்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அந்த நிறுவனங்கள் குறித்தும், அவர்களுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதி அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்:
ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்கும். ஆனால் நடப்பாண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பிரதமர் மோடி தமிழகம் வருகை மற்றும் முதலமைச்சரின் வெளிநாடு பயணம் ஆகிய காரணங்களால் சட்டப்பேரவை கூடுவது தாமதமாகி வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் மற்றும் ஆளுநர் உரை குறித்து முக்கிய விவாதம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம்:
வரும் 28ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்கிறார். அந்த பயணத்தை முடித்துக் கொண்டு பிப்ரவரி முதல் வாரம் தான் அவர் சென்னை திரும்புகிறார். இந்த பயணத்தின் போது அவர் மருத்துவ சிகிச்சை பெற உள்ளதாகவும், சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், முதலமைச்சர் ஸ்டாலின் வருகைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 2வது வாரம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
43 years of Mouna Geethangal: குடும்ப உறவை சொல்லிய ஆல் டைம் ஃபேவரட் படம்: பாக்யராஜ் நடத்திய மாயாஜாலம்

தமிழ் சினிமா இன்றளவும் கொண்டாடும் ஒரு திரைக்கதை வல்லுநர், திரைக்கதை மேதை மற்றும் ஜனரஞ்சகமான இயக்குநர் என்றால் எள்ளளவும் சந்தேகமின்றி அது இயக்குநர் பாக்யராஜ் தான். தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தவர்களுக்கு நிச்சயம் இது தெரியும்.

குடும்ப உறவுகளை பற்றியும் சமூக சிக்கல்களை பற்றியும் திரைக்கதை அமைப்பது என்பது மாயாஜால கதைகளை காட்சி படுத்துவதை காட்டிலும் சவாலானவை. ஏனென்றால் இந்த கதைகள் நம்மையும் நம்மை சுற்றியும் அன்றாட வாழ்வில் நிகழ்பவை. இவை ஸ்வாரஸ்யமான நிகழ்வுகளாக இருக்காது என்றாலும் அதனுடன் கற்பனையை சேர்த்து மெருகேற்றி பார்வையாளர்கள் ரசிக்கும் படி தொகுத்து வழங்குவது தான் ஒரு சிறந்த திரைக்கதையின் சிறப்பம்சம்.

அதில் கொஞ்சம் பிசிறு தட்டினாலும் பார்வையாளர்களை அது கவர தவறிவிடும். அப்படி கதை சொல்லலில் பி ஹெச்.டி பெற்றவர் இயக்குநர் பாக்யராஜ். அப்படி அவரின் அழமான அழுத்தமான படைப்புகளில் ஒன்று தான் 1981ம் ஆண்டு பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடித்த படம் தான் ‘மௌன கீதங்கள்’ திரைப்படம். இந்த சூப்பர் ஹிட் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 43 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

மூன்றாவது படத்திலேயே புகழின் உச்சாணிக்கொம்பில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார் பாக்யராஜ். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கணவன் தவறு செய்கிறான். அதை மனைவியிடம் குற்றவுணர்ச்சி தாங்காமல் உளறியும் விடுகிறான். அவனை மன்னிக்க மனமில்லாமல் கணவனை பிரிந்து செல்லும் மனைவிக்காக பொறுமையுடன் காத்திருந்து தன்னுடைய அன்பு மனைவிக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறான். பின்னர் ஒரு இடைவேளைக்கு பிறகு கணவனும் மனைவியும் இணைவது தான் ‘மௌன கீதங்கள்’ படத்தின் கதைக்களம்.

ஹீரோ ஹீரோயின் சந்திப்பு, காதல், திருமணத்திற்கு பிறகான ஊடல் கூடல், சூழ்நிலை காரணமாக உறவில் விரிசல், பிரிவு, இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திப்பு, மனமாற்றம், மீண்டும் உறவு கூடுவது இது தான் படத்தின் அடுத்தடுத்த கட்டம் ஆனால் அந்த கட்டமைப்பை நேராக சொல்லாமல் கலைத்து போட்டு அதில் நகைச்சுவை கலந்து ஸ்வாரஸ்யமாக ஒரு படைப்பாக கொடுத்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

படத்தின் டைட்டில் கார்டு போடுவதில் இருந்து படக்குழுவினரை அறிமுகம் செய்து வைப்பது என அனைத்திலுமே புதுமை தான். பாக்யராஜ் நடித்த மூன்றாவது படம் ‘மௌன கீதங்கள்’ என்றாலும் இது தான் அவர் முதன் முதலில் தன்னுடைய சொந்த குரலில் பேசி நடித்த படம்.

கங்கை அமரன் இசையில் மூக்குத்திப் பூமேலே, டாடி டாடி ஓ மை டாடி, மாசமோ மார்கழி மாசம் உள்ளிட்ட அனைத்து பாடல்களுக்கு ரசிக்கும் படியாக அமைந்தது. மிக பிரமாண்டமான வெற்றியை பெற்ற இப்படம் வெள்ளிவிழா கொண்டாடியது. இந்த ஆல் டைம் பேவரைட் படங்கள் எல்லாம் ரீ மேக் செய்யப்படலாமே என்பது ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Petrol And Diesel Price Chennai On January 23rd 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 23: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 23ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 612வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்” என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, “நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
PA Ranjith about Ramar temple issue : ''கோவில் கொடியவர்கள் கூடாரமா மாறிடக்கூடாது''

”கோவில் கொடியவர்கள் கூடாரமா மாறிடக்கூடாது”

Idhayam Zee Tamil Serial 22nd January Written Episode Update | Idhayam Serial: தமிழுக்காக ஆதி செய்த விஷயம்.. பதறும் பாரதி
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.
சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் ஆபீஸ் வந்த பாரதியை தமிழ் சரியாகும் வரை லீவு எடுத்து அவளை கவனித்துக் கொள்ளுமாறு ஆதி வீட்டுக்கு அனுப்பி வைத்தான். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது ஆதி பாரதியை கூப்பிட்டு எல்லோருக்கும் ஒரு மாத சம்பளத்தை போனசாக போடுமாறு கூறுகிறான். பிறகு கேசவை அழைத்து பாலத்தின் மீது வைத்திருக்கும் காதலையும் தமிழ் தன்னை அப்பா எனக் கூப்பிடும்போது உணர்ந்த உணர்வையும் பற்றி சொல்லி கண் கலங்குகிறான். “அவங்க ரெண்டு பேரும் என் கூட சேரனும் என்பது தான் இந்த ஜென்மத்தோட விதி” என சொல்கிறான்.
கேசவ் “அதான் தமிழ் உன்னை அப்பாவை ஏத்துக்கிட்டாளே.. உடனே பாரதி கிட்ட பேசி அவளோட முடிவு என்னன்னு கேளு” என்று சொல்ல, “அவளுக்காக நான் காத்திருப்பேன், இப்போ உடனே கேட்டா அவ கஷ்டப்படுவா” என்று சொல்கிறான்.
அடுத்து தமிழ் ஸ்கூல் கிளம்ப, ரத்தினம் “இன்னைக்கு வேணா நாளைக்கு போகலாம்” என்று சொல்ல, “இல்லை டிராயிங் போட்டி இருக்கு, நான் கண்டிப்பா போவேன்” என்று அடம்பிடித்து ஸ்கூல் வருகிறாள். இங்கே ஸ்கூலில் டிராயிங் போட்டி தொடங்க, தமிழ் பயப்பட, அங்கு வந்த ஆதி ஜன்னல் வழியாக தமிழை கூல் செய்து டிராயிங் நல்லபடியாக வரைய ஊக்கப்படுத்துகிறான்.
மறுபக்கம் ஆபீஸில் பாரதி தமிழ் ஸ்கூலில் ட்ராயிங் போட்டி நடப்பதால் பர்மிஷன் கேட்பதற்காக ஆதியைத் தேட, ஆதி இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் பதறுகிறாள். இங்கே தமிழ் தாத்தா, பாட்டி, அம்மா என எல்லோரும் குடும்பமாக இருக்கும் புகைப்படத்தை வரைந்து இருக்கிறாள். அதில் ஆதியும் இருப்பது போல வரைந்து அதை ஆதியிடம் காட்டுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய இதயம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
Ayodhya Ram Mandir Ms Dhoni Did Not Attend The Opening Ceremony Of Ram Temple Do You Know Why | Ayodhya Ram Mandir: ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்த எம்.எஸ்.தோனி
ராமர் கோவில் திறப்பு விழா:
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேகம் விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார் எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்கள் பங்கேற்பதற்காக ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
அதேபோல் இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்க கிரிக்கெட் ஜாம்பவான்களான கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்ட முக்கிய விளையாட்டு வீரர்கள் அழைக்கப்பட்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே, ரவிசந்திரன் அஸ்வின், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் மற்றும் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரும் அழைக்கப்பட்டனர். இதுபோக, இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ். சாய்னா நேவால், பி.வி.சிந்து மற்றும் அவரது பயிற்சியாளர் ப்ல்லேலா கோபிசந்த், பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, கால்பந்து வீராங்கனை கல்யாண் சௌபே, தடகள வீராங்கனை கவிதா ரவுத் துங்கர், பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் வீராங்கனை தேவேந்திர ஜன்ஜாடியா ஆகியோருக்கும் விழாவுக்கு அழைப்பு வந்துள்ளது.
விழாவை புறக்கணித்த எம்.எஸ்.தோனி:
அந்த வகையில் பல முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலலந்து கொண்டனர். விளையாட்டு வீரர்களை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர், ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் பிரசாத், அணில் கும்ப்ளே மற்றும் மிதாலி ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, தோனி சாதி, மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் விருப்பம் காட்டுவது இல்லை என்பதால், இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல் சமூக வலைதளங்களிலும் அதிக ஈடுபாடு இல்லாத அவர், பொது இடத்திற்கு வந்து பிரபலம் தேடிக்கொள்ள விரும்பியது கிடையாது. இதுபோன்ற சில காரணங்களினால் தான் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் இருந்திருப்பார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Cheteshwar Pujara: முதல் தர போட்டியில் 20,000 ரன்கள்.. கவாஸ்கர், சச்சின், டிராவிட்டின் சிறப்பு கிளப்பில் நுழைந்த புஜாரா!
மேலும் படிக்க: Virat Kohli: அச்சச்சோ! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இருந்து விராட் கோலி விலகல் – என்னாச்சு?

Watch Video: சும்மாவே சூப்பரா ஆடுவாங்க! தங்கச்சி நிச்சயதார்த்தத்தில் ரவுடி பேபியாக மாறிய சாய் பல்லவி!

சாய் பல்லவி

பிரேமம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி. விபூதி வைத்த நெற்றி, அழகான பல் வரிசை, திக்கப் பேசும் தமிழ் என தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இன்னும் பல ஆண்டுகள் நிரந்தர க்ரஷ் ஆக இருக்க அனைத்து சாத்தியங்களும் அவருக்கு உண்டு.

நடிகையாக மட்டுமில்லை, தனது நடனத்தின் மூலமாகவும் எல்லாருக்கும் அவர் ஷாக் கொடுத்திருக்கிறார். “உங்களில் யார் அடுத்த பிரபு தேவா” நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆக நிறைவு செய்தவர் சாய் பல்லவி. ரவுடி பேபி பாடலில் தனுஷூடன் அவர் ஆடிய ஆட்டம் இன்னும் யூடியூபில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

தங்கையின் நிச்சயத்தில்..

தற்போது சாய் பல்லவி தனது தங்கை பூஜா கண்ணனின் திருமணக் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளார். சாய் பல்லவியின் இளைய சகோதரியான பூஜா கண்ணன், கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான சித்திரை செவ்வானம் படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. எனினும் தன் அக்கா சாய் பல்லவியுடன் இணைந்து புகைப்படங்கள் பகிர்வது, சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பது என தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு அவர்களுடன் இணையத்தில் உரையாடி வருகிறார்.

View this post on Instagram

A post shared by Pooja Kannan (@poojakannan_97)

இதனிடையில் பூஜா கண்ணனும் வினீத் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். தற்போது இந்த இருவருக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பொதுவாக பகிர்ந்தார். இந்தத் திருமண நிச்சயத்தில் கலந்துகொண்ட நடிகை சாய் பல்லவி தனது நண்பர்கள் உறவினர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Pinkvilla South (@pinkvillasouth)

எஸ்.கே 21

தற்போது சாய் பல்லவி சிவகார்த்திகேயனுடன் எஸ்.கே 21 படத்தில் நடித்து வருகிறார். ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

Ayodhya Ram Temple: அயோத்தி பிரச்னைக்கு முடிவு கட்டிய நீதிபதிகள்! இப்போ என்ன செய்றாங்க?

கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியது.

அயோத்தி வழக்கு:

ராமர் கோயில் கட்டும் பொறுப்பு, ஓர் அறக்கட்டளைக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அறக்கட்டளையை மத்திய அரசே அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்பு வாரியத்துக்கு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அயோத்தி வழக்கில், ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்தனர். நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.பாப்டே, ஒய்.வி.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட ஐந்து நீதிபதிகள் அமர்வு இந்த பிரச்னைக்கு முடிவு கட்டியுள்ளது. இந்த நீதிபதிகள் யார்? தற்போது எந்த பொறுப்பில் உள்ளனர்? என்பதை பார்க்கலாம். 2019ஆம் ஆண்டு அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த 5 பேரில், நான்கு பேர் ஓய்வு பெற்றுள்ளனர். ஒரு நீதிபதி இன்னும் உச்சநீமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார்.

ரஞ்சன் கோகாய்:

அசாம் மாநிலத்தில் 1954ல் பிறந்தார் ரஞ்சன் கோகாய். டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்களை பட்டப்படிப்பை முடித்த இவர், அதே பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். 1978ல் வழக்கறிஞராக பதிவு செய்த ரஞ்சன், 2001ல் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றார். இவர் பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றத்திலும் பணியாற்றினார்.

இதன் பின், 2011ஆம் ஆண்டு ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரஞ்சன், 2012ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டடார். இவர் 2019ல் ஓய்வு பெற்ற இவர், நான்கு மாதங்களுக்கு பிறகு அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரை ராஜ்யசபாவுக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் அவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

எஸ்.ஏ.பாப்டே:

1956ல் நாக்பூரில் பிறந்தார் எஸ்.ஏ.பாப்டே. 1978ல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து முடித்தார். தனது பணியை மும்பை நீதிமன்றத்தில் தொடங்கிய இவர், 1998ல் மூத்த வழக்கறிஞரானார். 2000ல் மும்பை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2012ல் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான பாப்டே, 2013ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றிய இவர், 23 ஏப்ரல் 2021ல் ஓய்வு பெற்றார். தற்போது மகாராஷ்டிரா தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார்.

அசோக் பூஷண்:

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அசோக் பூஷண், 2001ல் அலகாபாத் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2015ல் கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆனார். 2016ல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2021ல் ஓய்வு பெற்றார். இதன்பிறகு, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியில் உள்ளார்.

அப்துல் நசீர்:

மங்களூரைச் சேர்ந்த அப்துல் நசீர், 2003ல் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதை நீதிமன்றத்தில் ஏறக்குறைய 15 ஆண்டுகள் பரியாற்றிய இவர், 2017ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2023ல் ஓய்வு பெற்ற இவர், பிப்ரவரி 12 2023ல் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் எந்த ஒரு உயர்நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒய்.வி.சந்திரசூட்:

1982ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார் ஒய்.சந்திரசூட். 1998 இல் பம்பாய் உயர் நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு, அவர் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார் . பின்னர், 2000ல் மும்பை உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட இவர், 2013ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2016ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2021ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கொலீஜியத்தில் உறுப்பினர் ஆனார். 2022ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், நவம்பர் 2024ல் வரை இப்பதிவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

PA Ranjith about Ramar temple issue : "President-ட ஏன் கூப்பிடல?" RAJINI VS PA RANJITH ராமர் கோயில் திறப்பு விழா

"President-ட ஏன் கூப்பிடல?" RAJINI VS PA RANJITH ராமர் கோயில் திறப்பு விழா

Ayodhya To Emerge As India’s Biggest Tourist Hotspot, Attract Over 50 Million Visitors Annually Jefferies
நாடு முழுவதும் பல ஆண்டுகளாக பல எதிர்பார்ப்புகளையும், விவாதங்களையும் ஏற்படுத்திய அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்பட்டது. பிரதமர் மோடி திறந்து வைத்த இந்த கோயில் திறப்பு விழாவை வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
ஆண்டுதோறும் 5 கோடி சுற்றுலா பயணிகள்:
ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது முதலே ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி நகரையும் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. இதன்மூலம் அயோத்தியை வளர்ச்சியடைந்த தொழில் நகரமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று ராமர் கோயில் திறக்கப்பட்டதன் மூலமாக இனி நாட்டிலே அதிக பக்தர்கள் வரும் மத தலமாக அயோத்தி மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புகழ்பெற்ற ஜெப்ரீஸ் ப்ரோக்கரேஜ் வெளியிட்ட தரவுகளின்படி அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆண்டுதோறும் 5 கோடி பக்தர்கள் உள்பட சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மத சுற்றுலா தளங்களின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அயோத்தி மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரிய சுற்றுலா புனித தலம்:
தற்போது, நாட்டிலே அதிக சுற்றுலா பயணிகள் வரும் புனித தலங்களாக பொற்கோவில் மற்றும் திருப்பதி திகழ்ந்து கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் அதை அயோத்தி முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் உருவாக்கப்பட உள்ள புதிய விமான நிலையம், தற்போது இயங்கி வரும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் இதை சாத்தியமாக்க உதவும் என்று நம்ப்படுகிறது.
அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு ஆண்டுதோறும் 3 முதல் 3.5 கோடி சுற்றுலா பயணிகளும், திருப்பதிக்கு 2.5 கோடி முதல் 3 கோடி சுற்றுலா பயணிகளும் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். அயோத்தி புதிய விமான நிலையத்தின் முதற்கட்டமே தற்போது செயல்பாட்டில் உள்ளது. இது 10 லட்சம் பயணிகளை கையாள முடியும் அளவிற்கு இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையமானது 2025ம் ஆண்டு சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பின்னர், இந்த விமான நிலையமானது 6 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்படும் அயோத்தி:
அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் தற்போது 60 ஆயிரம் பயணிகளை தினமும் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. மேலும், 1200 ஏக்கர் பரப்பளவில் பசுமை நகரம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அயோத்தியில் தற்போது 17 ஹோட்டல்கள் 590 அறைகளுடன் இயங்கி வருகிறது. 73 புதிய ஹோட்டல்கள் கட்டப்பட உள்ளது. அதில் 40 தங்கும் விடுதிகள் பணிகள் நடைபெற்று வருகிறது. நாட்டின் மிகப்பெரிய ஹோட்டல்களும் அயோத்தியில் விரைவில் தங்களது ஹோட்டல்களை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புத்தாண்டு பிறப்பு முதலே இந்தியாவின் பேசுபொருளாக அயோத்தி ராமர் கோயில் மாறியுள்ளது. தொடர்ந்து அயோத்தி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் தற்போது நிலத்தின் விலையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் இனி பக்தர்கள் உள்பட சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் அயோத்தி நகரின் பொருளாதாரம் பன்மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்! 380 கல் தூண்கள்! 15 மீட்டர் தடிமன் அடித்தளம்!
மேலும் படிக்க: Ayodhya Ram Temple: பாபர் மசூதி இடிப்பும் அயோத்தி ராமர் கோயிலும்- முக்கிய முகங்கள் இவர்கள்தான்!

PA Ranjith about Ramar temple issue : "President-ட ஏன் கூப்பிடல?" RAJINI VS PA RANJITH ராமர் கோயில் திறப்பு விழா

"President-ட ஏன் கூப்பிடல?" RAJINI VS PA RANJITH ராமர் கோயில் திறப்பு விழா

ICC Women’s T20I Team Of The Year For 2023 Announced Deepti Sharma Features As Lone Indian | 2023ம் ஆண்டின் சிறந்த மகளிர் டி20 அணி! இந்திய வீராங்கனை ஒருவருக்குத்தான் இடம்
ஐ.சி.சி. ஆண்டுதோறும் சிறந்த டி20 அணி, சிறந்த ஒருநாள் போட்டி, சிறந்த டெஸ்ட் அணியை அறிவிப்பார்கள். மகளிர் அணி, ஆடவர் அணி இரண்டு அணிகளும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படுவார்கள். அந்த வகையில் கடந்தாண்டுக்கான சிறந்த மகளிர் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த மகளிர் டி20 அணி:
ஐ.சி.சி. அறிவித்துள்ள சிறந்த மகளிர் டி20 அணியின் விவரம்: சமரி அதபத்து (கேப்டன்) பெத் மூனி ( விக்கெட் கீப்பர்), லாரா வோல்வார்ட், ஹேலி மேத்யூஸ், நாத் ஸ்சிவியர் ப்ரூன்ட், அமெலியா கெர், எல்லீஸ் பெர்ரி, ஆஷ் கார்ட்னர், தீப்தி சர்மா, சோஃபி எக்லெஸ்டோன், மேகன் ஸ்கட்.
ஐ.சி.சி. அறிவித்துள்ள சிறந்த மகளிர் அணியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவிற்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. 1997ம் ஆண்டு உத்தரபிரதேசம் ஆக்ராவில் பிறந்த தீப்தி சர்மா இடது கை பேட்டிங் மற்றும் இடது கை பந்துவீச்சாளரும் ஆவார். அவர் இதுவரை 4 டெஸ்ட் போட்டியில் ஆடி 4 அரைசதங்களுடன் 317 ரன்களும், 86 ஒருநாள் போட்டியில் ஆடி 1 சதம், 12 அரைசதங்களுடன் 1982 ரன்களும், 104 டி20 போட்டிகளில் ஆடி 2 அரைசதங்களுடன் 1015 ரன்கள் எடுத்துள்ளார்.
தீப்தி சர்மா:
பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்தும் தீப்தி சர்மா டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும், டி20 போட்டியில் 113 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.சி.சி. அறிவித்த சிறந்த மகளிர் டி20 அணியில் வேறு எந்த முன்னணி வீராங்கனைகளுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சமரி அதபத்து மகளிர் டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 50 பந்துகளில் 68 ரன்கள் அடித்து அசத்தினார். அவர் 2023ம் ஆண்டு மட்டும் டி20 போட்டிகளில் 470 ரன்கள் விளாசியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 130.91 ஆக வைத்துள்ளார்.
வீராங்கனைகள்:
ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீராங்கனையான பெத் மூனிக்கும் சிறந்த அணியில் இடம்கிடைத்துள்ளது. அவர் உலகக்கோப்பை டி20யில் மட்டும் 410 ரன்கள் விளாசியுள்ளார். அணியில் இடம்பிடித்துள்ள தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த லாரா வோல்வார்ட்த் கடந்த டி20 உலகக்கோப்பையில் 586 ரன்களை விளாசினார். கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் 700 ரன்களை ஹேலி மேத்யூஸ், 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
சிறந்த சுழற்பந்துவீச்சு வீராங்கனையான அமெலியா கெர் 2023ம் ஆண்டில் அற்புதமாக ஆடியுள்ளார். மேலும், சோபி எக்லெஸ்டன் மற்றும் ஆஷ் கார்ட்னர் ஆகியோரும் தத்தம் நாட்டு அணிகளுக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.சி.சி. அறிவித்த சிறந்த மகளிர் டி20 அணியில் இடம்பிடித்த ஒரே இந்திய வீராங்கனையான தீப்தி சர்மாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மேலும் படிக்க: IND vs ENG: இந்திய மண்ணில் 12 ஆண்டுகால வறட்சியை முறியடிக்குமா இங்கிலாந்து..? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
மேலும் படிக்க: Cheteshwar Pujara: முதல் தர போட்டியில் 20,000 ரன்கள்.. கவாஸ்கர், சச்சின், டிராவிட்டின் சிறப்பு கிளப்பில் நுழைந்த புஜாரா!
Ram Mandir Inauguration Rama Rajjiyam; There Are No Words To Express Happiness – Governor Tamilisai | Ram Mandir Inauguration: கிராம ராஜ்ஜியமே ராம ராஜ்ஜியம்; மகிழ்வை வெளிப்படுத்த, வார்த்தைகளே இல்லை
கிராம ராஜ்ஜியமே ராம ராஜ்ஜியம் என்றும் இந்த நாளின் மகிழ்வை வெளிப்படுத்த, வார்த்தைகளே இல்லை எனவும் ஆளுநர் தமிழிசை பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஊடகங்களில் இடம் பெற்றுள்ள தலைப்புச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கும் பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிராண பிரதிஷ்டை செய்ததும்தான். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது.
இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார் எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் பல்வேறு தரப்பினர் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு தொடர்பாக நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தெலங்கானா ஆளுநரும் புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை, கிராம ராஜ்ஜியமே ராம ராஜ்ஜியம் என்றும் இந்த நாளின் மகிழ்வை வெளிப்படுத்த, வார்த்தைகளே இல்லை எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ’’ஒட்டுமொத்த உலகமும் இந்த நிகழ்வைக் கண்டுகளிக்கிறது. கொண்டாடுகிறது. எங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.
சிறந்த அரசாங்கம் என்பது ராம ராஜ்ஜியம்தான். தமிழில் கிராம ராஜ்ஜியத்தை சிறந்த ராஜ்ஜியமாகச் சொல்வார்கள். கிராம அளவில், நிர்வாகம் செய்யப்படுவதுதான் கிராம ராஜ்ஜியம். அதுவே ராம ராஜ்ஜியம்.
#WATCH | Hyderabad: After the conclusion of the Shri Ram Janmabhoomi Pran Pratishtha ceremony in Ayodhya, Telangana Governor Tamilisai Soundararajan says, “The whole world witnessed the ceremony and is celebrating… There are no words to express our happiness. In Tamil also we… pic.twitter.com/AkUkHl3OSh
— ANI (@ANI) January 22, 2024கடவுள் ராமர் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது முக்கியமான தருணம். இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்களின் மகிழ்வை வெளிப்படுத்த, சொற்களே இல்லை’’ என்று ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Siragadikka Aasai:ரோகினியின் மாமா வருவதால் ஓவர் அலப்பறை செய்யும் விஜயா- விழி பிதுங்கும் குடும்பத்தினர்- சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

மீனாவும்-முத்துவும் கட்டிலின் மீது குடையை விறித்து வைத்து இரவில் பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றனர். மறுநாள் காலையில் ஊரில் பக்கத்து வீட்டில் உள்ள பெண்கள் எல்லாம் குடையுடன் பாட்டி வீட்டுக்கு வருகின்றனர். அவர்கள் முத்து – மீனாவிடம் ”எங்கள் வீட்லயும் தான் குடை இருக்கு கட்டில் இருக்கு என் புருஷனுக்கு இப்படி ஒரு விஷயம் தோணவே இல்லையே” என சொல்கின்றனர். மேலும் அதில் ஒரு பெண் ”எங்க புருஷன்களுக்கு அந்த அளவுக்கு விவரம் பத்தாது” என சொல்கிறார். மேலும் இன்னைக்கும் வெளிச்சம் வரும் இல்ல அப்போ பார்த்துக்குறோம் என்று சொல்லி விட்டு அங்கு இருந்து செல்கின்றனர்.

விஜயா மீனாவிடம், “வடை, முருக்கெல்லாம் உன்கிட்ட செய்ய சொன்னனே” என கேட்கிறார். அதற்கு பாட்டி மீனாவிடம் வேலை சொல்வது குறித்து கேள்வி கேட்கிறார். அதற்கு விஜயா, ”இல்ல அத்தே அப்போ நான் அவர்கூட பேசிக்கிட்டு இருப்பேன் அப்போ போய் நான் இதெல்லாம் செய்ய முடியுமா?” என கேட்கிறார். விஜயா, முத்துவை பார்த்து இன்னைக்கு ஒரு நாளாவது இவன் வாய்க்கு பூட்டுப்போட சொல்லு என சொல்கிறார். ஆர்டர் கொடுத்து இருக்கு, அவங்களுக்கும் சேர்த்து தான் பூட்டு வரும்னு சொல்லு மீனா என்கிறார்.

விஜயா, மீனா போட்ட கோலத்தை பார்த்து என்ன இப்படி கோலம் போட்டு இருக்க வெல்கம்னு எழுத வேண்டியது தானே என கேட்கிறார். விஜயா வீட்டினுள் இருக்கும் கட்டிலை அங்கிருந்து எடுக்கிறார். பாட்டி என்ன பன்ற என கேட்கிறார். ”நம்ம இப்டி இருந்து பழகிட்டோம் அவரு மலேசியாவுல இருந்து வராரு, அங்க தூசியே இருக்காதாம்” என சொல்கிறார். அதற்கு முத்து, ”அம்மா அவரு ஆஸ்திரேலியாவுல இருந்து வராருனு நெனச்சிக்கிட்டு இருக்காங்க. அவரு மலேசியாவுல இருந்து தான் வராரு” என்கிறார்.

பாட்டி ஸ்ருதியிடம் ”மீனாவை பாரு 6 மணிக்கே எந்திருச்சி எல்லா வேலையும் செய்யுறா நீயும் இதையெல்லாம் பழகிக்கலாம் இல்ல” என கேட்கிறார். அதற்கு விஜயா, ”அச்சச்சோ அத்த அவளுக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல” என்கிறார். “பழகலனா பழகிக்கனும்” என பாட்டி சொல்கிறார். விஜயா திடீரென அச்சசோ நான் மறந்துட்டேனே என்கிறார்.” மீனா ஆரத்தி கரச்சி எடுத்து வை” என சொல்கிறார். ”ரோகினியோட மாமா மலேசியாவுல இருந்து வராரு இல்ல அவர ஆரத்தி எடுத்து வர வைக்க வேணாவா” என கேட்கிறார்.

விஜயா ரோகினியிடம் ”எல்லாத்துக்கும் பொறாம, உன் மாமா வரட்டும் அப்றம் பேசிக்கலாம் நாம” என்கிறார். ரோகினி இவங்க வேற வீட்டையே ஒரு வழி பண்ணிக்கிட்டு இருக்காங்க. இவரு வருவாரா இல்லையானு தெரியல என மனதில் நினைக்கிறார். ரோகினி ப்ரெளன் மணிக்கு கால் பண்ணி எங்க இருக்கிங்க என கேட்கிறார். அவரு ”5 மணிக்கே வந்துட்டேன்” என சொல்கிறார். ரோகினி அப்போ ஏன் வர்ல என கேட்கிறார். ’ஒரு பில்டப் தர வேணாவா” என கேட்கிறார். ”வெயிட் பண்னதெல்லாம் போதும் சீக்கிரம் வந்து தொலைங்க” என ரோகினி சொல்கிறார். அவர் ப்ரெளன் மணி இன்னையில இருந்து உனக்கு புதிய அத்தியாயம் ஆரம்பிக்குது என சொல்லிக்கொண்டே காரை நோக்கி செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Executives Meeting On Behalf Of DMK Constituency Wise Will Start 24 Jan MP Elections 2024
மக்களவைப் பொதுத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள தேசிய கட்சிகள் தொடங்கி மாநிலக் கட்சிகள் வரை தங்களது கட்சித் தொண்டர்களை தயார் செய்து வருகின்றனர். குறிப்பாக மத்தியில் ஆட்சியில் அசுரபலத்துடன் இருக்கும் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கிட நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் முடிவெடுத்து ஒரு அணியாக திரண்டுள்ளனர். இப்படியான நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக தமிழ்நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் உள்ள பொறுப்பாளர்களை சந்தித்து திட்டமிடவும் தேர்தல் பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கவும் முடிவெடுத்துள்ளது. இப்படியான நிலையில், இன்று அதாவது திமுக தரப்பில் இருந்து மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை மேற்கொள்வது குறித்து அறிக்கை வெளிவந்துள்ளது. அந்த அறிக்கையில்,
”தமிழ்நாடு முதலமைச்சடும் திமு கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று (22-01-2024) மாலை 5.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனவரி-21 அன்று சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டில் எழுச்சியுரையாற்றும்போது தமிழ்நாடு முதலமைச்சரும் திமு கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட/ பகுதி/ ஒன்றிய/ நகர/ பேரூர் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர் துணை மேயர் மற்றும் மண்டலக்குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள்,பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட “நிர்வாகிகள் சந்திப்பு” கீழ்க்கண்ட அட்டவணைப்படி. சென்னை, அண்ணா சாலை. “அண்ணா அறிவாலயத்தில்”நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு நாளை மறுநாள் தொடங்கி அதாவது ஜனவரி 24ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் விபரம்
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்களது தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்காமல் திமுகவே நேரடியாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பார்கள் என்பதால் உட்கட்சிப் பூசல்கள் இந்த நேரத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Makkal Needhi Mayyam Leader Actor Kamalhassan Confirm Competition Lok Sabha Election 2024
மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இச்சூழலில் நாளை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இச்சுழலில், புதுச்சேரி மாநில செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஜனவரி 22) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இன்னும் முடிவு எடுக்கவில்லை:
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் , கட்சியின் கட்டமைப்புகள் பற்றி பேசியிருக்கிறோம். அதேபோல் தேர்தல் பற்றியும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பற்றியும் பேசியிருக்கிறோம்.” என்றார். அப்போது அவரிடம் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அது பற்றி தற்போது ஏதும் பேசவில்லை” என்றார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், வரும் 22.01.2024 அன்று மாலை 4 மணிக்கு புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டமும், மறுநாள் 23.01.2024 அன்று காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டமும் கட்சி தலைமை அலுவலகத்தில்… pic.twitter.com/7pgZUsc2kN
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 21, 2024தொடர்ந்து பேசிய அவர், ”மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. தேர்தல் கூட்டணி, நான் போட்டியிடும் தொகுதி குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார். மேலும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து செய்தியாளர் ஒருவர் கமல்ஹாசனிடம் கருத்து கேட்டார். அதற்கு அவர், ‘ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து நான் 30 ஆண்டுகளுக்கு முன்பே கருத்து கூறிவிட்டேன்” என்றார்.
மேலும் படிக்க: Ayodhya Ram Temple: அயோத்தி பிரச்னைக்கு முடிவு கட்டிய நீதிபதிகள்! இப்போ என்ன செய்றாங்க?
மேலும் படிக்க: CM Stalin: தமிழ்நாடு மக்கள் பெரியாரையும் போற்றுவார்கள் பெருமாளையும் வழிபடுவார்கள் – முதலமைச்சர் ஸ்டாலின்

Ayodhya Ram Mandir: அயோத்தி குழந்தை ராமரை பொதுமக்கள் எப்போது தரிசிக்கலாம்? நேரம் என்ன? முன்பதிவு செய்வது எப்படி?

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இன்று மதியம் 12.30 மணிக்கு ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார்.

அயோத்தி ராமர் கோயில்:

உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் உள்ள ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சிறப்பு வழிபாட்டுக்கு பின்னர், அச்சிலையின் கண்களை முடியிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டு களித்தனர்.

மேலும், கோயில் திறப்பு விழாவில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் எப்போது தரிசிக்கலாம்?

இன்று நடந்த விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, அயோத்தி குழந்தை ராமரை பொதுமக்கள் எப்போது தரிசனம் செய்யலாம் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, நாளை முதல் பொதுமக்கள் அயோத்தி குழந்தை ராமரை தரிசனம் செய்யலாம் என்றும் காலை 7 மணி முதல் காலை 11.30 மணி வரையும், மதியம் 2.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையும் அயோத்தி குழந்தை ராமரை தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜாகரன் / சிருங்கர் ஆரத்தி காலை 6.30 மணிக்கும், சந்தியா ஆரத்தி – இரவு 7:30 மணிக்கு நடைபெறும். இதற்கேற்ப உங்கள் தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

முன்பதிவு செய்வது எப்படி?

ஆரத்திக்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் மற்றும் நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். தரிசன செய்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு, கோயிலில் இருக்கு முகாம் அலுவலகத்தில் இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். சரியாக அடையாள அட்டைகளை சமர்பித்து டிக்கெட்டுகளை முகாமில் பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்லைனில், https://srjbtkshetra.org/ என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், இதுவரை இந்த வசதி தொடங்கப்படவில்லை. ஒரிரு நாட்களில் இந்த இணையத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும், பொதுமக்கள் நன்கொடையும் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பே போன்ற அனைத்து யுபிஐ ஆப்ஸ் மூலமாக நன்கொடைகளை வழங்கலாம்.

பக்தர்கள் தங்களது நுழைவுச் சீட்டுகளின் இருக்கும் QR குறியீட்டை காண்பித்த பிறகு தான் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Sarathkumar: முதல் மனைவி பற்றி முதல்முறையாக மனம் திறந்த சரத்குமார் – என்ன சொன்னார்?

மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தை வென்று ஒரு ஆணழகனாக தென்னிந்திய சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் சரத்குமார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய திரையுலகிலும் பிரபலமானவர். ஒரு நடிகராக மட்டுமின்றி பாடி பில்டராக, அரசியல்வாதியாக, திரைப்பட தயாரிப்பாளராக பன்முக கலைஞராக அன்று போல் இன்றும் அதே சுறுசுறுப்புடனும் செயல்பட்டு வருகிறார்.

திரைப்பயணத்தின் தொடக்கம் :

’சமாஜம்லோ ஸ்திரீ’ என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் 1986ம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் சரத்குமார். தமிழில் ‘கண் சிமிட்டும் நேரம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும் அதற்கு பிறகு அவர் நடிகர் விஜயகாந்தின் ‘புலன் விசாரணை’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மெல்ல மெல்ல ஹீரோ அந்தஸ்து பெற்று சுப்ரீம் ஸ்டார் என கொண்டாடப்பட்டார். இன்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் சரத்குமார் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தனது திருமண வாழ்க்கை குறித்து மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தார்.

சரத்குமாரின் திருமணம் :

நடிகர் சரத்குமாருக்கும் சாயாதேவி என்பவருக்கும் 1984ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வரலக்ஷ்மி மற்றும் பூஜா என இரு மகள்கள் பிறந்தனர். மிகவும் சந்தோஷமாக பயணித்த அவர்களின் திருமண வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட, இருவரும் 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதற்கு பிறகு நடிகை ராதிகாவை 2001ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

நட்புறவு உண்டு :

சமீபத்தில் நேர்காணலில் பேசிய சரத்குமார் கடவுள் எங்கள் குடும்பத்தின் மீது கருணையோடு தான் இருக்கிறார் என்பதை நான் உணர்கிறேன். வரலக்ஷ்மியின் அம்மாவும், நானும் பிரிந்த பிறகும் எங்கள் குடும்பத்துடன் அவர் நட்புறவோடு தான் இருக்கிறார். என்றுமே என்னுடைய மகள்களை என்னிடம் பேச கூடாது என கண்டித்தது இல்லை. நிகழ்ச்சிகளில் எங்களோடு சேர்ந்து கலந்து கொள்வதும் உண்டு. எங்கள் இருவரின் பாதைகளும் வெவ்வேறு திசையில் இருந்ததால் நாங்கள் அதில் தனித்தனியாக பயணித்து வருகிறோம். அது தவிர எங்கள் இருவருக்குள்ளும் எந்த ஒரு விரோதமும் கிடையாது.

ராதிகாவும் என்னுடைய குழந்தைகளை அவருடைய குழந்தைகள் போல தான் அன்புடன் பார்த்து கொள்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் வரலக்ஷ்மிக்கும் ராதிகாவுக்கும் புரிதலில் சில பிரச்சினைகள் இருந்தாலும், பின்னர் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நண்பர்களாகிவிட்டார்கள்.

வரலக்ஷ்மியின் கருத்து :

சரத்குமாரின் மூத்த மகள் வரலக்ஷ்மியும் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருகிறார். ராதிகா என்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவி அதனால் அவர் எனக்கு அம்மாவாகி விட முடியாது. அவரை நான் ஆண்ட்டி என்று தான் அழைப்பேன். அதனால் அவரை பிடிக்கவில்லை என்ற அர்த்தமில்லை. நாங்கள் இருவரும் எங்களுக்கு இடையே இருக்கும் உறவை மேம்படுத்தி வருகிறோம். எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது என வரலக்ஷ்மியின் முன்பு ஒரு நேர்காணலில் இப்படி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Omni Buses: பொங்கல் விடுமுறை! தாறுமாறாக கட்டணத்தை வசூலித்த ஆம்னி பேருந்துகள் – அதிரடி காட்டிய போக்குவரத்து துறை!

ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை குளிர்சாதன வசதியில்லா பேருந்துகள், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் என மொத்தம் ஆறு வகையான பேருந்துகள் உள்ளன. பேருந்துகளின் தரம் மற்றும் வசதியை பொறுத்து பயணிகளே ஒவ்வொரு வழித்தடத்திலும் விருப்பப்படி பேருந்துகளை முன்பதிவு செய்கின்றனர்.

அதிக கட்டணம் வசூல் புகார்:

இந்த ஆம்னி பேருந்துகளில் ஒவ்வொரு வழித்தடத்துக்கும் கட்டணம் வேறு விதமாக வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளில் வழக்கமான நாட்களை விட பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். இதனால், பயணிகள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை தொடர்பாக புகார்களும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், பொங்கல் விடுமுறையில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ”கடந்த தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களை போலவே பொங்கல் விடுமுறை நாட்களிலும் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என எச்சரிக்கைவிடுக்கப்பட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து பெரும்பான்மையான ஆம்னி பேருந்துகள் புகார்களுக்கு இடம் அளிக்காமல் செயல்பட்டு வந்தாலும் சில பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வன்னம் இருந்ததால் தமிழக முழுவதிலும் கடந்த 10.01.2024 முதல் 21.01.2024 வரை சிறப்பு குழுக்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட்டன.

1,892 பேருந்துகளுக்கு அபராதம்:

இந்த சிறப்பு ஆய்வில் மாநிலம் முழுவதிலும் உள்ள வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், மண்டல இணை மற்றும் துணைப் போக்குவரத்து ஆணையர்கள் ஆகிய அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அனைவரும் மாநிலம் முழுவதிலும் 15,659 ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டதில் 1,892 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 36,55,414 தொகை அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்து, அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்து விதிகளுக்கு புறம்பாக தமிழ்நாட்டில் இயங்கி வரும் சுமார் 1000 ஆம்னி பேருந்துகளை வரைமுறைபடுத்துவதற்கான காலக்கெடு 31.03.2024 வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே அத்தகைய ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் உடனடியாக தொடர்புடைய மாநிலங்களில் இருந்து NOC பெற்று 31.03.2024-க்குள் தமிழ்நாட்டில் மறுபதிவு செய்துக் கொண்டு பர்மிட் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளது தேதி வரை சுமார் 550 வாகனங்களுக்கு அந்த அந்த மாநிலங்களில் NOC பெறுவதற்கான Offer Letter தமிழ்நாடு ஆணையரகத்தால் வழங்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில் பதிவு செய்து தமிழ்நாட்டில் உரிய பர்மிட் இன்றி இத்தகைய வாகனங்கள் இயங்கி வருவதால் தமிழ்நாடு மாநில அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.40 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு அரசு எடுக்கும் இந்த வரன்முறை படுத்தும் நடவடிக்கைக்கு ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் உரிய ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

01.04.2024 முதல் பிற மாநிலங்களில் பதிவு செய்து தமிழ்நாட்டில் இயங்கி வரும் வரன்முறை படுத்துப்படாத எந்த ஒரு ஆம்னி பேருந்தும் இயக்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Exciting Ram Temple Inauguration Ceremony; PM Modi Special Reaction When He Saw The Superstar RajiniKanth
நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஊடகங்களில் இடம் பெற்றுள்ள தலைப்புச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு தொடர்பானதாகத்தான் உள்ளது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்ததும்தான். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது.
இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார் எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
ராமர் கோவில் திறப்பு விழாவின் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்த ரஜினிகாந்த், அங்கிருந்து கிளம்பும்போது தனது அனுபவத்தை ஊடகவியலாளரிடம் பகிர்ந்து கொண்டார். அதில் “ இந்த வரலாற்று தருணத்தில் நான் பங்கேற்றது எனது பாக்கியமாக கருதுகின்றேன். இனி ஒவ்வொரு ஆண்டும் நான் தவறாமல் இங்கு வருவேன். இன்று இங்கு நடந்தது ஒரு இதிகாச நிகழ்வு” என பேசியுள்ளார்.
#PM’s Reaction After Seeing #Thalaivar 🤩☺️@rajinikanth @narendramodi#SuperStar #Rajinikanth#SuperstarRajinikanth#Modi #NarendraModi#Ayodhya #AyodhyaRamMandir #RamMandirPranPrathistha pic.twitter.com/oHIV8wAUjt
— KarthickPrabhakaran (@KarthiPrabha23) January 22, 2024கோவில் திறப்பு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த ரஜினிகாந்த், விழா மேடையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விருந்தினர்களுக்கான இடத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்தார். சிறப்பு விருந்தினர்களுக்கு வணக்கம் சொல்லிக்கொண்டு வந்த பிரதமர் மோடி சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்ததும், மிகவும் உற்சாகமாகி தனது இரண்டு கரங்களையும் உயர்த்தி ஏதோ கேட்டார். இதற்கு ரஜினியும் ஏதோ பதில் சொன்னார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

David Warner: ஆஸ்திரேலியா வரை எதிரொலித்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு; வார்னர் போட்ட போஸ்ட்

நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஊடகங்களில் இடம் பெற்றுள்ள தலைப்புச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு தொடர்பானதாகத்தான் உள்ளது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்ததும்தான். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார் எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பாக இணையத்தில் பலரும் தங்களது வாழ்த்துகளையும் பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றர். இதனால் இணையத்தில் நுழைந்தாலே ராமர் கோவில் தொடர்பான செய்திகளும் தகவல்களும் குவிகின்றன. இப்படியான நிலையில் வெளிநாடுகளில் இருப்பவர்களும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் டேவிட் வார்னர் ராமர் கோவில் திறப்பிற்கு ”ஜெய் ஸ்ரீராம் இந்தியா” என பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

View this post on Instagram

A post shared by David Warner (@davidwarner31)

ராமர் கோவில் குறித்த முக்கிய தகவல்கள்

அயோத்தி ராமர் கோயில் மொத்தம் 1800 கோடி ரூபாய் செலவில் 2.7 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. கோயில் கட்டப்பட்ட பகுதி 57,400 சதுர அடிகளைக் கொண்டுள்ளது. இது கட்டிடக்கலை முயற்சியின் பிரமாண்டத்தையும், அளவையும் பிரதிபலிக்கிறது.

கோயிலானது மொத்தமாக 360 அடி நீளமும் 235 அடி அகலமும் கொண்டிருக்க, அதன் சிகரத்தையும் சேர்த்து 161 அடியை உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கணிசமான அமைப்பு மூன்று தளங்களில் பரவியுள்ளது, ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டுள்ளது. போதிய அளவிலான இடவசதி வழங்கப்பட்டு இருப்பது, அங்கு பல்வேறு செயல்பாடு மற்றும் சடங்குகள் நடைபெற வழிவகை செய்கிறது.

கோயிலின் அடித்தளம் கணிசமான எண்ணிக்கையிலான தூண்களால் ஆதரிக்கப்படுகிறது. தரை தளத்தில் 160 தூண்கள் உள்ளன. முதல் தளம் 132 தூண்களாலும், இரண்டாவது தளம், சிக்கலான வடிவமைப்பு மற்றும் விவரங்களைக் காண்பிக்கும், 74 தூண்களாலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இவை கோயிலின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மை மற்றும் அழகியலுக்கு பங்களிக்கிறது.

கோயிலுக்கு கீழே 2000 அடி ஆழத்தில் ஒரு டைம் கேப்ஸ்யூல் புதைக்கப்பட்டுள்ளது. அதில் ராமர் கோயில் மற்றும் ராமர் பற்றிய தகவல்கள் பொறிக்கப்பட்ட செப்பு தகடு உள்ளது. வருங்கால சந்ததியினருக்கு கோயிலின் விவரங்களை கடத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத முக்கியத்துவத்திற்கு அப்பால், ராமர் கோயில் ஒரு கலாசார மையமாக கருதப்படுகிறது. கல்வி இடங்கள் மற்றும் தியானத்திற்கான பகுதிகளைச் சேர்ப்பது ஆன்மீக, கலாச்சார மற்றும் கல்வி நோக்கங்களை வளர்ப்பதில் கோயிலின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணியில் எஃகு அல்லது இரும்பு முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு ஒரு தனித்துவமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. பாரம்பரிய கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பன்சி பஹர்பூர் இளஞ்சிவப்பு மணற்கற்கள் பிரதான கோயில் அமைப்பைக் கொண்டுள்ளது. கிரானைட் கற்கள் அஸ்திவாரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இது கோயிலுக்கு நீடித்த அடித்தளத்தை வழங்குகிறது. கிரானைட்டின் பயன்பாடு, கோயிலின் ஒட்டுமொத்த ஆயுளுக்கு பங்களிப்பதோடு, கட்டமைப்பில் வலிமையையும் சேர்க்கிறது.

கட்டுமானமானது "ராம் ஷிலாஸ்" என்று அழைக்கப்படும் சிறப்பு செங்கற்களை உள்ளடக்கியது, அவற்றில் "ஸ்ரீ ராம்" என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கற்கள் ராமர் சேது பாலம் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கற்களை பறைசாற்றும் விதமாக பயன்படுத்தப்பட்டுள்ளன

நேபாளத்தின் கண்டகி ஆற்றில் காணப்படும் புனித புதைபடிவமான ஷாலிகிராம் பாறை ராமர் கோயில் கட்டுமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில் போற்றப்படும், ஷாலிகிராம் விஷ்ணுவின் அடையாளமாகக் கருதப்படுகிறது, இது கோயிலுக்கு ஆன்மீக பரிமாணத்தை சேர்க்கிறது.

2587 மத வழிபாட்டுத் தலங்களின் புனித மண்ணைக் கொண்டு ராமர் கோயிலின் அடித்தளம் கட்டப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவிற்கு தாய்லாந்தின் அயுத்யா நகரில் இருந்தும் மண் அனுப்பப்பட்டுள்ளது. கூடுதலாக, தாய்லாந்தில் உள்ள சாவ் பிரயா, லோப் பூரி மற்றும் பா சாக் ஆகிய மூன்று நதிகளில் இருந்தும் தண்ணீர் அனுப்பப்பட்டுள்ளது.

Seetha Raman Serial Zee Tamil Today January 22nd Episode Written Update | Seetha Raman: சுட்டுத் தள்ளப்பட்ட மகா: ராம் எடுத்த சபதம்: சிக்கப்போவது யார்?
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியல் இன்று முதல் புதிய நேரத்தில் அதாவது மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் அர்ச்சனாவும் கல்பனாவும் சேர்ந்து மகாவை சுட்டுக் கொள்ள முடிவெடுத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது மகா இரவு நேரத்தில் ஹாலில் அங்கம் இங்குமாக நடந்து கொண்டிருந்த நிலையில், இன்று சுபாஷ் ஏற்பாடு செய்த ஆள் ஒரு பக்கம், அர்ச்சனா ஒரு பக்கம், கல்பனா ஒரு பக்கம் என துப்பாக்கியுடன் மறைந்திருந்து மகாவை தாக்க ப்ளான் போட, திடீரென மகா குண்டடிப்பட்டு கீழே சரிந்து விழுந்து உயிரை விடுகிறாள்.
இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. அர்ச்சனா கல்பனாவிற்கு ஃபோன் போட்டு “நீ சொன்ன மாதிரியே செஞ்சிட்ட” என்று சொல்ல, சுபாஷ் இங்கே தான் ஏற்பாடு செய்த ஆளை மகாவை சுட்டுத் தள்ளியதற்காக பாராட்ட, யார் இந்தக் கொலையை செய்தது என குழப்பம் ஏற்படுகிறது.
பயிற்சிக்கு சென்று இருந்த ராம் வீடு திரும்பி மகாவுக்கு இறுதிச் சடங்குகளை செய்கிறான். அதுமட்டுமல்லாமல் “சித்தியை கொன்றது யாராயிருந்தாலும் சும்மா விடமாட்டேன். கண்டிப்பாக தண்டனை வாங்கித் தருவேன்” என சொல்கிறான். இப்படியான பரபரப்பான கட்டத்தில் இன்றைய சீதாராமன் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Rajinikanth – Pa.Ranjith: ராமர் கோயில் பற்றி ரஜினி பேசியது சரியா தவறா? – பா. ரஞ்சித் சொல்வது என்ன?
மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவது மிகவும் ஆபத்து: ராமர் கோயில் திறப்பு குறித்து நடிகர் கிஷோர் கருத்து
Rajinikanth: “ராமர் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் வருவேன், நான் பாக்கியசாலி” – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஊடகங்களில் இடம் பெற்றுள்ள தலைப்புச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு தொடர்பானதாகத்தான் உள்ளது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்ததும்தான். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது.

இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார் எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

ராமர் கோவில் திறப்பு விழாவின் தொடக்கம் முதல் கடைசி வரை இருந்த நடிகர் ரஜினிகாந்த், அயோத்தியில் இருந்து மாலை 6 மணி சுமாருக்கு புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ இந்த வரலாற்று தருணத்தில் நான் பங்கேற்றது எனது பாக்கியமாக கருதுகின்றேன். இனி ஒவ்வொரு ஆண்டும் நான் தவறாமல் இங்கு வருவேன். இன்று இங்கு நடந்தது ஒரு இதிகாச நிகழ்வு” எனவும் பேசியுள்ளார்.

#WATCH | Actor Rajinikanth attended the Ram temple ‘Pran Pratishtha’ in Ayodhya today

"It was a historic event and I am very fortunate. Will definitely come to Ayodhya every year," he said. pic.twitter.com/8USwYmBWoA

— ANI (@ANI) January 22, 2024

ராமர் கோயில் திறக்கப்பட்ட அதே நாளில் மம்தா கையில் எடுத்த ஆயுதம்.. சபாஷ் சரியான போட்டி..!

உத்தர பிரதேசம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் உள்ள ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அயோத்தியில் கோலாகலமாக திறக்கப்பட்ட ராமர் கோயில்:

ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், மத ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதை அனுமதிக்க மாட்டேன் என கூறி, ராமர் கோயில் திறப்பு விழாவை அவர் புறக்கணித்தார்.

இந்த நிலையில், ராமர் கோயில் திறக்கப்பட்ட அதே நாளில் அனைத்து மத நம்பிக்கை பேரணியை தொடங்கியுள்ளார் மம்தா. கொல்கத்தாவில் பேரணியை தொடங்குவதற்கு முன்பு காளிகாட் கோவிலில் அவர் வழிபாடு மேற்கொண்டார். கோயிலில் பூஜையை முடித்து கொண்டு, ஹஸ்ரா மோரில் பேரணியை தொடங்கிய மம்தா வழியில் இருந்த மசூதி, தேவாலயம் மற்றும் குருத்வாராக்களுக்கு சென்றார்.

மம்தா கையில் எடுத்த ஆயுதம்:

ராமர் கோயில் விவகாரத்தில் பாஜகவை கடுமையாக சாடிய மம்தா, "மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து ஒற்றுமையைப் பற்றி பேசும் விழாக்களை நான் நம்புகிறேன். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் திறப்பு விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டி வருகிறது” என்றார்.

மம்தா பேரணியையொட்டி கொல்கத்தா காவல்துறை உதவி ஆணையர் அளவிலான அதிகாரிகள் உட்பட 3,500 காவல்துறை அதிகாரிகள் நகரம் முழுவதும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். கூடுதல் படைகளும் தயார் நிலையில் உள்ளன.

ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று அறிக்கை வெளியிட்ட மேற்குவங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், "ஜனவரி 22, 2024 அன்று, தேசத்தின் நம்பிக்கையோடு பிணைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வை தேசம் காண உள்ளது.

பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் மேற்கு வங்காளத்திலும் நடைபெறும். நமது தேசத்தின் சாரத்தை அதன் மகத்தான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் வலுவான இணைப்புகள் மூலம் மறுவரையறை செய்யும் இந்த சிறப்பான நாளில், நமது தாய்நாட்டின் பெருமையை பகிர்ந்து கொள்ள மீண்டும் உறுதி கொள்வோம்.

அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் இந்த நிகழ்வை இனிமையாகவும் ஒளி ஏற்றி வைக்கவும் வங்காளத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நண்பர்களே, அனைவரும் சகிப்புத்தன்மையுடன் இருக்கவும், தவறான தகவல்களுக்கு இரையாக வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். சட்டம் உங்கள் பக்கம் உள்ளது. சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிக்க மக்கள் ஒற்றுமையாக எழும் நேரம் இது" என குறிப்பிட்டிருந்தார்.

Ayodhya Ram Temple Minister Nirmala Setharaman Interview At Kanchipuram – TNN | Ayodhya Ram Temple:தனியார் கோயிலுக்குள் அறநிலை துறைக்கு அதிகாரம் கிடையாது
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காஞ்சி காமாட்சியம்மன் கோவில் ராம கீர்த்தனை பஜனைக்காண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வசந்த மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் சிலை வைத்து ராம கீர்த்தனைகள் பஜனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ராம கீர்த்தனை பஜனை விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று மக்களுடன் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு மூலம் கண்டு களித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர், அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி காஞ்சிபுரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்திற்கு கீழ் செயல்படும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அந்த அரிதான காட்சியை நேரடி மூலமாக பார்த்தோம். எத்தனை முறை கூறியும் தன்னுடைய, செய்யும் முறை மாற்றிக் கொள்ளாமல் இன்று காலை வரை நாங்கள் இங்கு வரும் வரை நிறைய மக்கள் கஷ்டப்படுத்தினார்கள் என செய்தி வந்து கொண்டுதான் இருந்தது.
ஆனாலும் நான் மனசார சென்னை நீதிமன்றத்திற்கும் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் அதை தான் நினைத்தார்கள்.
இந்து மக்களின் வழிபாடு முறையை, நிலைநிறுத்திய நீதிமன்றத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாடு முழுவதும் மக்கள் மனதில் இருந்து இதில் பங்கேற்க வேண்டும் என்று ஆவலுடன் பார்த்தார்கள்.
நீதிமன்ற உத்தரவு எத்தனை பேருக்கு நேரடியாக சென்று இதுகுறித்து தகவல் சேர்ந்ததோ இல்லையோ. பலர் பார்க்கும்போது கிடைத்த ஆனந்தத்தை நாங்களும் அனுபவித்தோம். பிரதமர் 11 நாட்களாக விரதம் இருந்து வந்தார்.
நாங்கள் நேரடி ஒளிபரப்பை செய்ய மாட்டோம் என பாஜக நிர்வாகி ஒருவர் காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளித்திருப்பது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், பிச்சி பிச்சி எப்படி கேள்வி கேட்டாலும், அறநிலையத்துறை என்ன சொன்னார்கள் நாங்கள் அப்படி தடுக்கவில்லை என்று கூறினார்கள். தடுக்குறதாக எழுத்து வடிவமாக அவர்கள் கூறவில்லை. ஆனால் போலீசை வைத்துக் கொண்டு, தடுத்தார்கள்.
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் தனியார் கோவில், அறநிலை துறைக்கு அதிகாரம் இல்லை. இங்கு கூட அவர்களுடைய ஆதிக்கத்தை காட்ட முயற்சி செய்தார்கள். இங்கு கூட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலே நேரலை செய்யப்பட்டது.
இங்கு நேரலை செய்வதை கூட தடுத்தார்கள். எல்இடி வைத்து வியாபாரம் செய்பவர்களை மிரட்டினார்கள். நாடு முழுவதும் நல்ல விதமாக ஆனந்தத்துடன் மக்கள் உள்ளனர்.
இந்த நாட்டில் இந்து மக்கள் உரிமையை பறிப்பதற்கு மீண்டும் மீண்டும் முயற்சி நடந்தால், நியாயமாகவும் நீதிமன்றம் வழியாகவும் நாங்கள் செல்வமே தவிர கல்லை எடுத்துக் கொண்டு அடிப்பது சாலையில் கத்திக் கொண்டு அமர்க்களம் செய்யும் மக்கள் இல்லை. நீதிமன்றம் மூலம் நியாயமாக எங்களுக்கு நீதி கிடைத்தது நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள் மிக்க மகிழ்ச்சி என தெரிவித்து விட்டு சென்றார் என்று கூறினார்.
மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவது மிகவும் ஆபத்து: ராமர் கோயில் திறப்பு குறித்து நடிகர் கிஷோர் கருத்து

கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம், ராம் லல்லாவுக்கு (குழந்தை ராமர் சிலை) சொந்தம் என்றும் அங்கு கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமர் கோயில் திறப்பு குறித்து நடிகர் கிஷோர் கூறியது என்ன?

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோயில் வேகமாக கட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கட்டப்பட்டு வரும் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்தார். இந்த விழாவில், இந்து மத குருமார்களை தவிர்த்து நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

மசூதியை இடித்து அங்கு கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழாவுக்கு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டவர்கள் சென்றனர். ராமர் கோயில் திறப்புக்கு ஆதரவாக பல நடிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், மதச்சார்பற்ற நாட்டில் மசூதியை இடித்துவிட்டு கோயிலை கட்டுவது சரியா என பலர் கேள்வி வருகின்றனர்.

அந்த வகையில், ராமர் கோயில் திறப்பை கடுமையாக விமர்சித்துள்ள நடிகர் கிஷோர், "கோயில், மன்னர்கள் மற்றும் அரசியலை வைத்து அடக்குவது என்பது நாம் இதுவரை பார்த்திராத ஒன்று அல்ல. இன்று நாம் மன்னர்களின் காலத்திற்கு சென்றுவிட்டதாக உணர்கிறேன். கடவுளின் பெயரால் சாமியார்களுடன் கைகோர்த்து, மக்களை அடக்கி வருகின்றனர்.

"பெருமையை பேசி வானுயர பேனர் வைத்து கொள்வது முடிவின்றி தொடர்கிறது"

கோயிலை கட்டி அதில் தங்களின் பெயர்களை செதுக்கி வைத்து கொள்வது, கோயிலை கட்டிய நபர்களின் கையை வெட்டுவது, தங்களின் பெருமையை பேசி வானுயர பேனர் வைத்து கொள்வது முடிவின்றி தொடர்கிறது. அவர்களின் மக்களும் ஜோக்கர்களும் புகழ்பாடி வருகின்றனர். மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவதும், அவர்களை கேள்வி கேட்க முடியாத இடத்துக்கு எடுத்து செல்வதும் மிகவும் ஆபத்தானது. நாட்டின் கலாச்சாரத்தின் எதிர்காலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்" என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Kishore Kumar Huli (@actorkishore)

மேலும், சமூக சீர்திருத்தவாதி பசவரின் வாசகத்தை மேற்கோள் காட்டிய நடிகர் கிஷோர், "செல்வம் உள்ளவர்கள் கோவில் கட்டுகிறார்கள். ஏழையான நான் என்ன கட்ட முடியும். என்னுடைய கால்களே தூண்கள். எனது உடலே கருவறை. எனது தலையே கோயிலின் ஒளிரும் குவிமாடம். எனது கடவுளான கூடலசங்கமக்கு நன்றாக தெரியும். நிலையானது அழியும். மாற்றம் என்பதே தொடர்ந்து நிலைநிற்கும்" என பதிவிட்டுள்ளார்.

"நீதித்துறைக்கு நன்றி" – ராமர் கோயில் திறப்பு விழாவில் மனம் திறந்த பிரதமர் மோடி

கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம், ராம் லல்லாவுக்கு (குழந்தை ராமர் சிலை) சொந்தம் என்றும் அங்கு கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அயோத்தி பிரச்னையை தீர்த்து வைத்த உச்ச நீதிமன்றம்:

இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ். ஏ. பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராமர் கோயில் வேகமாக கட்டப்பட்டு வருகிறது. இச்சூழலில், கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்தார்.

இதை தொடர்ந்து, திறப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, நீதித்துறைக்கு நன்றி தெரிவித்தார். அப்போது விரிவாக பேசிய அவர், "அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும், ராமர் இருக்கிறாரா? இல்லையா? என்பது குறித்து பல தசாப்தங்களாக சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. நீதியை வழங்கிய நீதித்துறைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ராமர் கோவில் சட்டப்பூர்வமாக கட்டப்பட்டது" என்றார்.

நீதித்துறைக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி:

தொடர்ந்து பேசிய பிரதமர், "இனி, குழந்தை ராமர் கூடாரத்தில் வசிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரம்மாண்ட கோயிலில் வசிக்க போகிறார். ஜனவரி 22ஆம் தேதி சூரிய உதயம் ஒரு அற்புதமான பிரகாசத்தைக் கொண்டுவந்துள்ளது. ஜனவரி 22, 2024 என்பது காலெண்டரில் எழுதப்பட்ட தேதி அல்ல. இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்.

அடிமை மனோபாவத்தை உடைத்து, பல நூற்றாண்டுகளின் காத்திருப்பு, பொறுமை, தியாகங்களுக்குப் பின், நம் ராமர் இன்று வந்திருக்கிறார். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வசனத்தில் ராமர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது நடக்க பல தசாப்தங்கள் ஆனது. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டது இன்று நிஜமாகியுள்ளது" என்றார்

அயோத்தி தீர்ப்பு வழங்கிய ரஞ்சன் கோகாய், தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் எஸ். ஏ. பாப்டே, இந்திய தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஓய்வு பெற்றுள்ளார். தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் தலைவராக அசோக் பூஷனும் ஆந்திர பிரதேச ஆளுநராக அப்துல் நசீரும் பதவி வகித்து வருகின்றனர். தீர்ப்பு வழங்கிய மற்றொரு நீதிபதியான சந்திரசூட், இந்திய தலைமை நீதிபதியாக உள்ளார். இவர்கள் அனைவருக்கும் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Minister Sekar Babu Accused Union Minister Nirmala Seettharaman For Speaking Only To Do Politics Mixed With Spirituality Ram Mandir Inauguration | Minister Sekar Babu: அடிப்படை கூட தெரியாமல் பேசுகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அரசியல் கலந்த ஆன்மீகத்தை செய்ய தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”திமுக ஆட்சி அமைத்த பிறகு இன்று ஒரே நாளில் 20 கோயில்களில் குடமுழுக்கும் நடைபெறுகிறது. அதில் 5 வைணவ திருக்கோயில்கள் அடங்கும். இதுவரையில் 1200 திருக்கோவிலில் குடமுழுக்கு நடந்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் கோயில்களை பாதுகாக்கவும் முன்னோர்கள் விட்டுச்சென்ற சொத்தை காப்பாற்றும் வகையில் 100 கோடி ரூபாய் மானியமாக முதலமைச்சர் வழங்கியுள்ளார். கிராமப்புறத்தில் உள்ள சிறிய கோயில்களில் புணரமைப்பு பணிக்காக ரூ.1 லட்சம் உயர்த்தி தற்போது 2 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று முதல் மேலும் 3 கோயில்களில் நாள்முழுவதும் அன்னதானம் திட்டம் துவங்கப்பட உள்ளது. அந்த வகையில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் முன்னிட்டு நாள் ஒன்றிக்கு 10 ஆயிரம் பேர் என 10 நாட்களுக்கு 1 லட்சம் பேருக்கு அன்னதானம் வழக்கம் திட்டமிட்டுள்ளோம்.
தமிழகத்தில் இன்று 2 ராமர் கோயிலில் குடமுழுக்கு நடைபெறுகிறது. அச்சகர்கள் எங்களுக்கு தோள் கொடுக்கும் தோழர்களாகவும், தெய்வத்திற்கு அடுத்தபட்சமாகவும் கருதுகிறோம். ஆன்மீகவாதிகளை 100 சதவீதம் துணை நின்று இருக்கும் ஒரு ஆட்சி என்றால் அது திராவிட மாடல் ஆட்சி தான்.
ஆளுநருக்கு சிகப்பு கம்பளம் விரித்து அனைத்து விதமான வரவேற்புடன் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அரண்டவன் கண்ணுக்கு இருன்டதெல்லம் பேய் என்பது போல் ஆளுநருக்கு தோன்றுகிறதோ என்னமோ. கோயில் அர்ச்சகர்கள் எங்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்துள்ளார்.
எங்காவது வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதா என சென்று பாருங்கள். அரசியல் கண்ணோட்டத்துடன் தான் மத்திய நிதி அமைச்சர் அணுகுகிறார். உபயதாரர்கள் நிதியில் தான் கோயில் பணிகள் நடைபெறும் உண்டியல் பணத்தில் நடைபெறாது என்ற அடிப்படை கூட தெரியாமல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லம் அருகே உள்ள கோபாலபுரம் திருக்கோவிலில் கூட LED திரை அமைக்கப்பட்டு ராமர் கோவில் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யபட்டு வருகிறது. திருக்கோவில் உள்ளே அன்னதானம், LED திரை அமைக்க எந்த தடையும் விதிக்கவில்லை. முறையான அனுமதி பெற வேண்டும் என்பது சட்டத்தில் உள்ளது. முறையான அனுமதி பெற்றால் எந்த தடையும் இல்லை. அரசியல் காரணத்திற்காக பாஜக அரசு இதனை செய்கிறது.
தமிழகத்தில் அரசியல் கலந்த ஆன்மீகத்தை செய்யவும் இந்த ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி என தமிழக மக்கள் இடையே பொய் பரப்புரை மேற்கொள்ள தான் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வளவு பெரிய ராமர் பிரதிஷ்டை நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தமிழகத்தில் இருப்பதாக” குற்றச்சாட்டியுள்ளார்.

CM Stalin: தமிழ்நாடு மக்கள் பெரியாரையும் போற்றுவார்கள் பெருமாளையும் வழிபடுவார்கள் – முதலமைச்சர் ஸ்டாலின்

சேலத்தில் நேற்று அதாவது ஜனவரி 21ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பாக 2வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆளுநருக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாடு தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அவர் தமிழ்நாட்டு மக்கள் பெரியாரின் கருத்துக்களையும் போற்றுவார்கள் பெருமாளையும் வழிபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

” மதவெறி அரசியலால் மக்களைப் பிளவுபடுத்துகிற ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது பத்தாண்டு கால ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையும் நிறைவேற்றாமல் முழுமையாகத் தோல்வி அடைந்திருப்பதை மறைப்பதற்காக ஆன்மீகத்தையும் அரசியலாக்கும் வகையில் அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துகிறது என்பதை கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு ஏற்கனவே அறிக்கையாக வெளியிட்ட நிலையில், இளைஞரணி மாநாட்டில் அதனைத் தீர்மானமாகவே முன்மொழிந்து, சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமின்றி, இந்து மதத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட – மிக பிற்படுத்தப்பட்ட – பட்டியல் இன – பழங்குடி மக்களுக்கும் துரோகம் இழைத்து, உண்மையான இந்து விரோதியாக செயல்பட்டு வரும் பா.ஜக. அரசை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்திட சூளுரை மேற்கொண்டிருக்கிறது தம்பி உதயநிதி வழிநடத்துகிற இளைஞரணி.

இராமர் கோயில் திறக்கப்படும் நாளில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின்கீழ் உள்ள கோயில்களில் சிறப்பு பூசைகள் செய்தவற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவதூறு நிறைந்த பொய்ச் செய்தியை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பினர். மாநாட்டு அரங்கில் இருந்தாலும், தன் துறையின் பணிகளை ஒவ்வொரு நொடியும் மேற்கொண்ட செயல்பாபு எனப்படும் அமைச்சர் சேகர்பாபு உடனடியாக இந்த அவதூறு பரப்புரைக்கு மறுப்பு தெரிவித்து, உண்மை நிலையை விளக்கி அறிக்கை வெளியிட்டார்.

ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எனப் பரவச் செய்து அதனை உண்மை போல ஆக்கும் பணியை பா.ஜ.க.வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் தலைநகரம் டெல்லி முதல் தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பஜனை நிகழ்ச்சிகளின் போது காணொளி காட்சி ஒளிபரப்புக்கு அறநிலையத்துறை தடை விதித்திருப்பதாகவும் ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அம்மையார் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவர்களே, காணொளி காட்சிகள் எதையும் திரையிடமாட்டோம் என்று குறிப்பிட்டுதான் அனுமதியே கோரியுள்ளனர். இதனை மறைத்துவிட்டு, ஒன்றிய நிதியமைச்சர் பரப்பிய உண்மைக்கு மாறான செய்தி.. அல்ல, அல்ல, திட்டமிடப்பட்ட வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது.

அதுமட்டுமல்ல, இந்தப் பொய்ப் பரப்புரைக்குச் சென்னை உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளதையும், தமிழ்நாட்டை என்றென்றும் அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்யும் மதநல்லிணக்க எண்ணம் கொண்ட மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். “பக்தி என்பது மகிழ்ச்சிக்கும் அமைதிக்கானதும் மட்டுமே. சமூகத்தில் நிலவும் சமநிலையைச் சீர்குலைப்பதற்காக அல்ல” என்றும், சிறப்பு பூஜைகளுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படாத நிலையில், தவறான பரப்புரையால் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு வழி வகுத்திடக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசியல் சட்டத்தையே மதிக்காத போக்குடன் நடந்துகொள்ளும் பா.ஜ.க.வின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களும், பா.ஜ.க.வால் உயர்ந்த பொறுப்பைப் பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் ஆளுநராக நியமனப் பதவியில் உள்ள ஆர்.என்.ரவி அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் கோயிலுக்கு வழிபாடு செய்யச் சென்றபோது, பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களிடம் கண்ணுக்குப் புலப்படாத பயம் தெரிந்ததாகவும், அயோத்தி இராமர் கோயிலில் பால இராமர் சிலை நிறுவப்படும் நாளில், கோதண்டராமர் கோயில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் தன் மனதின் வன்மத்தைப் பதிவிட்டுள்ளார்.

காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அந்த நிலையில்தான் இருக்கிறார், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் அறியாமல் தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் உள்ள மதிப்பிற்குரிய ஆர்.என்.ரவி . அருள்மிகு கோதண்டராமர் க்கோயில் அர்ச்சகர்களே, எவ்வித பயத்திற்கோ அடக்குமுறை உணர்வுக்கோ இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்!

தமிழ்நாட்டில் எந்தக் கோயிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தலாம். தைப்பூச நாளில் முருகன் கோயில்களிலும், சித்திரைத் விழாவில் அழகர் ஆற்றில் இறங்கும்போதும், வாரூர் ஆழித்தேரோட்டத்தின்போதும், கும்பகோணம் மகாமகம் விழாவிலும், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் அறுபத்து மூவர் வீதியுலாவிலும் ஆயிரமாயிரம் பக்தர்கள் உண்மையான பக்தியுடன் பங்கேற்பதையும், அவர்களுக்கு பிற மதத்தினரும் ஒத்துழைப்பு அளிப்பதையும் சமூகநீதிக் கொள்கை அடிப்படையிலான மதநல்லிணக்க நிலமாகிய தமிழ்நாட்டில் காணமுடியும். பா.ஜ.க. தன் தோளில் சுமக்கும் அயோத்தி இராமர் கோயில் அரசியலை, அமைதியான கோதண்டராமர் கோயிலில் போய் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?

தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். பெருமானையும் வழிபாடுவார்கள். பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். இந்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் பா.ஜ.க.வில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களும் செயல்படுகிறார்கள். தலையில் குட்டு வைப்பதுபோல உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Cinema Headlines Today January 22nd Tamil Cinema News Today Rajinikanth Vadivelu Pa Ranjith Keerthi Pandian Fahadh Faasil
மாமன்னன் போயாச்சு, மாரீசன் வந்தாச்சு…வடிவேலு ஃபகத் ஃபாசில் நடிக்கும் புதிய பட அப்டேட்!
மாமன்னன் படத்தைத் தொடர்ந்து ஃபகத் ஃபாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் படத்திற்கு மாரீசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு மாமன்னன் படம் வெளியாகியது. இதுவரை நகைச்சுவை நடிகராக அனைவரும் பார்த்து ரசித்த வடிவேலுவை புதிய பரிமாணத்தில் காட்டியது மாமன்னன் படம் . நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அவருக்கு இது ஒரு பெரிய கம்பேக் ஆக அமைந்தது. மேலும் படிக்க
”இன்னும் 4,5 ஆண்டுகளில் மோசமான இந்தியாவில் இருப்போம்” : இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு
ப்ளூ ஸ்டார் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படியான நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித், ராமர் கோயில் திறப்பு பற்றி தனது கருத்துகளை தெரிவித்தார். அதில், “ராமர் கோயில் திறப்பு இன்று நடந்து கொண்டிருக்கிறது. அதன் பின்னால் இருக்கும் மத அரசியல் பற்றி எல்லாரும் தெரிந்துக் கொள்ள வேண்டும். மேலும் படிக்க
பெரியப்பா ஆனார் சிலம்பரசன்… மகிழ்ச்சியில் டி.ஆர். குடும்பம்…!
நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி உஷா ராஜேந்திரன் தம்பதியினரின் இளைய மகன் குறளரசன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது பெற்றோர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது மகன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்த சூழலில் நடிகர் டி ராஜேந்திரன் இதுகுறித்து விளக்கமளித்தார். தனது மகன் சிறிய வயதில் இருந்தே இஸ்லாம் மதத்தின் மீது நாட்டம் கொண்டிந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் படிக்க
ராமர் கோயில் பற்றி ரஜினி பேசியது சரியா தவறா? – பா. ரஞ்சித் சொல்வது என்ன?
ராமர் கோயில் (Ayaodhya Ram Mandhir) நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று அயோத்தி பயணித்த நடிகர் ரஜினிகாந்த், அயோத்தி கோயிலுக்குச் செல்வதும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்து, செய்தியாளர்களிடம் விடைபெற்றார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் சரி, தவறு என்பதை தாண்டி தனக்கு ரஜினிகாந்தின் கருத்தில் விமர்சனம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி: அரசியல் சாசனத்தை மேற்கோள் காட்டும் மலையாளத் திரையுலகினர்
அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். மேலும் படிக்க
“ஆசீர்வாதமாக உணர்கிறோம்” – ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் உற்சாகம்!
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றுள்ள பாடகர் ஷங்கர் மகாதேவன், “நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். நானும் என் மனைவியும் இந்த கோயில் திறப்பு விழாவில் ஒரு அங்கம் என்பதை ஆசீர்வாதமாக உணர்கிறோம். உலகில் அமைதி நிலவ பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதேபோல் இசையமைப்பாளர் அனு மாலிக் கூறுகையில், “இது ஒரு அற்புதமான தருணம். ராமர் கோயிலை கண்டு நான் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறேன். இது ஒரு பெரிய சந்தர்ப்பம்” என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

Odisha Artist Creates Ayodhya’s Ram Mandir Replica With Over 900 Matchsticks
நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று அயோத்தியில் நடைபெற்றது. பல மாநில முதலமைச்சர், பல மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், இந்தியாவில் உள்ள தொழில், திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ராமர் கோயிலை திறந்து வைத்தார்.
அயோத்தி ராமர் கோயில்:
ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு பல கலைஞர்களும் தங்களது வித்தியாசமான திறமை மூலமாக ராமர் கோயில் திறப்பை கொண்டாடி வருகின்றனர். ஒடிசாவில் வசித்து வருபவர் சஸ்வத் ரஞ்சன். இவர் ஒரு சிற்ப கலைஞர். இவர் ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாட வித்தியாசமான ஒன்றை செய்ய ஆசைப்பட்டுள்ளார்.
இதையடுத்து, இவர் தீக்குச்சிகளை பயன்படுத்தி ராமர் கோயிலை உருவாக்க முடிவு செய்துள்ளார். இதற்காக இவர் 900க்கும் அதிகமான தீக்குச்சிகளை பயன்படுத்தியுள்ளார். 900 தீக்குச்சிகளை பயன்படுத்தி அச்சு, அசல் ராமர் கோயிலின் மாதிரி தோற்றத்தை இவர் உருவாக்கியுள்ளார்.
Odisha sculptor creates Ram Mandir replica using matchsticks Read @ANI Story | https://t.co/6LcUTTG9wB#Ayodhya #RamTemple #LordRam #RamLalla #RamMandirPranPrathistha #PranPratishta pic.twitter.com/CVxhjwmy79
— ANI Digital (@ani_digital) January 22, 2024936 தீக்குச்சிகள்:
இதை செய்து முடிக்க சஸ்வத் ரஞ்சனுக்கு 6 நாட்கள் ஆகியுள்ளது. இந்த ராமர் கோயிலை பயன்படுத்த அவர் துல்லியமாக 936 தீக்குச்சிகளை பயன்படுத்தியுள்ளார். தீக்குச்சிகளால் அவர் உருவாக்கியுள்ள ராமர் கோயில் 14 இன்ச் நீளமும், 7 இன்ச் அகலமும் கொண்டது. இதுதொடர்பாக பேசிய சஸ்வத் ரஞ்சன் தீக்குச்சிகளை பயன்படுத்தி இதைவிட சிறிய அளவில் ராமர் கோயிலின் மாதிரியை உருவாக்க முடியாது என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
தற்போது அவர் உருவாக்கிய ராமர் கோயிலின் மாதிரி தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ராஜஸ்தானைச் சேர்ந்த கின்னஸ் சாதைனையாளர் பென்சில் நுனியில் குழந்தை ராமர் சிலையை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். நாக்பூரைச் சேர்ந்த கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலைஞர் 7 ஆயிரம் கிலோ அல்வா படைத்து, அதற்கு ராம் அல்வா என்று பெயர் சூட்டியுள்ளார். இதுபோன்று பலரும் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பல வித்தியாசமான நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்! 380 கல் தூண்கள்! 15 மீட்டர் தடிமன் அடித்தளம்!
மேலும் படிக்க: Ayodhya Ram Temple: பாபர் மசூதி இடிப்பும் அயோத்தி ராமர் கோயிலும்- முக்கிய முகங்கள் இவர்கள்தான்!
India Vs England Test: Ravichandran Ashwin Is Set To Become The 9th Player To Take 500 Wickets In Test Matches By Taking 10 Wickets
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்கர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அஸ்வின் மீது எதிர்பார்ப்பு:
அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது சுழற்பந்து வீச்சால் இங்கிலாந்து வீரர்களை மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் போட்டி என்பதால் அஸ்வினின் சுழற்பந்து மாயாஜலத்தை இந்த தொடரில் எதிர்பார்க்காலாம்.
அதோடு இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 விக்கெட்டுகள் எடுப்பதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9 வது வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார். மேலும், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளேவுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைக்க இருக்கிறார். அதேபோல், 10 விக்கெட்களை எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுக்கும் முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர் என்ற சரித்திரத்தையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைப்பார். இதானால் இந்த தொடரில் அஸ்வினின் பந்து வீச்சு எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
முன்னதாக, கடந்த 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அஸ்வின் இதுவரை 95 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதில், 25,227 பந்துகளை வீசி 29.69 என்ற சராசரியில் 490 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: India vs England Test: இங்கிலாந்தின் ‘பாஸ்பால்’ முறை இந்தியாவில் எடுபடாது… அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!
மேலும் படிக்க: Rohit Sharma: இன்னும் 3 சிக்ஸர்கள்.. ஒரு கேப்டனாக தோனியின் சாதனையை முறியடிப்பாரா ஹிட்மேன் ரோஹித் சர்மா?

Karur District Final Voter List In Released Today – TNN | கரூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியிட்டார். கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8,79,164 வாக்காளர்கள் உள்ளனர்.
அதில் சட்டமன்ற வாரியாக 134 அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 209220 வாக்காளர்களும் ,135 கரூர் சட்டமன்ற தொகுதியில் 2,36,036 வாக்காளர்களும், 136 கிருஷ்ணயபுரம் (தனி) தொகுதி சட்டமன்றத் தொகுதியில் 2,08,888 வாக்காளர்களும், 137 குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 225040 வாக்காளர்களும் இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ளனர்.
இந்தாண்டு நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 6,741 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் நடைபெற்ற இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டு நிகழ்ச்சியில் திமுக, அதிமுக,பாஜக, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட முக்கிய அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலை பெற்றுக் கொண்டனர்.

Final Voter List Of Villupuram District Addition Of 32 Thousand 179 New Voters – TNN | விழுப்புரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இறுதி வாக்காளர் பட்டியல் – 2024 அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, வெளியிட்டார். மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் 01.01.2024 தேதியை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணி 27.10.2023 முதல் 09.12.2023 வரை 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான விண்ணப்ப படிவங்களை பெற்று தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
22.01.2024 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்பாக வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் பின்வருமாறு வாக்காளர்கள் உள்ளனர்.வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இடங்கள் விபரம்
வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர்,அலுவலகங்கள்
உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள்
நியமன வாக்குசாவடி அமைவிடங்கள். வாக்காளர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள பதிவுப் பெற்ற இணையதள தேடல் மையங்களின் மூலமாகவும், இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் (https://voters.eci.gov.in/) மூலமாகவும் வாக்காளர்களாக பெயர்கள் பதிவு செய்யப்பட்ட விபரம் சரிபார்த்துக்கொள்ளலாம்.2024-வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப் பணி 22.01.2024 முதல் தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக பல்வேறு கோரிக்கை மனுக்களை உரிய படிவத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்குசாவடி நிலை அலுவலர் ஆகியோரிடம் கொடுத்துக்கொள்ளலாம். இதுதவிர பொதுமக்கள் இணையதளம் (https://voters.eci.gov.in/) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதும் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில், வேலை நேரங்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண்.1950-ஐ தொடர்பு கொண்டு தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம். எனவே விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் 2024 -வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப்பணி நல்ல முறையில் நடைபெற தேவையான ஒத்துழைப்பு அளிக்கும்படி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Latest Headlines News 22nd January 2024 Flash News Details Here |
Pran Pratishtha: குழந்தை ராமர் சிலைக்கு முதல் பூஜை செய்த பிரதமர் மோடி.. பக்தி பரவசத்தில் அயோத்திஅயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். மேலும் படிக்க
DMK Youth Wing Maanadu: இன்னும் 2 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் இது மட்டும் முடியாது – உதயநிதிதமிழ்நாடு அரசியல் களத்தில் மட்டும் இல்லாமல் இந்திய அரசியல் களத்தில் தற்போது பேசு பொருளாகியிருப்பது தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுக, சேலம் மாவட்டத்தில் நடத்திய தனது இரண்டாவது இளைஞரணி மாநாடுதான். இந்த மாநாட்டில் அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியதில் முக்கியமானது குறித்து இங்கு காணலாம். மேலும் படிக்க
”தெற்கில் விடியல் கிடைத்தது போல இந்தியா முழுவதும் விடியல் விரைவில் கிடைக்கும். இந்த மாநாட்டில் பங்கேற்ற பிறகு எனக்கு 20 வயது குறைந்து விட்டது போல தோன்றுகிறது. திராவிட இயக்கம் தோன்றி 100 ஆண்டுகளாகிவிட்டது. திமுக தோன்றி 75 ஆண்டுகளாகி விட்டது. திமுக தொடங்கியபோது இருந்த அதே எழுச்சி இன்றைக்கும் இளைஞர்களிடம் இருப்பது திமுக தலைவராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் படிக்க
Ram Temple : ‘ஆன்மீக விழா என்னும் பெயரில் நடைபெறும் அரசியல் சதிவிழா!’ : தொல்.திருமாவளவன் எம்.பி.,சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அனைத்து தரப்பு இந்து மக்கள் அணிதிரள வேண்டும் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “ஐந்து வயது குழந்தை ராமருக்கு அயோத்தியில் மாபெரும் கோயில். நாடெங்கிலும் ராமர் படம் பொறித்த காவிக் கொடிகள் பெருமிதம் குலுங்க பறக்கின்றன. கொண்டாடிக் கூத்தாடும் வெற்றிக்களிப்பில் சங் பரிவார்கள். பாதுகாப்பில்லாத நெருக்கடி நிலையில் இஸ்லாமியர்கள். மேலும் படிக்க
TN Voter List: தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள்.. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக வாக்காளர் பட்டியல் பணிகள் தேர்தல் ஆணையம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் ‘சிறப்பு சுருக்கமுறை திருத்தம்’ எனப்படும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். மேலும் படிக்க

Ayodhya Ram Temple: விழுப்புரத்தில் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்ட பக்தர்கள்

விழுப்புரம்: அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டதை எல்.இ.டி திரையில் பக்தர்கள் கண்டு ரசித்தும் சிறப்பு யாகங்கள் செய்து ஜெய் ஸ்ரீ ராம் என்று அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர்.

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் இன்று பிரதிஷ்டை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ராமர் பிரதிஷ்டியை நேரிடையாக மக்கள் காணும் வகையில் பல்வேறு கோவில்களில் எல்இடி திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி திரைகள், பெரிய திரை கொண்ட டிவிக்கள் மூலம் ராமர் பிரதிஷ்டியை காண ஏற்பாடு செய்யபட்டு அதன் வழியாக பக்தர்கள் கண்டு களித்தனர்.

விழுப்புரம் நகர பகுதியான காமராஜர் வீதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என்று அகல் விளக்கேற்றி எல்இடி திரையில் ராமர் பிரதிஷ்டையை கண்டு களித்தனர். இதே போன்று சங்கர மடத்தில் சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டன. விழுப்புரம் ரயில் நிலையத்தில் தொலைக்காட்சியில் ராமர் பிரதிஷ்டை ஒளிப்பரப்பினை நேரலையாக பெரிய டிவிக்கள் மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டதை ரயில் பயணிகள் கண்டு களித்தனர்.

அயோத்தி குழந்தை ராமர்

அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்.

மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டு களித்தனர்.

ஷியாமல் (கருப்பு நிறம்) கல்லில் வடிவமைக்கப்பட்ட ஐந்து வயது குழந்தை ராமர், தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தாமரை மற்றும் ஒளிவட்டம் இருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலையின் எடை 150 கிலோ எனக் கூறப்படுகிறது. சிலையின் மொத்த உயரம் ஏழு அடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயிலின் தரை தளத்தில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முதல் தளம் இன்னும் கட்டப்படவில்லை. முதல் தளம் கட்டப்பட்ட பிறகு, ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோரின் சிலை அங்கு வைக்கப்பட உள்ளது.

Tamil Nadu Minister Udhayanidhi Stalin Slams BJP After Post On Sanatan Dharma Says Hindi Theriyathu Poda
உத்தர பிரதேசம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் உள்ள ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ராமர் கோயில் திறப்பு குறித்து உதயநிதி பேசியது என்ன?
மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டு களித்தனர்.
முன்னதாக, ராமர் கோயில் திறப்பு குறித்து தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசுகையில், “ராமர் கோயில் திறப்புக்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிரானது அல்ல. மசூதியை இடித்துவிட்டு கோயிலை கட்டியதில்தான் உடன்பாடு இல்லை” என கூறியிருந்தார்.
எக்ஸ் வலைதள பக்கத்தில் பாஜக, இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றியது. அதில், “இந்த அதர்மவாதிகளை அடையாளம் காணுங்கள்!இவர்கள் ராமர் கோயிலை வெறுப்பவர்கள். சனாதன தர்மத்தை அவமதிப்பவர்கள்” என இந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
😁 pic.twitter.com/U0Xu6Ux7F0
— Udhay (@Udhaystalin) January 22, 2024இந்தி தெரியாது போடா என்ற வாசகம் பதிந்த டி-ஷர்ட் அணிந்த தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு பாஜகவின் இந்த பதிவுக்கு உதயநிதி பதிலடி தந்துள்ளார்.
அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு (குழந்தை ராமர் சிலை) சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராமர் கோயில் வேகமாக கட்டப்பட்டு வருகிறது.
அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இதில் பங்கேற்க மறுத்த காங்கிரஸ், “மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், அயோத்திகோயில் விவகாரத்தை ஆர்எஸ்எஸ்/பாஜக நீண்ட காலமாக அரசியலாக்கி வருகிறது. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே முழுமையடையாத கோயிலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் திறந்து வைக்கின்றனர்.
2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு, ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ்/பாஜக நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்” என விளக்கம் அளித்தது.

Govind Vasantha: எந்த டென்ஷனும் இல்ல; தண்ணி அடிச்சுகிட்டுதான் மியூசிக் போட்டேன் – உளறிக்கொட்டிய ப்ளூ ஸ்டார் இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்து தற்போது தன்னுடைய சொந்த படைப்பு மூலம் அறிமுக இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார் எஸ்.ஜெயக்குமார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோரின் நடிப்பில், கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘ப்ளூ ஸ்டார்’. பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளார்.

வரவேற்பை பெற்ற இசை :

கோவிந்த் வசந்தாவின் இசையில் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கீர்த்தி பாண்டியன் – அசோக் செல்வன் திருமணத்தை முன்னிட்டு ப்ளூ ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘ரயிலின் ஒலிகள்’ பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கானது. அதைத் தொடர்ந்து இரண்டாவது சிங்கிளான அறிவு பாடிய ‘அரக்கோணம்’ பாடல் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்தது. இப்படல்கள் மூலம் படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த வசந்தாவின் இசை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கலகலப்புடன் கோவிந்த் வசந்தா :

ப்ளூ ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொண்ட படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில் "இப்படத்தில் பணிபுரிந்த நடிகர்கள், இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். அதிலும் குறிப்பாக அறிவுக்கு எனது நன்றிகளை நான் சொல்லியே ஆக வேண்டும். நிறைய இடத்தில் எனக்கு கம்போஸிங்கில் உதவியாக இருந்தார். அரக்கோணம் பாடலில் எனக்கு நிறைய உதவி செய்தார். பா. ரஞ்சித் சாரின் தீவிர ரசிகன் நான். அவருடைய படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமையாக நினைக்கிறேன். இயக்குநர் ஜெய் மிகவும் அன்பானவர். அவருடன் பணிபுரிந்ததும் நல்ல அனுபவமாக இருந்தது.

ப்ளூ ஸ்டார் படத்திற்கு இசையமைப்பது ரொம்பவே ஜாலியாக இருந்தது. பொதுவாக பல துணை இயக்குநர்கள், எடிட்டர் என பலருடன் சேர்ந்து பணிபுரிய வேண்டி இருக்கும். ஆனால் இந்த படத்திற்காக யாருமே என்னுடன் இல்லை. ஜெய் அண்ணன், அறிவு மற்றும் நான். இருவருடனும் சேர்ந்து ஜாலியா தண்ணி அடிச்சுகிட்டே கம்போஸிங் செய்தேன். பிஜிஎம் கூட அப்படி தான் தண்ணி அடிச்சிட்டே ஜாலியா செய்துவிட்டேன். கரெக்ஷன், டென்ஷன் இல்லாம ஜாலியா இந்த படத்துக்கு மியூசிக் செய்துவிட்டேன். யாருமே போன் பண்ணி என்னை டென்ஷன் செய்யவில்லை. ரொம்ப அமைதியா என்னால வேலை செய்ய முடிந்தது. படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள். அனைவருக்கும் நன்றி" எனப் பேசியுள்ளார்.

Puducherry Building Collapsed Due To A Ditch Dug During Drainage Work – TNN | கண் இமைக்கும் நேரத்தில் சரிந்து விழுந்த புதிய வீடு
புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்திரி. கணவர் ரங்கநாதன் உயிரிழந்த நிலையில் இவர் தனது மகள் சித்ரா மற்றும் மருமகன் சுரேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்கள் அதே பகுதியில் அரசு இலவசமாக கொடுத்த பட்டா இடத்தில் மூன்று மாடி வீடு கட்டி வந்தனர், இந்த வீட்டின் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிந்த நிலையில் வருகின்ற 26 ஆம் தேதி வீட்டின் புதுமனை புகுவிழா நடத்த சாவித்திரி திட்டமிட்டிருந்தார்.
இதற்கிடையே அந்த வீட்டின் அருகே செல்லும் வாய்க்காலுக்கு சுவர் கட்டும் பணி கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவித்திரி வீட்டருகே வாய்கலுக்கு சுவர் கட்டுவதற்காக ஆழமாக பள்ளம் எடுக்கப்பட்டது. அப்போது புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி வீடு லேசாக சாய்ந்து காணப்பட்டது, இதில் அதிர்ச்சி அடைந்த சாவித்திரி இது தொடர்பாக வாய்க்கால் சுவர் கட்டும் ஒப்பந்ததாரரிடம் முறையிட்டு வந்தார்.இந்த நிலையில் இன்று வீடு மிக மோசமாக சாய்ந்தவாரு காணப்பட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர், ஆகியோர் வீட்டின் தரத்தை ஆய்வு செய்ய வந்து பேசி கொண்டிருந்த போது வீடு திடீரென முற்றிலுமாக சரிந்து விழுந்தது. அப்போது அங்கு இருந்தவர்கள் அருகே ஓட்டம் பிடித்ததால் யாருக்கும் உயிர் சேதமோ காயங்களோ ஏற்படவில்லை.
புதுச்சேரியில் மூன்று மாடி வீடு சரிந்து விழுந்தது…@abpnadu #Puducherry pic.twitter.com/z0I1wzS3H6
— Siva Ranjith (@sivaranjithsr) January 22, 2024தொடர்ந்து வீடு இடிந்து விழுந்தது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் அதற்கு பின்னரே வீடு அதிக உயரத்தில் தரமன்றி கட்டப்பட்டதால் சரிந்து விழுந்ததா அல்லது வாய்க்காலுக்கு பள்ளம் எடுத்ததால் விழுந்ததா என தெரியவரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மூன்று மாடி குடியிருப்பு சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actor Satish Attended The Annual Function Of Sri Jayendra Saraswati School In Villupuram – TNN | Actor Satish:உண்மையான நட்பு என்பது பள்ளி கூட வாழ்க்கையில் தான் கிடைக்கும்
விழுப்புரம்: பள்ளி கூட வாழ்க்கையில் நண்பர்கள் பெயர்கள், தொலைபேசி எண்கள் தெரிந்து கொள்ள விருப்பப்படும் நாம் நண்பர்களின் ஜாதியை தெரிந்து கொள்ள விரும்பவதில்லை. அதனை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம். ஜாதி என்பதே கிடையாது என காமெடி நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியின் ஆண்டு விழாவில் காமெடி நடிகர் சதீஷ் கலந்து கொண்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் சதீஷ்….
பள்ளி வாழ்க்கை என்பது வாழ்க்கையில் திரும்பவும் கிடைக்காத ஒன்று அதனை நல்லபடியாக ஒழுக்கமாக பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனவும், உறவினர்கள் வீட்டிலையே கிடைப்பார்கள் எதிரிகள் எங்கு வேண்டுமானாலும் கிடைப்பார்கள் உண்மையான நட்பு என்பது கிடைப்பது என்பது பள்ளி கூட வாழ்க்கையில் தான் கிடைக்கும் என தெரிவித்தார். பள்ளி கூட வாழ்க்கையில் நண்பர்கள் பெயர்கள், தொலைபேசி எண்கள் தெரிந்து கொள்ள விருப்பப்படும் நாம் நண்பர்களின் ஜாதியை தெரிந்து கொள்ள விரும்பவதில்லை. அதனை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம் ஜாதி என்பதே கிடையாது என கூறினார். பள்ளி கூட வாழ்க்கையிலிருந்து இதுவரை தான் புகைபிடித்தது, மதுப்பழக்கம் போன்றவற்றில் ஈடுபட்டது கிடையாது என்பதால் மாணவர்களும் புகை பிடிப்பது, மது பழக்கம் போன்றவற்றை கற்றுக்கொள்ள கூடாது என்றும் அதனால் உடலுக்கு தான் கேடு விளைவிக்கும் பணம் தான் வீணடிக்கப்படுகிறது என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.மாணவர்கள் மத்தியில் பெற்றோர்கள் பொய் சொல்லாமல் மற்றவர்களிடம் ஒப்பிட்டு பேசக்கூடாது
பள்ளி கூட வாழ்க்கையில் வகுப்புகளுக்கு கட் அடிப்பது பிட் அடிப்பது போன்ற சிறு சிறு தவறுகள் கூட செய்திடலாம். ஆனால் காதல் மட்டும் செய்யவே கூடாது என்றும் அப்படி காதல் மட்டும் வந்துவிட்டது என்றால் நம் வாழ்க்கை, நேரம் எதுவும் நம்மிடம் இருக்காது அந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம் என வலியுறுத்தினார். மாணவர்கள் பள்ளி படிப்பினை முடித்து வளர்ந்த போது எதிர்காலத்தில் பெற்றோர்களை தனி குடித்தனம் வைக்க கூடாது என்றும் மாணவர்கள் மத்தியில் பெற்றோர்கள் பொய் சொல்லாமல் மற்றவர்களிடம் ஒப்பிட்டு பேச கூடாதென காமெடி நடிகர் சதீஷ் தெரிவித்தார்.
CM Stalin Statement DMK Youth Wing Salem Conference Parliament Election 2024 BJP Modi | CM Stalin:பாஜகவினர் வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
சேலத்தில் நேற்று அதாவது ஜனவரி 21ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பாக 2வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆளுநருக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாடு தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
”இளைஞர் பட்டாளத்தின் எழுச்சி மாநாடு வெற்றி.. வெற்றி.. நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல்.
இது தந்தை பெரியார் மண்! பேரறிஞர் அண்ணா மண்! முத்தமிழறிஞர் கலைஞர் மண்! அதுமட்டுமா, அருட்பிரகாச வள்ளலார் மண்! பண்டிதர் அயோத்திதாசர் மண்! பெருந்தலைவர் காமராசர் மண்! கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மண்! பொதுவுடைமைத் தோழர் ஜீவா மண்! சுருக்கமாகச் சொன்னால், சமூகநீதிக் கொள்கை வழியில் பயணிக்கும் மதநல்லிணக்க மண்தான் தமிழ்நாடு என்பதை சேலத்தில் எழுச்சியுடன் நடந்தேறிய கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உணர்த்தியிருக்கிறது.
கடல் இல்லா சேலத்தில் கழக இளைஞரணியினரின் தலைகளே கடலாக, மாநகரத்திலிருந்து மாநாடு நடைபெற்ற இடம் வரை 30 கிலோ மீட்டர் நீளத்திற்கு அசைந்தாடிய கருப்பு சிவப்பு இருவண்ணக்கொடிகளே அலைகளாக இருந்ததைக் கண்டபோது, மாநாட்டினை எழுச்சியும் உணர்ச்சியுமாக நடத்திக்காட்டிய இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் தம்பி உதயநிதி , மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டிருந்த கழகத்தின் முதன்மைச் செயலாளரான அமைச்சர் கே.என்.நேரு , சேலம் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும், இளைஞரணியின் மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் – துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கண்துஞ்சாமல் அயராது பாடுபட்டதன் அறுவடையைக் காண முடிந்தது. மாநாட்டு முகப்பில் சேலத்துச் சிங்கம் வீரபாண்டியார் நினைவுக் கொடி மேடையில் இருவண்ணக் கொடியை உயர்த்தி வைத்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் அன்புத் தங்கை கனிமொழி எம்.பி. அவர்களுக்கும், மாநாட்டுத் திறப்பாளர் மாணவரணிச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்களுக்கும், மொழிப்போர்த் தியாகிகள் படத்தைத் திறந்து வைத்த சட்டமன்றக் கொறடா திரு. கோவி. செழியன் உள்ளிட்ட அனைவருக்கும் கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநாட்டுப் பந்தலைக் கடந்து, வளாகம் நிறைந்து, நெடுஞ்சாலை முழுவதும் திரண்டிருந்த இளைஞர் பட்டாளம், கழகத்தின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையை விதைத்தள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாக்கும் பயிற்சி அரங்கமாக இளைஞரணியின் மாநாடு அமைந்திருந்த அதேவேளையில், வெறும் தேர்தல் அரசியலை மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுப்பதில்லை என்பதையும், தேர்தல் களத்திலும் கொள்கை வழி அரசியலையே முன்னெடுக்கும் என்பதையும் மாநாட்டின் மையப் பொருளாக அமைந்த, ‘மாநில உரிமை மீட்பு முழக்கம்’ அமைந்திருந்தது.
தம்பி உதயநிதி முன்மொழிந்த மாநாட்டின் 25 தீர்மானங்களும் திராவிட மாடல் அரசு எந்தளவுக்கு மக்களுக்கான நன்மைகளைச் செய்து, மாநிலத்தின் வளர்ச்சியைப் பெருக்கியிருக்கிறது என்பதுடன், மாநில உரிமைக்கானப் போராட்டத்தில் நாம் முன்னெடுக்க வேண்டியவற்றையும் தீர்மானங்கள் வாயிலாகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இழந்த மாநில உரிமைகளை மீட்கவும், இருக்கின்ற மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநிலங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெறவும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் வகுத்தளித்த மாநில சுயாட்சிக் கொள்கையை நிறைவேற்றிட வேண்டும் என்பதையும், கல்வி – சுகாதாரம் இரண்டையும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டியதன் தேவையையும், பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தராக இருக்க வேண்டும் என்பதையும், எல்லாவற்றுக்கும் மேலாக அரசியலமைப்பில் தொங்கு சதையாக உள்ள நியமனப்பதவியான ஆளுநர் பதவி முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்பதையும் இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உரக்கச் சொல்லியுள்ளன.
மதவெறி அரசியலால் மக்களைப் பிளவுபடுத்துகிற ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது பத்தாண்டு கால ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையும் நிறைவேற்றாமல் முழுமையாகத் தோல்வி அடைந்திருப்பதை மறைப்பதற்காக ஆன்மீகத்தையும் அரசியலாக்கும் வகையில் அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துகிறது என்பதை கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள் ஏற்கனவே அறிக்கையாக வெளியிட்ட நிலையில், இளைஞரணி மாநாட்டில் அதனைத் தீர்மானமாகவே முன்மொழிந்து, சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமின்றி, இந்து மதத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட – மிக பிற்படுத்தப்பட்ட – பட்டியல் இன – பழங்குடி மக்களுக்கும் துரோகம் இழைத்து, உண்மையான இந்து விரோதியாக செயல்பட்டு வரும் பா.ஜக. அரசை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்திட சூளுரை மேற்கொண்டிருக்கிறது தம்பி உதயநிதி வழிநடத்துகிற இளைஞரணி.
இலட்சக்கணக்கில் இளைஞர் பட்டாளம் திரண்டிருந்த சேலம் மாநாட்டின் எழுச்சிகரமான வெற்றியைக் கண்டு மிரண்டு போன கழகத்தின் அரசியல் எதிரிகளும், வலிமைமிக்க திராவிட இயக்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை அறிந்துள்ள கொள்கை எதிரிகளும் தங்களுக்கேயுரிய கேவலமான உத்தியான வதந்தி பரப்பும் வேலையை, மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தொடங்கிவிட்டனர்.
இராமர் கோயில் திறக்கப்படும் நாளில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின்கீழ் உள்ள கோயில்களில் சிறப்பு பூசைகள் செய்தவற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவதூறு நிறைந்த பொய்ச் செய்தியை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பினர். மாநாட்டு அரங்கில் இருந்தாலும், தன் துறையின் பணிகளை ஒவ்வொரு நொடியும் மேற்கொண்ட செயல்பாபு எனப்படும் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் உடனடியாக இந்த அவதூறு பரப்புரைக்கு மறுப்பு தெரிவித்து, உண்மை நிலையை விளக்கி அறிக்கை வெளியிட்டார்.
ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எனப் பரவச் செய்து அதனை உண்மை போல ஆக்கும் பணியை பா.ஜ.க.வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் தலைநகரம் டெல்லி முதல் தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோயிலில் பஜனை நிகழ்ச்சிகளின் போது காணொளி காட்சி ஒளிபரப்புக்கு அறநிலையத்துறை தடை விதித்திருப்பதாகவும் ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அம்மையார் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவர்களே, காணொளி காட்சிகள் எதையும் திரையிடமாட்டோம் என்று குறிப்பிட்டுதான் அனுமதியே கோரியுள்ளனர். இதனை மறைத்துவிட்டு, ஒன்றிய நிதியமைச்சர் பரப்பிய உண்மைக்கு மாறான செய்தி.. அல்ல, அல்ல, திட்டமிடப்பட்ட வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது.
அதுமட்டுமல்ல, இந்தப் பொய்ப் பரப்புரைக்குச் சென்னை உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளதையும், தமிழ்நாட்டை என்றென்றும் அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்யும் மதநல்லிணக்க எண்ணம் கொண்ட மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். “பக்தி என்பது மகிழ்ச்சிக்கும் அமைதிக்கானதும் மட்டுமே. சமூகத்தில் நிலவும் சமநிலையைச் சீர்குலைப்பதற்காக அல்ல” என்றும், சிறப்பு பூஜைகளுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படாத நிலையில், தவறான பரப்புரையால் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு வழி வகுத்திடக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசியல் சட்டத்தையே மதிக்காத போக்குடன் நடந்துகொள்ளும் பா.ஜ.க.வின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களும், பா.ஜ.க.வால் உயர்ந்த பொறுப்பைப் பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் ஆளுநராக நியமனப் பதவியில் உள்ள ஆர்.என்.ரவி அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் கோயிலுக்கு வழிபாடு செய்யச் சென்றபோது, பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களிடம் கண்ணுக்குப் புலப்படாத பயம் தெரிந்ததாகவும், அயோத்தி இராமர் கோயிலில் பால இராமர் சிலை நிறுவப்படும் நாளில், கோதண்டராமர் கோயில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் தன் மனதின் வன்மத்தைப் பதிவிட்டுள்ளார்.
காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அந்த நிலையில்தான் இருக்கிறார், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் அறியாமல் தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் உள்ள மதிப்பிற்குரிய ஆர்.என்.ரவி அவர்கள். அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் அர்ச்சகர்களே, எவ்வித பயத்திற்கோ அடக்குமுறை உணர்வுக்கோ இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்!
தமிழ்நாட்டில் எந்தக் கோயிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தலாம். தைப்பூச நாளில் முருகன் திருக்கோயில்களிலும், சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும்போதும், திருவாரூர் ஆழித்தேரோட்டத்தின்போதும், கும்பகோணம் மகாமகம் திருவிழாவிலும், மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் அறுபத்து மூவர் திருவீதியுலாவிலும் ஆயிரமாயிரம் பக்தர்கள் உண்மையான பக்தியுடன் பங்கேற்பதையும், அவர்களுக்கு பிற மதத்தினரும் ஒத்துழைப்பு அளிப்பதையும் சமூகநீதிக் கொள்கை அடிப்படையிலான மதநல்லிணக்க நிலமாகிய தமிழ்நாட்டில் காணமுடியும். பா.ஜ.க. தன் தோளில் சுமக்கும் அயோத்தி இராமர் கோயில் அரசியலை, அமைதியான கோதண்டராமர் திருக்கோயிலில் போய் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?
தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருமானையும் வழிபாடுவார்கள். பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். இந்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் பா.ஜ.க.வில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களும் செயல்படுகிறார்கள். தலையில் குட்டு வைப்பதுபோல உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்போம்.
சேலத்தில் நடந்த கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் மகத்தான வெற்றி கண்டு அலறுகின்ற கழகத்தின் அரசியல் எதிரிகளும், தமிழ்நாட்டின் நிரந்தர எதிரிகளும் வதந்திகளைப் பரப்பி திசைதிருப்ப நினைத்தாலும், கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும், வில்லில் தொடுக்கப்பட்ட கணை தனது இலக்கை மட்டுமே குறி வைப்பதுபோல செயல்படவேண்டும். மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள், பல்வேறு தலைப்புகளில் நடந்த சொற்பொழிவுகளில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை முன்னெடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மதவெறி பாசிச சக்திகளை முறியடிக்கும் பணியில் முனைப்பாகச் செயல்படுங்கள். நம் திராவிட மாடல் கொள்கையை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வோம். நாடாளுமன்றத் தேர்தலில் வெல்வோம்!” என குறிப்பிட்டுள்ளார்.
PM Modi: "யாரையும் குறைவாக எடைபோடக்கூடாது.. அணிலே உதாரணம்" ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்தார். இந்த விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியது என்ன?

இதை தொடர்ந்து கோயிலில் உரையாற்றிய பிரதமர் மோடி, "பல தலைமுறை காத்திருப்புக்குப் பிறகு இன்று நம் ராமர் வந்திருக்கிறார். இந்த இனிய சந்தர்ப்பத்தில், அனைவருக்கும் வாழ்த்துக்கள். சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால், என் தொண்டையில் ஒரு கட்டி இருக்கிறது. பேச முடியவில்லை.

இனி, குழந்தை ராமர் கூடாரத்தில் வசிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரம்மாண்ட கோயிலில் வசிக்க போகிறார். ஜனவரி 22ஆம் தேதி சூரிய உதயம் ஒரு அற்புதமான பிரகாசத்தைக் கொண்டுவந்துள்ளது. ஜனவரி 22, 2024 என்பது காலெண்டரில் எழுதப்பட்ட தேதி அல்ல. இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்" என்றார்.

அடிமை மனோபாவத்தை உடைத்து, பல நூற்றாண்டுகளின் காத்திருப்பு, பொறுமை, தியாகங்களுக்குப் பின், நம் ராமர் இன்று வந்திருக்கிறார். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வசனத்தில் ராமர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது நடக்க பல தசாப்தங்கள் ஆனது. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டது இன்று நிஜமாகியுள்ளது" என்றார்.

"ராமரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்"

தொடர்ந்து பேசிய அவர், "இன்று நானும் ஸ்ரீராமரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். பல நூற்றாண்டுகளாக நம்மால் இப்பணியை செய்ய முடியாமல் போனதற்கு நமது முயற்சியிலும், தியாகத்திலும், தவத்திலும் ஏதோ குறை இருக்க வேண்டும். இன்று இப்பணி நிறைவடைந்துள்ளது. இன்றைக்கு பகவான் ஸ்ரீராமர் நம்மை மன்னிப்பார் என்று நான் நம்புகிறேன்.

சாகரிலிருந்து சரயு வரை பயணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சாகர் முதல் சரயு வரை, ராமரின் பெயரில் கொண்டாட்ட மனநிலை எல்லா இடங்களிலும் தெரிகிறது. ராமர் நெருப்பு அல்ல, ராமர் ஆற்றல். ராமர் என்றால் சச்சரவு அல்ல. ராமரே தீர்வு. ராமர் நமக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் உரியவர். இந்த காலக்கட்டத்துக்கு மட்டும் ராமர் உரியவர் அல்ல. அவருக்கு முடிவே இல்லை.

ராம பிரபுவின் பக்தர்கள் இந்த வரலாற்றுத் தருணத்தில் மெய்மறந்துவிட்டனர் என்று எனக்கு உறுதியான அபரிமிதமான நம்பிக்கையும் உள்ளது. நாடு மற்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ராம பிரபுவின் பக்தர்கள் இதை ஆழமாக உணர்கிறார்கள். இந்த தருணம் தெய்வீகமானது. இந்த தருணம் எல்லாவற்றிலும் புனிதமானது. யாரையும் குறைவாக எடைபோடக்கூடாது. அதற்கு அணிலே உதாரணம்" என்றார்.

Pa.Ranjith – Keerthi Pandian: பா.ரஞ்சித் அரசியல் பேசுனா என்ன தப்பு? கீர்த்தி பாண்டியன் அதிரடி பேச்சு!

நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் மற்றும் நடிகர் அசோக் செல்வன் திருமணம் கடந்த ஆண்டு மிகவும் எளிமையாக நடைபெற்றது. இவர்கள் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தாலும், அவை அனைத்துக்கும் மிகவும் கண்ணியமாக பதிலடி கொடுத்து வந்தார் அசோக் செல்வன். திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவரின் படங்களில் மிகவும் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்த ‘கண்ணகி’ திரைப்படமும், அசோக் செல்வனின் ‘சபாநாயகன்’ திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

பா. ரஞ்சித் தயாரிப்பில் ‘ப்ளூ ஸ்டார்’ :

இந்நிலையில், நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பா. ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியன் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இரட்டை ஹீரோ படமான இப்படத்தில் ஷாந்தனு மற்றொரு நாயகனாக நடித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், பிருத்விராஜன், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் கீர்த்தி:

இந்நிலையில் ‘ப்ளூ ஸ்டார்’ இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தனர். அப்போது மேடையில் பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன் "இன்று இந்த இசை வெளியீட்டு விழா நடக்கும் இந்த முக்கியமான நாளில் அரக்கோணம் ஸ்டைலில் அறிவு எழுதிய பாடல் வரிகளை குறிப்பிட விரும்புகிறேன். காது மேல காசு போடு ராவண குலமே, மேல ஏறும் காலமாச்சு ஏறியாகணுமே…" என்ற பாடலின் வரிகளை குறிப்பிட்டு பேசி இருந்தார்.

அதிரடியான பதில்:

மேலும் அவர் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார். அப்போது “பா. ரஞ்சித் படங்கள் பொதுவாக அரசியல் பேசுவது பற்றி இருக்கும். அதை பற்றி உங்களுடைய கருத்து என்ன?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு “பா. ரஞ்சித் பெயர் வந்தாலே அரசியல் பேச ஆரம்பிச்சிட்டீங்களா என்று தான் கேட்கின்றனர். அவர் அரசியல் பேசினா என்ன தப்பு? நாம் அணியும் உடையில் இருந்து சாப்பிடும் சாப்பாடு, குடிக்கும் தண்ணீர் வரை அனைத்திலும் அரசியல் உள்ளது. அப்படி இருக்கையில் அரசியல் பற்றி பேசாமல் இருப்பதால் அது இல்லை என்ற அர்த்தம் கிடையாது. நீங்கள் அதை தவிர்க்கிறீர்கள் என்று தான் அர்த்தம்" என பதில் அளித்துள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன்.

கிரிக்கெட் சார்ந்த கதைக்களம்:

சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. காதல், குடும்பம், கிரிக்கெட் விளையாட்டால் இரு அணிகளுக்குள் ஏற்படும் மோதல் என அரக்கோணத்தில் நடக்கும் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. அசோக் செல்வன் மற்றும் சாந்தனு இருவரும் எதிர் அணிகளாக வித்தியாசமான லுக்கில் நடித்துள்ளனர். இப்படம் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட குழராமர் சிலை.. பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!
அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்.
பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமர் சிலை:
மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டு களித்தனர்.
ஷியாமல் (கருப்பு நிறம்) கல்லில் வடிவமைக்கப்பட்ட ஐந்து வயது குழந்தை ராமர், தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தாமரை மற்றும் ஒளிவட்டம் இருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலையின் எடை 150 கிலோ எனக் கூறப்படுகிறது. சிலையின் மொத்த உயரம் ஏழு அடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயிலின் தரை தளத்தில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முதல் தளம் இன்னும் கட்டப்படவில்லை. முதல் தளம் கட்டப்பட்ட பிறகு, ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோரின் சிலை அங்கு வைக்கப்பட உள்ளது.
திறப்பு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்:
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தியில் குவிந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கோஷங்களை எழுப்பியும், நடனமாடியும், காவி நிற கொடிகளை அசைத்தும்,பாடல்களை பாடிக்கொண்டும், இசைக்கருவிகளை வாசித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் சாலைகள், ரயில் நிலையங்கள் நிரம்பி வழிகின்றன.
#WATCH | PM Narendra Modi offers prayers to Ram Lalla. The idol was unveiled at the Ram Temple in Ayodhya during the pranpratishtha ceremony.#RamMandirPranPrathistha pic.twitter.com/bHvY3L4Ynk
— ANI (@ANI) January 22, 2024பிரான பிரதிஷ்டை விழாவில் கலந்துக்கொள்ள இருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்காக 20,000 த்துக்கும் மேற்பட்ட பிரசாத பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் நெய், 5 வகையான உலர் பழங்கள், சர்க்கரை, உளுந்து மாவு கொண்டு தயார் செய்யப்பட்ட லட்டு, சரயு நதி தீர்த்தம், அட்சதை, வெற்றிலை தட்டு ஆகியவை அடங்கும்.
ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றுள்ள நடிகர் அனுபம் கெர், “பல வருடங்களாக இந்த நாளுக்காக தான் காத்திருந்தோம், இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது. மேலும் நான் அனைத்து ராம பக்தர்களுடன் அயோத்தியை அடைந்தேன். விமானம் முழுவதும் பக்தியின் அற்புதமான சூழலைக் கொண்டிருந்தது” என தெரிவித்துள்ளார்.

IND Vs ENG: England Cricket Team Test Records Stats In India Ind Vs Eng Latest Tamil Sports News
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரானது வருகின்ற ஜனவரி 25-ம் தேதி முதல் தொடங்குகிறது. வெற்றி தொடரை தக்க வைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது இந்திய அணி. அதே சமயம் இந்திய மண்ணில் 12 ஆண்டுகால வறட்சியை முடிவுக்கு கொண்டு வர இங்கிலாந்து அணி விரும்புகிறது. இங்கிலாந்து அணி கடைசியாக 2012ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் தொடங்கும் இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையேயான தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ‘பேஸ்பால்’ முறையை தொடர்வார்களா? அல்லது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெல்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
புள்ளிவிவரங்கள் என்ன சொல்கிறது..?
இந்தியாவும் இங்கிலாந்தும் இதுவரை 131 முறை டெஸ்ட் போட்டியில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக இங்கிலாந்து அணி 50 போட்டிகளில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில், இந்திய அணி 31 போட்டிகளில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. இது தவிர, இரு அணிகளும் இதுவரை 50 டெஸ்ட் போட்டிகள் டிரா செய்துள்ளனர். இதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக நிலைமை மாறியுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இந்திய மண்ணில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வென்றதில்லை.
இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி எப்படி..?
கடந்த சில ஆண்டுகளாக இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி திணறி வருகின்றனர். புள்ளிவிவரங்களும் இதையே சொல்லுகிறது. இதுவரை இந்திய மண்ணில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 64 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் இங்கிலாந்து அணி இந்திய அணியை 14 போட்டிகளில் தோற்கடித்துள்ளது. மேலும் 28 டெஸ்ட் போட்டிகள் டிரா செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்திய மண்ணில் இங்கிலாந்துக்கு டெஸ்டில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது என தெரிகிறது. அதிலும் குறிப்பாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இங்கிலாந்து அணி தொடர்ந்து ‘பேஸ்பால்’ பாணியில் விளையாடுகிறதா அல்லது அதன் வியூகத்தை மாற்றுகிறதா என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் அட்டவணை:
1வது டெஸ்ட்: 25-29 ஜனவரி, ஹைதராபாத்2வது டெஸ்ட்: 2-6 பிப்ரவரி, விசாகப்பட்டினம்3வது டெஸ்ட்: 15-19 பிப்ரவரி, ராஜ்கோட்4வது டெஸ்ட்: 23-27 பிப்ரவரி, ராஞ்சி5வது டெஸ்ட்: 7-11 மார்ச், தர்மஷாலா
முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான்
இங்கிலாந்து அணி:
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஜாக் கிராலி, பென் டக்கெட், பென் ஃபாக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வுட் .
Director Pa Ranjith Speech About Ayodhya Ram Mandir In Blue Star Audio Launch | Pa Ranjith: இன்னும் 4,5 ஆண்டுகளில் மோசமான இந்தியாவில் இருப்போம்
இன்னும் 5, 10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமான ஒரு இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்ற பயம் இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் “ப்ளூ ஸ்டார்”. இந்த படத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, ப்ரித்வி ராஜன், பகவதி பெருமாள், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் இப்படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.
அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் இருவரும் திருமணம் செய்த பிறகு, இணைந்து நடித்துள்ள ப்ளூ ஸ்டார் படம் வெளியாக உள்ளது பலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ப்ளூ ஸ்டார் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படியான நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித், ராமர் கோயில் திறப்பு பற்றி தனது கருத்துகளை தெரிவித்தார். அதில், “ராமர் கோயில் திறப்பு இன்று நடந்து கொண்டிருக்கிறது. அதன் பின்னால் இருக்கும் மத அரசியல் பற்றி எல்லாரும் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஒரு சிக்கலான சூழல் உள்ளது. இன்றைக்கு முக்கியமான நாள். வீட்டில் யாரும் கற்பூரம் ஏற்றவில்லை என்றால் எல்லாரும் தீவிரவாதிகள் தான் எனவும், அந்த அளவிற்கு இன்றைக்கு பயங்கரமாக போய் கொண்டு இருக்கிறது.
தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 5, 10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமான ஒரு இந்தியாவில் இருக்க போகிறோம் என்ற பயம் இருந்து கொண்டிருக்கிறது. இந்த பயமான காலகட்டத்தில் நுழைவதற்கு முன்னர் நம்மை நாம் சரி செய்வதற்கு, நம் மனதை பண்படுத்துவதற்கு, நம மூளையில் ஏற்றி வைத்து இருக்கும் பிற்போக்கு தனத்தையும், மதவாதத்தையும் அழிக்கும் கருவியாக சினிமாவை பயன்படுத்துகிறோம்.
மக்களிடம் எளிதாக சென்றடைய கூடியதுதான் இந்த சினிமா. மக்களிடம் இருக்கும் பிற்போக்குதன்மையை இந்த கலை போக்கிவிடும் என நினைக்கிறோம். நம்பிக்கையுடன் தான் வேலை செய்து வருகிறோம். இந்தியாவை மோசமான காலகட்டத்தில் தள்ளி விடாமல் இருக்க நம்மால் முடிந்ததை இந்தியா முழுக்க செய்வோம்” என்று தெரிவித்துள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் இந்த பேச்சு இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Ayodhya Ram Temple: ராமர் கோயில் திறப்பு; விழுப்புரத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை

விழுப்புரம்: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு விழுப்புரத்தில் முன்னூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளி கவசம் பொருத்தபட்டிருப்பதை பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குடமுழக்கு விழாவினை பார்ப்பதற்காக எல்இடி திரையில் ஒளிபரப்பவும், கோவில்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் திருவிக வீதியிலுள்ள மூன்னூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் ராமர் கோவில் குடமுழக்கு விழாவினை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வெள்ளி கவசம் பொருத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதே போன்று ராமர் சிலைக்கும் அபிஷேக செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் குடமுழக்கு ராமருக்கு செய்யப்பட உள்ளதால் விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஆஞ்சநேயரை பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அயோத்தி குழந்தை ராமர்

அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்.

மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டு களித்தனர்.

ஷியாமல் (கருப்பு நிறம்) கல்லில் வடிவமைக்கப்பட்ட ஐந்து வயது குழந்தை ராமர், தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தாமரை மற்றும் ஒளிவட்டம் இருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலையின் எடை 150 கிலோ எனக் கூறப்படுகிறது. சிலையின் மொத்த உயரம் ஏழு அடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயிலின் தரை தளத்தில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முதல் தளம் இன்னும் கட்டப்படவில்லை. முதல் தளம் கட்டப்பட்ட பிறகு, ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோரின் சிலை அங்கு வைக்கப்பட உள்ளது.

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலய பாலமுருகனுக்கு அபிஷேகம்

தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் தை மாத கிருத்திகை முன்னிட்டு பாலமுருகனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தை மாத கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு தை மாத கிருத்திகை முன்னிட்டு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி ,பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அழகன் பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து பாலமுருகனுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தை மாத கிருத்திகை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தை மாத கிருத்திகை முன்னிட்டு ஆறுமுகசாமி வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா காட்சி.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சவுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தை மாத கிருத்திகை முன்னிட்டு ஆறுமுக சுவாமி வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வெள்ளி ரிஷப வாகனத்தில் வள்ளி தெய்வானை உடன் ஆறுமுகசாமி மேள தாளங்கள் முழங்க திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற தை மாதம் கிருத்திகை பூஜையை முன்னிட்டு நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

கரூரில் தைப்பூச திருவிழா நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தைப்பூச விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் வரும் ஜனவரி 25ஆம் தேதி தைப்பூச தினத்தினை முன்னிட்டு குளித்தலை அய்யர் மலை ராஜேந்திரம் கருப்பத்தூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பெட்டவாய்த்தலை, முசிறி, வெள்ளூர் திருஈங்கோய்மலை சிவாலயங்களைச் சேர்ந்த எட்டு சோமஸ் கந்தர்கள் அம்பாளுடன் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி கண்டு ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வரும் ஜனவரி 5ஆம் தேதி தைப்பூச திருவிழாவினை நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ரவி தலைமையில் நடைபெற்றது.

தைப்பூசத்தன்று லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவதால் காவிரி ஆற்று பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் சுவாமிகள் சந்திப்பு மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சியினை நடத்த வேண்டும் என்றும், மேலும் பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், சுவாமிகள் வரும் போது மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து கருத்துகள் கேட்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டன.

இதில் எட்டு ஊர் கோயில் செயல் அலுவலர்கள் சிவாச்சாரியார்கள், காவல்துறை தீயணைப்பு துறை பொதுப்பணித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Ayodhya Ram Temple Kudamuzku Live At Villupuram Railway Station
விழுப்புரம்: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா விழுப்புரம் ரயில் நிலையத்தில் எல்இடி டிவி மூலம் நேரலை நிகழ்வு ஒளிபரப்பு செய்யபட்டு வருகிறது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு:
நாடு முழுவதும் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால் அது ராமர் கோவில் கும்பாபிஷேகத்தைப் பற்றிதான். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோவில் திறப்பு விழா இவ்வளவு கவனம் பெறக் காரணம். அதன் பின்னால் இருக்கும் அரசியலும்தான். ராமர் கோவில் குறித்து கடந்த கால தேர்தல்களில் வாக்குறுதிகள் கூட இடம்பெற்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதனால்தான் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இவ்வளவு கவனத்தைப் பெற்றிருக்கின்றது.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, அதாவது ஜனவரி 22-ஆம் தேதி இன்று நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் கவனமும் இந்த விழா பக்கம் திரும்பியுள்ளது. குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமர் கோயில் விழாவை பொதுமக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து திரைத்துறை பிரபலங்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளன.
கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை ராமர் கோயில் அறக்கட்டளை அழைத்துள்ளது. இவர்களை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் திறப்பால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் குடமுழுக்கு விழா பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரலை செய்ய கூடாது என காவல்துறை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெறுகிறது. இதனைக் காண மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட எல்இடி திரையில் பொதுமக்களுடன் அமர்ந்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. காவல்துறை அனுமதி இல்லாததால், எல்இடி திரையை காவல்துறையினர் அறிவுறுத்தல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து எல்இடி திரையை அகன்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் எல்இடி டிவி மூலம் அய்யோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நேரலை நிகழ்வு ஒளிபரப்பு செய்யபட்டு வருகிறது.
Subramanian Swamy Slams PM Modi Over Ayodhya Ram Mandir Opening Says He Never Followed Bhagwan Ram In His Personal Life | Subramanian Swamy
அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு (குழந்தை ராமர் சிலை) சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராமர் கோயில் வேகமாக கட்டப்பட்டு வருகிறது.
ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு அயோத்தியில் கோலாகலம்:
இதற்கிடையே, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை ராமர் கோயில் அறக்கட்டளை அழைத்துள்ளது.
கோயில் திறப்பு விழாவில் கூடுதலாக 7,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களும் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார்கள்.
ராமர் கோயில் திறப்பால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பல மாநில அரசுகளும் இன்று விடுமுறையை அறிவித்துள்ளன.
பிரதமர் மோடியை வெளுத்து வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி:
இந்த நிலையில், ராமர் கோயில் விவகாரத்தை முன்வைத்து பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியை காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், “சுயநல காரணங்களுக்காக பிரான பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார். ராமர் கோயில் பூஜையை பொறுத்தவரையில் அதில் கலந்து கொள்வதில் பிரதமர் மோடிக்கு அந்தஸ்து இல்லை.
Modi is muscling into the Prana Prathishta Puja, when his PM status is a zero in the Puja, nor has he followed Bhagwan Ram in his personal life especially in his behaviour to his wife, nor he has acted as per Ram Rajya as PM during the last decade.
— Subramanian Swamy (@Swamy39) January 22, 2024தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பகவான் ராமரை பிரதமர் மோடி பின்பற்றியது இல்லை. குறிப்பாக, தன்னுடைய மனைவியை நடத்திய விதத்தில் பகவான் ராமரை பின்பற்றவில்லை. ராம ராஜ்ஜியத்தின்படி, கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சி நடத்தவில்லை” என்றார்.

Sun Tv Ethirneechal Serial Today Episode January 22 Promo | Ethirneechal: அரிவாளுடன் பொங்கி எழுந்த விசாலாட்சி: குணசேகரன் தலையில் அடுத்தடுத்து விழும் இடி
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சமீப காலமாக சூடுபிடித்து மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் ட்விஸ்ட் வைப்பதில் எதிர்நீச்சல் தொடரை மிஞ்ச வேறு எந்த ஒரு சீரியலாலும் முடியாது. கடந்த வாரத்தில் ஜனனியின் அம்மா பார்வதியை நிர்க்கதியாக விட்டுவிட்டு நாச்சியப்பன் தன்னுடைய குடும்பத்துடன் போய் சேர்ந்து விட, பிரச்சினை பயங்கரமாக வெடித்தது. மறுபக்கம் தர்ஷினி ஜூடோ பயிற்சி போவதைப் பற்றி கரிகாலன் குணசேகரனிடம் வத்தி வைக்க, அவர் தர்ஷினியின் கோச்சுக்கு போன் செய்து தாறுமாறாகப் பேச, அவர் தர்ஷினிக்கு இனி பயிற்சி கொடுக்க முடியாது என சொல்லி விடுகிறார். தன்னுடைய கனவை குணசேகர அழித்துவிட்டதை நினைத்து மனம் நொந்துபோன தர்ஷினி, பள்ளியில் இருந்து சோகமாக சென்று கொண்டிருக்கும்போது, அவளை சில மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்று விடுகிறார்கள்.
க்தர்ஷினியை காணவில்லை என குணசேகரன் வீடே பதட்டத்தில் இருக்கிறது. ஈஸ்வரி மகளைக் காணவில்லை என கதறி துடிக்கிறாள். ஆனால் குணசேகரனோ ஈஸ்வரி தான் தர்ஷினியை யாரோடோ ஓட வைத்துவிட்டாள் என வாய்க்கு வந்தது போல பேசுகிறார். போலீஸ் வந்து ஜான்சியையும், கரிகாலனையும் தர்ஷினியின் கடத்தலில் சந்தேகப்பட்டு அழைத்து சென்று அடிதடியுடன் விசாரணை செய்கிறார்கள். குணசேகரன் வந்து அவர்களை ஜாமீனில் எடுக்கிறார். அப்போது குணசேகரன் மீண்டும் கரிகாலனிடம் தர்ஷினி உனக்கு தான் என சொல்ல டென்ஷனான கதிர் குணசேகரனை எதிர்த்து பேச அவர் அதிர்ச்சி அடைகிறார். இது தான் கடந்த வார எதிர்நீச்சலின் கதைக்களம்.அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. கரிகாலன் பேசியதைக் கேட்டு கடுப்பான கதிர் கரிகாலனை ஓங்கி கன்னத்தில் அறைந்து விடுகிறான். அதைப் பார்த்த குணசேகரன், “கரிகாலன் சொன்ன கருத்து தான் என்னுடையதும். அப்பா என்னையும் அடிப்பியா?” என ஆவேசத்துடன் கேட்க “ஒன்னு நீ மாறு இல்லனா என்ன மாற விடுயா” என கதிர் கோபத்தில் சொல்ல குணசேகரனுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. அருகில் இருந்த ஞானத்திற்கும் கதிர் பேசியது அதிர்ச்சியாக தான் இருக்கிறது.
ஈஸ்வரியும் மற்ற பெண்களும் சேர்ந்து ஜீவானந்தம் வீட்டுக்குச் சென்று அவரின் உதவியுடன் தர்ஷினியை தேடலாம் என செல்கிறார்கள். ஆனால் ஜீவானந்தம் வெண்பாவை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்று இருப்பதாக ஃபர்ஹானா சொல்லி ஏதாவது பிரச்சினையா எனக் கேட்கிறாள். வீட்டுக்கு வந்த குணசேகரனிடம் அரிவாளுடன் ஆவேசமாக வந்த விசாலாட்சி அம்மா “பெரியவனே… போதும்யா இனி அவளுங்க நமக்கு தேவை இல்லை” என்கிறார். அதைப் பார்த்த குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
மீண்டும் ஜீவானந்தம் என்ட்ரி இருக்க போகிறது என்பது எதிர்நீச்சல் (Ethirneechal) ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதே போல கதிரின் இந்த திடீர் மாற்றங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தர்ஷினியை யார் கடத்தியது என்பது ஒரே கேள்விக்குறியாக இருக்கிறது. இனி வரும் எபிசோடுகளில் அதற்கான விடை கிடைக்கும்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா; கரூரில் அன்னதான விழாவிற்கு அனுமதி இல்லை

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கரூர் அருகே பெருமாள் கோவிலில் ஊர் பொதுமக்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம், அன்னதான விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் அனுமதி இல்லை என காவல்துறையினர் தடுத்து நிறுத்தி நோட்டீஸ், பிளக்ஸ் பேனர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவகுளம் பகுதியில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடேச பெருமாள் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஊர் பொதுமக்கள் சார்பில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11 மணி முதல் சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து 12 மணிக்கு மேல் சுமார் 1500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என பிளக்ஸ் பேனர் அடித்து கோவில் முன்பாக வைத்திருந்தனர்.

மேலும், அன்னதானத்திற்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது மாயனூர் காவல்துறையினர் இரண்டு பேர் வந்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் அன்று சிறப்பு அபிஷேகம், அன்னதானத்திற்கு அனுமதி கிடையாது, அரசு மேலிடத்திலிருந்து வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் பிளக்ஸ் பேனர்களை அகற்றவும், அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை செய்யக்கூடாது என தடுத்து நிறுத்தி அனுமதி இல்லை என நோட்டீஸ் கொடுத்து அறிவுறுத்தியுள்ளனர்.

ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் ஒன்று கூடி வாக்குவாதம் செய்துள்ளனர். சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஊர் பொதுமக்கள், கண்டிப்பாக சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடைபெறும் என தெரிவித்து தற்போது அன்னதானத்திற்கான வேலைகளை செய்து வருகின்றனர்.

Sarathkumar Says Holiday For Ram Temple Kudamuzuk No Mistake – TNN | ராமர் கோயில் குடமுழுக்கிற்கு விடுமுறை; எந்த தவறும் இல்லை
திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் பணிப்பெண் சித்ரவதை விவகாரத்தில் பெண்களை யார் துன்புறுத்தினாலும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் தான். அதற்கு மாற்று கருத்தே கிடையாது என கடலூரில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் பேட்டியளித்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வாண்டையார் இல்ல திருமண விழா நடைபெறுகிறது. இதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் கடலூர் நகர அரங்கம் அருகே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் கடலூர் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடலூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் முத்துக்குமரன், மாவட்ட அமைப்பாளர் குமாரசாமி, சர்க்கரை கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கூறுகையில், நடிகர் சங்க கட்டிடத்திற்கு மறைந்த நடிகர் விஜயகாந்த் பெயர் சூட்டுவதற்கு பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரட்டும், அதன் பிறகு எங்கள் முடிவை அறிவிப்பதாகவும் கூறினார்.
பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் வேலைக்கு சென்ற இளம்பெண்ணை சித்ரவதை செய்த விவகாரம் தொடர்பான அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தையும் கருத்தையும் தெரிவித்து வருகின்ற நிலையில் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சரத்குமார், எந்த வீட்டில் பெண்கள் யாரை சித்திரவதை செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்தான், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது என தெரிவித்தார்.
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக மத்திய அரசு அலுவலகங்கள் விடுமுறை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ராமர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோவிலாக கட்டப்பட்டுள்ளதால் அதனை மக்கள் அனைவரும் அதன் கோவிலின் தொழில்நுட்பங்களை பார்க்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசானது விடுமுறை அளித்துள்ளது. அதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை என்று கூறினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் தயாராகி வருகிறது. வருகின்ற பிப்ரவரி இரண்டாம் தேதி கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்துப் பேச உள்ளதாகவும், அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
TN Voter List: தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள்.. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக வாக்காளர் பட்டியல் பணிகள் தேர்தல் ஆணையம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் ‘சிறப்பு சுருக்கமுறை திருத்தம்’ எனப்படும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்டது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான மனுக்கள் அன்று முதல் பெறப்பட்டன. டிசம்பர் 9 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் பெறப்பட்டன. இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடைபெற்றது. முதலில் ஜனவரி 5 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால இது தாமதமாகின. அதன்படி இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6,18,9,0348 ஆகும். அதில் ஆண்கள் – 3,03,96,330, பெண்கள் – 3,14,85,724, மூன்றாம் பாலினம் – 8,294 பேர் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் 6,60,419 பேரும், கேவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில் 4,62,612 பேரும் அடங்குவர். குறைந்தபட்ச வாக்காளர்கள் நாகை மாவட்டம் கீழ்வேளூர் – 1,72,140 உள்ளனர். அதனை தொடர்ந்து சென்னை துறைமுகம் 1,72,624 ஆகும். வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாடு வாக்காளர்களின் எண்ணிக்கை 3480 பேர் ஆகும். மாற்று திறனாளிகள் 4,32,805 பேர் உள்ளனர். இதனை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

Why Home Minister Amit Shah Didn’t Show Up In Ayodhya Ram Mandir Festival
Ayodhya Ram Mandir: உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா வீட்டிக் நிகழ்ந்த துக்க சம்பவம் காரணமாக, அவர் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா:
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதையேற்று ஏராளமான பிரபலங்கள் அயோத்தியில் குவிந்து வருகின்றனர். அதேநேரம், பிரதமர் மோடியின் வலதுகரமாகவும், அவரது அரசில் உள்துறை அமைச்சர் பதவியை வகிக்கும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, குடமுழுக்கு விழா தொடர்பான எந்த நிகழ்விலும் இதுவரை பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அமித் ஷா வீட்டில் துக்க சம்பவம்:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மூத்த சகோதரி ராஜேஸ்வரிபென் மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். 60 வயதை கடந்த அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜேஸ்வரி பென் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழக்க, திங்கட்கிழமை அன்று அகமதாபாத்தில் உள்ள கால்தேஜ் பகுதி இடுகாட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இதில் அமித் ஷா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். துக்க நிகழ்வால் ஏற்பட்ட தீட்டு காரணமாகவே அமித் ஷா, அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு தொடர்பான நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெறும் கோயில் கருவறையில் சிலை நிறுவும் நிகழ்ச்சியில் பங்கேற்பதும் சந்தேகம் எனவே கூறப்படுகிறது.
10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்:
முக்கிய பிரமுகர்களின் வருகையையொட்டி அயோத்தியில் மூன்றடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநில காவல்துறை தொடங்கி சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கோயில் நகரத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, கண்ணிவெடி எதிர்ப்பு டிரோன்களைப் பயன்படுத்துவதோடு, செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட டிரோன்கள் மூலமான கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட ஆளில்லா விமானங்கள் அயோத்தி முழுவதும் வான்வழி கண்காணிப்பை செய்து வருகின்றனர். கண்ணிவெடி எதிர்ப்பு டிரோன்கள் தரையில் வெடிபொருட்கள் அல்லது கண்னிவெடிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்கின்றன. தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் இயங்கும், என்டி-மைன் ட்ரோன்கள், நிலத்தடி வெடிபொருட்களைக் கண்டறிவதற்கான ஸ்பெக்ட்ரோமீட்டர் அலைநீளம் கண்டறிதல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. கண்காணிப்பு பணிகளுக்காக10,000 சிசிடிவி கேமராக்கள் நகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன.

Jailer 2 : அடடே! இவங்க எல்லாரும் கூட்டணி சேர போறாங்களா… தீயாய் பரவம் ஜெயிலர் 2 அப்டேட்!
Jailer 2 : அடடே! இவங்க எல்லாரும் கூட்டணி சேர போறாங்களா… தீயாய் பரவம் ஜெயிலர் 2 அப்டேட்!
Union Minister Nirmala Sitharaman Has Posted On X Site Condemning The Removal Of LED Screens In Kanchipuram District Ram Mandir Opening Ceremony | Nirmala Sitharaman: ’வயித்திலே அடிக்கும் வேலையை தான் திமுக செய்து வருகிறது’
ராமர் கோயில் திறப்பு விழாவை மக்கள் நேரலையில் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள எல்.ஈ.டி. திரைகள் அகற்றப்பட்டதை எதிர்த்து நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் பதிவு செய்துள்ளார்.
500 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்பட உள்ளது. ‘பிரான் பிரதிஷ்டா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த சடங்கில், பிரதமர் மோடி பங்கேற்று குழந்தை ராமர் சிலையை கருவறையில் நிறுவி ஆரத்தி வழங்கவுள்ளார். இந்த செயல்முறை பிற்பகல் 12.20-க்கு தொடங்கி 1 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து 7,000 க்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வை பொதுமக்கள் வீடுகளில் இருந்தே கண்டுகளிக்கும் வகையில் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதையொட்டி பல மாநிலங்கள் விடுமுறை அறிவித்துள்ள சூழலில், மத்திய அரசு தனது அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நாளை முதல் பொதுமக்கள் கோயிலுக்கு வந்த தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் திறப்பு விழாவை நாட்டில் இருக்கும் மக்கள் காணும் வகையில் பல்வேறு இடங்களில் எல்.ஈ.டி திரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காஞ்பிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் எல்.ஈ.டி திரை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த திரைகள் போலீசார்கள் அகற்றப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ 22 ஜனவரி 24 அன்று நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்து அறநிலைத்துறை நிர்வகிக்கப்படும் கோயில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Inside the famous Kamakshi Kovil, which is privately held, where bhajans have started from 08:00hrs, LED screens are being removed with plain-clothed policemen.In a temple, privately held, worshippers watching @PMOIndia perform prana prathishta is a serious infringement on our… pic.twitter.com/ykRKhYOgZZ
— Nirmala Sitharaman (@nsitharaman) January 22, 2024மேலும், “ பஜனைகள் ஏற்பாடு செய்தல், ஏழைகளுக்கு உணவளித்தல், இனிப்புகள் வழங்குவது போன்றவற்றிற்காக மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் கலந்துகொள்வதை நாங்கள் நேரில் காண விரும்புகிறோம். இது திமுகவின் மக்கள் விரோத செயலாகும்” என தெரிவித்துள்ளார்.
In Kanchipuram district alone, 466 LED screens were arranged for live telecast of @narendramodi in Ayodhya. In more than 400 of those places the police has either confiscated the screens or deployed force to prevent the live telecast. LED suppliers are fleeing with fear. The…
— Nirmala Sitharaman (@nsitharaman) January 22, 2024“ காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 466 எல்.ஈ.டி திரைகள் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். அல்லது நேரடி ஒளிபரப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்.ஈ.டி திரை உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்து விரோத திமுக சிறு வணிகர்களை தாக்குகிறது. தமிழில் இதை “வயித்திலே அடிப்பது” என்பார்கள்.

BCCI Is Planning To Hold The 2024 Edition Of The IPL From March 22 To May 26
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2024) 17வது சீசனுக்கான எதிர்பார்ப்பு கடந்த 2023 டிசம்பரில் ஏலம் நடத்தப்பட்டதில் இருந்தே அதிகரித்து வருகிறது. ஐபில் 2024 சீசன் எப்போது தொடங்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றன. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மார்ச் முதல் மே மாதம் வரை தேதியை தேர்வு செய்யாமல் தவித்து வருகிறது.
வருகின்ற ஜூன் 1ம் தேதி டி20 உலகக் கோப்பை தொடங்க உள்ள நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 17வது சீசனை வரும் மார்ச் 22ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை நடத்த ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ அறிக்கையின்படி, மகளிர் பிரீமியர் லீக் பிப்ரவரி 22 முதல் மார்ச் 27 வரை பெங்களூரு மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ளது. மும்பை இந்தியன்ஸ், கடந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு WPL சாம்பியனாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2024 (Cricbuzz):- Starts from 22nd March.- The Final on 26th May. pic.twitter.com/UkE8atwMBs
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 22, 2024லீக் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே வேறு நாடுகளில் நடத்த விரும்பாத பிசிசிஐ, பாதுகாப்பாக இந்தியாவில் நடத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ நாங்கள் ஐபிஎல் அட்டவணையை பற்றி விவாதித்தோம். நாடாளுமன்ற தேர்தல் குறித்து உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பதிலுக்காக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. இந்த நாடாளுமன்ற தேர்தல் ஐபிஎல் நடைபெறும் நேரத்தில் வருகிறது. இந்தியாவில் இருந்து ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றும் ஐடியா இல்லை. நாடாளுமன்ற தேர்தல் அட்டவணைக்காக நாங்கள் காத்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து, ஐபிஎல் போட்டிகளை நடத்த முன்னெடுத்து செல்போம். ஐபிஎல் முழு போட்டியையும் இந்தியாவில் நடத்துவதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்” என்று தெரிவித்தார்.
கடந்த வாரம் பிசிசிஐ, டாடா குழுமம் அதன் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளதாக அறிவித்தது.
கடந்த 2009 மற்றும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இரண்டு முறை ஐபிஎல் போட்டியானது வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகள் முழுவதுமாக நடந்த நிலையில், 2024ம் ஆண்டு லீக் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை பார்க்க மிக ஆர்வமாக இருக்கும். இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுகிறது. இந்த மாபெரும் போட்டி வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே தொடங்குகிறது. ஐபிஎல் முடிந்த உடனேயே டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால் வீரர்களுக்கு சோர்வுக்கு ஏற்படும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

Governor RN Ravi: கோயில் பூசாரி, ஊழியர்கள் கண்ணில் அச்சம்.. தமிழ்நாடு அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்

தான் சாமி தரிசனம் மேற்கொண்ட கோயில் பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் அச்ச உணர்வு இருந்ததாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்படுகிறது. இந்நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலையை நிறுவ உள்ளார். இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ராமர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், பஜனைகள் உள்ளிட்ட பல சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறை அனுமதி மறுப்பதாக பாஜக சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னையில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

"இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம்…

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 22, 2024

இதன்பின்னர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது" என தெரிவித்திருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆனால் தங்களுக்கு எந்தவித அச்சமும் இல்லை, அடக்குமுறையும் இல்லை என கோதண்ட ராமர் கோயில் அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு – பாஜக தலைவர்கள் கருத்து மோதல்

ஏற்கனவே தமிழ்நாடு கோயிலில் ராமர் பெயரில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்க மாநில அரசு தடை விதித்ததாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும், தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், “நாளிதழில் வெளியான தகவல் தவறு, அப்படி எதுவும் தடை விதிக்கவில்லை. மேலும் ராமர் கோயில் தொடர்பாக தவறான தகவல் பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், தடையை மீறி கோயில்கள் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜை, அன்னதானம் உள்ளிட்ட நடைமுறைகள் தொடரும் என தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ayodhya Ram Mandir: “ஆசீர்வாதமாக உணர்கிறோம்” – ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் உற்சாகம்!

அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்படும் நிலையில், இதன் விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதனைப் பற்றி காணலாம்.

பாடகர் ஷங்கர் மகாதேவன்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றுள்ள பாடகர் ஷங்கர் மகாதேவன், “நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். நானும் என் மனைவியும் இந்த கோயில் திறப்பு விழாவில் ஒரு அங்கம் என்பதை ஆசீர்வாதமாக உணர்கிறோம். உலகில் அமைதி நிலவ பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதேபோல் இசையமைப்பாளர் அனு மாலிக் கூறுகையில், “இது ஒரு அற்புதமான தருணம். ராமர் கோயிலை கண்டு நான் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறேன். இது ஒரு பெரிய சந்தர்ப்பம்” என தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஷெபாலி ஷா

லக்னோ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாலிவுட் நடிகை ஷெபாலி ஷா , “நான் அயோத்தியில் இருப்பதில் பெருமை கொள்கிறேன். இது நம் நாடும், இந்தியர்களாகிய நாமும் அனுபவிக்கக்கூடிய மிகப்பெரிய கலாச்சார தருணங்களில் ஒன்றாகும். இந்த தருணம் நாடு முழுவதும் கொண்டாடுகிறது. இது ஒரு அனைவருக்குமான மகிழ்ச்சியான தருணம்” என கூறியுள்ளார்.

நடிகர் அனுபம்கெர்

நடிகர் அனுபம் கெர் தெரிவிக்கையில், “பல வருடங்களாக இந்த நாளுக்காக தான் காத்திருந்தோம், இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது. மேலும் நான் அனைத்து ராம பக்தர்களுடன் அயோத்தியை அடைந்தேன். விமானம் முழுவதும் பக்தியின் அற்புதமான சூழலைக் கொண்டிருந்தது” என தெரிவித்துள்ளார்.

பாடகர் சோனு நிகம்

இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். உலகில் எங்கெல்லாம் சனாதன தர்மம் இருக்கிறதோ அங்கெல்லாம் மகிழ்ச்சியும் உற்சாகமும் இருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் காலத்தில் கடவுள் நம்மைப் பிறக்கத் தேர்ந்தெடுத்தார் என்பதை நம்மால் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அழைப்பிதழ் பெற்ற அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன் என பாடகர் சோனு நிகம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் ஓபராய்

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கூறுகையில், “நான் முதன்முறையாக அயோத்திக்கு வந்திருக்கிறேன். நாம் இங்கே சுவாசித்தால், ‘ராம பக்தி’ உங்களுக்குள்ளும் வரும் என்று உணர்கிறேன். இந்த இடத்தின் ஆற்றல் அதிகம். மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். ராமர் எப்போதும் மக்களையும் சமூகத்தையும் இணைத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.

நடிகை கங்கனா ரணாவத்

அயோத்தி நகரமே மணமகள் போல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பஜனை, யாகம் நடத்தப்படுகிறது. தேவலோகத்தை அடைந்தது போல் உணர்கிறோம். வர விரும்பாதவர்களை பற்றி எதுவும் சொல்ல முடியாது.இப்போது அயோத்தியில் இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது.

போலீஸ் மூலம் மிரட்டுவதாக மக்கள் புகார் – நிர்மலா சீதாராமன் பேட்டி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏரி காத்த ராமர் கோவிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை புரிந்து தூய்மை பணிகளை மேற்கொண்டார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது : பிரதமர் மோடி நாளை அயோத்தியில், கிட்டத்தட்ட 550 ஆண்டு காலம் போராட்டத்திற்கு பிறகு சுமூகமாக எந்தவித கேள்விக்குறி இல்லாமல், சர்ச்சை இல்லாமல் கலவரம் இல்லாமல் அமைதியாக, நீதிமன்றம் மூலம் ஆணை பெற்று, அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

நாட்டில் உள்ள பலதரப்பட்ட ஊர்களில் இருந்து , வரி பணம் இல்லாமல் சட்ட ரீதியாக தனி அறக்கட்டளை மூலமாக, சோமநாத் கோவில் போல பொதுமக்களின் நிதி உதவியின் அடிப்படையில் புனரமைக்கப்பட்டதோ, அதேபோல் பொதுமக்களால் கொடுக்கப்பட்ட நிதி உதவிகள் மூலமாக, உத்தரபிரதேச அரசோ மத்திய அரசு மூலமாக எந்த உதவிகளும் பெறாமல் , அறக்கட்டளை மூலமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், எந்தவித தலைமையும் இல்லாமல் , மக்களே பங்கேற்று , தங்களை இதில் சேர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

எப்படி சபரிமலைக்கு செல்லும்பொழுது விரதம் இருப்பார்களோ. அதேபோன்று 11 நாட்களாக இந்த கோவில்களுக்காக செல்வதற்கு முன்பாக ராமர் எங்கெங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் சென்று பல்வேறு கோவில்களில் வேண்டிக்கொண்டு நாளை ராமர் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த சமயத்தில் பிரதமர் ஒரு கோரிக்கை வைத்தார் அனைத்து கோவில்களும் சுத்தம் செய்ய வேண்டும். கோவிலை சுத்தம் செய்வதில் அனைவரும் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார் அதன் அடிப்படையில் இன்று மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலில், நான் இன்று சுத்தம் செய்தேன். 1756 பொழுது பிரிட்டிஷ் அதிகாரி முன்பு ராமரே மின்னல் ரூபத்தில் வந்து அந்த ஏரியை காப்பாற்றினார் என்பது நம்பிக்கை. அந்த பிரிட்டிஷ் அதிகாரிக்கு அதன் நினைவாக ஒரு கோவில் கட்டுமானத்தையும் கட்டி வைத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட ஒரு வாரமாக 22ஆம் தேதி பிரதமர் அயோதியில் செய்யக்கூடிய காரியம். நம்ம நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டில் இருப்பவர்கள் கூட கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி. மக்களே அவர்கள் ஊரில் இருக்கும் கோவிலுக்கு சென்று, ராம நாம சங்கீதம் என கூறுவார்கள் பஜனை என கூறுவார்கள் அவற்றைப் பாடி அங்கிருக்கும் கோவிலிலிருந்து, அயோதியில் நடக்கும் காட்சியை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு கொண்டு நிறைய முயற்சி மக்கள் தானாக முன்னெடுத்தார்கள்.

நேற்று இரவில் இருந்து எனக்கு கிடைக்கக்கூடிய செய்தி, கட்சிக்காரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும், நிறைய பேர் என்னிடம் எங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. முறையாக அனுமதி கடிதம் கொடுத்த பிறகும், அதற்கு அனுமதி கொடுக்க கொடுக்கவில்லை. மாறாக நாங்கள் அதற்கான பணிகளை மேற்கொள்ள செல்லும்பொழுது காவல்துறையை வைத்து மிரட்டுகிறார்கள் என தெரிவித்தனர்.

தாராளமாக அவர்கள் வேண்டுமென்றால் சொல்லலாம். பொய் கூறி விட்டார்கள் வதந்தி கூறி விட்டார்கள் என அவர்கள் சொல்லலாம். பொறுப்புள்ள பதிவில் இருக்கக்கூடிய மத்திய அமைச்சர் இப்படி சொல்லலாமா என கூறுவார்கள். நான் அவ்வளவு சீக்கிரமாக இது போன்ற விஷயத்தில் தலையிட மாட்டேன். நேற்று இரவு 12 மணி அளவில், அம்மா என்னை இதை பண்ணவிடவில்லை எனத் தொடர்ந்து பல்வேறு அழைப்புகள் வந்தன. கட்சிக்காரருக்கு மட்டுமில்லாமல் பொதுமக்களும் தெரிவித்தனர்

ஏன் நான் காஞ்சிபுரத்தில் என்னுடைய நிகழ்ச்சியை மாநில அரசுக்கு அனுப்பி விட்டு, எந்த மணி நேரத்தில் எங்கெல்லாம் செல்ல போகிறேன் என ப்ரோக்ராம் ஸ்செடுலே காஞ்சிபுரத்திற்கும் கொடுத்து அனுப்பினேன். ஆனால் நான் கலந்து கொள்ள வேண்டிய, நிகழ்ச்சியில் கூட டிவியை வைத்து பிரதமர் நடத்தக்கூடிய அயோத்திய ராமர் கோவில் விழாவை, அங்கு பார்க்க கூடாது என ஒரு உதவி ஆய்வாளர் அங்கிருந்து விரட்டி அனுப்பினார்கள். நிர்வாகிகள் சிலர் எனக்கு இது குறித்து போன் செய்து கூறினார்கள். இரவு வரை அந்த குறிப்பிட்ட உதவி ஆய்வாளர் அங்கிருந்து போகவே இல்லை.

மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை காவல் அதிகாரிகளிடமிருந்து நிர்வாகிகள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இதை நிராகரிக்கவில்லையே வேண்டுமென்றால் நீங்கள் பண்ணிக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார்கள். அமைச்சர் சேகர்பாபு போட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு கீழே சென்று பாருங்கள். மக்கள் நிராகரித்து தனக்கு லெட்டர் வந்துள்ளதாக, பலர் பதிவு செய்துள்ளார் நான் வதந்தியை பரப்பவில்லை என தெரிவித்தார்.

இந்து அறநிலையத்துறை, இந்து மக்கள் செய்யும் பூஜைக்கு உதவியாக இருக்க வேண்டுமா அல்லது அதற்கு எதிர்மறையாக போக வேண்டுமா ?. அறநிலை துறை அமைச்சர் இந்து மக்களுக்கு ஏதுவாக ஒத்துழைக்க வேண்டுமே தவிர, இந்த மாதிரி காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு மறுத்தேனா என பேசுவது சரியா. கடைசி வரை அவர்கள் ஏற்கவும் மாட்டார்கள் நிராகரிக்கவும் மாட்டார்கள்.

பல இடங்களில் காவல் துறையை வைத்துக்கொண்டு டிவி போடக்கூடாது. டிவி கொடுக்கும் சில தடை நடத்துபவர்களை கூட போலீசார் அவர்களை மிரட்டுகிறார்கள். யாரைக் கேட்டு கொடுக்கிறீர்கள் என போலீசார் அவர்களை மிரட்டுகிறார்கள்.
இந்துக்களுக்கு எதிரி பாஜக என உதயநிதி ஸ்டாலின் மாநாட்டில் பேசி இருப்பது குறித்த செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில்,

”அவருக்கு நான் பதிலே கூறுவதில்லை அவர் ஆன்ட்டி இந்து. கிறிஸ்டினாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் அது தவறே கிடையாது. எந்த மதத்தை பின்பற்றலாம் அதை நினைத்து பெருமையாகவும் இருக்கலாம். எதிர் மதத்தை பற்றி தப்பாக பேசுவது எப்படி நியாயம் ?

இந்துவை திட்டுவதில் முன்னிலையில் இருக்கிறாரே தவிர. இந்துவும் அவருடைய வாக்காளர் என்பதை அவர் மறந்து விட்டார். நான் ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். சரித்திரத்தில் வரவேண்டிய நிகழ்ச்சி அயோத்தியில் நடக்கின்ற பொழுது, மனதில் வேதனையுடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

”நீங்கள் நாத்திகம் பேசிக் கொள்ளுங்கள். இந்து எதிர்ப்பு என சொல்லிக் கொள்ளுங்கள் ஆனால் இந்துக்களுடைய தெய்வம் ராமர் மீது, செருப்பு மாலை போட்டு சுற்ற வைத்த ஊர்வலம் செய்த கும்பல். அவர்களிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” என தெரிவித்தார்.

Sri Vijayendra Saraswathi Swamigal Supervised In Ayodhya Ram Mandir | Ayodhya Ram Mandir: அயோத்திக்கு வந்து சென்ற காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர்
அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் பணிகளை மேற்பார்வையிட காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி கருவறையில் நிறுவ உள்ளார். பிற்பகல் 12.20 மணி தொடங்கி 1 மணிக்குள் இந்த ராமர் கோயில் திறப்பானது நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் நேற்றே அயோத்திக்கு வருகை தந்து ராமர் கோயில் திறப்பு தொடர்பான தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு பல மாநிலங்கள் பொது விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மலர்களாலும், சிறப்பு விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் கோயில் வெளிப்புற வீடியோ வெளியாகி இந்திய மக்களை வெகுவாக கவர்ந்தது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிலும் ராமர் கோயில் திறப்பு விழா களைகட்டியுள்ளது. இதனிடையே இந்த கோயில் கட்டுமானத்தில் காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் தற்போதைய சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கியுள்ளார். இவரின் மேற்பார்வையில் தான் ராமர் கோயில் திறப்புக்கான பண்டிதர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் பூமி பூஜை நடந்த அன்று கருங்காலி மரத்தில் நவரத்தினம் பதித்த சங்கு, காஞ்சிபுரத்தில் இருந்து 2 செங்கல், ஐந்து தங்க காசுகள், சகல நன்மை தருகிற தாமரை பட்டயம் ஆகியவற்றை அனுப்பியிருந்தார். இதனிடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே சங்கராச்சாரியர்கள் மேற்கொள்ளும் விஜய யாத்திரைக்குச் சென்றுள்ள ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று ஹைதராபாத்தில் இருந்து அயோத்தி வந்து ராமர் கோயிலில் சிலை அமைக்கும் இறுதிகட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
அங்கு பூஜை நடைபெறும் இடத்துக்கு வந்த அவர் ஆகம விதிப்படி எல்லாம் நடைபெறுகிறதா என கேட்டறிந்தார். சுமார் 3 மணி கோயிலில் இருந்த அவர், கருவறையில் வைக்கப்பட்ட ராமரை தரிசனம் செய்தார். பின்னர் தான் வந்த சிறப்பு விமானத்திலேயே ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி விஜய யாத்திரைக்காக ஹைதராபாத் புறப்பட்டு சென்றார். இன்று 10 ஆயிரத்துக்கும் அதிகமான முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்னொரு நாள் வந்து அயோத்தியில் தரிசனம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
Ayodhya Ram Mandir Tollywood Celebrities Enjoyed The Occation | Ayodhya Ram Mandir: ஆஞ்சநேயர் அழைத்ததாக உணர்கிறேன்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு செல்லும் தெலுங்கு பிரபலங்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
நடிகர் சிரஞ்சீவி
அயோத்தி செல்வது பற்றி நடிகர் சிரஞ்சீவி தெரிவிக்கையில், “இது மிகவும் சிறப்பானது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பதை ஒரு அரிய வாய்ப்பாக நாங்கள் உணர்கிறோம். எனது தெய்வமாக இருக்கும் அனுமன் என்னை தனிப்பட்ட முறையில் அழைத்ததாக உணர்கிறேன். இந்த ராமர் சிலை நிறுவுவதை காணும் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்” என தெரிவித்துள்ளார்.
நடிகர் ராம்சரண்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் நடிகர் ராம்சரண், “இது ஒரு நீண்ட கால காத்திருப்பாகும். நாங்கள் அனைவரும் அயோத்தியில் இருப்பது மிகவும் மரியாதைக்குரியது” என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
நடிகர் பவன் கல்யாண்
அயோத்திக்கு காரில் செல்லும் வீடியோவை பதிவிட்டுள்ள நடிகர் பவன் கல்யாண், “ ஜெய் ஸ்ரீ ராம் ! 🙏.. அயோத்திக்கு செல்லும் வழியில்.. ‘இராமரின் பிரான் பிரதிஷ்டை’ பார்க்க செல்கிறேன். ராமர் ‘நமது பாரத நாகரிகத்தின் நாயகன்.’ ராமரை மீண்டும் ‘அயோத்திக்கு’ கொண்டு வர ஐந்து நூற்றாண்டுகள் போராட வேண்டியதாயிற்று” என தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால்
அயோத்தியில் நடைபெறும் இந்த பெரிய நிகழ்வில் கன்னட திரையுலகம் சார்பில் அழைக்கப்பட்ட ஒரே தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தான். அவர் கூறுகையில், “இந்த விழாவில் சூப்பர் ஸ்டார்களுடன் கலந்துகொள்ளும் ஒரே தெலுங்கு தயாரிப்பாளர் நான்தான். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். இது ஒவ்வொரு இந்து மற்றும் இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு தருணமாகும். அயோத்தியில் ஸ்ரீ ராம் மந்திர் பிரான் பிரதிஷ்டை மற்றும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் வளாகத்தில் இருப்பதும், வரலாற்றைக் காண்பதும் ஒரு பாக்கியம், ”என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
जय श्री राम ! 🙏On the way to Ayodhya…To witness ‘ Lord Rama’s Pran Prathishta..’Lord Rama is the ‘Hero of our Bharat Civilisation.’And it took five centuries of struggle to bring back Lord Rama into ‘Ayodhya.’धर्मो रक्षति रक्षितः ధర్మో రక్షతి రక్షితః. జై శ్రీ రామ్ !… pic.twitter.com/Sh0SP2a5qG
— Pawan Kalyan (@PawanKalyan) January 22, 2024இதற்கிடையில், தெலுங்கில் மகர சங்கராந்தியை முன்னிட்டு வெளியான “ஹனுமான்” திரைப்படத்தின் படக்குழு தன்னுடைய ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ.5 அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் என தெரிவித்திருந்தனர். அதன்படி ஆபிஸ் வசூலில் வசூலான தொகையில் இருந்து ரூ.2.66 கோடியை ராமர் கோவில் கட்டுவதற்காக நன்கொடையாக அளித்து ஒரு தனித்துவமான சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VCK President Thol Thirumavalavan Has Said That The Opening Ceremony Of Ram Temple Is A Political Ceremony.
Ayodhya Ram Temple : சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அனைத்து தரப்பு இந்து மக்கள் அணிதிரள வேண்டும் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், “ஐந்து வயது குழந்தை ராமருக்கு அயோத்தியில் மாபெரும் கோயில். நாடெங்கிலும் ராமர் படம் பொறித்த காவிக் கொடிகள் பெருமிதம் குலுங்க பறக்கின்றன. கொண்டாடிக் கூத்தாடும் வெற்றிக்களிப்பில் சங் பரிவார்கள். பாதுகாப்பில்லாத நெருக்கடி நிலையில் இஸ்லாமியர்கள்.
1949-இல் இருந்து தொடர்ந்து பரப்பப்பட்ட இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலின் விளைச்சலாக- வெற்றி விழாவாக ஜனவரி 22 இல் அயோத்தியில் இராமர் விழா அரங்கேறுகிறது.
‘இராமர் பிறந்த இடம் இதுதான்’ என்று நானூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த பாபர் மசூதி 1992 இல் அடியோடு பெயர்த்துத் தகர்க்கப்பட்டது. இஸ்லாமிய இந்தியர்கள் சிந்திய செங்குருதியில் மத அடிப்படையிலான ஆதிக்கப் பெரும்பான்மைவாதம் நிலைநாட்டப்பட்டது. ‘இராமருக்கே வெற்றி’ என்னும் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தையே ஆயுதமாக உயர்த்திப்பிடித்து இன்று அங்கே இராமர் திருக்கோவில் நிறுவப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் கற்பாறையிலிருந்து எடுக்கப்பட்ட கருப்புக் கல்லில் செதுக்கி வடிக்கப்பெற்ற ஐந்து வயது குழந்தை இராமர் சிலை அக்கோயிலின் கருவறையில் ஏற்கனவே நிறுவப்பட்டு, அதற்கு உயிரூட்டும் நிகழ்வுதான் ஜனவரி 22 அன்று நடைபெறுகிறது. அந்த சடங்குதான் சமஸ்கிருதத்தில் ‘பிராண பிரதிஷ்டை’ என அழைக்கப்படுகிறது.
அக்னி குண்டங்களில் நெய் வார்த்து, பெரும் தீ வளர்த்து, சமஸ்கிருத மொழியிலான வேதங்களை ஓதும் யாகங்கள் என்னும் வேள்விகளின் மூலம், கற்சிலையாகவுள்ள மழலை இராமருக்கு, பிரபஞ்சத்திலிருந்து ‘தெய்வீக ஆற்றலை’ ஈர்த்து அளிப்பதுதான் ‘பிராண பிரதிஷ்டை’ என்னும் அந்த உயிரூட்டும் சடங்காகும்.
இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, தனது கைகளால் தொட்டு பால இராமரின் கற்சிலைக்கு உயிரூட்டப் போகிறார். அதற்கு வட இந்திய சங்கராச்சாரிகளுள் ஒருவர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். “சூத்திரரான மோடி இராமர் சிலைக்கு எப்படி பிராண பிரதிஷ்டை செய்யமுடியும்? அது நாட்டுக்கே பெருங்கேடு விளையும் !” – என்றெல்லாம் ஆரூடம் கூறியிருக்கிறார். இதுதானே சனாதனம். பிரதமரே ஆனாலும் சூத்திரனாகப் பிறந்த மோடி தனது குல தருமத்தை மீறுவது கூடாது. அதாவது, பிராமணரல்லாத எவருக்கும் கடவுளைப் பிதிஷ்டை செய்யும் உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது தான் சனாதனம்.
மோடியும் அமித்ஷாவும் இந்துத்துவ செயல்திட்டத்திற்கு ஊழியம் செய்யும் சங்கிகளாக இருந்துகொண்டே சனாதன மரபுகளை மீறுவது, கட்சிக்குள்ளேயே பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்ப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கலாம். இதில் பெருமை கொள்வதற்கு ஏதுமில்லை. ஏனென்றால், மோடி, அமித்ஷா போன்றவர்கள் சனாதனத்தின் அடிப்படையை எதிர்க்கவில்லை. அதாவது, இது பிராமணர்- பிராமணரல்லாதார் ஆகியோருக்கிடையிலான கருத்தியல் முரண் அல்ல; மாறாக அதிகாரம் தொடர்பான நபர் முரணேயாகும். இதனால் பார்ப்பனீயம் பலவீனமடையாது. மாறாக, இவர்களே பார்ப்பனீயம் என்னும் சனாதனத்தின் பாதுகாவலர்களாக மாறி தொண்டு செய்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
மோடியின் இந்த மரபு மீறலை பெரும்பான்மையான சனாதன சக்திகள் – குறிப்பாக, பார்ப்பனர்கள் அனுமதிப்பதும், அமைதி காப்பதும் பிராமணரல்லாத பிற அப்பாவி இந்துக்களை ஏய்க்கும் ஒரு மோசடி அரசியல் உத்தியே ஆகும்.
பிரதமர் மோடி இதற்காக பதினொரு நாட்களுக்கு விரதமிருந்து வருகிறார். தென்னிந்திய மாநிலங்களில் கோயில் கோயிலாகச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுவருகிறார். குறிப்பாக, தமிழ்நாட்டில் இரண்டு நாள்களாக ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு திருவரங்கம், இராமேசஸ்வரம், தனுஷ்கோடி கோயில்களுக்குச் சென்று இராமரை வழிபட்டு வருகிறார். இராமேஸ்வரத்திலிருந்து நேரடியாக அயோத்திக்குச் சென்று பிராண பிரதிஷ்டையில் பங்கேற்கிறார்.
உத்தரபிரதேசத்திலும் அதனைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் ஜனவரி 22 அன்று யாராவது இந்துக்கள் இறந்தால் பிணங்களை எரிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சனாதனம் இந்துக்களின் சுதந்திரத்தை எவ்வாறெல்லாம் பறிக்கிறது என்பதை இதன்மூலம் அறியலாம்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஜனவரி 22 அன்று ஒருநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனைக்கும் அரைநாள் விடுமுறை. எல்லாம் இராமர்மயமாகி வருகிறது. ஆனால், அடிப்படையில் எல்லாம் தேர்தல்மயமாகி வருகிறது என்பது தான் உண்மை!
அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல. ஏனெனில் இன்னும் கோயிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அரைகுறை நிலையில் அவசரம் அவசரமாக இந்த விழா நடத்தப்படுகிறது.
இது ஆன்மீக விழா என்னும் பெயரில் நடைபெறும் அரசியல் விழா! இந்துக்களின் நம்பிக்கைக்கான பெருவிழா என்னும் பெயரில் நடத்தப்படும் சங்-பரிவார்களின் மதவெறி கொண்டாட்டத்தின் திருவிழா! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அப்பாவி இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாகச் சுரண்டும் சதிவிழா!
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர சங்பரிவார்கள் கையாளும் இந்த அரசியல் உத்தியை, அப்பாவி இந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ஏழை எளிய இந்துக்களை மேம்படுத்துவதற்கு கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் எதையும் செய்ய முனைப்புக் காட்டாத பாசிச பாஜக கும்பல், இந்துப் பெரும்பான்மைவாதம், இஸ்லாமிய- கிறித்தவ வெறுப்பு, ஜெய் ஸ்ரீராம் என மதத்தின் பெயரால், இந்திய மக்களை இந்துக்கள் என்றும் இந்து அல்லாதவரகள் என்றும் பிளவுபடுத்துகிற மக்கள்விரோத அரசியலையே ‘இந்துத்துவா’ என்னும் பெயரில் நடத்தி வருகின்றனர்.
அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் ஒரு சிலரின் வளர்ச்சிக்கும் அவர்களின் பாதுகாப்புக்குமே ஆட்சி நடத்தியுள்ளனர். அப்பாவி ஏழை எளிய உழைக்கும் இந்து மக்களை ஏய்க்கும் அப்பட்டமான ‘இந்து விரோத’ ஆட்சியே மோடி ஆட்சி என்பதை இன்று யாவரும் உணரத் தொடங்கியுள்ளனர். இராமரின் பெயரால் நடக்கும் இந்து மக்களுக்கு எதிரான மாய்மால அரசியலின் உச்சம் தான் அயோத்தியில் அரங்கேறும் தேர்தல் பிரச்சார விழா. இதனை அனைத்துத் தரப்பு இந்துப் பெருங்குடி மக்கள் யாவரும் உணர்ந்து, சங்- பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அணிதிரள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
San Francisco Australia Turned Into Ayodhya For A Night To Celebrate The Ram Mandir Inauguration
ராமர் கோயிலில் இன்று (ஜனவரி 22) நடைபெறவுள்ள பிரமாண்டமாக கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு அயோத்தி நகரம் மட்டுமல்ல, இந்தியாவே தயாராகி வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். விழா முடிந்த மறுநாளே இந்த கோயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. கும்பாபிஷேகம் மதியம் 12.20 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு பிறகு, ராமர் கோயிலில் துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட 7,000க்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
ஸ்ரீ ராம் ஜென்பபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின்படி, நேற்று (ஜனவரி 21) ராம்லல்லா சிலை பல்வேறு யாத்ரீக தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மூலிகை மற்றும் புனித நீர் நிரப்பப்பட்ட 114 குடங்களைக் கொண்டு நீராடப்பட்டது. இதுகுறித்து அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில், “ கடந்த வியாழக்கிழமை கருவறையில் வைக்கப்பட்ட சிலை தீவிர கண்காணிப்பில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை சென்னை, புனே உள்ளிட்ட பல இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர்களால் சடங்குகள் நடத்தப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழா தொடர்பான சடங்குகள் ஜனவரி 16 ம் தேதி சரயு நதி தீர்த்தத்தில் தொடங்கி, திங்கள்கிழமை மதியம் அபிஜீத் முஹூர்த்தத்தில் நிறைவடைகிறது” என தெரிவித்தார். இந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை டிவி மற்றும் ஆனலைன் மூலம் மில்லியன் கணக்கான மக்கள் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு நிகழ்ச்சிகள்:
மேற்கு வங்கத்தில் இருந்து ஸ்ரீகோல் மற்றும் சரோத், ஆந்திராவில் இருந்து காதம், ஜார்கண்டில் இருந்து சித்தார், தமிழ்நாட்டிலிருந்து நாதஸ்வரம் – மிருதங்கம் மற்றும் உத்தரகாண்டில் இருந்து ஹூடா கலகர் உள்ளிட்ட முக்கிய இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.
ராம் மார்க், சரயு நதிக்கரை மற்றும் லதா மங்கேஷ்கர் சௌக் போன்ற முக்கிய இடங்களிலும் ராமாயணத்தின் பல்வேறு வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களும் வாசிக்கும் நிகழ்ச்சிகளும் இங்கு பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
भारतीय संस्कृति का स्वाभिमान!जय श्री राम।🙏 pic.twitter.com/LH3mvU9woH
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) January 21, 2024இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு உட்பட பல மாநில அரசுகள் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளன. மேலும், நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற வங்கிகளும் ஜனவரி 22 அன்று அரை நாள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ பங்குச் சந்தைகளும் இன்றைய நாளில் வர்த்தகம் இல்லை என்று அறிவித்துள்ளன.
சிறப்பு கொண்டாட்டங்கள்:
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சிறப்பு கொண்டாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாஷிங்டன் டிசி, பாரிஸ், சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிட்னி உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகளை விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) மற்றும் 60 நாடுகளில் உள்ள இந்து வெளிநாட்டவர் சமூகம் ஏற்பாடு செய்து வருகிறது.
San Francisco 🇺🇸 turned into Ayodhya 🇮🇳 for a night to celebrate the #RamMandir Inauguration 🚩🙏#RamMandirPranPrathistha pic.twitter.com/XOAUaRmDft
— Shayan Krishna (@ShayanKrsna) January 21, 2024அயோத்தி நகரமே பூக்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், அயோத்தி மக்கள் தற்போது ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் வேடமணிந்து வீதிகளில் வலம் வருகின்றனர். நிகழ்ச்சியின்போது எந்தவொரு அசாம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க, கோயிலை சுற்றி ஒவ்வொரு பிரதான சாலைகளிலும் முள்வேலியுடன் கூடிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் மற்றும் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி தாக்குதல்கள் போன்ற சம்பவங்களைச் சமாளிக்க பயிற்சி பெற்ற தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தி மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Ayodhya Ram Mandir Construction Tells A Story Of Ek Bharat Shreshtha Bharat, One Brick At A Time From Every State | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம்
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொண்டு வந்து ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற அரசின் கொள்கையை பறைசாட்டுகிறது.
அயோத்தி ராமர் கோயில்:
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதையயொட்டி இந்த கோயில் கட்டுமானம் எப்படி, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற அரசின் கொள்கையை பறைசாட்டுகிறது என்பது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், “காஷ்மீரின் பனி மூடிய சிகரங்கள் முதல் கன்னியாகுமரியில் சூரிய ஒளியில் நனைந்த கடற்கரைகள் வரை, ராமரின் பெயர் இந்தியா முழுவதும் பக்தியுடன் எதிரொலிக்கிறது. இப்போது, இந்தப் பக்தி அயோத்தியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராமர் கோயிலின் வடிவத்தில் ஒரு உறுதியான வடிவத்தை எடுத்துள்ளது. கம்பீரமான இந்தக் கோயில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பக்தியின் அடையாளமாக உறுதியுடன் நிற்கிறது. இது பிரமாண்டத்துடன் மட்டுமல்லாமல் மாநிலங்களின் எல்லைகளைக் கடந்து உருவாக்கப்பட்டதாகவும் உள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ முன்முயற்சி இந்த கருத்தை ஆழமாக எதிரொலிக்கிறது. மாநில எல்லைகளைத் தாண்டி, ஒரு கோயிலுக்கான கட்டுமானப் பயணத்தில் தேசத்தை இது ஒன்றிணைக்கிறது.
பல்வேறு மாநிலங்களின் அடையாளம்:
ராஜஸ்தானின் மக்ரானா பளிங்குக் கல்லால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கோயிலின் மையப்பகுதி கம்பீரமாக நிற்கிறது. கர்நாடகாவின் சார்மௌதி மணற்கல், ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. ராஜஸ்தானின் பன்சி பஹர்பூரிலிருந்து இளஞ்சிவப்பு மணற்கல் நுழைவு வாயிலின் கம்பீரமான உருவங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கம்பீரமான 2100 கிலோ அஷ்டதத்து மணி குஜராத் படைப்பாகும். அகில இந்திய தர்பார் சமாஜத்தால் வடிவமைக்கப்பட்ட 700 கிலோ ரதத்தையும் குஜராத் வழங்குகிறது.
ராமர் சிலைக்கு பயன்படுத்தப்படும் கருப்பு கல் கர்நாடகாவில் தயாரிக்கப்பட்டது. இமயமலை அடிவாரத்திலிருந்து, அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் கலை வண்ணத்துடன் நுணுக்கமாக செதுக்கப்பட்ட மரக் கதவுகள் தெய்வீக சாம்ராஜ்யத்தின் நுழைவாயில்களாகத் நிற்கின்றன.
கோயிலில் பயன்படுத்தப்படும் வெண்கல பயன்பாடுகள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவை. மெருகூட்டப்பட்ட தேக்கு மரங்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை. ராமர் கோயிலின் கதை வெறுமனே பொருட்கள் மற்றும் புவியியல் தோற்றம் பற்றியது மட்டுமல்ல. இந்த புனிதமான முயற்சியில் இதயங்கள், ஆன்மாக்கள் இணைந்துள்ளன. திறன்களை வெளிப்படுத்தியுள்ள ஆயிரக்கணக்கான திறமையான கைவினைஞர்களின் பணிகளுக்கும் இது சான்றாகும். ராமர் கோவில் என்பது அயோத்தியில் உள்ள அடையாளச் சின்னம் மட்டுமல்ல. நம்பிக்கையை ஒன்றிணைக்கும் சக்திக்கு இது ஒரு சான்று. ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு செதுக்கலும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு துணியும் புவியியல் எல்லைகளைக் கடந்து, ஒரு கூட்டு ஆன்மீகப் பயணத்தில் இதயங்களை ஒன்றிணைத்து, அவை ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற கதையைச் சொல்கின்றன” என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகர்களின் பங்கு:
கோயிலின் நுழைவு பகுதி, முன் மண்டபம், பக்கவாட்டு மண்டம், வெளியே வரும் வழி, ராமர் – சீதை கருவறைகள், ராமரின் தம்பி லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட 44 வாசல்களுக்கு, 44 தேக்கு மரக்கதவுகள் தயாராகி உள்ளன. இவற்றை மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் படித்த கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தையைச் சேர்ந்த மரச்சிற்பக்கலைஞர் ரமேஷ் தலைமையிலான, 50க்கும் மேற்பட்டோர் கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர். இதனிடையே, அயோத்தி ராமர் கோயிலில் அபிஷேகம் செய்ய, ராமேஸ்வரம் கோயிலில் இருந்து தீர்த்த கலசங்களை பிரதமர் மோடி கொண்டு சென்றதும் குறிப்பிடத்தகக்து.
Dance Master Amir Has Answered When He Will Marry Actress Pavni | Pavni – Amir: நாங்கள் சேர பிரியங்கா தான் காரணம்.. பாவ்னியுடன் திருமணம் எப்போது?
தானும் பாவ்னியும் ஒன்றாக இருப்பதற்கு காரணம் விஜய் டிவி பிரபலம் பிரியங்கா தேஷ்பாண்டே தான் காரணம் என நடன இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டைவால் குருவி’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பாவ்னி. இவர் அதே சேனலில் ஒளிபரப்பான சின்னத்தம்பி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இதனிடையே அவரது காதல் கணவர் தற்கொலை செய்து கொண்டதால் மன அழுத்தத்தில் இருந்த பாவ்னி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டார். இதே சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் நுழைந்த நடன இயக்குநர் அமீர் பாவ்னியை காதலிப்பதாக தெரிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவ்னிக்கு அமீர் முத்தம் கொடுத்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.
அந்நிகழ்ச்சிக்குப் பின் வெளியே வந்து பல்வேறு இடங்களுக்கும் இருவரும் ஒன்றாக பயணம் மேற்கொண்டனர். பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் அமீர்- பாவ்னி ஜோடி கலந்துகொண்டு வெற்றி பெற்றது. இது முடிந்ததும் அமீர் காதலை ஏற்றுக் கொள்வதாக பாவ்னி அறிவித்தார். ஆனால் இருவரும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்படியான நிலையில் சின்னத்திரை தொகுப்பாளினி பிரியங்கா தனது கலைப்பயணத்தில் 15வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
இதுதொடர்பாக நடந்த நேர்காணலில் சிறப்பு அழைப்பாளராக அமீர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நான் பிரியங்காவை ஒரு ரசிகனாக தான் ரசித்துக் கொண்டிருக்கிறேன். எங்களுக்குள் அறிமுகம் இருந்தாலும் பெரிதாக பேசிக் கொண்டதில்லை. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கள் உறவு என்பது வேறு தளத்திற்கு சென்றுள்ளது. மற்றவர்கள் பிரியங்காவுடன் பேசுவதை பார்த்து கோபப்பட்டுள்ளேன். பிரியங்கா என்றால் ஒரு பிராண்ட். அவர் நிறைய பேருக்கு ரோல் மாடலாக இருக்கிறார் என தெரிவித்தார்.
அப்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற அமீர்- பாவ்னி இருவருமிடையே திருமணம் நடந்தது போன்ற போன்ற புகைப்படம் காட்டப்பட்டது. அதுகுறித்து பேசிய பிரியங்கா, ‘என்னிடம் அக்கா நீதான் அந்த தாலி எடுத்துக் கொடுக்க வேண்டும் என ரிகர்சல் அப்ப சொன்னார்கள். அப்போது எதுவும் தெரியவில்லை. ஸ்டேஜில் பெர்பார்மன்ஸ் பண்ணும்போது ஒரு மாதிரி ஃபீல் ஆகிவிட்டது. கடந்த வாரம் படம் பார்க்க சென்றிருந்தபோது கூட இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி எப்படா கல்யாணம் என கேட்டேன்’ என கூறினார்.
இதற்கு பதிலளித்த அமீர், ‘ரீலில் வந்த மாதிரியே ரியலிலும் பிரியங்கா தான் தாலி எடுத்துக் கொடுப்பார். அவர் தான் என்கூட இருக்கணும். நான் பாவ்னிக்கு ப்ரோபோஸ் பண்ணேன்.ஆனால் அவள் என்னுடன் இருக்க காரணம் பிரியங்கா தான். இவர் இல்லை என்றால் அவள் என்னுடன் இருந்திருக்க மாட்டார். எங்கள் கல்யாணம் இந்த வருடத்தில் நடந்து விடும்” என அமீர் தெரிவித்துள்ளார்.
Indian Skipper Rohit Sharma Wicket Keeping Picture His Teenage Viral Internet | Rohit Sharma: ‘ஹிட்மேன் அப்பவே அப்படி’ விக்கெட் கீப்பிங் செய்யும் ரோகித்சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித்சர்மா. ஹிட் மேன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சிக்ஸர்களை விளாசுவதில் கில்லாடியாக திகழ்கிறார். பேட்ஸ்மேனாக மட்டுமே கிரிக்கெட்டில் அசத்துபவர் ஐ.பி.எல். தொடரில் மற்றும் கடந்தாண்டு நடந்த ஒரு போட்டியில் பந்துவீசியது ரசிகர்களை நாம் பார்த்திருப்போம்.
கீப்பிங் செய்யும் ரோகித்சர்மா:
ஆனால், ரோகித் சர்மா தன்னுடைய இள வயதில் விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் ஒன்றின்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரோகித்சர்மாவின் பதின்ம வயதின்போது இந்த போட்டி நடைபெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த போட்டி எந்த தொடர்? எப்போது நடைபெற்றது? என்ற தகவல் வெளியாகவில்லை.
இந்திய அணிக்காக அறிமுகமான பிறகு ரோகித்சர்மா ஒரு முறை கூட கீப்பிங் செய்ததே இல்லை. ரோகித்சர்மா விக்கெட் கீப்பிங் செய்வார் என்று கூட ரசிகர்கள் கருதியிருக்க மாட்டார்கள். தற்போது, ரோகித் சர்மா விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேப்டன்:
36 வயதான ரோகித் சர்மா கடந்த 2007ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். தனது சிறப்பான பேட்டிங் மற்றும் உழைப்பால் இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார். இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10 சதங்கள், 1 இரட்டை சதம் மற்றும் 16 அரைசதங்களுடன் இணைந்து 3 ஆயிரத்து 738 ரன்களும், 262 ஒருநாள் போட்டிகளில் ஆடி 31 சதங்கள், 3 இரட்டை சதங்கள் மற்றும் 55 அரைசதங்களும் விளாசியுள்ளார். 151 டி20 போட்டிகளில் ஆடி 5 சதங்கள் மற்றும் 29 அரைசதங்கள் விளாசியுள்ளார்.
இதுமட்டுமின்றி 243 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1 சதம், 42 அரைசதங்கள் உள்பட 6 ஆயிரத்து 211 ரன்களை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 3 ஆயிரத்து 738 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரத்து 709 ரன்களையும், டி20 போட்டிகளில் 3 ஆயிரத்து 974 ரன்களையும் எடுத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் ஹாட்ரிக்:
ஒரு பந்துவீச்சாளராக டெஸ்ட் போட்டிகளில் 2 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும், டி20யில் 1 விக்கெட்டையும், ஐ.பி.எல். போட்டியில் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக, மும்பை அணிக்காக 5 ஐ.பி.எல். கோப்பைகளை வென்று தந்த ரோகித் சர்மா, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடியபோது மும்பை அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியது அசத்தியது குறிப்பிடத்தக்கது. ரோகித்சர்மா இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை வரை ஆடுவார் என்று எதிர்பார்ககப்படுகிறது.
மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?
மேலும் படிக்க: ICC U19 WC: வெற்றியுடன் தொடங்கிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி; வங்கதேசத்தை புரட்டி எடுத்து அபாரம்
Ayodhya Ram Mandir Event Security Arrangement With AI-Based CCTV Cameras, Drones In To Enhance Safety
Ayodhya ram mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன்கள் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்:
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நகரம் முழுவதும் மூன்றடுக்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் வருகை தரும் தரம்பத் மற்றும் ராம்பத்தில் இருந்து, ஹனுமன்கர்ஹி பகுதி மற்றும் அஷர்பி பவன் சாலையின் பைலேன்கள் வரை, போலீசார் தெருக்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அயோத்தியில் உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவின் (ஏடிஎஸ்) போலீசார் நேற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். நகரின் ஒவ்வொரு முக்கிய பகுதியிலும் முள்வேலிகள் இணைக்கப்பட்ட நகரக்கூடிய தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை குறிப்பாக விவிஐபி நடமாட்டத்தின்போது பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச காவல்துறை அயோத்தி நகரை சிவப்பு மண்டலம், மஞ்சள் மண்டலம் என பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.
10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்:
கோயில் நகரத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, கண்ணிவெடி எதிர்ப்பு டிரோன்களைப் பயன்படுத்துவதோடு, செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட டிரோன்கள் மூலமான கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட ஆளில்லா விமானங்கள் அயோத்தி முழுவதும் வான்வழி கண்காணிப்பை செய்து வருகின்றனர். கண்ணிவெடி எதிர்ப்பு டிரோன்கள் தரையில் வெடிபொருட்கள் அல்லது கண்னிவெடிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்கின்றன. தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் இயங்கும், என்டி-மைன் ட்ரோன்கள், நிலத்தடி வெடிபொருட்களைக் கண்டறிவதற்கான ஸ்பெக்ட்ரோமீட்டர் அலைநீளம் கண்டறிதல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. கண்காணிப்பு பணிகளுக்காக10,000 சிசிடிவி கேமராக்கள் நகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன.
தயார் நிலையில் ஸ்னைப்பர் வீரர்கள்:
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பன்மொழித் திறன் கொண்ட போலீசார் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெடிபொருட்களை துல்லியமாக கண்டறியும் மோப்ப நாய்கள் குழுவுடன், இலக்கை துல்லியமாக சுட்டு வீழ்த்தும் ஸ்னைப்பர் குழுவும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்களின் உதவியுடன் சரயு ஆற்றங்கரையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சரயு நதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி தாக்குதல்கள், நீரில் மூழ்கும் சம்பவங்கள் மற்றும் பூகம்பம் போன்ற பேரழிவுகளை சமாளிக்க பயிற்சி பெற்ற பல NDRF குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புப் படையால் (NSG) பயிற்சி பெற்ற 100 SSF கமாண்டோக்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறையை பாதுகாத்திட சிஆர்பிஎஃப் படையினர் பிரதான கோயிலில் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநில காவல்துறை மற்றும் PAC யைச் சேர்ந்த 1,400 பணியாளர்கள் கோயிலுக்கு வெளியே உள்ள சிவப்பு’ மண்டலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் பாதுகாப்பு பணிகளை சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) மேற்கொண்டுள்ளது.
பக்தர்களுக்கான வசதிகள்:
ரம்பாத், பக்தி பத் மார்க், தர்ம பத் மார்க், பரிக்ரமா மார்க், பந்தா மார்க், தெஹ்ரி பஜார் ரம்பாத், மஹோப்ரா மார்க் மற்றும் உன்வால் மார்க் உள்ளிட்ட 51 இடங்களில் 22,825 வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வட இந்தியாவில் நிலவும் குளிரை கருத்தில் கொண்டு மருத்துவ அவசர நிலைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நகர மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மருத்துவர்கள் அவசர காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என, எய்ம்ஸ் மருத்துவர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.
Hariharan Slams Udhaynidhi Stalin’s Sanatan Dharma Statement | HariHaran: பிரச்சினை அவர்களுக்கு தான்
சனாதனம் பற்றி தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு பாடகரும், இசையமைப்பாளருமான ஹரிஹரன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் அவரிடம், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹரிஹரன், “இந்தியாவில் பல்வேறு வகையான மக்கள் பல்வேறு கலாச்சாரங்கள், நம்பிக்கைகளை பின்பற்றி வாழ்கிறார்கள். அந்த நம்பிக்கையை தப்பு என சொல்லும் விஷயங்களில், குறை சொல்பவர்கள் மீது தான் தவறு உள்ளது. நமது தேவைகள், நம்பிக்கைகள் என்ன என்பது நம் மனதுக்கு தெரியும். அனைத்தையும் ஏற்றுக்கொள்வதே சனாதான தர்மம்” என தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Hariharan slams Udhaynidhi Stalin. India’s icons invited to Ayodhya are sharing their dislike on the hatred for Hindu religion that is still being spread by INDIA members including ruling DMK in Tamil Nadu & Congress. pic.twitter.com/8mjvfxUBXu
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) January 21, 2024உதயநிதி பேசியது என்ன?
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. எப்படி கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஒழித்துக்கட்ட வேண்டுமோ அப்படித்தான் சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே சரியாகும். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானதுசனாதனம் என்றால் நிலையானது, அதாவது எதையும் மாற்ற முடியாதது என்பது பொருள். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்” என தெரிவித்திருந்தார்.
உதயநிதியின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாநில தலைவர்கள் தொடங்கி பாஜகவின் தேசிய தலைவர்கள் வரை தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் கூட புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, “சனாதன தர்ம சர்ச்சையின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கடமை தவறிய செயல்” அதிருப்தி தெரிவித்தார். ஆனால் தான் சனாதனம் குறித்து பேசியதில் தவறில்லை. திரும்ப திரும்ப பேசுவேன் என உதயநிதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ram Temple Inauguration: Ayodhya Witnesses Festive Fervour As Stage Set For Grand Ceremony | Ayodhya Ram Mandir: நாடே எதிர்பார்க்கும், ராமர் கோயில் குடமுழுக்கு விழா: அயோத்தியில் இன்று கோலாகலம்
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று பிற்பகல், 12.20-க்கு தொடங்கி 1 மணிக்கு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா:
500 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்த்ஜி ராமர் கோயில் இன்று திறக்கப்பட உள்ளது. ‘பிரான் பிரதிஸ்டா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த சடங்கில், பிரதமர் மோடி பங்கேற்று குழந்தை ராமர் சிலையை கருவறையில் நிறுவி ஆரத்தி வழங்கவுள்ளார். இந்த செயல்முறை பிற்பகல் 12.20-க்கு தொடங்கி 1 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து 7,000 க்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வை பொதுமக்கள் வீடுகளில் இருந்தே கண்டுகளிக்கும் வகையில் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதையோட்டி பல மாநிலங்கள் விடுமுறை அறிவித்துள்ள சூழலில், மத்திய அரசு தனது அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை முதல் பொதுமக்கள் கோயிலுக்கு வந்த தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாக்கோலம் பூண்ட அயோத்தி:
பிரமாண்ட ராமர் கோயில் மலர்களாலும், சிறப்பு விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் மத ஆர்வத்தில் மூழ்கியுள்ளது. உள்ளூர் முழுவதும் எங்கு திரும்பினாலும் ராமர் பாடல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன. மேம்பாலங்களில் உள்ள தெருவிளக்குகள், வில் மற்றும் அம்புகளின் கட்அவுட்கள் உட்பட ராமரை சித்தரிக்கும் கலைப்படைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அலங்கார விளக்கு கம்பங்கள் பாரம்பரிய “ராமானந்தி திலகத்தின்” கருப்பொருளைக் கொண்ட வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன.
உலகளாவிய கொண்டாட்டங்கள்:
பிரமாண்டமான சிலை நிறுவும் விழாவைக் குறிக்கும் வகையில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள கோயில்களிலும் சிறப்பு விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாஷிங்டன் டிசி முதல் பாரிஸ், சிட்னி வரை, இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு பூஜைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகள் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அல்லது 60 நாடுகளில் உள்ள புலம்பெயர் இந்து குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
7000 விருந்தினர்கள்:
கோயில் குழ்டமுழுக்கிற்கு விழாவில் பங்கேற்க அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் தொழில் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 7,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 506 பேர் மிக முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். இதில் கலந்துகொள்பவர்களில் பலர் ராமர் கோயிலுக்கான போராட்டத்தில் தொடர்புடையவர்களும் அடங்குவர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி, விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் அழைக்கப்பட்ட முக்கிய நபர்கள் ஆவர். விழாவிற்கு அழைக்கப்பட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் விழாவில் பங்கேற்க மறுத்துவிட்டனர். காங்கிரஸ் இதை BJP-RSS நிகழ்வு என்று விமர்சித்துள்ளது.
உச்சகட்ட பாதுகாப்பு:
குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலவர்கள் பங்கேற்க இருப்பதால், ஒட்டுமொத்த அயோத்தி நகரமே உச்சபட்ச பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பல அடுக்கு பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நகரம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விவிஐபி நடமாட்டத்தின் போது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கோயில் நகரின் ஒவ்வொரு முக்கிய குறுக்கு சாலையிலும் முள்கம்பிகள் இணைக்கப்பட்ட அசையும் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. . ரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி தாக்குதல்கள், நீரில் மூழ்கும் சம்பவங்கள் மற்றும் பூகம்பம் போன்ற பேரழிவுகளை சமாளிக்க பயிற்சி பெற்ற பல NDRF குழுக்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடும் குளிரால் ஏற்படும் எத்தகைய சுகாதார நெருக்கடியையும் சமாளிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நகர அடிப்படையிலான மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அங்குள்ள மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை உதவிக்காக மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
Shruthi Shanmugapriya: சாவை ஆராய்ச்சி பண்ணாதீங்க..வேதனையில் ஸ்ருதி சண்முகப்பிரியா

என் கணவர் அரவிந்த் இல்லை என்ற உணர்வு எனக்கு இல்லை, அவருடன் நான் உணர்வுப்பூர்வமாக தொடர்பில் இருக்கிறேன் என சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முக பிரியா தெரிவித்துள்ளார்.

சன் டிவியில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான மெகாத் தொடர் ‘நாதஸ்வரம்’. இயக்குநர் ‘மெட்டி ஒலி’ திருமுருகன் இயக்கிய இந்த தொடர் சின்னத்திரை ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் பல புதுமுகங்கள் நடித்து மக்களிடையே பிரபலமாகினர். அப்படி ‘நாதஸ்வரம்’ சீரியலில் நடித்ததன் மூலமாக நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவும் பிரபலமடைந்தார். இவருக்கு அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஸ்ருதி, அடிக்கடி தன் கணவருடன் எடுத்த ரீல்ஸ்களை பதிவிடுவது வழக்கமாக கொண்டிருந்தார். இப்படி இவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஸ்ருதியின் கணவர் அரவிந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பிட்னெஸ் விஷயத்தில் ஆர்வம் கொண்ட அரவிந்த் அதீத உடற்பயிற்சி காரணமாக தான் இறந்தார் என்றெல்லாம் வதந்திகள் பரவ தொடங்கியது. இதனை மறுத்து ஸ்ருதி வீடியோவும் வெளியிட்டார்.

இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தன் கணவர் அரவிந்த் குறித்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், “நீண்ட இடைவெளிக்குப் பின், என் கணவரின் மரணத்துக்குப் பின் நான் ஒரு நேர்காணலில் பங்கேற்றுள்ளேன். நான் என் கணவர் அரவிந்த் இல்லை என நினைக்கவே இல்லை. என்னை சுற்றியவர்களுக்கு நான் எப்படி இருக்கிறேன் என்பது தெரியும். அரவிந்த் மேல் இருக்கும் காதல் அப்ப இருந்ததை விட இப்ப அதிகமாகவே உள்ளது. நான் எங்கு சென்றாலும் அவர் என்னுடன் இருப்பதாகவே உணர்கிறேன்.

அரவிந்தின் கடைசி தருணங்களை நிறைய பேர் ஆய்வு செய்தார்கள். அது ரொம்ப கடினமாக இருந்தது. அவரின் மரணத்துக்கு என்ன காரணம் என தெரிந்து என்ன நடக்கப்போகிறது. அப்ப நான் ரொம்ப மோசமான மனநிலையில் இருந்தேன். ஆனால் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து அரவிந்த் இறந்து விட்டதாக வதந்தி பரவிய நிலையில் நான் இரண்டாவது நாளே அப்படி ஒரு வீடியோவை பதிவிட்டேன். அதன்பிறகு எங்கேயும் நான் வீடியோ பதிவிடவில்லை. அந்த வீடியோவில் கூட வதந்திகளை பரப்பாதீர்கள் என கூறி விட்டேன். அவரவர்கள் உங்கள் உடல்நலனை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு நெகட்டிவ் விஷயங்களை பப்ளிசிட்டிக்காகவோ, பணத்துக்காக பண்ணாதீர்கள். அது தவறான விஷயம். அதற்கு பதில் கஷ்டத்தில் இருப்பவர்களுடன் ஆறுதலாக இருங்கள்.

நான் அரவிந்துடன் உணர்வு ரீதியாக தொடர்பில் இருப்பதாகவே உணர்கிறேன். அதனால் அவர் இல்லை என்பதை நான் நினைக்கவில்லை. இதனைத் தவிர நான் ரொம்ப ஸ்ட்ராங்காக மாற யோகா, புத்தகம் படிப்பது, பயணம் செய்வது என பல நிகழ்வுகள் அந்த நேரத்தில் எனக்கு மிகவும் உதவியது. நான் அரவிந்த் இருக்கிறார் என்ற பாசிட்டிவ் எண்ணத்துடன் இருக்கும்போது நிறைய பேர் எனக்கு தனிப்பட்ட முறையில் மெசெஜ் செய்வார்கள்.

நாங்களும் இதே நிலையில் தான் இருக்கிறோம். எப்படி கையாள்கிறீர்கள் என கேட்பார்கள். எனக்கு அழுகை எல்லாம் வரும். ஆனால் அதனை எல்லாம் வெளியே காட்ட எனக்கு விருப்பமில்லை. ஒரு இரவு அரவிந்தின் புகைப்படம் பார்த்து அழுவேன். மத்த நேரம் நம்மை ஒரு ரோல் மாடலாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சப்போர்ட் ஆக இருக்க நினைக்கிறேன். அது நிறைய பேருக்கு உதவியும் செய்துள்ளது. ஆனால் இந்த வலியில் இருந்து தப்பிக்க முடியாது” என ஸ்ருதி ஷண்முக பிரியா தெரிவித்துள்ளார்.