"100 ஆண்டு பழமைவாய்ந்த சாதிய அமைப்பு! வர்ணாசிரமத்தை பழி கூற முடியாது" சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

சனாதன தர்மம் பற்றி அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு, மக்களவை உறுப்பினர் ஆ. ராசா ஆகியோர் கூறிய கருத்து தேசிய அளவில் சர்ச்சையான நிலையில், அவர்களை தங்கள் பதவியில் இருந்து நீக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அவர்களை பதவியில் இருந்து நீக்க மறுப்பு தெரிவித்த போதிலும் பல முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

"உன்னதமான நெறிமுறைகளை குறிப்பதே சனாதன தர்மம்"

கடந்த 100 ஆண்டுகளில்தான் சாதிய அமைப்பு தோன்றியதாகவும் பழமை வாய்ந்த வர்ணாசிரமத்தை அதற்காக பழி கூற முடியாது என்றும் நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்துள்ளார். சனாதன தர்மம் குறித்து புகழ்ந்து பேசிய அவர், "மக்களை மேம்படுத்தும், உன்னதமான, நல்லொழுக்க நெறிமுறைகளை குறிப்பதே சனாதன தர்மம். அதற்கு பிளவுபடுத்தும் அர்த்தத்தை அமைச்சர்கள்/எம்பி தந்து இருப்பது தவறு.

இன்று சமூகத்தில் நிலவும் சாதிய அமைப்பில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பது உண்மைதான். சாதிய அமைப்பின் தோற்றம் ஒரு நூற்றாண்டுக்கும் குறைவானது என்பதால் இன்றைய சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரம அமைப்பின் மீது பழி கூற முடியாது.

சாதி அடிப்படையிலான பிளவு மாநிலத்தில் பரவலாக உள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசின் நலனுக்கு எதிரான சாதிய உணர்வுகளை தூண்டுவதற்கு பதிலாக இத்தகைய தீமைகளை அகற்ற முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்.

"வர்ணாசிரமம், பிறப்பின் அடிப்படையிலானது அல்ல"

சமத்துவமான சமூகத்தை உருவாக்கி, வளங்களை சமமாகப் பகிர்ந்தளிக்க தலைவர்கள் விரும்பினால், அவர்கள் அணுகுமுறையில் நேர்மையையும், பேச்சில் நிதானத்தையும், மக்களிடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளும் உண்மையான விருப்பத்தையும் வெளிப்படுத்தி முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

நியாயமான மற்றும் நல்ல நோக்கமுள்ள எந்தவொரு தலைவரின் முயற்சியும், பல்வேறு பிரிவு மக்களின் பொதுவான தன்மைகளை அடையாளம் கண்டு, அவர்களைப் பிளவுபடுத்துவதை விட, ஒன்றுபடுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். வளர்ச்சிக்கு விமர்சனம் இன்றியமையாதது என்றாலும், அழிவைக் காட்டிலும் முன்னேற்றமே இலக்கு என்பதை உறுதிப்படுத்த ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும்.

பிறப்பின் அடிப்படையில் வர்ணாசிரமம் பிரிவை உருவாக்கவில்லை. தொழிலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சமூகத்தின் சீரான செயல்பாட்டை நோக்கி செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் அப்போதைய தேவைகளின் அடிப்படையில் முக்கிய தொழில்கள் அடையாளம் காணப்பட்டன. இன்று அத்தகைய அமைப்பின் தேவை, விவாதத்திற்கு உரியது.

அதிகாரத்தில் இருக்கும் நபர்களிடையே கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், முழு புரிதலுடன் அமைப்பை விமர்சிக்க வேண்டும். பதவியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் பகிரங்கமாக கூறும் கருத்துகள் உண்மையாகவும், வரலாற்று ரீதியாகவும் துல்லியமாக இருக்க வேண்டும்" என்றார்.

Source link