TVK Vijay


மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தொடங்கியிருக்கிறது. தவெக சார்பில் இரண்டு தொகுதிகளிலும் முதலமைச்சர் விஜய்யே களமிறங்கி பிரசாரம் செய்யவிருக்கிறார். இடைத்தேர்தலும் முதல்வர் விஜய்யின் பிளான் என்னவென்பதை பனையூர் வட்டாரத்தில் விசாரித்தோம்.

TVK Vijay

நம்மிடையே பேசிய சீனியர்கள் சிலர், ‘மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் அரசின் மீது கொஞ்சம் அதிருப்தி இருக்கத்தான் செய்கிறது. மேலும், அதிமுகவிலிருந்து விலகி வந்த எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தது கொஞ்சம் நெகட்டிவாக மாறியிருக்கிறது.

எதிர்க்கட்சிகளும் இவற்றை கையிலெடுத்து களமாட தொடங்கிவிட்டன. எதிர்பார்க்கும் களம் அத்தனை எளிதாக இருக்காது என உளவுத்துறையும் தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடித்து வெற்றியை உறுதி செய்யும் வகையில் வலுவாக தன்னுடைய பிரசாரத்தை வடிவமைக்க சொல்லி வியூக வகுப்புப் புள்ளியிடம் முதல்வர் கூறியிருக்கிறார். வழக்கம்போல, ஒரே ஒரு நாள் மட்டும் அதாவது தாராபுரத்துக்கு ஒரு நாளும் மதுராந்தகத்துக்கு ஒரு நாளும் முதல்வர் சென்று வந்தாலே போதுமென வியூக வகுப்புக் குழு நினைத்தது. களம் கொஞ்சம் கடினமாக இருக்கும் என ரிப்போர்ட் கிடைத்ததால்தான் முதல்வரின் பிரசாரத்தை தொகுதிக்கு இரண்டு நாட்கள் என மாற்றியிருக்கிறார்கள் . அதன்படி செப்டம்பர் 25, அக்டோபர் 2 ஆம் தேதிகளில் மதுராந்தகத்தில் முதல்வர் பிரசாரம் செய்யவிருக்கிறார்.

Vijay TVK – விஜய் – த.வெ.க

முதல்வரின் மற்ற அலுவல் பணிகளை பொறுத்து தாராபுரத்துக்கும் 2 நாட்கள் பிரசாரம் திட்டமிடப்படும். பொதுக்கூட்டம் + ரோடு ஷோ என முதல்வரின் பிரசாரம் திட்டமிடப்பட்டிருக்கிறது. பொதுக்கூட்டத்தில் மே 4 முதல் மே 10 வரை அந்த 7 நாட்களில் திரைமறைவில் நடந்த சம்பவங்களை ஹைலைட் செய்து பேசி அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு ஏன் சீட் கொடுத்தோம் என்று மக்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார். கூடவே திமுகவினர் மீதான புகார்களையும் கையிலெடுத்து திமுக எதிர்ப்பை இன்னும் கூர்மையாக்கும் வகையில் பேசுவார். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை எடுத்துக் கொண்டு இரண்டாவது ரவுண்டு தொகுதிக்குள் செல்லும்போது அந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் முதல்வரின் பேச்சை வடிவமைக்கும் திட்டமும் இருக்கிறது. தொகுதிக்குள் சென்று தான் செய்யப்போகும் ரோடு ஷோவும் பொதுக்கூட்டமுமே வெற்றியை தேடித் தந்துவிடுமென முதல்வர் நம்பிக்கையோடு இருக்கிறார்’ என்றனர்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Ни уговоры, ни таблетки — ничего не помогало. Врачи из поликлиники разводили руками. Сказала, что есть служба, которая делает вывод…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports