ஹரியானா மாநிலத்தின் பாஜக மாநில தலைவர் நயாப் சிங் சைனி, மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
ராஜினாமா:
ஹரியானா முதலமைச்சராக இருந்த மனோகர் லால் கட்டார் இன்று காலையில் பதவி விலகினார். மேலும் அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. இந்நிலையில், நயாப் சிங் சைனி முதலமைச்சராக பதவியேற்றார்.
ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், இன்று காலை தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைதொடர்ந்து, அவரது தலைமையிலான அனைத்து அமைச்சர்களும், பதவி விலகினர்.
மாநிலத்தில் ஜனநாயக் ஜனதா கட்சி உடனான கூட்டணி முறிந்ததன் காரணமாகவே, மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, சுயேச்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை தொடர பாஜக திட்டமிட்டுள்ளது. முதலமைச்சராக இருந்த மனோகர் லால் கட்டார் பாஜக சார்பில், மக்களவயில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா சட்டமன்றம்:
90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்டமன்றத்திற்கு, கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் பாஜக 40 இடங்களை கைப்பற்றியது. ஆனால், பெரும்பான்மைக்கான போதிய உறுப்பினர்கள் இல்லாததால், 10 எம்.எல்.ஏக்களை கொண்டிருந்த ஜேஜேபி உடன் தேர்தலுக்கு பிந்தையை கூட்டணியை பாஜக அமைத்தது. ஜேஜேபியின் தலைவரும், இணை நிறுவனருமான துஷ்யந்த் சவுதாலா, துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
முதலமைச்சராக பதவியேற்பு:
#WATCH | Haryana BJP president Nayab Singh Saini took oath as the Chief Minister of Haryana in Chandigarh today. Former Haryana CM Manohar Lal Khattar was also present.(Source: DPR) pic.twitter.com/IavFW13HCE
— ANI (@ANI) March 12, 2024
இந்நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக உடன் ஜேஜேபி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அதில் சுமூகமான முடிவுகள் எட்டப்படாததால், இருகட்சிகள் இடையேயான கூட்டணி முறிந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஜேஜேபி அரசுக்கான தனது ஆதரவை திருமப்பெற முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பாஜகவைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இன்று மாலை, ஹரியானா மாநிலத்தின் பாஜக மாநில தலைவர் நயாப் சிங் சைனி, மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
ஜேஜேபி தனது ஆதரவை திரும்பப் பெற்றாலும், தற்போது பாஜகவில் 40 உறுப்பினர்கள் உள்ளனர். அதுபோக, 7 சுயேச்சைகளும், ஹரியானா லோகித் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவும் பாஜகவிற்கு ஆதரவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆட்சி அமைக்க 46 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்க வேண்டும். சட்டப்பேரவையின் வாக்கு எடுப்பின் போதுதான் பாஜகவின் உண்மையான பலம் தெரியும். அதுவரை, பாஜக ஆட்சி தொடருமா அல்லது தொடராதா என்பது இனிதான் தெரியவரும்.
மேலும் காண