பிரதமர் மோடியை அட்டாக் செய்த முதல்வர் ஸ்டாலின்

சேலம் மாநகரில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், “திராவிட இயக்கம் தோன்றி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த இயக்கத்தின் தலைவராக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கலகத்தின் பணி மற்றும் மக்கள் பணியில் தம்பி உதயநிதி எனக்கு துணையாக இருக்கிறார். அந்த உழைப்பை பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எனக்கு 30 வயது இருக்கும் போது இளைஞரணி உருவாக்கப்பட்டது. கலைஞரும், பேராசிரியரும் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றியது போல் என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இளைஞரணி வெற்றிக்கொடி நாட்டி வருவதை இந்த சேலம் மாநாடு நாட்டிற்கு சொல்லி விட்டது. இந்த மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதற்கு காரணம் முதன்மைச் செயலார் கே.என்.நேரு தான்.

Source link