"நான் அசிங்கமான பெண் என்று கூறி பிரிந்து சென்றார்" - கணவரின் நினைவுகளைப் பகிர்ந்த நடிகை அபராமேத்தா | He left me, calling me a very ugly woman: Actress Aparna Mehta shares memories of her husband


பாலிவுட் நடிகையும், டிவி நடிகையுமான அபரா மேத்தா பாலிவுட் நடிகர் தர்சன் ஜரிவாலா என்பவரை 1982ம் ஆண்டு திருமணம் செய்தார்.

இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளாமல் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாகப் பிரிந்து வாழ்கின்றனர். தர்சன் ஜரிவாலா மிகவும் பிரபலமான காந்தி, குரு, மைபாதர் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார்.

நடிகை அபரா ஏக்தா கபூரின் “கியுங்கி சாஸ் பி கபி பஹு தி’யில் சவிதா மன்சுக் விராணியாக நடித்து பிரபலமானார். அபரா மேத்தா தனது கணவரும் நடிகருமான தர்ஷன் ஜரிவாலாவிடமிருந்து நீண்டகாலமாகப் பிரிந்திருப்பதைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ”அமெரிக்காவில் நடந்த கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இந்தியா திரும்பினேன். நான் அமெரிக்காவில் இருந்த போது எங்களது திருமண நாளில் எனது கணவர் போன் செய்து என்னிடம் பேசினார்.

அபரா மேத்தா

அபரா மேத்தா

அப்போது, ‘நாம் கண்டிப்பாகப் பேச வேண்டும்’ என்று அவர் சொன்னார். அவர் எதைப் பற்றிப் பேச விரும்புகிறார்? என்று நான் நினைத்தேன். அமெரிக்காவில் எனது நிகழ்ச்சிகளை முடித்துவிட்டுத் திரும்பினேன். அதிகாலை 3 மணிக்கு வந்து இறங்கி, 5 மணிக்கு வீட்டிற்குச் சென்றேன்.

ஆனால் காலை 7 மணிக்கே எனக்கு வேலை இருந்தது. அப்போது அவர் என்னிடம், ‘அபரா, நாம் பிரிந்துவிட வேண்டும். ஏனென்றால் உன் மீதான காதல் எனக்கு இல்லாமல் போய்விட்டது. எனக்கு உன்னை இனி பிடிக்கவில்லை.

என் வாழ்க்கையிலேயே நான் சந்தித்ததிலேயே மிகவும் அசிங்கமான பெண் நீதான்’ என்று கூறினார்.

அன்று காலை அவர் ஒரு கோப்பை தேநீருடன் ஊஞ்சலில் அமர்ந்திருக்க, நான் என் படப்பிடிப்புக்குக் கிளம்பிச் சென்றேன். அன்று மூன்று முக்கியமான காட்சிகளைப் படமாக்க வேண்டியிருந்தது. அதிகாலை 5 மணிக்கே அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்ததால், படப்பிடிப்பின் இடைவேளைகளில் நான் அவ்வப்போது தூங்கி வழிந்து கொண்டிருந்தேன்.

பின்னர் மதிய வேளையில், முழுமையாக விழிப்புணர்வு பெற்ற நிலையில், ‘தர்ஷன் என்ன சொன்னார்? அவர் அதை உண்மையாகவே சொல்லியிருக்க முடியாது’ என்று நான் நினைத்தேன். தர்ஷன் காலப்போக்கில் எங்கள் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார்.

அன்று முதல் இருவரும் பிரிந்து வாழ்கிறார். அதே சமயம் இப்போதும் அவருடன் நல்லுறவைப் பேணி வருகிறேன். தனித்தனியாக வாழ்ந்தாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் இயல்பான புரிதலோடு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed