நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை கதறவிட்ட ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.. சம்பாய் சோரன் அரசு வெற்றி!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் அரசு வெற்றிபெற்றுள்ளது. 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் சம்பாய் சோரன் அரசுக்கு 47 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் அடங்கிய கூட்டணி அரசுக்கு எதிராக 29  பேர் வாக்களித்துள்ளனர்.

பழங்குடியினர் அதிகம் வாழும் ஜார்க்கண்டில் முதலமைச்சராக பதவி வகித்த வந்த ஹேமந்த் சோரன் கைதாகும் சூழல் உருவானதை தொடர்ந்து, தேசிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஜனவரி 31ஆம் தேதி இரவு, நில மோசடி வழக்கில் சிக்கிய அவர் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார். ஆளும் கூட்டணியின் எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தபோதிலும், முதலமைச்சராக அவர் பதவியேற்பதில் தொடர் இழுபறி நீடித்தது. பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு இருந்தபோதிலும், ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுக்கவில்லை என ஆளும் தரப்பு குற்றம் சுமத்தியது.

பெரும் சர்ச்சையை தொடர்ந்து, கடந்த 2ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்றார். அதை தொடர்ந்து, ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் அரசு வெற்றிபெற்றுள்ளது.

சம்பாய் சோரன் அரசுக்கு ஆதரவாக 47 உறுப்பினர்களும் எதிராக 29  பேர் வாக்களித்தனர்.

Source link