தாராபுரம் ( தனி) தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6 – ம் தேதி நடைபெற உள்ளது நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அ.தி.மு.க வேட்பாளர் பானுமதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட மூலனூர் பகுதியில் நேற்று மாலை பேசிய எடப்பாடி பழனிசாமி, ” தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு ஏன் இந்த இடைத்தேர்தல் வந்தது என்று மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். கடந்த பொதுத்தேர்தலில் நமது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவர், மக்களின் தீர்ப்பை மதிக்காமல், பணத்தைப் பெற்றுக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு குதிரை பேரத்தின் மூலமாக ஓடிப்போயிருக்கிறார். தாராபுரம் தொகுதி மக்களின் மாண்பையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டு,
பதவிக்காகவும் பணத்திற்காகவும் கட்சி தாவிய அந்த துரோகிக்கு மக்கள் இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். துரோகத்திற்குத் துணை போனவர்கள் மீண்டும் உங்களிடம் வாக்குக் கேட்க வரும்போது மக்கள் சக்தியின் வலிமையை அவர்களுக்குக் காட்ட வேண்டும். அ.தி.மு.க-வை விமர்சிக்க இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? பெட்டியை வாங்கிக் கொண்டு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த தற்போதைய த.வெ.க வேட்பாளருக்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பு இவரைப் போன்ற மற்றவர்களுக்கு வருங்காலத்தில் தகுந்த பாடமாக இருக்க வேண்டும். உண்மையில் நான் ஓட்டு கேட்டு வரவில்லை. இந்த இயக்கத்திற்கும் தொகுதி மக்களுக்கும் பச்சை துரோகம் இழைத்ததற்கு நீதி கேட்டு வந்திருக்கிறேன் ” என்றார்.

























Worth flagging this post as worth a careful read rather than a casual skim, and a stop at silkseasidegoodsmarket earned…