வாக்காளர் பட்டியலிலிருந்து (இறந்தவர்களைத் தவிர்த்து) 13,30,00,000 (13.3 கோடி) நபர்களை நீக்கியது ஒரு கடுமையான சட்டவிரோதச் செயலாகும்.
தைரியமாக இருங்கள். இந்திய அரசியலமைப்பைத் தலைநிமிரச் செய்யுங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார். இன்னொரு பதிவில்…
“ ‘விடுபட்ட’ வாக்காளர்கள் படிவம் 6-ஐச் சமர்ப்பித்து எளிதாக மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும் என்றால்,
மேற்கு வங்க S.I.R. வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த விவரம் ஏன் சுட்டிக்காட்டப்படவில்லை?
மேற்கு வங்கத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதுதொடர்பான மேல்முறையீடுகளை விசாரிக்கச் சிறப்புத் தீர்ப்பாயங்களை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கான மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதிகள் ஆறு மாதங்களாகக் கடுமையாக உழைத்து, சுமார் 1,26,00,000 (1.26 கோடி) மேல்முறையீட்டு மனுக்களை முடித்து வைத்தனர்.
அவற்றில் 91% முதல் 93% வரையிலான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களின் பெயர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
இவை அனைத்துமே வீண்தானா?

























Glad to find a site whose links lead somewhere worth going rather than back to itself for SEO juice, and…