ராஜன்

[ad_1]

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் வே.ராஜன் பேசுகையில், ”சென்னை முழுவதும் மக்கள் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்திருக்கிறது” எனக் கூறி அதிர்ச்சியூட்டினார்.

ராஜன்

இதுசம்பந்தமாக அவர் பேசுகையில், ”சென்னையில் மக்களுக்கு குடிநீர் வாரியம் விநியோகிக்கும் குடிநீரில் மலம் கலந்திருக்கிறது. எங்களின் மண்டலம் 11 இல் தான் இதைக் கண்டடைந்தோம். எங்களுக்கும் மண்டலம் 10 இல் இருந்துதான் தண்ணீர் வருகிறது.

எங்களின் மண்டல அலுவலர்கள் துரிதமாகச் செயல்பட்டதால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுத்தோம். எங்களிடம் அந்தக் தண்ணீரை லேப்பில் சோதித்து எடுக்கப்பட்ட ரிப்போர்ட் இருக்கிறது. அதில் E.Coli என்கிற பாக்டீரியா இருப்பது தெரிய வந்திருக்கிறது. அந்தப் பாக்டீரியாவால் காய்ச்சல், மஞ்சள் காமாலை, தீவிர வயிற்றுப் போக்கு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகிறார்.

ராஜன் கொடுத்த ரிப்போர்ட்
ராஜன் கொடுத்த ரிப்போர்ட்

நீங்களும் நானும் காலையில் குடித்துவிட்டு வந்த தண்ணீர் மலம் கலந்ததாக இருக்கலாம். மலம் கலந்த தண்ணீரில் குளித்திருக்கலாம். சென்னையின் 15 மண்டலங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. மாநகராட்சி ஆணையர் இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகத்துறை முதல்வரிடம் இருக்கிறது. மெட்ரோ வாட்டரும் அவரின் துறையின் கீழ்தான் வருகிறது. இப்போதைய முதல்வர் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மிக மோசமாக அந்தத் துறையைக் கையாள்கிறார்” என்றார்.

[ad_2]

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed