இஸ்லாமிய பெண்கள் மீது கலர் பொடி; ஜெய் ராம் கோஷம்! – ஹோலி கொண்டாட்டத்தில் இளைஞர்கள் அட்டூழியம்

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி அன்று, மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசிக் கொண்டு, இனிப்புகளை வழங்கி, ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

இஸ்லாமியர்களுக்கு தொந்தரவு கொடுத்த கும்பல்:

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இந்த ஹோலி பண்டிகையின்போது,  இஸ்லாமியர்களை ஒரு கும்பல் வழிமறித்து வலுக்கட்டாயமாக ஹோலி கலர் பொடி தூவியும், தண்ணீர் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் இஸ்லாமியர்கள் மூன்று பேர் வந்தனர். அப்போது, ஹோலி கொண்டாட்டடத்தில் ஈடுபட்டிருந்த ஒரு கும்பல், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை வழிமறித்து, அவர்கள் மீது வலுக்கட்டாயமாக  வண்ணங்களை பூசி, தண்ணீர் ஊற்றியுள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்களும், ஆண் ஒருவர் சென்றுக் கொண்டிருக்கும்போது, இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. இரண்டு பெண்கள் மீது 10க்கும் மேற்பட்ட கும்பல் வலுக்கட்டாயமாக வண்ணங்களை பூசி, தண்ணீரை ஊற்றி அவர்களை தொந்தரவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில், ஹோலி கொண்டாடி கொண்டிருந்த ஒரு கும்பல், அவ்வழியாக சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து, அவர்கள் மீது வலுக்கட்டாயமாக வண்ணங்கள் பூசி, தண்ணீர் ஊற்றுகின்றனர். அந்த இருசக்கர வாகனத்தில் இருந்த இரண்டு பெண்களின் மீது அனுமதியின்றி, தண்ணீர் ஊற்றுகின்றனர்.

"ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷம்

அவர்கள், அந்த கும்பலிடம் வேண்டாம் என்று கூறியும் தொடர்ந்து தண்ணீரை ஊற்றி தொந்தரவு செய்கின்றனர். மேலும், இருசக்கர வாகனத்தில் இருந்த ஆண் மீது வண்ணங்களை பூசி "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷங்களை எழுப்புகின்றனர். அவர்கள் அங்கிருந்து புறப்படும்போதும், அவர்கள் மீது வண்ணங்களை தூவி, தண்ணீர் ஊற்றி  "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷங்களை எழுப்புவது போன்று வீடியோவில் உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் தாம்பூர் பகுதியைச் சேர்ந்த அனிருத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் மார்ச் 20 புதன்கிழமை நகரின் தாம்பூர் பகுதியில் நடந்ததுள்ளது. பைக்கில் வந்த நபர், தனது மனைவி மற்றும் தாயுடன்  மருந்து வாங்க சென்றபோது இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்தனர்.

Source link