அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படத் தணிக்கைச் சட்ட துறை வழங்கப்பட்டது குறித்து நடிகர் விஷால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். விஷாலின் கருத்திற்கு பல்வேறு தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் திரைப்பட இயக்குநர் பேரரசு விஷாலின் கருத்தை விமர்சித்துள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் திரைத்துறையில் இருந்த பிரச்சனைகளை ஏன் விஷால் பேசவில்லை என பேரரசு கேள்வி எழுப்பியுள்ளார்.  தவெக ஆட்சியில் அமைச்சர்களின் பட்டியல் கடந்த சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. ராஜ்மோகனுக்கு தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படத் தணிக்கைச் சட்டம், செய்தித்தாள் கட்டுப்பாடு, அரசு அச்சகம், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராஜ்மோகனுக்கு திரைப்பட தணிக்கை துறை அமைச்சரவை பதவி கொடுக்கப்பட்டது குறித்து நடிகர் விஷால் தனது அதிருப்தியை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சினிமாத் துறையைப் பற்றி எந்த அனுபவமும் இல்லாத அவருக்கு ஏன் இந்த பதவி கொடுக்கப்பட்டது என விஷால் கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கருத்து பரவலாக விமர்சனங்களை சந்தித்தது. அந்த வகையில் தற்போது இயக்குநர் பேரரசு விஷால் கருத்திற்கு எதிராக சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்  விஷால் கருத்திற்கு  பேரரசு பதிலடி யூடியுப் சேனல் ஒன்றில் பேசிய இயக்குநர் பேரரசு விஷால் கருத்து குறித்து இப்படி கூறினார். “போன ஆட்சியில் சாமிநாதன் செய்தி மற்றும் சினிமாத் துறை அமைச்சராக இருந்தார் . அவர் எத்தனை படத்தை இயக்கினார். சினிமாவில் அவருக்கு என்ன அனுபவம் இருந்தது. எத்தனை படங்கள் பார்த்திருக்கிறார் ? அவரை எப்படி சினிமாத் துறைக்கு அமைச்சராக போட்டீர்கள் ? இந்த கேள்வியை நான் விஷாலிடம் கேட்கிறேன். போன ஆட்சியில் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இருந்தது. படத்தை நினைத்த மாதிரி திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை. என் படம் வெளியாக வேண்டுமா என்பதை இன்னொருத்தர் தான் முடிவு பண்ணும் நிலமை இருந்தது. க்யூபில் ரஜினி படத்தை வெளியிடுவதற்கும் சின்ன பட்ஜெட் படத்தை வெளியிடுவதற்கும் ஒரே விலைதான் இருந்தது. க்யூபிற்கு பணம் கட்ட முடியாமல் பல படங்கள் வெளியாகவில்லை. போன முறை இத்தனை பிரச்சனைகள் இருந்தது . எந்த பிரச்சனைகளுக்கு சினிமாத் துறை அமைச்சரை சந்தித்து பேசினீர்கள். அந்த துறைக்கு யார் அமைச்சராக போட்டால் என்ன ? ஏதாவது பெரிய பிரச்சனை என்றால் மட்டும்தான் சாமிநாதன் வருவார். மற்ற எந்த பிரச்சனைக்கும் அவர் தலையிட்டோ அவரை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் சந்தித்தோ நான் பார்த்ததில்லை. அப்போதெல்லாம் குரல் கொடுக்காத நீங்கள் இப்போது ஏன் குறை சொல்கிறீர்கள். ராஜ்மோகன் எவ்வளவோ மேல்  ராஜ்மோகன் ஒரு பத்திரிகையாளர். ராஜ்மோகன் நிறைய சினிமாத்துறையை சேர்ந்தவர்களுடன் பழகியிருக்கிறார். பல பிரபலங்களை பேட்டி எடுத்திருக்கிறார். பத்திரிகையில் இருந்தவருக்கு இன்று சினிமாவில் என்ன பிரச்சனை என்பது தெரியும். எதுவுமே தெரியாத ஒருவர் சினிமாத் துறைக்கு அமைச்சராக வருவதை விட ராஜ்மோகன் அமைச்சராக வருவது எங்களுக்கு எவ்வளவோ மேல். மேலும் எல்லா விஷயத்தையும் கற்றுக்கொண்டு ஒருவர் பதவிக்கு வர முடியாது. பொறுப்பானவர்களாக இருந்தால் போதும். அப்படி பார்த்தால் விஜய் சாரிடமே கேட்கலாம். எம்.எல்.ஏ வா இருந்திருக்கியா , எம்.பி யாக இருந்திருக்கியா என்று. மக்கள் நம்பி அவரை முதலமைச்சராக உட்கார வைத்திருக்கிறார். அந்த பொறுப்பை விஜய் காப்பாற்ற வேண்டும். ராஜ்மோகன் சரியாக செயல்படவில்லை என்றாலும் விஜய் சார் சினிமாத் துறையில் இருந்து வந்தவர் என்பதால் அவர் சரியானதை செய்வார் ” என பேரரசு பேசியுள்ளார்.  இதையும் படிக்க மேலும் படிக்கவும்

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Информация об обращении не передается третьим лицам, а детали лечения обсуждаются только с пациентом. Изучить вопрос подробнее – [url=https://1kapelnica-ot-zapoya-v-moskve77.ru/]kapelnica-ot-alkogolya-posle-zapoya[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed