விழுப்புரம்: மரக்காணம் அருகே மீனவர் குடும்பத்தை பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கியதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மீனவப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குடும்ப பிரச்சனை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வசவன் குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 58). இவரது குடும்பத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த பக்தவச்சலம் என்பவரது குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த பிரச்சனை காரணமாக ஆறுமுகம் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் அப்பகுதி மீனவர் கிராம பஞ்சாயத்தார்களிடம் தங்களது பிரச்சனை குறித்து கூறியுள்ளனர்.

ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பஞ்சாயத்து

இவர்களது பிரச்னைகளை விசாரித்த அப்பகுதி மீனவ பஞ்சாயத்து நிர்வாகத்தினர் ஆறுமுகத்தின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும் இவர்களுக்கு ஊரில் உள்ள யாரும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கூட கொடுக்கக் கூடாது என கூறியுள்ளதாக கூறுகின்றனர்.

நடவடிக்கை எடுக்காத காவல் துறை

இதுகுறித்து ஆறுமுகத்தின் குடும்பத்தினர் கடந்த 13 ஆம் தேதி எங்கள் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களை ஊரை விட்டு ஒதுக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மரக்காணம் காவல் நிலையம் மரக்காணம் வட்டாட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.

தற்கொலை முயற்சி

இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த ஆறுமுகத்தின் மனைவி பார்வதி வயது 55. இவர் இரவு விஷமருந்து குடித்துவிட்டு மயங்கி விழுந்து உள்ளார். பின்பு பார்வதியை மீட்டு சிகிச்சைக்காக மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வருகிறனர்.

தற்கொலை செய்து கொள்வது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வல்ல. மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை – 600 028.

தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

டெல்லியின் புதிய போராட்ட இடமான ராம்லீலா மைதானத்தில் இந்த ஆண்டு வெறும் 3 தேதிகள் மட்டுமே உள்ளன – விவரங்களை சரிபார்க்கவும் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

1.8 கோடி மதிப்பிலான தனிமைப்படுத்தப்பட்ட வார்டு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து கேரள அரசு விசாரணை நடத்த உள்ளது இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை’: தலைமை நீதிபதி சூர்ய காந்த் மீதான கேரள கட்சியின் பதிவை காங்கிரஸ் நிராகரித்தது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘அன்புள்ள சூர்யா காந்த்…’: தலைமை நீதிபதியை ‘ராஜினாமா செய்ய வேண்டும்’ என காங்கிரஸ் கேரள பிரிவினரின் பதிவு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்திகள் | ACTPnews.com

மாலை செய்தி மடக்கு: ராகுல், பிரியங்கா தலைமையில் எஸ்சி பெரிய அணிவகுப்பு; தேர்தல் ஆணையம் மற்றும் பலவற்றிற்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படும் மனு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…