விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் 2 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். இவ்வழக்கின் விசாரணை மீண்டும் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மு.அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தின் போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

நீதிமன்றத்தில் 3 பேர் ஆஜர்

இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 12 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களில் 9 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளதால் இவ்வழககில் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் மாதம் மனுதாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தற்போது இவ்வழக்கில் மீண்டும் சாட்சிகள் விசாரணை தொடங்கியுள்ளது. இவ்வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சதானந்தன், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து திமுக வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தனர்.

2 பிறழ் சாட்சியம்

மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பு 13-வது சாட்சியாக முன்னாள் விழுப்புரம் கோட்டாட்சியரும் தற்போது ஓய்வு பெற்றவருமான ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக வழக்குகள் சம்பந்தப்பட்ட கோப்புகளில் தான் கையெழுத்திட்டதாக கூறி அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தார். அவரை தொடர்ந்து 14-வது சாட்சியாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதானந்தனின் உறவினரான ராஜசேகரன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், தனக்கும் இவ்வழக்கிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, எனக்கு எதுவும் தெரியாது என்றுகூறி அவரும் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தார். இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணையை மார்ச் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
накрутка поведенческих накрутка поведенческих факторов программа под заказ
яндекс накрутка накрутка пф сайт москва
накрутка пф новому сайту накрутка пф яндекс москва
сео заказать накрутка пф купить поведенческие факторы
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

ரேஷன் அட்டை eKYC: அக்டோபர் 29-ல் சிறப்பு முகாம்|Missed Ration Card eKYC? TN Announces Special Camp on Oct 29 | ACTPnews.com

தேனி: ஆக்கிரமிப்பு பட்டியலில் பழங்குடி மக்கள்; நீதிமன்றத்தை ஏமாற்றியதாக வனத்துறை மீது குற்றச்சாட்டு? | Theni: Tribal people in encroachment list; Forest Department accused of misleading court | ACTPnews.com

புதிய மின் இணைப்புக்கு இனி கள ஆய்வு இல்லையா? ஆகஸ்ட் 28 முதல் என்ன மாற்றம்?|No More Field Visits! New TN Power Connection Rule From Aug 28 | ACTPnews.com

“சோஃபா செட் இல்ல, லாக்கரே வந்தாலும்கூட தேமுதிக தன்னுடைய..!”- கூட்டணி மாறுவது குறித்து பிரேமலதா | ACTPnews.com

накрутка пф конкурентов накрутить пф в яндексе