மாசி கிருத்திகை திருப்போரூர் முருகன் கோவிலில் பல்வேறு காவடிகளில் பக்தர்கள் நான்கு மாத வீதிகளிலும் வளர்ந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில்  மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்ம உற்சவத்துடன் கூடிய மாசி கிருத்திகை வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் நேற்று  (15-ஆம் தேதி) முருகன் கோயில் உயர் கோபுரம் மண்டபத்திற்கு வெளியில் உள்ள வட்டம் மண்டபத்தின் நடுவே  அமைக்கப்பட்டுள்ள தங்க கொடி மராத்தில் கொடி ஏற்றப்பட்டது. தினமும் முருகப்பெருமானுக்கு காலை, மாலை நேரங்களில்  தீப தூப ஆராதனை ஆராதனை செய்து முருகப்பெருமான் நான்கு மாத வீதிகளிலும் உலா வந்து பக்தர் காட்சி அளிக்கிறார்.

மாசி கிருத்திகை திருப்போரூர் முருகன் கோவிலில் பல்வேறு காவடிகளில் பக்தர்கள் நான்கு மாத வீதிகளிலும் வளர்ந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்

பிரம்ம உற்சவத்துடன் கூடிய மாசி கிருத்திகை மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது மாசி கிருத்திகையை ஒட்டி   அதிகாலை முதல் கோவில் நடை திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் அதிகாலை முதலே மொட்டை அடித்து  அலகுகுத்தி காவடி எடுத்து நான்கு மாட வீதிகளில் வலம் வந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். அதிகாலை முதல் கோவில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதல் இரவு விடிய விடிய பக்தர்கள் உடல் முழுவதும் அலகு குத்தி காவடி எடுத்து பல்வேறு உருவத்தில் முருகப்பெருமானை அலங்கரித்து அரோகரா அரோகரா கோஷமிட்ட பாரு ஆண்கள் பெண்கள் என்ன பலரும் காவடி ஆடி வழிபாடு செய்து வருகின்றனர். கோயில் கோயில் உள்ள அரங்கிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

வெளியூர்களில் இருந்து வந்த முருகன் பக்தர்கள் 4 மாடவீதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்  காவடி மண்டபத்திலிருந்து, பால் காவடி, பண்ணீர்காவடி, சந்தன காவடி,  புஷ்பகாவடி உள்ளிட்ட பல விதமான காவடிகளை சுமந்தபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட விதிகளின் ஆட்டம் பட்டத்துடன் ஆடி மகிழ்ந்தனர்.

ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்ம உற்சவத்துடன் கூடிய மாசி கிருத்திகை வெகு விமர்சையாக நடைபெறும்.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருப்போரூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் காலை முதல் ஓஎம்ஆர் சாலை யில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  தீயணைப்புத் துறையினர்,  மருத்துவத் துறையினர், சுகாதாரத் துறையினர், காவல் துறை நண்பர்கள் குழுவினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு மாத வீதிகளிலும் பல்வேறு அமைப்பினர் வாழை இலையில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். இரவில் பூத வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். திருப்போரூர் முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவும் நடைபெற்று வருவதால் தற்பொழுது கோவில் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது.

Source link

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed