தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் வீரா. கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் வீரா வீட்டின் கதவை போலீஸ் தட்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வீராவின் குடும்பம் போலீஸ் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைய அவர்கள் உங்க பையனுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு என அழைத்து செல்கின்றனர். மறுபக்கம் பாண்டியன் உயிர் துடிதுடித்து பிரிகிறது.
இதையடுத்து ஆஸ்பிடலுக்கு வந்த குடும்பத்தினருக்கும் அங்கு ஓடி வந்த மாறனுக்கும் பாண்டியன் இறந்து போன விஷயம் தெரிய வருகிறது. இதனால் மொத்த குடும்பமும் உடைந்து போகிறது. பாண்டியன் பழைய நினைவுகளை நினைத்து கலங்கி அழுகின்றனர்.
அடுத்து போலீஸ் cctv ஆதாரங்களை வைத்து ராமச்சந்திரன் வீட்டுக்கு செல்ல வள்ளியும் ராகவ்வும் டிரைவர் தான் ஆக்சிடென்ட் செய்வகாக மாற்றி கூறுகின்றனர். அதோடு மறுபக்கம் விபத்தை நேரில் பார்த்தவர் அறியாத பையன் தான், அவனே ஹாஸ்பிடல் கூட்டி வந்திருந்தா கூட காப்பாத்தி இருக்கலாம், அடித்து தள்ளி போய்டான் என உண்மையை உடைக்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் காண