zee tamil sandhya ragam serial february 20th episode update | Sandhya Ragam:ஜானகியை சுற்றி வளைத்த ரவுடிகள்.. ரகுராம் எடுத்த முடிவு


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் புவனேஷ்வரி ஜானகியை கொன்று அந்த பழியை ரகுராம் மீது போட பிளான் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, புவனேஸ்வரி ஏற்பாடு செய்த ரவுடிகள் கத்தியுடன் கோவிலுக்குள் இறங்குகின்றனர். இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாயா மற்றும் ஜானகியை நெருக்கின்றனர். மறுபக்கம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் ரகுராம் திடீரென ஒரு கனவு கண்டு அலறி எழுகிறார்.
அந்த கனவில் ஜானகி கழுத்தில் இருக்கும் நகைகளை எல்லாம் கழட்டி வைத்து விட்டு குளத்தில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள போவது போல தெரிய ரகுராம் பதறுகிறார். இந்த நேரத்தில் இடி மின்னலுடன் காற்றும் வேகமாக வீச ஏதோ அபசகுனமாக தோன்ற அவர் கோவிலை நோக்கி கிளம்புகிறார்.
இங்கே கோவிலில் ரவுடிகள் இவர்களை நெருங்கி வர கத்தி கீழே விழுந்து சத்தம் கேட்க இருவரும் தூக்கம் களைந்து எழுந்து கொள்கின்றனர். ரவுடிகளை பார்த்து அதிர்ச்சி அடையும் ஜானகி நான் யாருடைய பொண்டாட்டின்னு தெரியாமல் வந்திருக்கீங்க. அவர் வந்தா உங்க யாரையும் சும்மா விட மாட்டாரு என்று எச்சரிக்கை ரவுடிகள் கொல்ல வர இருவரும் தப்பி ஓடி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் ரகுராம் வேகவேகமாக கோவிலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 
மேலும் படிக்க 
Kagney Linn: 36 வயதில் தற்கொலை.. பிரபல பார்ன் நடிகை எடுத்த விபரீத முடிவு – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு.. சிக்கிய முன்னாள் அதிமுக பிரபலம் – கடுப்பான திரையுலகினர்!
Rituraj Singh: அஜித்தின் துணிவு படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் உயிரிழப்பு – ரசிகர்கள் இரங்கல்!

மேலும் காண

Source link