Lok Sabha Election 2024: தமிழகத்திற்கான நிதிப்பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சம் பார்ப்பதாக, அமைச்சர் உதயநிதி சாடியுள்ளார்.
பிரதமரை சாடிய உதயநிதி:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசு 28 பைசாவை மட்டுமே திருப்பி வழங்குகிறது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகம் நிதி பகிரப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியை இனி 28 பைசா பிரதமர் என்றுதான் அழைக்க வேண்டும்.
தமிழகத்தில் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நிதிப் பகிர்வு, வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாநிலத்தில் நீட் தேர்வைத் தடை செய்தல் போன்றவற்றில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக பாரபட்சம் காட்டுகிறது” என அமைச்சர் உதயநிதி சாடினார்.
மேலும் காண